அவனுக்கு படைப்பது எளிது
3:59   اِنَّ~مَثَلَ~عِيْسٰى~عِنْدَ~اللّٰهِ~كَمَثَلِ~اٰدَمَ‌ؕ~خَلَقَهٗ~مِنْ~تُرَابٍ~ثُمَّ~قَالَ~لَهٗ~كُنْ~فَيَكُوْنُ‏
3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
16:40   اِنَّمَا~قَوْلُـنَا~لِشَىْءٍ~اِذَاۤ~اَرَدْنٰهُ~اَنْ~نَّقُوْلَ~لَهٗ~كُنْ~فَيَكُوْنُ‏
16:40. ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, “உண்டாகுக!” என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.  
36:82   اِنَّمَاۤ~اَمْرُهٗۤ~اِذَاۤ~اَرَادَ~شَیْـٴًـــا~اَنْ~يَّقُوْلَ~لَهٗ~كُنْ~فَيَكُوْنُ‏
36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
40:68   هُوَ~الَّذِىْ~يُحْىٖ~وَيُمِيْتُؕ~فَاِذَا~قَضٰٓى~اَمْرًا~فَاِنَّمَا~يَقُوْلُ~لَهٗ~كُنْ~فَيَكُوْنُ‏
40:68. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்: “ஆகுக!” என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.  
46:33   اَوَلَمْ~يَرَوْا~اَنَّ~اللّٰهَ~الَّذِىْ~خَلَقَ~السَّمٰوٰتِ~وَالْاَرْضَ~وَلَمْ~يَعْىَ~بِخَلْقِهِنَّ~بِقٰدِرٍ~عَلٰۤی~اَنْ~يُّحْیَِۧ~الْمَوْتٰى~‌ؕ~بَلٰٓى~اِنَّهٗ~عَلٰى~كُلِّ~شَىْءٍ~قَدِيْرٌ‏‏
46:33. வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
50:38   وَلَقَدْ~خَلَقْنَا~السَّمٰوٰتِ~وَالْاَرْضَ~وَمَا~بَيْنَهُمَا~فِىْ~سِتَّةِ~اَيَّامٍ‌ۖ~وَّمَا~مَسَّنَا~مِنْ~لُّغُوْبٍ‏
50:38. நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.