பிரயாணத் தொழுகை
4:101   وَاِذَا~ضَرَبْتُمْ~فِى~الْاَرْضِ~فَلَيْسَ~عَلَيْكُمْ~جُنَاحٌ~اَنْ~تَقْصُرُوْا~مِنَ~الصَّلٰوةِ~‌ۖ~اِنْ~خِفْتُمْ~اَنْ~يَّفْتِنَكُمُ~الَّذِيْنَ~كَفَرُوْا‌~ؕ~اِنَّ~الْـكٰفِرِيْنَ~كَانُوْا~لَـكُمْ~عَدُوًّا~مُّبِيْنًا‏
4:101. நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.
4:102   وَاِذَا~كُنْتَ~فِيْهِمْ~فَاَقَمْتَ~لَهُمُ~الصَّلٰوةَ~فَلْتَقُمْ~طَآٮِٕفَةٌ~مِّنْهُمْ~مَّعَكَ~وَلْيَاْخُذُوْۤا~اَسْلِحَتَهُمْ~فَاِذَا~سَجَدُوْا~فَلْيَكُوْنُوْا~مِنْ~وَّرَآٮِٕكُمْ~وَلْتَاْتِ~طَآٮِٕفَةٌ~اُخْرٰى~لَمْ~يُصَلُّوْا~فَلْيُصَلُّوْا~مَعَكَ~وَلْيَاْخُذُوْا~حِذْرَهُمْ~وَاَسْلِحَتَهُمْ‌~ۚ~وَدَّ~الَّذِيْنَ~كَفَرُوْا~لَوْ~تَغْفُلُوْنَ~عَنْ~اَسْلِحَتِكُمْ~وَاَمْتِعَتِكُمْ~فَيَمِيْلُوْنَ~عَلَيْكُمْ~مَّيْلَةً~وَّاحِدَةً‌~ؕ~وَلَا~جُنَاحَ~عَلَيْكُمْ~اِنْ~كَانَ~بِكُمْ~اَ~ذًى~مِّنْ~مَّطَرٍ~اَوْ~كُنْـتُمْ~مَّرْضٰۤى~اَنْ~تَضَعُوْۤا~اَسْلِحَتَكُمْ‌~ۚ~وَ~خُذُوْا~حِذْرَكُمْ‌~ؕ~اِنَّ~اللّٰهَ~اَعَدَّ~لِلْكٰفِرِيْنَ~عَذَابًا~مُّهِيْنًا‏
4:102. (நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.