திருட்டு
5:38   وَالسَّارِقُ~وَالسَّارِقَةُ~فَاقْطَعُوْۤا~اَيْدِيَهُمَا~جَزَآءًۢ~بِمَا~كَسَبَا~نَـكَالًا~مِّنَ~اللّٰهِ~ؕ~وَاللّٰهُ~عَزِيْزٌ~حَكِيْمٌ‏
5:38. திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
60:12   يٰۤاَيُّهَا~النَّبِىُّ~اِذَا~جَآءَكَ~الْمُؤْمِنٰتُ~يُبَايِعْنَكَ~عَلٰٓى~اَنْ~لَّا~يُشْرِكْنَ~بِاللّٰهِ~شَيْــٴًــا~وَّلَا~يَسْرِقْنَ~وَلَا~يَزْنِيْنَ~وَلَا~يَقْتُلْنَ~اَوْلَادَهُنَّ~وَلَا~يَاْتِيْنَ~بِبُهْتَانٍ~يَّفْتَرِيْنَهٗ~بَيْنَ~اَيْدِيْهِنَّ~وَاَرْجُلِهِنَّ~وَلَا~يَعْصِيْنَكَ~فِىْ~مَعْرُوْفٍ‌~فَبَايِعْهُنَّ~وَاسْتَغْفِرْ~لَهُنَّ~اللّٰهَ‌ؕ~اِنَّ~اللّٰهَ~غَفُوْرٌ~رَّحِيْمٌ‏
60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.