மமதை
2:34   وَاِذْ~قُلْنَا~لِلْمَلٰٓٮِٕكَةِ~اسْجُدُوْا~لِاٰدَمَ~فَسَجَدُوْٓا~اِلَّاۤ~اِبْلِيْسَؕ~اَبٰى~وَاسْتَكْبَرَ~~وَكَانَ~مِنَ~الْكٰفِرِيْنَ‏
2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
2:87   وَ~لَقَدْ~اٰتَيْنَا~مُوْسَى~الْكِتٰبَ~وَقَفَّيْنَا~مِنْۢ~بَعْدِهٖ~بِالرُّسُلِ‌~وَاٰتَيْنَا~عِيْسَى~ابْنَ~مَرْيَمَ~الْبَيِّنٰتِ~وَاَيَّدْنٰهُ~بِرُوْحِ~الْقُدُسِ‌ؕ~اَفَكُلَّمَا~جَآءَكُمْ~رَسُوْلٌۢ~بِمَا~لَا~تَهْوٰٓى~اَنْفُسُكُمُ~اسْتَكْبَرْتُمْ‌ۚ~فَفَرِيْقًا~كَذَّبْتُمْ~وَفَرِيْقًا~تَقْتُلُوْنَ‏
2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
4:36   وَاعْبُدُوا~اللّٰهَ~وَلَا~تُشْرِكُوْا~بِهٖ~شَيْــٴًـــا‌~ؕ~وَّبِالْوَالِدَيْنِ~اِحْسَانًا~وَّبِذِى~الْقُرْبٰى~وَالْيَتٰمٰى~وَ~الْمَسٰكِيْنِ~وَالْجَـارِ~ذِى~الْقُرْبٰى~وَالْجَـارِ~الْجُـنُبِ~وَالصَّاحِبِ~بِالْجَـنْۢبِ~وَابْنِ~السَّبِيْلِ~ۙ~وَمَا~مَلَـكَتْ~اَيْمَانُكُمْ‌~ؕ~اِنَّ~اللّٰهَ~لَا~يُحِبُّ~مَنْ~كَانَ~مُخْتَالًا~فَخُوْرَا~ۙ‏
4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
4:172   لَنْ~يَّسْتَـنْكِفَ~الْمَسِيْحُ~اَنْ~يَّكُوْنَ~عَبْدًالِّلّٰهِ~وَلَا~الْمَلٰٓٮِٕكَةُ~الْمُقَرَّبُوْنَ‌ؕ~وَمَنْ~يَّسْتَـنْكِفْ~عَنْ~عِبَادَ~تِهٖ~وَيَسْتَكْبِرْ~فَسَيَحْشُرُهُمْ~اِلَيْهِ~جَمِيْعًا‏
4:172. (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
4:173   فَاَمَّا~الَّذِيْنَ~اٰمَنُوْا~وَعَمِلُوا~الصّٰلِحٰتِ~فَيُوَفِّيْهِمْ~اُجُوْرَهُمْ~وَ~يَزِيْدُهُمْ~مِّنْ~فَضْلِهٖ‌ۚ~وَاَمَّا~الَّذِيْنَ~اسْتَـنْكَفُوْا~وَاسْتَكْبَرُوْا~فَيُعَذِّبُهُمْ~عَذَابًا~اَ~لِيْمًا~ ۙ~وَّلَا~يَجِدُوْنَ~لَهُمْ~مِّنْ~دُوْنِ~اللّٰهِ~وَلِيًّا~وَّلَا~نَصِيْرًا‏
4:173. ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்.
6:93   وَمَنْ~اَظْلَمُ~مِمَّنِ~افْتَـرٰى~عَلَى~اللّٰهِ~كَذِبًا~اَوْ~قَالَ~اُوْحِىَ~اِلَىَّ~وَلَمْ~يُوْحَ~اِلَيْهِ~شَىْءٌ~وَّمَنْ~قَالَ~سَاُنْزِلُ~مِثْلَ~مَاۤ~اَنْزَلَ~اللّٰهُ‌ؕ~وَلَوْ~تَرٰٓى~اِذِ~الظّٰلِمُوْنَ~فِىْ~غَمَرٰتِ~الْمَوْتِ~وَالْمَلٰٓٮِٕكَةُ~بَاسِطُوْۤا~اَيْدِيْهِمْ‌ۚ~اَخْرِجُوْۤا~اَنْفُسَكُمُ‌ؕ~اَلْيَوْمَ~تُجْزَوْنَ~عَذَابَ~الْهُوْنِ~بِمَا~كُنْتُمْ~تَقُوْلُوْنَ~عَلَى~اللّٰهِ~غَيْرَ~الْحَـقِّ~وَكُنْتُمْ~عَنْ~اٰيٰتِهٖ~تَسْتَكْبِرُوْنَ‏
6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்).
7:13   قَالَ~فَاهْبِطْ~مِنْهَا~فَمَا~يَكُوْنُ~لَـكَ~اَنْ~تَتَكَبَّرَ~فِيْهَا~فَاخْرُجْ~اِنَّكَ~مِنَ~الصّٰغِرِيْنَ‏
7:13. “இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான். 
7:36   وَالَّذِيْنَ~كَذَّبُوْا~بِاٰيٰتِنَا~وَاسْتَكْبَرُوْا~عَنْهَاۤ~اُولٰۤٮِٕكَ~اَصْحٰبُ~النَّارِ‌ۚ~هُمْ~فِيْهَا~خٰلِدُوْنَ‏
7:36. ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் - அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.
7:40   اِنَّ~الَّذِيْنَ~كَذَّبُوْا~بِاٰيٰتِنَا~وَاسْتَكْبَرُوْا~عَنْهَا~لَا~تُفَتَّحُ~لَهُمْ~اَبْوَابُ~السَّمَآءِ~وَلَا~يَدْخُلُوْنَ~الْجَـنَّةَ~حَتّٰى~يَلِجَ~الْجَمَلُ~فِىْ~سَمِّ~الْخِيَاطِ‌~ؕ~وَكَذٰلِكَ~نَجْزِى~الْمُجْرِمِيْنَ‏
7:40. எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
7:48   وَنَادٰٓى~اَصْحٰبُ~الْاَعْرَافِ~رِجَالًا~يَّعْرِفُوْنَهُمْ~بِسِيْمٰٮهُمْ~قَالُوْا~مَاۤ~اَغْنٰى~عَنْكُمْ~جَمْعُكُمْ~وَمَا~كُنْتُمْ~تَسْتَكْبِرُوْنَ‏
7:48. சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”
7:133   فَاَرْسَلْنَا~عَلَيْهِمُ~الطُّوْفَانَ~وَالْجَـرَادَ~وَالْقُمَّلَ~وَالضَّفَادِعَ~وَالدَّمَ~اٰيٰتٍ~مُّفَصَّلٰتٍ~فَاسْتَكْبَرُوْا~وَكَانُوْا~قَوْمًا~مُّجْرِمِيْنَ‏
7:133. ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.
7:146   سَاَصْرِفُ~عَنْ~اٰيٰتِىَ~الَّذِيْنَ~يَتَكَبَّرُوْنَ~فِى~الْاَرْضِ~بِغَيْرِ~الْحَـقِّ~ؕ~وَاِنْ~يَّرَوْا~كُلَّ~اٰيَةٍ~لَّا~يُؤْمِنُوْا~بِهَا‌~ۚ~وَاِنْ~يَّرَوْا~سَبِيْلَ~الرُّشْدِ~لَا~يَتَّخِذُوْهُ~سَبِيْلًا‌~ۚ~وَّاِنْ~يَّرَوْا~سَبِيْلَ~الْغَىِّ~يَتَّخِذُوْهُ~سَبِيْلًا‌~ؕ~ذٰ~لِكَ~بِاَنَّهُمْ~كَذَّبُوْا~بِاٰيٰتِنَا~وَكَانُوْا~عَنْهَا~غٰفِلِيْنَ‏
7:146. எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.
7:206   اِنَّ~الَّذِيْنَ~عِنْدَ~رَبِّكَ~لَا~يَسْتَكْبِرُوْنَ~عَنْ~عِبَادَتِهٖ~وَيُسَبِّحُوْنَهٗ~وَلَهٗ~يَسْجُدُوْنَ۩‏
7:206. எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ; அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.
10:75   ثُمَّ~بَعَثْنَا~مِنْۢ~بَعْدِهِمْ~مُّوْسٰى~وَهٰرُوْنَ~اِلٰى~فِرْعَوْنَ~وَمَلَاِ۫~ٮِٕهٖ~بِاٰيٰتِنَا~فَاسْتَكْبَرُوْا~وَكَانُوْا~قَوْمًا~مُّجْرِمِيْنَ‏
10:75. இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
16:23   لَا~جَرَمَ~اَنَّ~اللّٰهَ~يَعْلَمُ~مَا~يُسِرُّوْنَ~وَمَا~يُعْلِنُوْنَ‌ؕ~اِنَّهٗ~لَا~يُحِبُّ~الْمُسْتَكْبِرِيْنَ‏
16:23. சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.
16:29   فَادْخُلُوْۤا~اَبْوَابَ~جَهَنَّمَ~خٰلِدِيْنَ~فِيْهَا‌ؕ~فَلَبِئْسَ~مَثْوَى~الْمُتَكَبِّرِيْنَ‏
16:29. “ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள்” (என்றும் மலக்குகள் கூறுவார்கள்; ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
16:49   وَلِلّٰهِ~يَسْجُدُ~مَا~فِى~السَّمٰوٰتِ~وَمَا~فِى~الْاَرْضِ~مِنْ~دَآبَّةٍ~وَّالْمَلٰۤٮِٕكَةُ~وَهُمْ~لَا~يَسْتَكْبِرُوْنَ‏
16:49. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை.
17:37   وَلَا~تَمْشِ~فِى~الْاَرْضِ~مَرَحًا‌~ۚ~اِنَّكَ~لَنْ~تَخْرِقَ~الْاَرْضَ~وَلَنْ~تَبْلُغَ~الْجِبَالَ~طُوْلًا‏
17:37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.
21:19   وَلَهٗ~مَنْ~فِى~السَّمٰوٰتِ~وَالْاَرْضِ‌ؕ~وَمَنْ~عِنْدَهٗ~لَا~يَسْتَكْبِرُوْنَ~عَنْ~عِبَادَتِهٖ~وَلَا~يَسْتَحْسِرُوْنَ‌ۚ‏
21:19. வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.
23:46   اِلٰى~فِرْعَوْنَ~وَمَلَا۟ٮِٕهٖ~فَاسْتَكْبَرُوْا~وَكَانُوْا~قَوْمًا~عٰلِيْنَ‌~ۚ‏
23:46. ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் - அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள்.
24:11   اِنَّ~الَّذِيْنَ~جَآءُوْ~بِالْاِفْكِ~عُصْبَةٌ~مِّنْكُمْ‌~ؕ~لَا~تَحْسَبُوْهُ~شَرًّا~لَّـكُمْ‌~ؕ~بَلْ~هُوَ~خَيْرٌ~لَّـكُمْ‌~ؕ~لِكُلِّ~امْرِىٴٍ~مِّنْهُمْ~مَّا~اكْتَسَبَ~مِنَ~الْاِثْمِ‌~ۚ~وَالَّذِىْ~تَوَلّٰى~كِبْرَهٗ~مِنْهُمْ~لَهٗ~عَذَابٌ~عَظِيْمٌ‏
24:11. எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
25:21   وَقَالَ~الَّذِيْنَ~لَا~يَرْجُوْنَ~لِقَآءَنَا~لَوْلَاۤ~اُنْزِلَ~عَلَيْنَا~الْمَلٰٓٮِٕكَةُ~اَوْ~نَرٰى~رَبَّنَا~ؕ~لَـقَدِ~اسْتَكْبَرُوْا~فِىْۤ~اَنْفُسِهِمْ~وَعَتَوْ~عُتُوًّا~كَبِيْرًا‏
25:21. மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்: “எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை? அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?” என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.
28:39   وَاسْتَكْبَرَ~هُوَ~وَجُنُوْدُهٗ~فِى~الْاَرْضِ~بِغَيْرِ~الْحَـقِّ~وَظَنُّوْۤا~اَنَّهُمْ~اِلَـيْنَا~لَا~يُرْجَعُوْنَ‏
28:39. மேலும் அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமை அடித்துக் கொண்டனர், மேலும் அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக்கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள்.
29:39   وَقَارُوْنَ~وَفِرْعَوْنَ~وَهَامٰنَ‌~وَلَقَدْ~جَآءَهُمْ~مُّوْسٰى~بِالْبَيِّنٰتِ~فَاسْتَكْبَرُوْا~فِى~الْاَرْضِ~وَمَا~كَانُوْا~سٰبِقِيْنَ~‌~ۖ~‌~ۚ‏
29:39. இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.
31:7   وَاِذَا~تُتْلٰى~عَلَيْهِ~اٰيٰتُنَا~وَلّٰى~مُسْتَكْبِرًا~كَاَنْ~لَّمْ~يَسْمَعْهَا~كَاَنَّ~فِىْۤ~اُذُنَيْهِ~وَقْرًا‌ۚ~فَبَشِّرْهُ~بِعَذَابٍ~اَلِيْمٍ‏
31:7. அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனைப் போல் - அவன் இரு காதுகளிலும் செவிட்டுத் தனம் இருப்பது போல், பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான்; ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று (நபியே!) நீர் நற் செய்தி கூறுவீராக.
31:18   وَلَا~تُصَعِّرْ~خَدَّكَ~لِلنَّاسِ~وَلَا~تَمْشِ~فِى~الْاَرْضِ~مَرَحًا~‌ؕ~اِنَّ~اللّٰهَ~لَا~يُحِبُّ~كُلَّ~مُخْتَالٍ~فَخُوْرٍۚ‏
31:18. “(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
38:74   اِلَّاۤ~اِبْلِيْسَؕ~اِسْتَكْبَرَ~وَكَانَ~مِنَ~الْكٰفِرِيْنَ‏
38:74. இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.
39:59   بَلٰى~قَدْ~جَآءَتْكَ~اٰيٰتِىْ~فَكَذَّبْتَ~بِهَا~وَاسْتَكْبَرْتَ~وَكُنْتَ~مِنَ~الْكٰفِرِيْنَ‏
39:59. (பதில் கூறப்படும்:) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.”
39:60   وَيَوْمَ~الْقِيٰمَةِ~تَرَى~الَّذِيْنَ~كَذَبُوْا~عَلَى~اللّٰهِ~وُجُوْهُهُمْ~مُّسْوَدَّةٌ~ؕ~اَلَيْسَ~فِىْ~جَهَنَّمَ~مَثْوًى~لِّلْمُتَكَبِّرِيْنَ‏
39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
39:72   قِيْلَ~ادْخُلُوْۤا~اَبْوَابَ~جَهَنَّمَ~خٰلِدِيْنَ~فِيْهَا‌ۚ~فَبِئْسَ~مَثْوَى~الْمُتَكَبِّرِيْنَ‏
39:72. “நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.
40:60   وَقَالَ~رَبُّكُمُ~ادْعُوْنِىْۤ~اَسْتَجِبْ~لَـكُمْؕ~اِنَّ~الَّذِيْنَ~يَسْتَكْبِرُوْنَ~عَنْ~عِبَادَتِىْ~سَيَدْخُلُوْنَ~جَهَنَّمَ~دَاخِرِيْنَ‏
40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
40:75   ذٰ~لِكُمْ~بِمَا~كُنْتُمْ~تَفْرَحُوْنَ~فِى~الْاَرْضِ~بِغَيْرِ~الْحَقِّ~وَبِمَا~كُنْـتُمْ~تَمْرَحُوْنَ‌~ۚ‏
40:75. “இது, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் (பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக் கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்).
40:76   اُدْخُلُوْۤا~اَبْوَابَ~جَهَـنَّمَ~خٰلِدِيْنَ~فِيْهَا~ۚ~فَبِئْسَ~مَثْوَى~الْمُتَكَبِّرِيْنَ‏
40:76. “நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக - பிரவேசியுங்கள்” (என்று கூறப்படும்). எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
41:15   فَاَمَّا~عَادٌ~فَاسْتَكْبَرُوْا~فِى~الْاَرْضِ~بِغَيْرِ~الْحَقِّ~وَقَالُوْا~مَنْ~اَشَدُّ~مِنَّا~قُوَّةً ~‌ؕ~اَوَلَمْ~يَرَوْا~اَنَّ~اللّٰهَ~الَّذِىْ~خَلَقَهُمْ~هُوَ~اَشَدُّ~مِنْهُمْ~قُوَّةً ~ؕ~وَكَانُوْا~بِاٰيٰتِنَا~يَجْحَدُوْنَ‏
41:15. அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
41:38   فَاِنِ~اسْتَكْبَرُوْا~فَالَّذِيْنَ~عِنْدَ~رَبِّكَ~يُسَبِّحُوْنَ~لَهٗ~بِالَّيْلِ~وَالنَّهَارِ~وَهُمْ~لَا~يَسْــٴَــمُوْنَ۩
41:38. ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.
45:31   وَاَمَّا~الَّذِيْنَ~كَفَرُوْۤا~اَفَلَمْ~تَكُنْ~اٰيٰتِىْ~تُتْلٰى~عَلَيْكُمْ~فَاسْتَكْبَرْتُمْ~وَكُنْتُمْ~قَوْمًا~مُّجْرِمِيْنَ‏
45:31. ஆனால், நிராகரித்தவர்களிடம்: “உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).
45:37   وَلَهُ~الْكِبْرِيَآءُ~فِى~السَّمٰوٰتِ~وَالْاَرْضِ‌~وَهُوَ~الْعَزِيْزُ~الْحَكِيْمُ‏
45:37. இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது; மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.
46:10   قُلْ~اَرَءَيْتُمْ~اِنْ~كَانَ~مِنْ~عِنْدِ~اللّٰهِ~وَكَفَرْتُمْ~بِهٖ~وَشَهِدَ~شَاهِدٌ~مِّنْۢ~بَنِىْۤ~اِسْرَآءِيْلَ~عَلٰى~مِثْلِهٖ~فَاٰمَنَ~وَاسْتَكْبَرْتُمْ‌~ؕ~اِنَّ~اللّٰهَ~لَا~يَهْدِى~الْقَوْمَ~الظّٰلِمِيْنَ‏
46:10. “இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?” என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.  
46:20   وَيَوْمَ~يُعْرَضُ~الَّذِيْنَ~كَفَرُوْا~عَلَى~النَّارِ~ؕ~اَذْهَبْتُمْ~طَيِّبٰـتِكُمْ~فِىْ~حَيَاتِكُمُ~الدُّنْيَا~وَاسْتَمْتَعْتُمْ~بِهَا~‌ۚ~فَالْيَوْمَ~تُجْزَوْنَ~عَذَابَ~الْهُوْنِ~بِمَا~كُنْـتُمْ~تَسْتَكْبِرُوْنَ~فِى~الْاَرْضِ~بِغَيْرِ~الْحَقِّ~وَبِمَا~كُنْتُمْ~تَفْسُقُوْنَ‏
46:20. அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).  
48:8   اِنَّاۤ~اَرْسَلْنٰكَ~شَاهِدًا~وَّمُبَشِّرًا~وَّنَذِيْرًا~ۙ‏
48:8. நிச்சயமாக நாம் உம்மை சாட்சி சொல்பவராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அனுப்பியிருக்கிறோம்.
57:23   لِّـكَيْلَا~تَاْسَوْا~عَلٰى~مَا~فَاتَكُمْ~وَلَا~تَفْرَحُوْا~بِمَاۤ~اٰتٰٮكُمْ‌ؕ~وَاللّٰهُ~لَا~يُحِبُّ~كُلَّ~مُخْتَالٍ~فَخُوْرِۙ‏
57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
63:5   وَاِذَا~قِيْلَ~لَهُمْ~تَعَالَوْا~يَسْتَغْفِرْ~لَـكُمْ~رَسُوْلُ~اللّٰهِ~لَـوَّوْا~رُءُوْسَهُمْ~وَرَاَيْتَهُمْ~يَصُدُّوْنَ~وَهُمْ~مُّسْتَكْبِرُوْنَ‏
63:5. இன்னும், “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.
71:7   وَاِنِّىْ~كُلَّمَا~دَعَوْتُهُمْ~لِتَغْفِرَ~لَهُمْ~جَعَلُوْۤا~اَصَابِعَهُمْ~فِىْۤ~اٰذَانِهِمْ~وَاسْتَغْشَوْا~ثِيَابَهُمْ~وَاَصَرُّوْا~وَاسْتَكْبَرُوا~اسْتِكْبَارًا‌~ۚ‏
71:7. “அன்றியும்: நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர்; மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.
74:23   ثُمَّ~اَدْبَرَ~وَاسْتَكْبَرَۙ‏
74:23. அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.