93. ஸூரத்துள் ளுஹா(முற்பகல்)
மக்கீ, வசனங்கள்: 11

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
93:1 وَالضُّحٰىۙ‏ 
93:1. முற்பகல் மீது சத்தியமாக-
93:1. காலைப்பொழுதின் மீது சத்தியமாக!
93:1. ஒளிமிக்க பகலின் மீது சத்தியமாக!
93:2 وَالَّيْلِ اِذَا سَجٰىۙ‏ 
93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
93:2. மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
93:2. மேலும், இரவின் மீதும் சத்தியமாக, அது அமைதியாக வந்தடையும் போது!
93:3 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏ 
93:3. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
93:3. (நபியே!) உங்களது இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; உங்களை வெறுக்கவுமில்லை.
93:3. (நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை; கோபம் கொள்ளவும் இல்லை.
93:4 وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ‏ 
93:4. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
93:4. (ஒவ்வொரு நாளும் உங்களது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையைவிட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கின்றது.
93:4. மேலும், திண்ணமாக, பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தைவிட உமக்கு மிகவும் சிறந்ததாயிருக்கும்.
93:5 وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ‏ 
93:5. இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
93:5. உங்களது இறைவன் மென்மேலும் (பல உயர் பதவிகளை) உங்களுக்கு அளிப்பான். (அவைகளைக் கொண்டு) நீங்கள் திருப்தியடைவீர்கள்.
93:5. மேலும், விரைவில் உம் இறைவன் நீர் திருப்தியடைந்து விடுமளவு உமக்கு வழங்குவான்.
93:6 اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى‏ 
93:6. (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
93:6. உங்களை அநாதையாகக் கண்டு, அவன் உங்களுக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்கவில்லையா?
93:6. அவன் உம்மை அநாதையாய்க் காணவில்லையா? பிறகு, புகலிடம் தந்தான் அல்லவா?
93:7 وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى‏ 
93:7. இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
93:7. திகைத்துத் தயங்கியவராக உங்களைக் கண்ட அவன் நேரான வழியில் (உங்களைச்) செலுத்தினான்.
93:7. மேலும், அவன் உம்மை வழியறியாதவராய்க் கண்டான்; பிறகு, நேர்வழி காண்பித்தான்.
93:8 وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ‏ 
93:8. மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
93:8. முடைப்பட்டவராக உங்களைக் கண்ட அவன் (உங்களைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)
93:8. மேலும், அவன் உம்மை ஏழையாய்க் கண்டான்; பிறகு செல்வராய் ஆக்கினான்.
93:9 فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ‏ 
93:9. எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
93:9. ஆகவே, (இவைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீங்கள் அநாதைகளைக் கடுகடுக்காதீர்கள்.
93:9. ஆகவே, நீர் அநாதைகளுடன் கடுமையாய் நடந்து கொள்ளாதீர்.
93:10 وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْؕ‏ 
93:10. யாசிப்போரை விரட்டாதீர்.
93:10. யாசிப்பவரை வெருட்டாதீர்கள்.
93:10. மேலும், யாசகம் கேட்பவரை விரட்டாதீர்.
93:11 وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ‏ 
93:11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
93:11. (உங்கள்மீது புரிந்துள்ள) உங்களது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!
93:11. மேலும், உம் இறைவனின் அருட்கொடைபற்றி எடுத்துரைப்பீர்.