97. ஸூரத்துல் கத்ரி(கண்ணியமிக்க இரவு)
மக்கீ, வசனங்கள்: 5

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
97:1
97:1 اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் فِىْ لَيْلَةِ இரவில் الْقَدْرِ ۖ ۚ‏ கத்ரு
97:1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
97:1. நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கிவைத்தோம்.
97:1. திண்ணமாக, நாம் இதனை (குர்ஆனை) மாட்சிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம்.
97:1. நிச்சயமாக நாம் (நம் வேதமாகிய) இதனை கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர் எனும்) இரவில் இறக்கி வைத்தோம்
97:2
97:2 وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِؕ‏
وَمَاۤ எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) لَيْلَةُ الْقَدْرِؕ‏ லைலத்துல் கத்ரு
97:2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
97:2. (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா?
97:2. மாட்சிமை மிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா என்ன?
97:2. (நபியே! அந்த) கண்ணியமிக்க இரவு என்னவென்பது பற்றி உமக்கு அறிவித்தது எது?
97:3
97:3 لَيْلَةُ الْقَدْرِ  ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕ‏
لَيْلَةُ الْقَدْرِ  ۙ லைலத்துல் கத்ரு خَيْرٌ சிறந்தது مِّنْ விட اَلْفِ ஆயிரம் شَهْرٍؕ‏ மாதங்கள்
97:3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
97:3. கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
97:3. மாட்சிமை மிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்!
97:3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிகச் சிறந்ததாகும்.
97:4
97:4 تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ۚ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ‏
تَنَزَّلُ இறங்குகிறார்கள் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்களும் وَالرُّوْحُ ஜிப்ரீலும் فِيْهَا அதில் بِاِذْنِ அனுமதி கொண்டு رَبِّهِمْ‌ۚ தங்கள் இறைவனின் مِّنْ உடன் كُلِّ எல்லா اَمْرٍ ۛۙ‏ கட்டளைகள்
97:4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
97:4. அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
97:4. அதில் வானவர்களும் ரூஹும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகின்றார்கள்.
97:4. அதில் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய பரிசுத்த) ஆவியும் தங்கள் இரட்சகனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) ஒவ்வொரு காரியத்தின் நிமித்தம் இறங்குகின்றனர்.
97:5
97:5 سَلٰمٌ   ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ‏
سَلٰمٌ ஈடேற்றம் உண்டாகுக  ۛهِىَ அது حَتّٰى வரை مَطْلَعِ உதயமாகும் الْفَجْرِ‏ அதிகாலை
97:5. சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
97:5. ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
97:5. அந்த இரவு முழுவதும் நலம் பொருந்தியதாகத் திகழ்கின்றது, வைகறை உதயமாகும் வரை!
97:5. (அது) சாந்தியா(ன இரவாகும், அவ்விரவான)து அதிகாலை உதயமாகும் வரையிலாகும்.