அவனுக்கே புகழ் அனைத்தும்
1:1   بِسْمِ~اللهِ~الرَّحْمٰنِ~الرَّحِيْمِ
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
6:1   اَلْحَمْدُ~لِلّٰهِ~الَّذِىْ~خَلَقَ~السَّمٰوٰتِ~وَالْاَرْضَ~وَجَعَلَ~الظُّلُمٰتِ~وَالنُّوْرَ~ ؕ~ثُمَّ~الَّذِيْنَ~كَفَرُوْا~بِرَبِّهِمْ~يَعْدِلُوْنَ‏
6:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.
6:45   فَقُطِعَ~دَابِرُ~الْقَوْمِ~الَّذِيْنَ~ظَلَمُوْا‌~ؕ~وَالْحَمْدُ~لِلّٰهِ~رَبِّ~الْعٰلَمِيْنَ‏
6:45. எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.”
7:43   وَنَزَعْنَا~مَا~فِىْ~صُدُوْرِهِمْ~مِّنْ~غِلٍّ~تَجْرِىْ~مِنْ~تَحْتِهِمُ~الْاَنْهٰرُ‌ۚ~وَقَالُوا~الْحَمْدُ~لِلّٰهِ~الَّذِىْ~هَدٰٮنَا~لِهٰذَا~وَمَا~كُنَّا~لِنَهْتَدِىَ~لَوْلَاۤ~اَنْ~هَدٰٮنَا~اللّٰهُ‌~‌ۚ~لَقَدْ~جَآءَتْ~رُسُلُ~رَبِّنَا~بِالْحَـقِّ‌~ؕ~وَنُوْدُوْۤا~اَنْ~تِلْكُمُ~الْجَـنَّةُ~اُوْرِثْتُمُوْهَا~بِمَا~كُنْتُمْ~تَعْمَلُوْنَ‏
7:43. தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.
10:10   دَعْوٰٮهُمْ~فِيْهَا~سُبْحٰنَكَ~اللّٰهُمَّ~وَ~تَحِيَّـتُهُمْ~فِيْهَا~سَلٰمٌ‌ۚ~وَاٰخِرُ~دَعْوٰٮهُمْ~اَنِ~الْحَمْدُ~لِلّٰهِ~رَبِّ~الْعٰلَمِيْنَ‏
10:10. அதில் அவர்கள்: “(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். “எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.
14:39   اَلْحَمْدُ~لِلّٰهِ~الَّذِىْ~وَهَبَ~لِىْ~عَلَى~الْـكِبَرِ~اِسْمٰعِيْلَ~وَاِسْحٰقَ‌ؕ~اِنَّ~رَبِّىْ~لَسَمِيْعُ~الدُّعَآءِ‏
14:39. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.
17:111   وَقُلِ~الْحَمْدُ~لِلّٰهِ~الَّذِىْ~لَمْ~يَتَّخِذْ~وَلَدًا~وَّلَمْ~يَكُنْ~لَّهٗ~شَرِيْكٌ~فِى~الْمُلْكِ~وَلَمْ~يَكُنْ~لَّهٗ~وَلِىٌّ~مِّنَ~الذُّلِّ‌~وَكَبِّرْهُ~تَكْبِيْرًا‏
17:111. “அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.
18:1   اَ~لْحَمْدُ~لِلّٰهِ~الَّذِىْۤ~اَنْزَلَ~عَلٰى~عَبْدِهِ~الْكِتٰبَ~وَلَمْ~يَجْعَلْ~لَّهٗ~عِوَجًا~ٚ ~ؕ
18:1. தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.
23:28   فَاِذَا~اسْتَوَيْتَ~اَنْتَ~وَمَنْ~مَّعَكَ~عَلَى~الْـفُلْكِ~فَقُلِ~الْحَمْدُ~لِلّٰهِ~الَّذِىْ~نَجّٰٮنَا~مِنَ~الْقَوْمِ~الظّٰلِمِيْنَ‏
23:28. “நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்: “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக!
27:15   وَلَـقَدْ~اٰتَيْنَا~دَاوٗدَ~وَ~سُلَيْمٰنَ~عِلْمًا‌~ۚ~وَقَالَا~الْحَمْدُ~لِلّٰهِ~الَّذِىْ~فَضَّلَنَا~عَلٰى~كَثِيْرٍ~مِّنْ~عِبَادِهِ~الْمُؤْمِنِيْنَ‏
27:15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
27:57   فَاَنْجَيْنٰهُ~وَ~اَهْلَهٗۤ~اِلَّا~امْرَاَتَهٗ~قَدَّرْنٰهَا~مِنَ~الْغٰبِرِيْنَ‏
27:57. ஆனால், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர (ஈமான் கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளை தீர்மானித்தோம்.
27:93   وَقُلِ~الْحَمْدُ~لِلّٰهِ~سَيُرِيْكُمْ~اٰيٰتِهٖ~فَتَعْرِفُوْنَهَا‌~ؕ~وَمَا~رَبُّكَ~بِغَافِلٍ~عَمَّا~تَعْمَلُوْنَ‏
27:93. இன்னும் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.
28:70   وَهُوَ~اللّٰهُ~لَاۤ~اِلٰهَ~اِلَّا~هُوَ‌ؕ~لَـهُ~الْحَمْدُ~فِى~الْاُوْلٰى~وَالْاٰخِرَةِ~وَلَـهُ~الْحُكْمُ~وَاِلَيْهِ~تُرْجَعُوْنَ‏
28:70. மேலும்: அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.
29:63   وَلَٮِٕنْ~سَاَلْتَهُمْ~مَّنْ~نَّزَّلَ~مِنَ~السَّمَآءِ~مَآءً~فَاَحْيَا~بِهِ~الْاَرْضَ~مِنْۢ~بَعْدِ~مَوْتِهَا~لَيَقُوْلُنَّ~اللّٰهُ‌ؕ~قُلِ~الْحَمْدُ~لِلّٰهِ‌ؕ~بَلْ~اَكْثَرُهُمْ~لَا~يَعْقِلُوْنَ‏
29:63. இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராகில்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.  
30:18   وَلَـهُ~الْحَمْدُ~فِىْ~السَّمٰوٰتِ~وَالْاَرْضِ~وَعَشِيًّا~وَّحِيْنَ~تُظْهِرُوْنَ‏
30:18. இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், இரவிலும் நீங்கள் ளுஹருடைய நேரத்திலாகும் பொழுதும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்).
31:26   لِلّٰهِ~مَا~فِى~السَّمٰوٰتِ~وَالْاَرْضِ‌ؕ~اِنَّ~اللّٰهَ~هُوَ~الْغَنِىُّ~الْحَمِيْدُ‏
31:26. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன்; புகழப்படுபவன்.
34:1   اَلْحَمْدُ~لِلّٰهِ~الَّذِىْ~لَهٗ~مَا~فِى~السَّمٰوٰتِ~وَمَا~فِى~الْاَرْضِ~وَلَـهُ~الْحَمْدُ~فِى~الْاٰخِرَةِ~ؕ~وَهُوَ~الْحَكِيْمُ~الْخَبِيْرُ‏
34:1. அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
35:1   اَ~لْحَمْدُ~لِلّٰهِ~فَاطِرِ~السَّمٰوٰتِ~وَالْاَرْضِ~جَاعِلِ~الْمَلٰٓٮِٕكَةِ~رُسُلًا~اُولِىْۤ~اَجْنِحَةٍ~مَّثْنٰى~وَثُلٰثَ~وَرُبٰعَ~ؕ~يَزِيْدُ~فِى~الْخَـلْقِ~مَا~يَشَآءُ~ؕ~اِنَّ~اللّٰهَ~عَلٰى~كُلِّ~شَىْءٍ~قَدِيْرٌ‏
35:1. அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.
37:182   وَالْحَمْدُ~لِلّٰهِ~رَبِّ~الْعٰلَمِيْنَ‌‏
37:182. வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).
39:75   وَتَرَى~الْمَلٰٓٮِٕكَةَ~حَآفِّيْنَ~مِنْ~حَوْلِ~الْعَرْشِ~يُسَبِّحُوْنَ~بِحَمْدِ~رَبِّهِمْ‌ۚ~وَقُضِىَ~بَيْنَهُمْ~بِالْحَـقِّ~وَقِيْلَ~الْحَمْدُ~لِلّٰهِ~رَبِّ~الْعٰلَمِيْنَ‏
39:75. இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று (யாவராலும்) கூறப்படும்.
40:65   هُوَ~الْحَىُّ~لَاۤ~اِلٰهَ~اِلَّا~هُوَ~فَادْعُوْهُ~مُخْلِصِيْنَ~لَهُ~الدِّيْنَؕ~اَلْحَمْدُ~لِلّٰهِ~رَبِّ~الْعٰلَمِيْنَ‏
40:65. அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
45:36   فَلِلّٰهِ~الْحَمْدُ~رَبِّ~السَّمٰوٰتِ~وَرَبِّ~الْاَرْضِ~رَبِّ~الْعٰلَمِيْنَ‏
45:36. ஆகவே வானங்களுக்கும் இறைவனான - பூமிக்கும் இறைவனான - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
64:1   يُسَبِّحُ~لِلّٰهِ~مَا~فِى~السَّمٰوٰتِ~وَمَا~فِى~الْاَرْضِ‌ۚ~لَهُ~الْمُلْكُ~وَلَهُ~الْحَمْدُ‌~وَهُوَ~عَلٰى~كُلِّ~شَىْءٍ~قَدِيْرٌ‏
64:1. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன; அவனுக்கே ஆட்சி உரியது; இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே; அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்.