
يٰۤـاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ ؕ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَ لْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ اِنْتَهُوْا خَيْرًا لَّـكُمْ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰـهٌ وَّاحِدٌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ يَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். 4:171
<
இறைவனின் மிகப் பெரும் கிருபையால் நாம் இந்த இணைய தளத்தை எங்களால் முடிந்த அளவு எளிதாக ஆக்கி வைத்துள்ளோம். அடுத்த முறை நீங்கள் இந்த இணைய தளத்துக்கு வரும்பொழுது, நீங்கள் கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள தேவையில்லை. உங்களுக்காக நாங்கள் ஞாபகம் வைத்து கொள்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்
1. உங்கள் பெயரை எங்களிடம் பதிவு செய்து கொள்ளுங்கள்.
2. ஒவ்வொரு முறை நீங்கள் குர்ஆனை படித்தவுடன் நீங்கள் படித்த ஸூரா மற்றும் வசன எண்களை பதிவு செய்யுங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறீர்கள். ஆகையால், ஒவ்வொரு முறை இணையத்தை பயன் படுத்தும் போது, குறைந்தது ஒரு வசனத்தையாவது படித்து விட்டு அடுத்த இணைய தளத்துக்கு செல்வதை பழக்க படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் இணைய தளத்தை உங்களின் முதல் பக்கமாக ஆக்கி கொள்ளுங்கள்.