பிரச்சாரத்தில் விவேகமும், நளினமும்
3:159   فَبِمَا~رَحْمَةٍ~مِّنَ~اللّٰهِ~لِنْتَ~لَهُمْ‌ۚ~وَلَوْ~كُنْتَ~فَظًّا~غَلِيْظَ~الْقَلْبِ~لَانْفَضُّوْا~مِنْ~حَوْلِكَ‌~فَاعْفُ~عَنْهُمْ~وَاسْتَغْفِرْ~لَهُمْ~وَشَاوِرْهُمْ~فِى~الْاَمْرِ‌ۚ~فَاِذَا~عَزَمْتَ~فَتَوَكَّلْ~عَلَى~اللّٰهِ‌ؕ~اِنَّ~اللّٰهَ~يُحِبُّ~الْمُتَوَكِّلِيْنَ‏
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
16:125   اُدْعُ~اِلٰى~سَبِيْلِ~رَبِّكَ~بِالْحِكْمَةِ~وَالْمَوْعِظَةِ~الْحَسَنَةِ‌~وَجَادِلْهُمْ~بِالَّتِىْ~هِىَ~اَحْسَنُ‌ؕ~اِنَّ~رَبَّكَ~هُوَ~اَعْلَمُ~بِمَنْ~ضَلَّ~عَنْ~سَبِيْلِهٖ‌~وَهُوَ~اَعْلَمُ~بِالْمُهْتَدِيْنَ‏
16:125. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.
20:134   وَلَوْ~اَنَّاۤ~اَهْلَكْنٰهُمْ~بِعَذَابٍ~مِّنْ~قَبْلِهٖ~لَـقَالُوْا~رَبَّنَا~لَوْلَاۤ~اَرْسَلْتَ~اِلَـيْنَا~رَسُوْلًا~فَنَتَّبِعَ~اٰيٰتِكَ~مِنْ~قَبْلِ~اَنْ~نَّذِلَّ~وَنَخْزٰى‏
20:134. இன்னும் (நம் தூதர்) வருவதற்கு முன், நாம் இவர்களை வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? அவ்வாறாயின் நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன் உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே” என்று கூறுவார்கள்.