26. ஸூரத்துஷ்ஷுஃரா(கவிஞர்கள்)
மக்கீ, வசனங்கள்: 227

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
26:1
26:1 طٰسٓمّٓ‏
طٰسٓمّٓ‏ தா சீம் மீம்
26:1. தா, ஸீம், மீம்.
26:1. தா ஸீம் மீம்.
26:1. தாஸீம்மீம்.
26:1. தா ஸீம் மீம்.
26:2
26:2 تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِ‏
تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் الْكِتٰبِ வேதத்தின் الْمُبِيْنِ‏ தெளிவான
26:2. இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
26:2. (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
26:2. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
26:2. இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
26:3
26:3 لَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ اَلَّا يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‏
لَعَلَّكَ بَاخِعٌ நீர் அழித்துக் கொள்வீரோ! نَّـفْسَكَ உம்மையே اَلَّا يَكُوْنُوْا அவர்கள் மாறாததால் مُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொள்பவர்களாக
26:3. (நபியே!) அவர்கள் (அல்லாஹ்வை) விசுவாசம் கொள்பவர்களாக இல்லாததின் காரணமாக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!
26:3. (நபியே!) அவர்கள் (உம்மை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர் போலும்!
26:3. (நபியே!) இவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை என்பதற்காக(க் கவலைப்பட்டு) உம்மையே நீர் மாய்த்துக் கொள்வீர் போன்றிருக்கின்றதே!
26:3. (நபியே! உம்மை) விசுவாசங்கொள்பவர்களாக அவர்கள் இல்லாததன் காரணமாக(த் துக்கத்தால்) உம்மை நீரே மாய்த்துக் கொள்வீர் போலும்!
26:4
26:4 اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِّنَ السَّمَآءِ اٰيَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِيْنَ‏
اِنْ نَّشَاْ நாம் நாடினால் نُنَزِّلْ நாம் இறக்குவோம் عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து اٰيَةً ஒரு அத்தாட்சியை فَظَلَّتْ ஆகிவிடும் اَعْنَاقُهُمْ அவர்களது கழுத்துகள் لَهَا அதற்கு خٰضِعِيْنَ‏ பணிந்தவையாக
26:4. நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குணிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
26:4. நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
26:4. நாம் நாடினால் விண்ணிலிருந்து ஒரு சான்றினை இவர்கள் மீது இறக்கி வைத்திருக்க முடியும். அதன் முன்னே இவர்களின் பிடரி பணிந்து விடும்!
26:4. நாம் நாடினால் வானத்திலிருந்து ஓர் அத்தாட்சியை அவர்கள்மீது இறக்கியிருப்போம், (அப்போது) அவர்களுடைய கழுத்துகள் அதற்கு(க்குனிந்து) பணிந்தவையாக ஆகிவிடும்.
26:5
26:5 وَمَا يَاْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِيْنَ‏
وَمَا يَاْتِيْهِمْ அவர்களிடம் வருவதில்லை مِّنْ ذِكْرٍ அறிவுரை எதுவும் مِّنَ الرَّحْمٰنِ ரஹ்மானிடமிருந்து مُحْدَثٍ புதிதாக اِلَّا كَانُوْا அவர்கள் இருந்தே தவிர عَنْهُ அதை مُعْرِضِيْنَ‏ புறக்கணிப்பவர்களாக
26:5. இன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை.
26:5. ரஹ்மானிடமிருந்து புதிதான ஒரு நல்லுபதேசம் வரும்போதெல்லாம் அதை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
26:5. கருணைமிக்க இறைவனிடமிருந்து புதிதாக எந்த ஓர் அறிவுரை இவர்களிடம் வந்தாலும் இவர்கள் அதனைப் புறக்கணித்துவிடுகின்றார்கள்;
26:5. அர்ரஹ்மானிடமிருந்து புதிதான யாதொரு (நல்) உபதேசமும் – அதனை அவர்கள் (நிராகரித்துப்) புறக்கணிக்கிறவர்களாக இருந்தே தவிர-அவர்களிடம் வருவதில்லை.
26:6
26:6 فَقَدْ كَذَّبُوْا فَسَيَاْتِيْهِمْ اَنْۢـبٰٓــؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
فَقَدْ திட்டமாக كَذَّبُوْا இவர்கள் பொய்ப்பித்தனர் فَسَيَاْتِيْهِمْ ஆகவே, அவர்களிடம் விரைவில் வரும் اَنْۢـبٰٓــؤُا செய்திகள் مَا எது كَانُوْا இருந்தனர் بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகாசம் செய்பவர்களாக
26:6. திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
26:6. (ஆகவே, இதையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதைப் (பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும்.
26:6. இதோ இப்போதும் இவர்கள் பொய்யெனத் தூற்றிவிட்டிருக்கின்றார்கள். ஆனால், எதனை இவர்கள் கேலி செய்துகொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய உண்மைச் செய்திகள் விரைவில் இவர்களுக்கு(ப் பல்வேறு வழிகளின் மூலம்) தெரிந்துவிடும்.
26:6. (ஆகவே, வேதமாகிய இதனையும்) அவர்கள் திட்டமாகப் பொய்யாக்கினார்கள்; ஆகவே, அவர்கள் எதனைப் பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ அதன் (உண்மைச்) செய்திகள் அவர்களிடம் வந்துவிடும்.
26:7
26:7 اَوَلَمْ يَرَوْا اِلَى الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்க வேண்டாமா? اِلَى பக்கம் الْاَرْضِ பூமியின் كَمْ எத்தனை اَنْۢبَتْنَا நாம் முளைக்க வைத்தோம் فِيْهَا அதில் مِنْ كُلِّ எல்லாவற்றிலிருந்தும் زَوْجٍ ஜோடிகள் كَرِيْمٍ‏ அழகிய
26:7. அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
26:7. அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான எத்தனையோ புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கிறோம்.
26:7. இவர்கள் பூமியின் மீது பார்வை செலுத்தவில்லையா என்ன? எத்துணை அதிக அளவில் எல்லாவிதமான உயர்தர தாவரங்களை நாம் அதில் முளைக்கச் செய்திருக்கின்றோம்!
26:7. பூமியின்பால் அவர்கள் பார்க்கவில்லையா? (அதில்) மேலான ஒவ்வொரு வகையிலிருந்தும் (பயன்தரக்கூடிய) எவ்வளவோ (புற்பூண்டுகளை ஜதை ஜதையாகவே) நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
26:8
26:8 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاٰيَةً‌  ؕ ஓர் அத்தாட்சி وَّمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:8. நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
26:8. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
26:8. திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கிறது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களல்லர்.
26:8. நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கின்றது, (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்வோராக இருக்கவுமில்லை.
26:9
26:9 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:9. அன்றியும் (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன்.
26:9. (நபியே!) உமது இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவன்,மகா கருணையுடையவன் ஆவான்.
26:9. மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும், பெருங்கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:9. மேலும், (நபியே!) உம்முடைய இரட்சகன் - அவனே நிச்சயமாக (யாவரையும்) மிகைத்தோன், மிக்க கிருபையுடையோன்.
26:10
26:10 وَاِذْ نَادٰى رَبُّكَ مُوْسٰۤى اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِيْنَۙ‏
نَادٰى அழைத்தான் رَبُّكَ உமது இறைவன் مُوْسٰۤى மூசாவை اَنِ ائْتِ நீர் வருவீராக! الْقَوْمَ மக்களிடம் الظّٰلِمِيْنَۙ‏ அநியாயக்காரர்கள்
26:10. உம் இறைவன் மூஸாவிடம் “அநியாயக்கார சமூகத்திடம் செல்க” என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக.)
26:10. (நபியே!) உமது இறைவன் மூஸாவை அழைத்து ‘‘ நீர் அநியாயக்காரர்களான ஃபிர்அவ்னுடைய மக்களிடம் செல்வீராக'' எனக் கூறியதை நீர் கவனித்துப் பார்ப்பீராக.
26:10. அந்த நிகழ்ச்சியை இவர்களுக்கு நீர் கூறும்: “உம்முடைய இறைவன் மூஸாவை அழைத்துக் கூறினான். அக்கிரமம் புரிந்த சமூகத்தாரிடம்
26:10. இன்னும், (நபியே!) உம்முடைய இரட்சகன் “நீர் அநியாயக்கார சமூகத்தாரிடம் செல்வீராக! “என(க் கட்டளையிட்டு) மூஸாவை அழைத்ததை (நீர் நினைவு கூர்வீராக)
26:11
26:11 قَوْمَ فِرْعَوْنَ‌ؕ اَلَا يَتَّقُوْنَ‌‏
قَوْمَ மக்களிடம் فِرْعَوْنَ‌ؕ ஃபிர்அவ்னின் اَلَا يَتَّقُوْنَ‌‏ அவர்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா!
26:11. “ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடம்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டார்களா?
26:11. ‘‘ அவர்கள் (எனக்குப்) பயப்பட மாட்டார்களா?'' (என்று உமது இறைவன் கேட்டான்.)
26:11. ஃபிர்அவ்னுடைய சமூகத்தாரிடம் நீர் செல்லும். அவர்கள் அஞ்சுவதில்லையா?”
26:11. ஃபிர் அவ்னுடைய சமூகத்தாரிடம் (செல்வீராக!) அவர்கள் (அல்லாஹ்வுக்கு) பயப்பட மாட்டார்களா?
26:12
26:12 قَالَ رَبِّ اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِؕ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اَنْ يُّكَذِّبُوْنِؕ‏ அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று
26:12. (இதற்கு அவர்) “என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
26:12. அதற்கு அவர் ‘‘ என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' என்றார்.
26:12. அதற்கு அவர் பணிந்து கூறினார்: “என் இறைவனே! என்னை அவர்கள் பொய்யன் என்று தூற்றிவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.
26:12. அ(தற்க)வர்” என் இரட்சகனே! அவர்கள் என்னைப் பொய்ப்படுத்தி விடுவார்கள் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
26:13
26:13 وَيَضِيْقُ صَدْرِىْ وَلَا يَنْطَلِقُ لِسَانِىْ فَاَرْسِلْ اِلٰى هٰرُوْنَ‏
وَيَضِيْقُ இன்னும் நெருக்கடிக்குள்ளாகிவிடும் صَدْرِىْ என் நெஞ்சம் وَلَا يَنْطَلِقُ இன்னும் பேசாது لِسَانِىْ என் நாவு فَاَرْسِلْ ஆகவே, நீ அனுப்பு اِلٰى هٰرُوْنَ‏ ஹாரூனுக்கு
26:13. “என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!
26:13. இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேசமுடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக!
26:13. என் நெஞ்சம் இடுங்கிவிடுகின்றது; என் நாவுக்கு சரளமாகப் பேச வருவதில்லை. எனவே, நீ ஹாரூனுக்கு தூதுத்துவத்தை வழங்குவாயாக!
26:13. (அவ்வாறு பொய்ப்படுத்தினால்) என் மனம் நெருக்கடிக்குள்ளாகியும் விடும்; என் நாவும் (சரியாக) பேசாது; ஆதலால் (எனக்கு வஹீ அனுப்பியது போன்று) ஹாரூனுக்கு (வஹீ) அனுப்புவாயாக!
26:14
26:14 وَلَهُمْ عَلَىَّ ذَنْۢبٌ فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ‌ۚ‏
وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَلَىَّ என் மீது ذَنْۢبٌ ஒருகுற்றம்இருக்கிறது فَاَخَافُ ஆகவே, நான் பயப்படுகிறேன் اَنْ يَّقْتُلُوْنِ‌ۚ‏ அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று
26:14. “மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது; எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்” (என்றும் கூறினார்).
26:14. மேலும், என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' (என்றும் கூறினார்).
26:14. மேலும், என்னைப் பற்றி அவர்களிடம் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது. எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று நான் அஞ்சுகின்றேன்.”
26:14. “மேலும், அவர்களுக்கு என்மீது ஒரு (கொலைக்) குற்றச்சாட்டுதலும் உண்டு; அதற்காக அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்றும் நான் பயப்படுகிறேன்” (என்று கூறினார்).
26:15
26:15 قَالَ كَلَّا‌ ۚ فَاذْهَبَا بِاٰيٰتِنَآ‌ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ‏
قَالَ அவன் கூறினான் كَلَّا‌ ۚ அவ்வாறல்ல! فَاذْهَبَا நீங்கள் இருவரும் செல்லுங்கள் بِاٰيٰتِنَآ‌ எனது அத்தாட்சிகளை கொண்டு اِنَّا مَعَكُمْ நிச்சயமாக நாம் உங்களுடன் مُّسْتَمِعُوْنَ‏ செவியேற்பவர்களாக
26:15. (அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்” எனக் கூறினான்.
26:15. அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன்.
26:15. இறைவன் கூறினான்: “அப்படியல்ல! நீங்கள் இருவரும் என்னுடைய சான்றுகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நாம் உங்களுடன் அனைத்தையும் செவியுற்றுக் கொண்டிருப்போம்.
26:15. (அதற்கு) “அவ்வாறன்று நீங்களிருவரும் நம்முடைய அத்தாட்சிகளை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்; நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்கக் கூடியவர்களாக இருப்போம்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
26:16
26:16 فَاْتِيَا فِرْعَوْنَ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
فَاْتِيَا ஆகவே, நீங்கள் இருவரும் வாருங்கள் فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் فَقُوْلَاۤ நீங்கள் இருவரும் கூறுங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் رَسُوْلُ தூதராக இருக்கிறோம் رَبِّ இறைவனுடைய الْعٰلَمِيْنَۙ‏ அகிலங்களின்
26:16. ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: “நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள்.
26:16. ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, ‘‘ நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனின் தூதர்களாவோம்.''
26:16. இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். மேலும், அவனிடம் கூறுங்கள்: அகிலங்களின் இறைவன் எங்களை அனுப்பியிருக்கின்றான்;
26:16. “ஆகவே நீங்களிருவரும் ஃபிர் அவ்னிடம் சென்று நிச்சயமாக நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வின் தூதராவோம் என்று நீங்களிருவரும் கூறுங்கள்.” (அதன் காரணமாக)
26:17
26:17 اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏
اَنْ اَرْسِلْ நிச்சயமாக அனுப்பிவிடு مَعَنَا எங்களுடன் بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏ இஸ்ரவேலர்களை
26:17. “எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு!” (எனவும் கூறுங்கள்.)
26:17. ஆகவே, ‘‘ இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு'' எனக் கூறுங்கள்! (என்பதாகவும் கட்டளையிட்டான்.)
26:17. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நீ எங்களுடன் அனுப்பிவிட வேண்டுமென்பதற்காக!”
26:17. “இஸ்ராயீலின் மக்களை நீ எங்களுடன் அனுப்பிவிடு” (என்றும் கூறுங்கள்).
26:18
26:18 قَالَ اَلَمْ نُرَبِّكَ فِيْنَا وَلِيْدًا وَّلَبِثْتَ فِيْنَا مِنْ عُمُرِكَ سِنِيْنَۙ‏
قَالَ அவன் கூறினான் اَلَمْ نُرَبِّكَ நாம் உம்மை வளர்க்கவில்லையா? فِيْنَا எங்களில் وَلِيْدًا குழந்தையாக وَّلَبِثْتَ இன்னும் தங்கியிருந்தாய் فِيْنَا எங்களுடன் مِنْ عُمُرِكَ உமது வாழ்க்கையில் سِنِيْنَۙ‏ ஆண்டுகள்
26:18. (ஃபிர்அவ்ன்) கூறினான்: நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.)
26:18. (அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உம்மைக் குழந்தையாக எடுத்துக்கொண்டு வளர்க்கவில்லையா? நீர் (உமது வாலிபத்தை அடையும் வரை) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்.
26:18. அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீ குழந்தையாய் இருந்தபோது உன்னை நாம் எம்மிடத்திலே வைத்து வளர்க்கவில்லையா? மேலும், உன் வாழ்நாளில் பல ஆண்டுகள் நீ எம்மிடம் கழித்திருக்கின்றாய்.
26:18. (அவ்வாறே ஃபிர் அவ்னிடம் சென்று அவ்விருவரும் கூறவே,) அதற்கவன் (மூஸாவிடம்), குழந்தையாக உம்மை (எடுத்து) எங்களுக்கு மத்தியில் நாங்கள் வளர்க்கவில்லையா? நீர் உம் வயதில் அநேக ஆண்டுகள் நம்மிடத்தில் தங்கியும் இருந்தீர்” என்று அவன் கூறினான்.
26:19
26:19 وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِىْ فَعَلْتَ وَاَنْتَ مِنَ الْكٰفِرِيْنَ‏
وَفَعَلْتَ இன்னும் நீ செய்துவிட்டாய் فَعْلَتَكَ உனது செயலை الَّتِىْ எது فَعَلْتَ செய்தாய் وَاَنْتَ நீயோ இருக்கிறாய் مِنَ الْكٰفِرِيْنَ‏ நன்றியறியாதவர்களில்
26:19. “ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்” (என்றும் கூறினான்).
26:19. நீர் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்! (அதை மன்னித்திருந்தும்) நீர் நன்றி கெட்டவராகவே இருக்கிறீர்'' என்றான்.
26:19. அதன் பின்னர் நீ செய்துவிட்ட அந்தச் செயலையும் செய்துள்ளாய். நீ பெரிதும் நன்றிகெட்ட மனிதன்தான்!”
26:19. “நீர் செய்த (கொலைச்) செயலையும் செய்தீர்! மேலும், நீர் நன்றி மறந்தவர்களில் உள்ளவராகவும் இருக்கின்றீர்” (என்றும் ஃபிர் அவன் கூறினான்).
26:20
26:20 قَالَ فَعَلْتُهَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّيْنَؕ‏
قَالَ அவர் கூறினார் فَعَلْتُهَاۤ அதை நான் செய்தேன் اِذًا அப்போது وَّاَنَا நானோ مِنَ الضَّآلِّيْنَؕ‏ அறியாதவர்களில்
26:20. (மூஸா) கூறினார்: “நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.
26:20. அதற்கு மூஸா கூறினார்: ‘‘ நான் அறியாதவனாக இருந்த நிலைமையில் அதை நான் செய்தேன்.
26:20. மூஸா பதில் கூறினார்: “அப்போது நான் அறியாமையினால் அக்காரியத்தைச் செய்துவிட்டேன்.
26:20. அதற்கு “நான் அந்நேரத்தில் அறியாதவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதனை நான் செய்தேன்” என்று (மூஸாவாகிய) அவர் கூறினார்.
26:21
26:21 فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِىْ رَبِّىْ حُكْمًا وَّجَعَلَنِىْ مِنَ الْمُرْسَلِيْنَ‏
فَفَرَرْتُ நான் ஓடிவிட்டேன் مِنْكُمْ உங்களை விட்டு لَمَّا خِفْتُكُمْ உங்களை நான் பயந்தபோது فَوَهَبَ ஆகவே,வழங்கினான் لِىْ எனக்கு رَبِّىْ என் இறைவன் حُكْمًا தூதுவத்தை وَّجَعَلَنِىْ இன்னும் என்னை ஆக்கினான் مِنَ الْمُرْسَلِيْنَ‏ தூதர்களில் ஒருவராக
26:21. “ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
26:21. ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என் இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன் தூதராகவும் என்னை ஆக்கினான்.
26:21. பின்னர், நான் உங்களுக்கு அஞ்சி உங்களிடமிருந்து ஓடிவிட்டேன். பின் என் இறைவன் எனக்கு நுண்ணறிவுத் திறனை வழங்கினான்; என்னைத் தூதர்களில் ஒருவனாகவுமாக்கினான்.
26:21. “ஆதலால் நான் உங்களுக்கு பயந்தபொழுது உங்களை விட்டு வெருண்டோடி விட்டேன், பிறகு என்னுடைய இரட்சகன் எனக்கு அறிவையும் கொடுத்துத் (தன்னுடைய) தூதர்களில் உள்ளவனாகவும் என்னை ஆக்கினான்”
26:22
26:22 وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَىَّ اَنْ عَبَّدْتَّ بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏
وَتِلْكَ அது نِعْمَةٌ ஓர் உபகாரம்தான் تَمُنُّهَا நீ சொல்லிக் காட்டுகின்றாய்/அதை عَلَىَّ என் மீது اَنْ عَبَّدْتَّ அடிமையாக்கி வைத்திருக்கிறாய் بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏ இஸ்ரவேலர்களை
26:22. “பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?”
26:22. ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?'' (இவ்வாறு மூஸா கூறினார்.)
26:22. எனக்குச் செய்ததாக நீ சொல்லிக் காட்டும் அந்த உபகாரத்தின் உண்மைநிலை யாதெனில், நீ இஸ்ராயீல் வழித்தோன்றல்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததேயாகும்.”
26:22. “மேலும், (குழந்தைப்பருவத்தில் என்னை நீ வளர்த்துப் பரிபாலித்த) அது, (என் இனத்தாராகிய) இஸ்ராயீலின் மக்களை நீ அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில் (என்னையும் அடிமையாக்காது) நீ எனக்கு சொல்லிக் காண்பிக்கக்கூடிய ஓர் அருட்கொடையே ஆகும்” (என்று கூறினார்).
26:23
26:23 قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِيْنَؕ‏
قَالَ கூறினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் وَمَا رَبُّ இறைவன் யார்? الْعٰلَمِيْنَؕ‏ அகிலங்களின்
26:23. அதற்கு ஃபிர்அவ்ன்: “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான்.
26:23. ‘‘ உலகத்தாரின் இறைவன் யார்?'' என ஃபிர்அவ்ன் கேட்டான்.
26:23. ஃபிர்அவ்ன் கேட்டான்: “மேலும், இந்த அகிலங்களின் இறைவன் என்பது என்ன?”
26:23. (அதற்கு) ஃபிர் அவ்ன் “அகிலத்தாரின் இரட்சன்” என்றால் என்ன?” என்று கேட்டான்.
26:24
26:24 قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏
قَالَ கூறினார் رَبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَاؕ இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّوْقِنِيْنَ‏ உறுதிகொள்பவர்களாக
26:24. அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.
26:24. அதற்கு (மூஸா) ‘‘ வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன்தான் (உலகத்தாரின் இறைவனும் ஆவான்). (இவ்வுண்மையை) நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நம்பிக்கை கொள்ளுங்கள்)'' என்று கூறினார்.
26:24. அதற்கு மூஸா பதிலளித்தார்: “அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிற்கு இடையிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அதிபதி ஆவான் நீங்கள் உறுதியான நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால்!”
26:24. (அதற்கு) “நீங்கள் உறுதிகொண்டவர்களாக இருப்பின் வானங்கள் மற்றும் பூமி அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவை ஆகியவற்றின் இரட்சகன்” என்று (மூஸா கூறினார்),.
26:25
26:25 قَالَ لِمَنْ حَوْلَهٗۤ اَلَا تَسْتَمِعُوْنَ‏
قَالَ அவன் கூறினான் لِمَنْ حَوْلَهٗۤ தன்னை சுற்றி உள்ளவர்களிடம் اَلَا تَسْتَمِعُوْنَ‏ நீங்கள் செவிமடுக்கிறீர்களா?
26:25. தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி: “நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?” என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான்.
26:25. அதற்கவன், தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இதைச் செவியுற வில்லையா?'' என்று கூறினான்.
26:25. ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் கூறினான்: “கேட்கிறீர்களல்லவா?”
26:25. அ(தற்க)வன் “தன்னைச் சூழ இருந்தவர்களிடம், நீங்கள் (இவர் கூற்றைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா,” என்று கேட்டான்.
26:26
26:26 قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏
قَالَ அவர் கூறினார் رَبُّكُمْ உங்கள் இறைவன் وَرَبُّ இன்னும் இறைவன் اٰبَآٮِٕكُمُ உங்கள் மூதாதைகளின் الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களான
26:26. (அப்பொழுது மூஸா) “உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
26:26. அதற்கவர் ‘‘ (அவன்தான்) உங்கள் இறைவனும் (உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான்'' என்று கூறினார்.
26:26. அதற்கு மூஸா கூறினார்: “அவன் உங்களுடைய இறைவனும், முன்னோர்களான உங்கள் மூதாதையருடைய இறைவனுமாவான்.”
26:26. (அதற்கு மூஸாவாகிய) அவர் “உங்களின் இரட்சகனும், முன் சென்று போன உங்கள் மூதாதையர்களின் இரட்சகனுமாவான்”, என்று கூறினார்.
26:27
26:27 قَالَ اِنَّ رَسُوْلَـكُمُ الَّذِىْۤ اُرْسِلَ اِلَيْكُمْ لَمَجْنُوْنٌ‏
قَالَ அவன் கூறினான் اِنَّ நிச்சயமாக رَسُوْلَـكُمُ உங்கள் தூதர் الَّذِىْۤ எவர் اُرْسِلَ அனுப்பப்பட்ட اِلَيْكُمْ உங்களிடம் لَمَجْنُوْنٌ‏ கண்டிப்பாக ஒரு பைத்தியக்காரர்
26:27. (அதற்கு ஃபிர்அவ்ன்:) “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக் காரரே ஆவார்” எனக் கூறினான்.
26:27. அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) ‘‘ உங்களிடம் அனுப்பப்பட்ட(தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்'' என்று சொன்னான்.
26:27. அதற்கு ஃபிர்அவ்ன் (அவையோரை நோக்கி) கூறினான்: “உங்களிடம் அனுப்பப்பட்ட இந்தத் தூதர் சரியான பைத்தியக்காரராய்த் தெரிகின்றார்!”
26:27. “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் - (அவர்) திட்டமாக ஒரு பைத்தியக்காரர்தாம்” என்று (ஃபிர் அவ்னாகிய) அவன் கூறினான்.
26:28
26:28 قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏
قَالَ அவர் கூறினார் رَبُّ இறைவன் الْمَشْرِقِ கிழக்கு திசை وَالْمَغْرِبِ இன்னும் மேற்கு திசை وَمَا بَيْنَهُمَا ؕ இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْقِلُوْنَ‏ சிந்தித்துபுரிபவர்களாக
26:28. (அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
26:28. அதற்கு (மூஸா) ‘‘ கீழ் நாடு மேல் நாடு இன்னும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களின் இறைவனும் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)'' என்று கூறினார்.
26:28. அதற்கு மூஸா கூறினார்: “கிழக்கு, மேற்கு மற்றும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்திற்கும் அவன் அதிபதியாவான் நீங்கள் சற்றேனும் அறிவுடையோராக இருந்தால்!”
26:28. (அதற்கு மூஸா “அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இரட்சகன், (இதனை) நீங்கள் விளங்கிக் கொள்பவர்களாக இருப்பின் (அவனை விசுவாசங்கொள்ளுங்கள்)” என்று கூறினார்.
26:29
26:29 قَالَ لَٮِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَيْرِىْ لَاَجْعَلَـنَّكَ مِنَ الْمَسْجُوْنِيْنَ‏
قَالَ அவன் கூறினான் لَٮِٕنِ اتَّخَذْتَ நீர் எடுத்துக் கொண்டால் اِلٰهًا ஒரு கடவுளை غَيْرِىْ என்னைஅன்றிவேறு لَاَجْعَلَـنَّكَ உம்மையும் ஆக்கி விடுவேன் مِنَ الْمَسْجُوْنِيْنَ‏ சிறைப்படுத்தப்பட்டவர்களில்
26:29. (அதற்கு ஃபிர்அவ்ன்:) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.
26:29. அதற்கவன் ‘‘ என்னைத் தவிர (மற்றெதனையும்) நீர் கடவுளாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உம்மை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்'' என்று கூறினான்.
26:29. அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீர் என்னைத் தவிர வேறு எவரையேனும் வணக்கத்திற்குரியவராய் ஏற்றுக் கொண்டால், சிறையில் வாடி வதங்கிக் கிடப்பவர்களுடன் உம்மையும் நான் சேர்த்து விடுவேன்!”
26:29. அ(தற்க)வன், “என்னை அன்றி (மற்றெதனையும் வணக்கத்திற்குரிய) நாயனாக நீர் எடுத்துக்கொண்டால், நிச்சயமாக நான் உம்மைச் சிறையிடப்பட்டோரில் (ஒருவராக) ஆக்கிவிடுவேன்” என்று கூறினான்.
26:30
26:30 قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍ مُّبِيْنٍ‌ۚ‏
قَالَ அவர் கூறினார் اَوَلَوْ جِئْتُكَ நான் உம்மிடம் கொண்டு வந்தாலுமா? بِشَىْءٍ مُّبِيْنٍ‌ۚ‏ தெளிவான ஒன்றை
26:30. (அதற்கு அவர்) “நான் உனக்குத் தெளிவான (அத்தாட்சிப்) பொருளை கொண்டு வந்தாலுமா?” எனக் கேட்டார்.
26:30. அதற்கவர் ‘‘ தெளிவானதொரு அத்தாட்சியை நான் உன்னிடம் கொண்டு வந்த போதிலுமா?'' என்று கேட்டார்.
26:30. மூஸா கேட்டார்: “தெளிவான ஒரு சான்றை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?”
26:30. அ(தற்க)வர், “தெளிவான (அத்தாட்சியாக) ஒரு பொருள் நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?” என்று கேட்டார்.
26:31
26:31 قَالَ فَاْتِ بِهٖۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏
قَالَ அவன் கூறினான் فَاْتِ بِهٖۤ அதைக் கொண்டுவாரீர் اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்களில்
26:31. “நீர் உண்மையாளராக இருப்பின் அதை நீர் கொண்டு வாரும்” என (ஃபிர்அவ்ன்) பதில் கூறினான்.
26:31. அதற்கவன் ‘‘ நீர் சொல்வது உண்மையானால், அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான்.
26:31. அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “அதனைக் கொண்டுவாரும்; நீர் உண்மையாளராயின்!”
26:31. அ(தற்க)வன், “நீர் உண்மையாளர்களில் இருப்பின், அதனைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.
26:32
26:32 ‌فَاَ لْقٰى عَصَاهُ فَاِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِيْنٌ‌ ۖ ‌‌ۚ‏
فَاَ لْقٰى ஆகவே அவர் எறிந்தார் عَصَاهُ தனது கைத்தடியை فَاِذَا உடனே هِىَ அது ثُعْبَانٌ மலைப் பாம்பாக مُّبِيْنٌ‌ ۖ ۚ‏ தெளிவான
26:32. ஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது.
26:32. ஆகவே, மூஸா தன் தடியை எறிந்தார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது.
26:32. (அவன் இவ்வாறு கூறியதும்) மூஸா தன் கைத்தடியைப் போட்டார். உடனே அது சந்தேகமின்றி ஒரு பாம்பாயிற்று.
26:32. ஆகவே, (மூஸாவாகிய) அவர் தன் தடியைப் போட்டார், உடனே அது தெளிவானதொரு (மலைப்)பாம்பாகிவிட்டது.
26:33
26:33 وَّنَزَعَ يَدَهٗ فَاِذَا هِىَ بَيْضَآءُ لِلنّٰظِرِيْنَ‏
وَّنَزَعَ அவர் வெளியே எடுத்தார் يَدَهٗ தனது கையை فَاِذَا உடனே هِىَ அது ஆகிவிட்டது بَيْضَآءُ வெண்மையாக لِلنّٰظِرِيْنَ‏ பார்ப்பவர்களுக்கு
26:33. இன்னும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
26:33. மேலும், அவர் தன் கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது.
26:33. பிறகு, அவர் தம் கையை (அக்குளிலிருந்து) வெளியே எடுத்தார். உடனே அது பார்ப்போர் அனைவரின் முன்னிலையிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
26:33. இன்னும் அவர் தன்னுடைய கையை(ச் சட்டைக்குள்ளிருந்து) வெளியில் எடுத்தார், அப்போது அது பார்ப்போருக்கு (ஒளிமயமான) வெண்மையாக இருந்தது.
26:34
26:34 قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌۙ‏
قَالَ அவன் கூறினான் لِلْمَلَاِ பிரமுகர்களிடம் حَوْلَهٗۤ தன்னை சுற்றியுள்ள اِنَّ நிச்சயமாக هٰذَا இவர் لَسٰحِرٌ ஒரு சூனியக்காரர்தான் عَلِيْمٌۙ‏ நன்கறிந்த
26:34. (ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி “இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!” என்று கூறினான்.
26:34. (இதைக் கண்ணுற்ற ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ இருந்த பிரதானிகளை நோக்கி, ‘‘நிச்சயமாக இவர் தேர்ச்சிபெற்ற சூனியக்காரராக இருக்கிறார்.
26:34. ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றிலுமிருந்த தலைவர்களிடம் கூறினான்: “இவர் உண்மையில் ஒரு கைதேர்ந்த சூனியக்காரர்!
26:34. தன்னைச் சூழ இருந்த பிரதானிகளிடம் “நிச்சயமாக இவர் (மிகவும்) நன்கறிந்த சூனியக்காரர்” என்று (ஃபிர்அவ்னாகிய) அவன் கூறினான்.
26:35
26:35 يُّرِيْدُ اَنْ يُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهٖ ‌ۖ  فَمَاذَا تَاْمُرُوْنَ‌‏
يُّرِيْدُ அவர் நாடுகிறார் اَنْ يُّخْرِجَكُمْ உங்களை வெளியேற்ற مِّنْ اَرْضِكُمْ உங்கள் பூமியிலிருந்து بِسِحْرِهٖ தனது சூனியத்தால் ۖ  فَمَاذَا ஆகவே, என்ன? تَاْمُرُوْنَ‌‏ நீங்கள் கருதுகிறீர்கள்
26:35. “இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?” (என்று கேட்டான்.)
26:35. இவர் தன் சூனியத்தால் உங்கள் ஊரை விட்டும் உங்களைத் துரத்திவிட எண்ணுகிறார். ஆகவே, இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்'' என்று கேட்டான்.
26:35. தன்னுடைய சூனியத்தின் வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றார். இப்போது கூறுங்கள், நீங்கள் என்ன கட்டளை இடப்போகின்றீர்கள்?”
26:35. “இவர் தன் சூனியத்தைக் கொண்டு உங்கள் (ஊரான இப்) பூமியைவிட்டும் உங்களை வெளியேற்றிவிட நாடுகிறார், ஆகவே (இதைப்பற்றி) நீங்கள் (எனக்கு) எதை(ச்செய்ய) ஏவுகிறீர்கள்”? (என்று ஃபிர் அவன் கேட்டான்).
26:36
26:36 قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِى الْمَدَآٮِٕنِ حٰشِرِيْنَۙ‏
قَالُوْۤا அவர்கள் கூறினர் اَرْجِهْ அவருக்கும் அவகாசம் அளி! وَاَخَاهُ அவரது சகோதரருக்கும் وَابْعَثْ இன்னும் அனுப்பு فِى الْمَدَآٮِٕنِ நகரங்களில் حٰشِرِيْنَۙ‏ அழைத்து வருபவர்கள்
26:36. அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
26:36. அதற்கவர்கள், ‘‘ அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை.
26:36. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “இவரையும், இவருடைய சகோதரரையும் தடுத்து வையுங்கள். முரசறைவோரை நகரங்களுக்கு அனுப்புங்கள்.
26:36. அ(தற்க)வர்கள், “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிடு, மேலும், (சூனியக்காரர்களை) திரட்டிக்கொண்டு வருவோரைப் பல நகரங்களுக்கும் அனுப்பி வை” என்று கூறினார்கள்.
26:37
26:37 يَاْتُوْكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيْمٍ‏
يَاْتُوْكَ அவர்கள் உன்னிடம் கொண்டு வருவார்கள் بِكُلِّ எல்லோரையும் سَحَّارٍ பெரிய சூனியக்காரர்கள் عَلِيْمٍ‏ கற்றறிந்தவர்(கள்)
26:37. (அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
26:37. தேர்ச்சிபெற்ற சூனியக்காரர்கள் அனைவரையும் அவர்கள் (தேடிப் பிடித்து) உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்.
26:37. திறமை வாய்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் தங்களிடம் அவர்கள் அழைத்துக் கொண்டு வரட்டும்!”
26:37. “அவர்கள் கற்றறிந்த ஒவ்வொரு சூனியக்காரனையும் உம்மிடம் (அழைத்துக்) கொண்டு வருவார்கள்” (என்று கூறினார்கள்.)
26:38
26:38 فَجُمِعَ السَّحَرَةُ لِمِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍۙ‏
فَجُمِعَ ஆகவே, ஒன்று சேர்க்கப்பட்டனர் السَّحَرَةُ சூனியக்காரர்கள் لِمِيْقَاتِ குறிப்பிட்ட தவணையில் يَوْمٍ ஒரு நாளின் مَّعْلُوْمٍۙ‏ அறியப்பட்ட
26:38. சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.
26:38. (அவ்வாறே துப்பறிபவர்கள் பல ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு) குறித்த நாளில், குறித்த நேரத்தில் (குறித்த இடத்தில்) சூனியக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.
26:38. அவ்வாறு ஒருநாள் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.
26:38. ஆகவே, (பல நகரங்களுக்கும் திரட்டுவோர் அனுப்பி வைக்கப்பட்டு குறிப்பிட்ட நாளின் குறித்த நேரத்திற்குச் சூனியக்காரர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.
26:39
26:39 وَّقِيْلَ لِلنَّاسِ هَلْ اَنْـتُمْ مُّجْتَمِعُوْنَۙ‏
وَّقِيْلَ கூறப்பட்டது لِلنَّاسِ மக்களுக்கு هَلْ اَنْـتُمْ مُّجْتَمِعُوْنَۙ‏ நீங்கள் ஒன்று சேருவீர்களா?
26:39. இன்னும் மக்களிடம் “(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?” என்று கேட்கப்பட்டது.
26:39. எல்லா மனிதர்களுக்கும், ‘‘ (குறித்த காலத்தில்) நீங்கள் வந்து சேருவீர்களா?'' என்று பறைசாற்றப்பட்டது.
26:39. மக்களிடம் கோரப்பட்டது: “நீங்கள் கூட்டத்திற்கு வருவீர்களா?
26:39. (சகல) மனிதர்களிடமும், (குறித்த நேரத்தில்) நீங்கள் (வந்து) ஒன்று சேருவீர்களா? என்றும் கேட்கப்பட்டது.
26:40
26:40 لَعَلَّنَا نَـتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِيْنَ‏
لَعَلَّنَا نَـتَّبِعُ நாம் பின்பற்றலாம் السَّحَرَةَ சூனியக்காரர்களை اِنْ كَانُوْا هُمُ அவர்கள் ஆகிவிட்டால் الْغٰلِبِيْنَ‏ வெற்றியாளர்களாக
26:40. ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றக் கூடும் (என்றுங் கூறப்பட்டது).
26:40. (இவ்வாறு அங்கு கூடும்) சூனியக்காரர்கள் வெற்றி கொண்டால் (அவர்களுடைய மார்க்கத்தையே) நாம் பின்பற்றவும் கூடும் (என்றும் பறை சாற்றப்பட்டது).
26:40. நாம் சூனியக்காரர்களின் மார்க்கத்திலேயே இருந்து விடலாம்; அவர்கள் வெற்றியாளர்களாய்த் திகழ்ந்தால்!”
26:40. சூனியக்காரர்களை – அவர்கள் வெற்றி பெற்றவர்களாக ஆகிவிட்டால் - நாம் பின்பற்றக்கூடும் (என்று கூறப்பட்டது).
26:41
26:41 فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَٮِٕنَّ لَـنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ‏
فَلَمَّا جَآءَ வந்த போது السَّحَرَةُ சூனியக்காரர்கள் قَالُوْا கூறினர் لِفِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் اَٮِٕنَّ لَـنَا எங்களுக்கு உண்டா لَاَجْرًا திட்டமாக கூலி اِنْ كُنَّا நாங்கள் ஆகிவிட்டால் نَحْنُ நாங்கள் الْغٰلِبِيْنَ‏ வெற்றியாளர்களாக
26:41. ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லவா ?” என்று கேட்டார்கள்.
26:41. சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?'' என்று கேட்டார்கள்.
26:41. சூனியக்காரர்கள் (களத்திற்கு) வந்தபோது, ஃபிர்அவ்னிடம் கேட்டார்கள்: “நாங்கள் வெற்றியடைந்துவிட்டால், திண்ணமாக எங்களுக்கு வெகுமதி கிடைக்குமல்லவா?”
26:41. ஆகவே, சூனியக்காரர்கள் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னிடம், “நாங்களே மிகைத்தவர்களாகி (வென்று) விட்டால், (அதற்குரிய) கூலி (வெகுமதி) நிச்சயமாக எங்களுக்கு உண்டா?” என்று கேட்டார்கள்.
26:42
26:42 قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِيْنَ‏
قَالَ அவன் கூறினான் نَعَمْ ஆம் وَاِنَّكُمْ இன்னும் நிச்சயமாக நீங்கள் اِذًا அப்போது لَّمِنَ الْمُقَرَّبِيْنَ‏ நெருக்கமானவர்களில்
26:42. “ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்” என்று அவன் கூறினான்.
26:42. அதற்கவன் ‘‘ ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம் சபையிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்'' என்று கூறினான்.
26:42. அதற்கு அவன், “ஆம்! மேலும், நீங்கள் அப்போது எனக்கு நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்றான்.
26:42. அ(தற்க)வர் “ஆம்! உண்டு அந்நேரத்தில், நிச்சயமாக நீங்கள் (நம்முடைய சபையிலும்) நமக்கு நெருக்கமாக்கப்பட்டவர்களில் உள்ளவராவீர்கள்” என்று கூறினான்.
26:43
26:43 قَالَ لَهُمْ مُّوْسٰۤى اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ‏
قَالَ கூறினார் لَهُمْ அவர்களுக்கு مُّوْسٰۤى மூசா اَلْقُوْا எறியுங்கள் مَاۤ எதை اَنْتُمْ நீங்கள் مُّلْقُوْنَ‏ எறியப் போகிறீர்களோ
26:43. மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்.
26:43. அவர்களை நோக்கி மூஸா ‘‘ நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்'' எனக் கூறினார்.
26:43. மூஸா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் எறிய இருப்பதை எறியுங்கள்!”
26:43. “நீங்கள் (சூனியம் செய்ய) எதைப்போடக் கூடியவர்களோ போடுங்கள்” என மூஸா அவர்களிடம் கூறினார்.
26:44
26:44 فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَـنَحْنُ الْغٰلِبُوْنَ‏
فَاَلْقَوْا ஆகவே, அவர்கள் எறிந்தனர் حِبَالَهُمْ தங்கள் கயிறுகளை وَعِصِيَّهُمْ இன்னும் தங்கள் தடிகளை وَقَالُوْا இன்னும் அவர்கள் கூறினர் بِعِزَّةِ கௌரவத்தின் மீது சத்தியமாக! فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய اِنَّا لَـنَحْنُ நாங்கள்தான் நிச்சயமாக الْغٰلِبُوْنَ‏ வெற்றியாளர்கள்
26:44. ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்.
26:44. ஆகவே, அவர்கள் தங்கள் தடிகளையும், கயிறுகளையும் எறிந்து ‘‘ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியம் நிச்சயமாக நாங்கள்தான் வென்றுவிட்டோம்'' என்று கூறினார்கள்.
26:44. உடனே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் எறிந்தனர்; மேலும், கூறினர்: “ஃபிர்அவ்னின் மகிமை கொண்டு நாங்களே வெற்றியாளர்களாய்த் திகழ்வோம்!”
26:44. ஆகவே, தங்களுடைய கயிறுகளையும், தங்களுடைய தடிகளையும் அவர்கள் போட்டார்கள், ஃபிர் அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நாமே வெற்றியாளர்கள்” என்றும் கூறினார்கள்.
26:45
26:45 فَاَ لْقٰى مُوْسٰى عَصَاهُ فَاِذَا هِىَ تَلْقَفُ مَا يَاْفِكُوْنَ‌ ۖ ‌ۚ‏
فَاَ لْقٰى ஆகவே அவர் எறிந்தார் مُوْسٰى மூசா عَصَاهُ தனது தடியை فَاِذَا ஆகவே, உடனே هِىَ அது تَلْقَفُ விழுங்கியது مَا يَاْفِكُوْنَ‌ ۖ ۚ‏ அவர்கள் வித்தைகாட்டிய அனைத்தையும்
26:45. பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.
26:45. பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்து விட்டது.
26:45. பிறகு, மூஸா தமது கைத்தடியை எறிந்தார். உடனே அது அவர்களின் பொய் வித்தைகளை விழுங்கிக் கொண்டே சென்றது.
26:45. (பிறகு,) மூஸா தன் தடியைப் போட்டார், அப்பெழுது அது அவர்கள் பொய்யாகச் செய்திருந்தவற்றை விழுங்கியது.
26:46
26:46 فَاُلْقِىَ السَّحَرَةُ سٰجِدِيْنَۙ‏
فَاُلْقِىَ உடனே, விழுந்தனர் السَّحَرَةُ சூனியக்காரர்கள் سٰجِدِيْنَۙ‏ சிரம் பணிந்தவர்களாக
26:46. (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.
26:46. இதைக் கண்ணுற்ற சூனியக்காரர்கள் அனைவரும் விழுந்து சிரம் பணிந்து,
26:46. இதனைக் கண்ட சூனியக்காரர்கள் அனைவரும் தம்மையுமறியாமல் ஸஜ்தாவில் வீழ்ந்துவிட்டார்கள்.
26:46. அப்பொழுது (இதனைக் கண்ட) சூனியக்காரர்கள் சிரம்பணிந்தவர்களாக (கீழே) வீழ்த்தபட்டனர்_
26:47
26:47 قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَۙ‏
قَالُوْۤا அவர்கள் கூறினர் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் بِرَبِّ இறைவனை الْعٰلَمِيْنَۙ‏ அகிலங்களின்
26:47. அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம்.
26:47. ‘‘ உலகத்தார் அனைவரின் இறைவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.
26:47. பிறகு, அவர்கள் உரக்கக் கூறினார்கள்: “ஏற்றுக்கொண்டு விட்டோம் அகிலங்களின் அதிபதியை,
26:47. “அகிலத்தாரின் இரட்சகனையே நாங்கள் விசுவாசங்கொண்டோம்” என்று கூறினார்கள்.
26:48
26:48 رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ‏
رَبِّ இறைவனை مُوْسٰى மூஸா وَهٰرُوْنَ‏ இன்னும் ஹாரூனுடைய
26:48. “அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.” என்று கூறினர்.
26:48. அவன்(தான்,) மூஸா, ஹாரூனுடைய இறைவனுமாவான்'' என்று கூறினார்கள்.
26:48. மூஸா மற்றும் ஹாரூனுடைய அதிபதியை!”
26:48. “(அவன்தான்!) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் இரட்சகன்” (என்று கூறினார்கள்).
26:49
26:49 قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْ‌ۚ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَ‌ۚ فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَـكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَ‌ۚ‏
قَالَ அவன் கூறினான் اٰمَنْتُمْ நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா? لَهٗ அவரை قَبْلَ முன் اَنْ اٰذَنَ நான் அனுமதியளிப்பதற்கு لَـكُمْ‌ۚ உங்களுக்கு اِنَّهٗ நிச்சயமாக அவர் لَـكَبِيْرُ மூத்தவர் كُمُ உங்கள் الَّذِىْ எவர் عَلَّمَكُمُ உங்களுக்கு கற்பித்தார் السِّحْرَ‌ۚ சூனியத்தை فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள் لَاُقَطِّعَنَّ திட்டமாக நான் வெட்டுவேன் اَيْدِيَكُمْ உங்கள் கைகளை وَاَرْجُلَـكُمْ உங்கள் கால்களை مِّنْ خِلَافٍ மாறுகை மாறுகால் وَّلَاُصَلِّبَنَّكُمْ இன்னும் உங்களை கழுவேற்றுவேன் اَجْمَعِيْنَ‌ۚ‏ அனைவரையும்
26:49. (அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுகொடுத்த உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.
26:49. அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்கள் குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்.
26:49. ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸா கூறியதை ஏற்றுக்கொண்டு விட்டீர்களே நான் அனுமதி அளிப்பதற்கு முன்பே! திண்ணமாக, உங்களுக்கு சூனியத்தைக் கற்றுத்தந்த உங்களின் பெரிய குருவாக இருக்கின்றார் இவர்! சரி, இப்பொழுது உங்களுக்குத் தெரிந்துவிடும். நிச்சயமாக, நான் உங்கள் மாறு கை, மாறு கால்களைத் துண்டித்துவிடுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன்!”
26:49. (அதற்கு, பிர் அவ்னாகிய,) அவன் “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை விசுவாசித்து விட்டீர்களா? நிச்சயமாக உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்களின் பெரியவர் அவர்தான், அதிசீக்கிரத்தில் (அதன் முடிவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள், திண்ணமாக உங்களுடைய கைகளையும், உங்களுடைய கால்களையும் மாறாக (ஒரு பக்கத்துக் கையையும், மறுபக்கத்துக் காலையும்) நான் துண்டித்து உங்கள் அனைவரையும் நிச்சயமாக நான் கழுவேற்றிவிடுவேன்” என்று கூறினான்.
26:50
26:50 قَالُوْا لَا ضَيْرَ‌ اِنَّاۤ اِلٰى رَبِّنَا مُنْقَلِبُوْنَ‌ۚ‏
قَالُوْا அவர்கள் கூறினர் لَا ضَيْرَ‌ பிரச்சனை இல்லை اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلٰى رَبِّنَا எங்கள் இறைவனிடம் مُنْقَلِبُوْنَ‌ۚ‏ திரும்பக்கூடியவர்கள் ஆவோம்
26:50. “(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்” எனக் கூறினார்கள்.
26:50. அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (அதனால் எங்களுக்கு) ஒரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம்.
26:50. அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “பரவாயில்லை! நாங்கள் எங்கள் இறைவனின் திருமுன் சென்று விடுவோம்.
26:50. அ(தற்க)வர்கள், “(அவ்வாறு செய்வதால்) எங்களுக்கு யாதொரு கெடுதியுமில்லை, (ஏனென்றால்), நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகன் பக்கமே திரும்பச் செல்லக்கூடியவர்கள்” என்று கூறினார்கள்.
26:51
26:51 اِنَّا نَطْمَعُ اَنْ يَّغْفِرَ لَـنَا رَبُّنَا خَطٰيٰـنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِيْنَؕ‏
اِنَّا நிச்சயமாக நாங்கள் نَطْمَعُ ஆசிக்கிறோம் اَنْ يَّغْفِرَ மன்னிப்பதை لَـنَا எங்களுக்கு رَبُّنَا எங்கள் இறைவன் خَطٰيٰـنَاۤ எங்கள் குற்றங்களை اَنْ كُنَّاۤ நாங்கள் இருந்ததால் اَوَّلَ முதலாமவர்களாக الْمُؤْمِنِيْنَؕ‏ நம்பிக்கை கொள்பவர்களில்
26:51. “(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றுங் கூறினார்கள்).
26:51. நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.''
26:51. எங்கள் இறைவன் எங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவான் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஏனெனில், அனைவர்க்கும் முன்னதாக நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாகி விட்டோமே!”
26:51. “நிச்சயமாக (மூஸாவை) விசுவாசங்கொண்டவர்களில் முதலாமவர்களாக நாங்கள் இருப்பதினால், எங்கள் இரட்சகன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் ஆதரவு வைக்கிறோம்” என்று கூறினார்கள்.
26:52
26:52 وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنْ اَسْرِ بِعِبَادِىْۤ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ‏
وَاَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى மூஸாவிற்கு اَنْ اَسْرِ இரவில் அழைத்துச் செல்லுங்கள் بِعِبَادِىْۤ எனது அடியார்களை اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مُّتَّبَعُوْنَ‏ பின்தொடரப்படுவீர்கள்
26:52. மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.
26:52. பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் (அவர்களால்) பின்தொடரப்படுவீர்கள்'' (என்றோம்).
26:52. மேலும், நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம்: “என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாகப் புறப்படுவீராக! நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்!”
26:52. இன்னும், மூஸாவுக்கு நாம் வஹீ அறிவித்தோம் “(இஸ்ராயீலின் மக்களாகிய) என்னுடைய அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நிச்சயமாக நீங்கள் பின்தொடரப்படுவோராய் உள்ளீர்கள்.”
26:53
26:53 فَاَرْسَلَ فِرْعَوْنُ فِى الْمَدَآٮِٕنِ حٰشِرِيْنَ‌ۚ‏
فَاَرْسَلَ ஆகவே அனுப்பினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் فِى الْمَدَآٮِٕنِ நகரங்களில் حٰشِرِيْنَ‌ۚ‏ ஒன்று திரட்டுபவர்களை
26:53. (அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.
26:53. (அவ்வாறு அவர்கள் சென்று விடவே அதை அறிந்த) ஃபிர்அவ்ன், பல ஊர்களுக்கும் (மக்களை அழைக்க) பறைசாற்றுபவர்களை அனுப்பிவைத்து,
26:53. இதன்படி ஃபிர்அவ்ன் (படைகளைத் திரட்டுவதற்காக) நகரங்களுக்கு ஊழியர்களை அனுப்பினான். (மேலும், சொல்லியனுப்பினான்:)
26:53. பின்னர், ஃபிர் அவ்ன் பல நகரங்களுக்கும் (ஜனங்களைத் திரட்டுவதற்காக) திரட்டுவோரை அனுப்பிவைத்தான்.
26:54
26:54 اِنَّ هٰٓؤُلَاۤءِ لَشِرْذِمَةٌ قَلِيْلُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَاۤءِ இவர்கள் لَشِرْذِمَةٌ கூட்டம்தான் قَلِيْلُوْنَۙ‏ குறைவான
26:54. “நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான்.
26:54. ‘‘ நிச்சயமாக (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) இவர்கள் வெகு சொற்ப தொகையினரே. (அவ்வாறிருந்தும்)
26:54. “இவர்கள் மிகச் சிறிய ஒரு கூட்டத்தினர்தாம்!
26:54. “நிச்சயமாக (இஸ்ராயீலின் மக்களாகிய) இவர்கள் வெகு சொற்பத் தொகையினர்களான ஒரு கூட்டம்.
26:55
26:55 وَاِنَّهُمْ لَـنَا لَـغَآٮِٕظُوْنَۙ‏
وَاِنَّهُمْ இன்னும் , நிச்சயமாக இவர்கள் لَـنَا நமக்கு لَـغَآٮِٕظُوْنَۙ‏ ஆத்திரமூட்டுகின்றனர்
26:55. “நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
26:55. நிச்சயமாக அவர்கள் நம்மை கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
26:55. மேலும், இவர்கள் நம்மை மிகுந்த கோபமடையச் செய்துவிட்டார்கள்.
26:55. இன்னும், நிச்சயமாக அவர்கள் நமக்குக் கோபமூட்டுகிறவர்கள்.
26:56
26:56 وَاِنَّا لَجَمِيْعٌ حٰذِرُوْنَؕ‏
وَاِنَّا இன்னும் நிச்சயமாக நாம் لَجَمِيْعٌ அனைவரும் حٰذِرُوْنَؕ‏ தயாரிப்புடன் இருப்பவர்கள்தான்
26:56. “நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்.”
26:56. நிச்சயமாக நாங்கள் பெருந்தொகையினர்; (அத்துடன்) மிக்க எச்சரிக்கை உடையவர்கள்'' (என்று கூறி, பல ஊரார்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.)
26:56. நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்கக்கூடிய கூட்டத்தினர் அல்லவா!”
26:56. மேலும், “நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனிருக்கின்றவர்கள்” (என்று கூறினான்.)
26:57
26:57 فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏
فَاَخْرَجْنٰهُمْ ஆகவே அவர்களை நாம் வெளியேற்றினோம் مِّنْ جَنّٰتٍ தோட்டங்களிலிருந்தும் وَّعُيُوْنٍۙ‏ ஊற்றுகளிலிருந்தும்
26:57. அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.
26:57. (இவ்வாறு) அவர்களுடைய தோட்டங்களிலிருந்தும் துரவுகளிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றி விட்டோம்.
26:57. இவ்வாறு நாம் அவர்களை அவர்களுடைய தோப்புகள், நீருற்றுகள்,
26:57. பின்னர் (அவர்களுடைய) தோட்டங்களிலிருந்தும், நீரூற்றுக்களிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றிவிட்டோம்.
26:58
26:58 وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ‏
وَّكُنُوْزٍ இன்னும் பொக்கிஷங்களிலிருந்தும் وَّمَقَامٍ இடத்திலிருந்தும் كَرِيْمٍۙ‏ கண்ணியமான
26:58. இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).
26:58. (இன்னும், அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்).
26:58. செல்வக் களஞ்சியங்கள் மற்றும் சிறந்த இருப்பிடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறச் செய்தோம்.
26:58. இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும், மிகச் சிறந்த தங்குமிடத்திலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்.)
26:59
26:59 كَذٰلِكَؕ وَاَوْرَثْنٰهَا بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏
كَذٰلِكَؕ இப்படித்தான் وَاَوْرَثْنٰهَا இன்னும் அவற்றை சொந்தமாக்கினோம் بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏ இஸ்ரவேலர்களுக்கு
26:59. அவ்வாறு தான் (அவர்களை நடத்தினோம்); அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசுகளாகவும் நாம் ஆக்கினோம்.
26:59. இவ்வாறு (அவர்களை வெளியேற்றிய பின்னர்) இஸ்ராயீலின் சந்ததிகளை அவற்றுக்குச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கிவிட்டோம்.
26:59. அவர்களுக்கு நேர்ந்தது இதுதான். (மற்றொருபுறம்) நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை இவை அனைத்திற்கும் வாரிசுகளாக்கிவிட்டோம்.
26:59. அவ்வாறு (வெளியேற்றிவிட்டு) இஸ்ராயீலின் மக்களை அவைகளுக்கு வாரிசாகவும் ஆக்கிவிட்டோம்.
26:60
26:60 فَاَ تْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ‏
فَاَ تْبَعُوْ அவர்கள் பின்தொடர்ந்தனர் هُمْ அவர்களை مُّشْرِقِيْنَ‏ காலைப் பொழுதில்
26:60. பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
26:60. சூரிய உதய (நேர)த்தில் இவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
26:60. பொழுது விடிந்ததும் இவர்கள் அம்மக்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
26:60. சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர் அவ்னின் கூட்டத்தாராகிய) அவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
26:61
26:61 فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ‌ۚ‏
فَلَمَّا تَرَآءَ ஒருவரை ஒருவர் பார்த்தபோது الْجَمْعٰنِ இரண்டு படைகளும் قَالَ கூறினர் اَصْحٰبُ தோழர்கள் مُوْسٰٓى மூஸாவின் اِنَّا நிச்சயமாக நாங்கள் لَمُدْرَكُوْنَ‌ۚ‏ பிடிக்கப்பட்டோம்
26:61. இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
26:61. இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது ‘‘ நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்'' என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள்.
26:61. இரு கூட்டத்தாரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டபோது மூஸாவின் தோழர்கள், “திண்ணமாக, நாம் பிடிபட்டுவிடுவோம்!” என்று கூக்குரலிட்டனர்.
26:61. இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது “நிச்சயமாக நாம் (அவர்களால்) பிடிபட்டுவிடுபவர்கள்தாம்” என்று மூஸாவுடைய தோழர்கள் கூறினார்கள்.
26:62
26:62 قَالَ كَلَّا‌‌ ۚ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ‏
قَالَ அவர் கூறினார் كَلَّا‌ ۚ அவ்வாறல்ல اِنَّ நிச்சயமாக مَعِىَ என்னுடன் இருக்கின்றான் رَبِّىْ என் இறைவன் سَيَهْدِيْنِ‏ அவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்
26:62. அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;.
26:62. அதற்கு (மூஸா) ‘‘ அவ்வாறல்ல. நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் எனக்கு அறிவிப்பான்'' என்றார்.
26:62. அதற்கு மூஸா கூறினார்: “ஒருபோதும் இல்லை. என்னோடு என் இறைவன் இருக்கின்றான். அவன் திண்ணமாக, எனக்கு வழிகாட்டுவான்!”
26:62. (அதற்கு) “ஒருபோதும் இல்லை! நிச்சயமாக என்னுடன், என்னுடைய இரட்சகன் இருக்கின்றான், (இதிலிருந்து ஈடேறும்) வழியை நிச்சயமாக எனக்கு அவன் காட்டுவான்” என்று (மூஸாவாகிய) அவர் கூறினார்.
26:63
26:63 فَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ‌ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِ‌ۚ‏
فَاَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى மூஸாவிற்கு اَنِ اضْرِبْ அடிப்பீராக! என்று بِّعَصَاكَ உமது தடியைக் கொண்டு الْبَحْرَ‌ؕ கடலை فَانْفَلَقَ ஆக, அது பிளந்தது فَكَانَ இருந்தது كُلُّ ஒவ்வொரு فِرْقٍ பிளவும் كَالطَّوْدِ மலைப் போன்று الْعَظِيْمِ‌ۚ‏ பெரிய
26:63. உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
26:63. ஆகவே, நாம் மூஸாவை நோக்கி ‘‘ நீர் உமது தடியினால் இந்தக் கடலை அடிப்பீராக'' என வஹ்யி அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப்போல் இருந்தது.
26:63. மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம்: “உமது கைத்தடியினால் கடலை அடியும்!” உடனே கடல் பிளந்துவிட்டது. மேலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகிவிட்டது.
26:63. (அப்போது) “நீர் உம்முடைய (கைத்) தடியினால் கடலை அடிப்பீராக” என மூஸாவின்பால் வஹீ அறிவித்தோம், (அவர் அடிக்கவே) அது பிளந்துவிட்டது, ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
26:64
26:64 وَاَزْلَـفْنَا ثَمَّ الْاٰخَرِيْنَ‌ۚ‏
وَاَزْلَـفْنَا நாம் நெருக்க மாக்கினோம் ثَمَّ பின் الْاٰخَرِيْنَ‌ۚ‏ மற்றவர்களை
26:64. (பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.
26:64. (பின் சென்ற) மற்ற மக்களையும் அதை நெருங்கச் செய்தோம்.
26:64. அதே இடத்திற்கு இரண்டாவது கூட்டத்தாரையும் நாம் நெருங்கிவரச்செய்தோம்.
26:64. (பின் தொடாந்த) மற்றவர்களையும் அந்த இடத்தை நெருங்கச் செய்தோம்.
26:65
26:65 وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِيْنَ‌ۚ‏
وَاَنْجَيْنَا நாம் பாதுகாத்தோம் مُوْسٰى மூசாவையும் وَمَنْ مَّعَهٗۤ இன்னும் , அவருடன் இருந்தவர்களை اَجْمَعِيْنَ‌ۚ‏ அனைவரையும்
26:65. மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.
26:65. மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
26:65. மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்.
26:65. மூஸாவையும், அவருடனிருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்.
26:66
26:66 ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ‌ؕ‏
ثُمَّ பிறகு اَغْرَقْنَا மூழ்கடித்தோம் الْاٰخَرِيْنَ‌ؕ‏ மற்றவர்களை
26:66. பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.
26:66. பின்னர் (அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற) மற்ற அனைவரையும் மூழ்கடித்து விட்டோம்.
26:66. பிறகு, மற்றவர்களை மூழ்கடித்து விட்டோம்.
26:66. பின்னர், (அவர்களைப் பின்தொடர்ந்த) மற்றவர்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்
26:67
26:67 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً ‌ ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاَيَةً  ؕ ஓர் அத்தாட்சி وَمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:67. நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.
26:67. நிச்சயமாக இ(ச்சம்பவத்)தில் ஒரு பெரும் படிப்பினை இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்பவில்லை.
26:67. திண்ணமாக, இந்நிகழ்ச்சியில் ஒரு சான்று இருக்கிறது. எனினும் இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
26:67. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது, (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்வோராக இருக்கவுமில்லை.
26:68
26:68 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:68. (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
26:68. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைத்தையும்) மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்.
26:68. மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:68. மேலும் (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன் அவனேதான் (யாவரையும்) மிகைத்தோன், மிகக்கிருபையுடையோன்.
26:69
26:69 وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ اِبْرٰهِيْمَ‌ۘ‏
وَاتْلُ ஓதுவீராக! عَلَيْهِمْ அவர்கள் மீது نَبَاَ செய்தியை اِبْرٰهِيْمَ‌ۘ‏ இப்ராஹீமுடைய
26:69. இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
26:69. (நபியே!) அவர்களுக்கு இப்றாஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பிப்பீராக.
26:69. மேலும், இப்ராஹீமின் சரிதையை இவர்களுக்கு எடுத்துரையுங்கள்:
26:69. மேலும், (நபியே!) அவர்களுக்கு இப்றாஹீமுடைய செய்தியையும் ஓதிக் காண்பிப்பீராக!
26:70
26:70 اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை لِاَبِيْهِ தனது தந்தைக்கும் وَقَوْمِهٖ தனது மக்களுக்கும் مَا تَعْبُدُوْنَ‏ நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்?
26:70. அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது,
26:70. அவர், தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி ‘‘ நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு,
26:70. ஒருபோது அவர்தம் தந்தையிடமும், சமூகத்தாரிடமும், “எவற்றை நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்.
26:70. அவர் தன் தந்தையிடமும், தன் சமூகத்தாரிடமும், “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” எனக் கேட்டபோது,
26:71
26:71 قَالُوْا نَـعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் نَـعْبُدُ நாங்கள் வணங்குகின்றோம் اَصْنَامًا சிலைகளை فَنَظَلُّ நாங்கள் இருப்போம் لَهَا அதற்கு عٰكِفِيْنَ‏ பூஜை செய்பவர்களாகவே
26:71. அவர்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.
26:71. அவர்கள் ‘‘ நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்கள்.
26:71. அதற்கு அவர்கள் “சிலைகளை நாங்கள் பூஜிக்கின்றோம்; மேலும், அவற்றிற்கு சேவை செய்வதில் முழுமையாக ஈடுபட்டிருக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.
26:71. அவர்கள், “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம், நாங்கள் அவற்றின் வணக்கத்திற்காக நிலை கொண்டுள்ளோம்” என்று கூறினார்கள்.
26:72
26:72 قَالَ هَلْ يَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَۙ‏
قَالَ அவர் கூறினார் هَلْ يَسْمَعُوْنَكُمْ அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா? اِذْ تَدْعُوْنَۙ‏ நீங்கள் அழைக்கும்போது
26:72. (அதற்கு இப்ராஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?
26:72. அதற்கு (இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ அவற்றை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா?
26:72. அதற்கு அவர் கேட்டார்: “நீங்கள் அழைக்கும்போது உங்கள் அழைப்பை இவை கேட்கின்றனவா?
26:72. “அவைகளை நீங்கள் அழைக்கின்ற சமயத்தில் உங்களுக்கு அவை (காது கொடுத்து) செவிசாய்க்கின்றனவா” என்று இப்றாஹீம் அவர்களிடம் கேட்டார்.
26:73
26:73 اَوْ يَنْفَعُوْنَكُمْ اَوْ يَضُرُّوْنَ‏
اَوْ அல்லது يَنْفَعُوْنَكُمْ நன்மை தருகின்றனவா? اَوْ அல்லது يَضُرُّوْنَ‏ தீங்கு தருகின்றவர்
26:73. “அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)
26:73. அல்லது (அவற்றை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?'' எனக் கேட்டார்.
26:73. அல்லது இவை உங்களுக்கு ஏதேனும் இலாபமோ, நஷ்டமோ அளிக்கின்றனவா?”
26:73. “அல்லது (அவைகளை நீங்கள் வணங்கினால்) உங்களுக்கு பலன் தருகின்றனவா? அல்லது (வணங்காவிட்டால்) அவை இடையூறு செய்கின்றனவா?” என்று கேட்டார்.
26:74
26:74 قَالُوْا بَلْ وَجَدْنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ يَفْعَلُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் بَلْ அவ்வாறல்ல وَجَدْنَاۤ நாங்கள் கண்டோம் اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை كَذٰلِكَ அப்படியே يَفْعَلُوْنَ‏ செய்பவர்களாக
26:74. (அப்போது அவர்கள்) “இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
26:74. அதற்கவர்கள் ‘‘ இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்து கொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவற்றை ஆராதனை செய்கிறோம்)'' என்றார்கள்.
26:74. அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “இல்லை. ஆயினும், எங்கள் முன்னோர் இவ்வாறே செய்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.”
26:74. “இல்லை எங்கள் மூதாதையர்களை இவ்வாறே செய்பவர்களாக நாங்கள் கண்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
26:75
26:75 قَالَ اَفَرَءَيْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏
قَالَ அவர் கூறினார் اَفَرَءَيْتُمْ நீங்கள் சொல்லுங்கள் مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏ நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை
26:75. அவ்வாறாயின், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார்.
26:75. நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என (இப்றாஹீம்) கேட்டார்.
26:75. அதற்கு இப்ராஹீம் கூறினார்: “எவற்றை நீங்களும், உங்களுடைய முற்காலத்து மூதாதையர்களும் வணங்கிவந்தீர்களோ ,
26:75. “நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? (அதுபற்றிச்), சொல்லுங்கள்”, என்று இப்றாஹீமாகிய) அவர் கேட்டார்.
26:76
26:76 اَنْـتُمْ وَاٰبَآؤُكُمُ الْاَقْدَمُوْنَ ‌ۖ ‏
اَنْـتُمْ நீங்களும் وَاٰبَآؤُكُمُ உங்கள் மூதாதைகளும் الْاَقْدَمُوْنَ ۖ ‏ முந்தி(யவர்கள்)
26:76. “நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”
26:76. நீங்களும் உங்கள் முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்).
26:76. அவற்றை நீங்கள் என்றாவது (கண்திறந்து) பார்த்திருக்கின்றீர்களா?
26:76. நீங்களும், உங்களுடைய முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கி வந்தீர்கள் என்பதைப் பாருங்கள்)
26:77
26:77 فَاِنَّهُمْ عَدُوٌّ لِّىْۤ اِلَّا رَبَّ الْعٰلَمِيْنَۙ‏
فَاِنَّهُمْ ஏனெனில், நிச்சயமாக عَدُوٌّ எதிரிகள் لِّىْۤ எனக்கு اِلَّا ஆனால், தவிர رَبَّ இறைவனை الْعٰلَمِيْنَۙ‏ அகிலங்களின்
26:77. “நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”
26:77. நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! எனினும், உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன்.
26:77. என்னைப் பொறுத்தவரை திண்ணமாக, இவை அனைத்தும் விரோதிகளாகும்; ஆனால், அகிலங்களின் அதிபதியைத் தவிர!
26:77. ஆகவே, நிச்சயமாக அவைகள் எனக்கு விரோதிகளே! அகிலத்ததாரின் இரட்சகனைத்தவிர,
26:78
26:78 الَّذِىْ خَلَقَنِىْ فَهُوَ يَهْدِيْنِۙ‏
الَّذِىْ எவன் خَلَقَنِىْ என்னைப்படைத்தான் فَهُوَ ஆகவே, அவன் يَهْدِيْنِۙ‏ எனக்கு நேர்வழி காட்டுவான்
26:78. “அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
26:78. அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான்.
26:78. அவன் எத்தகையவனெனில், அவன்தான் என்னைப் படைத்தான்; மேலும், அவனே எனக்கு பின்னர் வழிகாட்டுகின்றான்.
26:78. “அவன் எத்தகையவனென்றால், என்னைப்படைத்தான், பின்னர் எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்”
26:79
26:79 وَ الَّذِىْ هُوَ يُطْعِمُنِىْ وَيَسْقِيْنِۙ‏
وَ الَّذِىْ هُوَ எவன்/அவன் يُطْعِمُنِىْ எனக்கு உணவளிக்கிறான் وَيَسْقِيْنِۙ‏ இன்னும் , எனக்கு நீர் புகட்டுகிறான்
26:79. “அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”
26:79. அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான்.
26:79. எனக்கு உண்ணவும் அருந்தவும் தருகின்றான்.
26:79. இன்னும் அவன் எத்தகையவனென்றால், “அவனே எனக்கு உணவளிக்கிறான், அவனே (எனக்கு) குடிக்கவும் தருகிறான்.”
26:80
26:80 وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ ۙ‏
وَاِذَا مَرِضْتُ நான் நோயுற்றால் فَهُوَ அவன்தான் يَشْفِيْنِ ۙ‏ எனக்கு சுகமளிக்கிறான்
26:80. “நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
26:80. நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான்.
26:80. மேலும், நான் நோயுற்றால் அவனே எனக்கு குணமளிக்கின்றான்.
26:80. மேலும் “நான் நோயுற்று விட்டால், அவனே என்னைக் குணப்படுத்துகின்றான்.”
26:81
26:81 وَالَّذِىْ يُمِيْتُنِىْ ثُمَّ يُحْيِيْنِۙ‏
وَالَّذِىْ يُمِيْتُنِىْ அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான் ثُمَّ يُحْيِيْنِۙ‏ பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்
26:81. “மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”
26:81. அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்.
26:81. அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் மீண்டும் எனக்கு வாழ்வளிப்பான்.
26:81. இன்னும், அவன் எத்தகையவனென்றால்” என்னை இறப்பெய்தச் செய்வான், பின்னர் என்னை (மறுமையில்) அவன் உயிர்ப்பிப்பான்.”
26:82
26:82 وَالَّذِىْۤ اَطْمَعُ اَنْ يَّغْفِرَ لِىْ خَطِیْٓــٴَــتِىْ يَوْمَ الدِّيْنِ ؕ‏
وَالَّذِىْۤ இன்னும் , எவன் اَطْمَعُ நான் ஆசிக்கிறேன் اَنْ يَّغْفِرَ அவன் மன்னிக்க வேண்டும் என்று لِىْ எனக்கு خَطِیْٓــٴَــتِىْ என் பாவங்களை يَوْمَ நாளில் الدِّيْنِ ؕ‏ விசாரணை
26:82. “நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.
26:82. கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என் குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன்.
26:82. மேலும், கூலி கொடுக்கப்படும் நாளில் அவன் என் பாவங்களை மன்னித்தருள்வான் என்று நான் அவனிடமே நம்பிக்கை கொண்டுள்ளேன்.”
26:82. இன்னும், அவன் எத்தகையவனென்றால், “கூலி கொடுக்கும் (மறுமை) நாளில், என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் ஆதரவு வைக்கிறேன்”
26:83
26:83 رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏
رَبِّ என் இறைவா! هَبْ வழங்கு! لِىْ எனக்கு حُكْمًا தூதுத்துவத்தை وَّاَلْحِقْنِىْ இன்னும் என்னை சேர்ப்பாயாக! بِالصّٰلِحِيْنَۙ‏ நல்லவர்களுடன்
26:83. “இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”
26:83. என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக!
26:83. (இதன் பின்னர்) இப்ராஹீம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறிவுத்திறனை வழங்குவாயாக! மேலும், என்னை உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக!
26:83. என் இரட்சகனே! நீ எனக்கு அறிவை அளிப்பாயாக! மேலும், நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக”
26:84
26:84 وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏
وَاجْعَلْ எற்படுத்து! لِّىْ எனக்கு لِسَانَ صِدْقٍ நற்பெயரை فِى الْاٰخِرِيْنَۙ‏ பின்னோர்களில்
26:84. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”
26:84. பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரை அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது சாந்தி நிலவுக! என்று பிரார்த்திக்கக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக!
26:84. மேலும், பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக!
26:84. “பின்வருபவர்களில் (அவர்கள் என் விஷயத்தில் என்னைப்பற்றி அழகானவற்றைக் கூற) எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக”
26:85
26:85 وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏
وَاجْعَلْنِىْ என்னை ஆக்கிவிடு! مِنْ وَّرَثَةِ வாரிசுகளில் جَنَّةِ சொர்க்கத்தின் النَّعِيْمِۙ‏ இன்பமிகு
26:85. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”
26:85. இன்ப சுகத்தையுடைய சொர்க்கத்தின் வாரிசுகளிலும் என்னை நீ ஆக்கிவைப்பாயாக!
26:85. மேலும், அருட்கொடைகள் நிரம்பிய சுவனத்தின் வாரிசுகளுள் என்னையும் ஒருவனாக ஆக்குவாயாக!
26:85. “கொடைகளுடைய சுவனபதிக்கு வாரிசானவர்களிலும் என்னை நீ ஆக்கி வைப்பாயாக!”
26:86
26:86 وَاغْفِرْ لِاَبِىْۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّيْنَۙ‏
وَاغْفِرْ மன்னிப்பளி! لِاَبِىْۤ என் தந்தைக்கு اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் مِنَ الضَّآلِّيْنَۙ‏ வழி தவறியவர்களில்
26:86. “என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.”
26:86. என் தந்தையையும் நீ மன்னித்தருள்; நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டார்.
26:86. மேலும், என் தந்தையை மன்னிப்பாயாக! திண்ணமாக, அவர் வழிகெட்டுப் போனவர்களில் ஒருவராய் இருக்கின்றார்.
26:86. “என்னுடைய தந்தையையும் நீ மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.”
26:87
26:87 وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏
وَلَا تُخْزِ இழிவுபடுத்திவிடாதே! نِىْ என்னை يَوْمَ நாளில் يُبْعَثُوْنَۙ‏ அவர்கள் எழுப்பப்படும்
26:87. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”
26:87. (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே!
26:87. மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே!
26:87. மேலும், “(படைப்பினங்கள் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவு படுத்தாதிருப்பாயாக!”
26:88
26:88 يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ‏
يَوْمَ நாளில்... لَا يَنْفَعُ பலனளிக்காத مَالٌ செல்வமும் وَّلَا بَنُوْنَۙ‏ ஆண் பிள்ளைகளும்
26:88. “அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
26:88. அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒரு பயனுமளிக்கா.
26:88. அந்நாளில், செல்வமும், பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளித்திடமாட்டா.
26:88. செல்வமும், குமாரர்களும் (யாதொரு) பயனளிக்காத (அந்த) நாளில்,
26:89
26:89 اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍؕ‏
اِلَّا எனினும் مَنْ யார் اَتَى வந்தாரோ اللّٰهَ அல்லாஹ்விடம் بِقَلْبٍ உள்ளத்தோடு سَلِيْمٍؕ‏ சந்தேகப்படாத
26:89. “எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”
26:89. ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்).
26:89. ஆனால், எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத் தவிர!”
26:89. (ஆயினும், இணைவைப்பதிலிருந்து நீக்கம் பெற்ற) பரிசுத்தமான இதயத்துடன் தன் இரட்சகனாகிய) அல்லாஹ்விடம் யார் வந்தாரோ அவர் தவிர (மற்றெவருக்கும் பயனளிக்காத நாள்.)
26:90
26:90 وَاُزْلِفَتِ الْجَـنَّةُ لِلْمُتَّقِيْنَۙ‏
وَاُزْلِفَتِ சமீபமாக்கப்படும் الْجَـنَّةُ சொர்க்கம் لِلْمُتَّقِيْنَۙ‏ இறையச்சமுள்ளவர்களுக்கு
26:90. “பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்.”
26:90. இறையச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்.
26:90. (அந்நாளில்) சுவனம் இறையச்சமுடையவர்களின் அருகில் கொண்டுவரப்படும்;
26:90. மேலும், பயபக்தியுடையவர்களுக்கு சொர்க்கம் (மிக) நெருக்கி வைக்கப்படும்.
26:91
26:91 وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِلْغٰوِيْنَۙ‏
وَبُرِّزَتِ வெளிப்படுத்தப்படும் الْجَحِيْمُ நரகம் لِلْغٰوِيْنَۙ‏ வழிகேடர்களுக்கு
26:91. “வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்.”
26:91. வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் வெளிப்படுத்தப்படும்.
26:91. வழிகெட்டுப் போனவர்களின் முன்னிலையில் நரகம் திறந்து வைக்கப்படும்.
26:91. வழிகெட்டோருக்கு (அவர்களுக்கெதிரில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
26:92
26:92 وَقِيْلَ لَهُمْ اَيْنَمَا كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏
وَقِيْلَ இன்னும் கேட்கப்படும் لَهُمْ அவர்களிடம் اَيْنَمَا எங்கே? كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏ நீங்கள்வணங்கிக் கொண்டிருந்தவை
26:92. “இன்னும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?” என்று.
26:92. அவர்களை நோக்கி ‘‘ அல்லாஹ்வையன்றி நீங்கள் ஆராதனை செய்து கொண்டிருந்தவை எங்கே?
26:92. மேலும், அவர்களிடம் வினவப்படும்: நீங்கள் வணங்கி வந்த தெய்வங்கள் எங்கே?
26:92. அவர்களிடம் நீங்கள் வணங்கிக்கொண்டிருந்தவை எங்கே?” எனக் கேட்கப்படும்.
26:93
26:93 مِنْ دُوْنِ اللّٰهِؕ هَلْ يَنْصُرُوْنَكُمْ اَوْ يَنْتَصِرُوْنَؕ‏
مِنْ دُوْنِ அன்றி اللّٰهِؕ அல்லாஹ்வை هَلْ يَنْصُرُوْنَكُمْ அவை உங்களுக்கு உதவுமா? اَوْ அல்லது يَنْتَصِرُوْنَؕ‏ தமக்குத் தாமே உதவிக் கொள்ளுமா?
26:93. “அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,”
26:93. (இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?'' என்று கேட்கப்படும்.
26:93. “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து வணங்கி வந்தீர்களே அந்தத் தெய்வங்கள் எங்கே? அவை உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து கொண்டிருக்கின்றனவா? அல்லது அவற்றால் தம்மையேனும் காப்பாற்றிக் கொள்ள முடிகிறதா?”
26:93. அல்லாஹ்வையன்றி – (நீங்கள் வணங்கிவந்த) அவை (இப்போது) உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களே உதவி செய்து (தங்களைக் காப்பாற்றிக்) கொள்ளுமா? (என்று கேட்கப்படும்)
26:94
26:94 فَكُبْكِبُوْا فِيْهَا هُمْ وَالْغَاوٗنَۙ‏
فَكُبْكِبُوْا ஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறியப்படுவர் فِيْهَا அதில் هُمْ அவையும் وَالْغَاوٗنَۙ‏ வழிகேடர்களும்
26:94. பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் -
26:94,95,94. (பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்.
26:94. பின்னர் அந்த தெய்வங்களும், வழிகெட்டுப் போனவர்களும்,
26:94. “ஆகவே, அவைகளும் (அவைகளால்) வழி தவறியவர்களும், முகங்குப்புற (நரகமாகிய) அதில் தள்ளப்படுவார்கள்.
26:95
26:95 وَجُنُوْدُ اِبْلِيْسَ اَجْمَعُوْنَؕ‏
وَجُنُوْدُ இன்னும் , ராணுவம் اِبْلِيْسَ இப்லீஸின் اَجْمَعُوْنَؕ‏ அனைவரும்
26:95. “இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்).”
26:94,95,95. (பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்.
26:95. இப்லீசின் சேனைகளும் அனைவரும் நரகில் தலைகீழாக எறியப்படுவார்கள்!
26:95. இப்லீஸின் சேனைகள் அனைவரும் (அவ்வாறே நரகில் தள்ளப்படுவார்கள்.)
26:96
26:96 قَالُوْا وَهُمْ فِيْهَا يَخْتَصِمُوْنَۙ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் وَهُمْ அவர்கள் فِيْهَا அதில் يَخْتَصِمُوْنَۙ‏ அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க
26:96. அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:
26:96. அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:
26:96. அங்கு இவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டையிட்டுக் கொள்வார்கள்.
26:96. அவர்களோ (தங்களுக்குள்) அதில் தர்க்கித்துக் கொண்டவர்களாகக் கூறுவார்கள்.
26:97
26:97 تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏
تَاللّٰهِ அல்லாஹ்வின் மீது சத்தியமாக اِنْ كُنَّا நிச்சயமாக நாம் لَفِىْ ضَلٰلٍ வழிகேட்டில்தான் இருந்தோம் مُّبِيْنٍۙ‏ தெளிவான
26:97. “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.”
26:97. ‘‘ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம் (என்றும்,)
26:97. வழி தவறியவர்கள் (தங்கள் தெய்வங்களிடம்) கூறுவார்கள்: “இறைவன் மீது ஆணையாக! நாங்கள் வெளிப்படையான வழிகேட்டிலிருந்தோம்.
26:97. “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் பகிரங்கமான வழிகேட்டிலிருந்தோம்-
26:98
26:98 اِذْ نُسَوِّيْكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ‏
اِذْ نُسَوِّيْكُمْ உங்களை சமமாக ஆக்கியபோது بِرَبِّ இறைவனுக்கு الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
26:98. “உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது);
26:98. (தங்கள் தெய்வங்களை நோக்கி) ‘‘ உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்!
26:98. அகிலங்களின் அதிபதியுடன் உங்களுக்கு சரி சமமான தகுதியை நாங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது!
26:98. “அகிலத்தாரின் இரட்சகனாக இருப்பவனுக்கு (இணையாக்கப்பட்ட) உங்களை நாங்கள் சமமாக ஆக்கிவைத்தபோது – (பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தோம்)
26:99
26:99 وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الْمُجْرِمُوْنَ‏
وَمَاۤ اَضَلَّنَاۤ எங்களை வழி கெடுக்கவில்லை اِلَّا தவிர الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகளை
26:99. இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
26:99. (பூசாரிகளை சுட்டிக் காண்பித்து இந்தக்) குற்றவாளிகளே தவிர (வேறு எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை.
26:99. குற்றவாளிகள் தாம் எங்களை இந்த வழிகேட்டில் தள்ளி விட்டார்கள்.
26:99. “(இக்) குற்றவாளிகளேயன்றி (வேறு எவரும்) எங்களை வழிகெடுக்கவுமில்லை.
26:100
26:100 فَمَا لَـنَا مِنْ شٰفِعِيْنَۙ‏
فَمَا لَـنَا ஆகவே, யாரும் எங்களுக்கு இல்லை مِنْ شٰفِعِيْنَۙ‏ பரிந்துரையாளர்களில்
26:100. ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.
26:100. எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே!
26:100. இப்போது, எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் யாரும் இல்லை!”
26:100. ஆகவே “எங்களுக்குப் பரிந்துரையாளர்களிலிருந்து எவரும் இல்லை.
26:101
26:101 وَلَا صَدِيْقٍ حَمِيْمٍ‏
وَلَا صَدِيْقٍ இன்னும் நண்பர்களில் யாரும் இல்லை حَمِيْمٍ‏ உற்ற
26:101. அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.
26:101. (எங்கள் மீது அனுதாபமுள்ள) ஒரு உண்மையான நண்பனுமில்லையே!
26:101. உற்ற நண்பர் எவருமிலர்.
26:101. “நெருங்கிய எந்த சிநேகிதனும் இல்லை.
26:102
26:102 فَلَوْ اَنَّ لَـنَا كَرَّةً فَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏
فَلَوْ اَنَّ ஆகவே,முடியுமாயின் لَـنَا எங்களுக்கு كَرَّةً ஒருமுறை திரும்பச்செல்வது فَنَكُوْنَ நாங்கள் ஆகிவிடுவோம் مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களில்
26:102. நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகி விடுவோமே! (என்றுங் கூறுவார்கள்.)
26:102. நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக்கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்'' என்று புலம்புவார்கள்.
26:102. அந்தோ! மீண்டும் ஒருமுறை எங்களுக்குத் திரும்பிச் செல்ல வாய்ப்புக் கிடைத்தால், நாங்கள் நம்பிக்கையாளர்களாய்த் திகழ்வோமே!”
26:102. “ஆகவே, நிச்சயமாக எங்களுக்கு (உலகிற்குத்) திரும்பிச் செல்லுதல் (என்பது) இருந்தால் விசுவாசங்கொண்டோர்களில் நாங்கள் ஆகிவிடுவோம்” (என்று பிதற்றுவார்கள்)
26:103
26:103 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاٰيَةً‌  ؕ ஓர் அத்தாட்சி وَّمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:103. நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:103. மெய்யாகவே இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்புவதில்லை.
26:103. திண்ணமாக, இதில் பெரியதொரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
26:103. நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கின்றது, (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் (இதனை) விசுவாசங்கொள்வோராக இருக்கவுமில்லை.
26:104
26:104 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:104. மேலும், நிச்சயமாக உமது இறைவன் (யாவரையும்) மிகைத்தோனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
26:104. (நபியே!) நிச்சயமாக உமது இறைவனே (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்.
26:104. மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:104. மேலும், (நபியே! நிச்சயமாக உம்முடைய இரட்சகன் - அவனே திட்டமாக (யாவரையும்) மிகைத்தோன், மிகக் கிருபையுடையோன்.
26:105
26:105 كَذَّبَتْ قَوْمُ نُوْحِ ۨالْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَوْمُ மக்கள் نُوْحِ நூஹூடைய ۨالْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏ தூதர்களை
26:105. நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.
26:105. நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
26:105. நூஹுடைய சமூகத்தார் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள்.
26:105. நூஹ்வுடைய சமூகத்தார் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
26:106
26:106 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ அவர் கூறியபோது لَهُمْ அவர்களுக்கு اَخُوْ சகோதரர் هُمْ அவர்களது نُوْحٌ நூஹ் اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?
26:106. அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது: “நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?”
26:106. அவர்களின் சகோதரர் நூஹ் அவர்களுக்கு கூறினார்: ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படவேண்டாமா?
26:106. அவர்களிடம் அவர்களின் சகோதரர் நூஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
26:106. அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் “நீங்கள் (அல்லாஹ்வுக்கு) பயப்பட மாட்டீர்களா? எனக்கூறியபோது,
26:107
26:107 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏
اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ தூதர் ஆவேன் اَمِيْنٌۙ‏ ஒரு நம்பிக்கையான
26:107. நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன்.
26:107. மெய்யாகவே நான் உங்களிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையுள்ள ஒரு தூதனாவேன்.
26:107. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய தூதராவேன்.
26:107. “நிச்சயமாக நான் உங்களுக்கு (அல்லாஹ்வினால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கைக்குரிய ஒரு தூதனாவேன்.
26:108
26:108 فَاتَّقُوْا اللّٰهَ وَ اَطِيْعُوْنِ‌ۚ‏
فَاتَّقُوْا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَ اَطِيْعُوْنِ‌ۚ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:108. ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:108. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்.
26:108. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
26:108. “ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள், இன்னும், எனக்கு நீங்கள் கீழ்ப்படிந்து நடங்கள்.
26:109
26:109 وَمَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ‌ۚ‏
وَمَاۤ اَسْــٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ‌ۚ எவ்வித கூலியையும் اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلٰى رَبِّ இறைவனிடமே الْعٰلَمِيْنَ‌ۚ‏ அகிலங்களின்
26:109. இதற்காக, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடம் இருக்கிறது.
26:109. (இதற்காக) நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே இருக்கின்றன.
26:109. நான் இப்பணிக்காக உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
26:109. (இதற்காக) “நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை, என்னுடைய கூலி அகிலத்தாரின் இரட்சகனின் மீதே தவிர (வேறு எவரிடமிருந்தும்) இல்லை”
26:110
26:110 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ؕ‏
فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ ؕ‏ இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:110. ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள் (என்று நூஹ் கூறியபோது),
26:110. ஆதலால், நீங்கள் (அந்த) அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்'' (என்று கூறினார்.)
26:110. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (தயக்கமின்றி) எனக்குக் கீழ்ப்படியுங்கள்!”
26:110. “ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், இன்னும், எனக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்” (என்று கூறினார்).
26:111
26:111 قَالُوْۤا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَؕ‏
قَالُوْۤا அவர்கள் கூறினர் اَنُؤْمِنُ நாம் நம்பிக்கை கொள்வோமா لَكَ உம்மை وَاتَّبَعَكَ உம்மை பின்பற்றி இருக்க الْاَرْذَلُوْنَؕ‏ சாதாரணமானவர்கள்
26:111. அவர்கள்: “தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா,” என்று கூறினார்கள்.
26:111. அதற்கவர்கள் ‘‘ உம்மை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தான் உம்மைப் பின்பற்றியிருக்கின்றனர்'' என்று கூறினார்கள்.
26:111. அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நாங்கள் உம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மிகவும் கீழ்த்தரமான மக்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களே!”
26:111. அ(தற்க)வர்கள்” (எங்களில் தரத்தால்) மிகத்தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றியிருக்கின்ற நிலையில், உம்மை நாங்கள் விசுவாசிப்போமா” என்று கூறினார்கள்.
26:112
26:112 قَالَ وَمَا عِلْمِىْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‌ۚ‏
قَالَ அவர் கூறினார் وَمَا عِلْمِىْ எனக்கு ஞானம் இல்லை بِمَا எதைப் பற்றி كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‌ۚ‏ செய்கின்றனர்
26:112. அவர் கூறினார்: அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன்.
26:112. அதற்கு அவர், ‘‘ நான் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை இன்னதென அறியமாட்டேன். (அதை விசாரிப்பதும் என் வேலையல்ல) என்றும்,
26:112. அதற்கு நூஹ் கூறினார்: “அவர்களின் செயல் எப்படிப்பட்டதென்று எனக்கென்ன தெரியும்?
26:112. (அதற்கு) அவர் “அவர்கள் செய்து கொண்டிருப்பவைபற்றி எனக்கு என்ன தெரியும்?” என்று கூறினார்.
26:113
26:113 اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰى رَبِّىْ‌ لَوْ تَشْعُرُوْنَ‌ۚ‏
اِنْ حِسَابُهُمْ அவர்களது விசாரணை இல்லை اِلَّا தவிர عَلٰى மீதே رَبِّىْ‌ என் இறைவன் لَوْ تَشْعُرُوْنَ‌ۚ‏ நீங்கள் உணரவேண்டுமே!
26:113. நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய கேள்வி கணக்கு (பற்றிய விசாரணை) என்னுடைய இறைவனிடம்தான் இருக்கிறது.
26:113. (இவற்றைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
26:113. அவர்களுடைய கணக்கெல்லாம் என் அதிபதியின் பொறுப்பிலுள்ளது. நீங்கள் சற்று உணர்ந்து செயல்படக்கூடாதா?
26:113. (“அவைபற்றிய) அவர்களின் கணக்கு என் இரட்சகன் மீதே தவிர (என்மீது கடமை) இல்லை, (இது பற்றி நீங்கள் உணருபவர்களாக இருப்பின்” (அவர்களை இழித்துக் கூறி இருக்க மாட்டீர்கள்).
26:114
26:114 وَمَاۤ اَنَا بِطَارِدِ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏
وَمَاۤ اَنَا நான் இல்லை بِطَارِدِ விரட்டக்கூடியவன் الْمُؤْمِنِيْنَ‌ۚ‏ நம்பிக்கையாளர்களை
26:114. முஃமின்களை நான் விரட்டி விடுபவன் அல்லன்.
26:114. நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது.
26:114. நம்பிக்கை கொள்வோரை விரட்டிவிடுவது என் பணியன்று.
26:114. “விசுவாசங்கொண்டோரை நான் விரட்டிவிடுபவனுமல்லன்”.
26:115
26:115 اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌؕ‏
اِنْ اَنَا நான் இல்லை اِلَّا தவிர نَذِيْرٌ எச்சரிப்பாளராகவே مُّبِيْنٌؕ‏ தெளிவான
26:115. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி வேறில்லை.
26:115. பகிரங்கமாக நான் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' என்று கூறினார்.
26:115. நானோ, தெளிவாக எச்சரிக்கை செய்பவனாயிருக்கின்றேன்.”
26:115. “நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர (வேறு) இல்லை: (என்றும் கூறினார்.)
26:116
26:116 قَالُوْا لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ يٰـنُوْحُ لَـتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِيْنَؕ‏
قَالُوْا அவர்கள் கூறினர் لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ நீர் விலகவில்லை என்றால் يٰـنُوْحُ நூஹே! لَـتَكُوْنَنَّ நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர் مِنَ الْمَرْجُوْمِيْنَؕ‏ ஏசப்படுபவர்களில்
26:116. அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
26:116. அதற்கவர்கள் ‘‘ நூஹே! நீர் இதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் கல்லெறிந்து கொல்லப்படுவீர்'' என்று கூறினார்கள்.
26:116. அதற்கு அவர்கள், “நூஹே! நீர் இதனைத் தவிர்த்துக்கொள்ளாவிடில், கல்லடிபட்டு விரட்டப்படுவோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்” என்று கூறினார்கள்.
26:116. அ(தற்க)வர்கள், “நூஹே! நீர் (இவ்வாறு கூறுவதிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், (கல்லால்) எறியப்படுபவர்களில் (ஒருவராக) நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்” என்று கூறினார்கள்.
26:117
26:117 قَالَ رَبِّ اِنَّ قَوْمِىْ كَذَّبُوْنِ‌ ۖ‌ۚ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنَّ நிச்சயமாக قَوْمِىْ என் மக்கள் كَذَّبُوْنِ‌ ۖ‌ۚ‏ என்னை பொய்ப்பித்து விட்டனர்
26:117. அவர் கூறினார்: “என் இறைவனே! என்னுடைய சமூகத்தார்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.
26:117. அதற்கவர், ‘‘ என் இறைவனே! என் (இந்த) மக்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.''
26:117. நூஹ் இறைஞ்சினார்: “என் இறைவனே! என் சமூகத்தார் என்னைப் பொய்யனென்று தூற்றிவிட்டனர்.
26:117. அ(தற்க)வர்கள், “என் இரட்சகனே! நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் என்னைப் பொய்யாக்கிவிட்டார்கள்” என்று கூறினார்.
26:118
26:118 فَافْتَحْ بَيْنِىْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِىْ وَمَنْ مَّعِىَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏
فَافْتَحْ ஆகவே, நீ தீர்ப்பளி! بَيْنِىْ எனக்கும் இடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கும் இடையில் فَتْحًا தெளிவான وَّنَجِّنِىْ என்னை(யும்) பாதுகாத்துக்கொள் وَمَنْ مَّعِىَ என்னுடன் உள்ளவர்களையும் مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களில்
26:118. ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!” (என்று பிரார்த்தித்தார்.)
26:118. ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து, என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார்.
26:118. இனி எனக்கும் அவர்களுக்குமிடையில் திட்டவட்டமான ஒரு தீர்ப்பை வழங்குவாயாக! மேலும், என்னையும் என்னுடன் இருக்கும் இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக!”
26:118. “ஆதலால், எனக்கிடையிலும், அவர்களுக்கிடையிலும் ஒரு தீர்ப்புச் செய்வாயாக! என்னையும், விசுவாசங்கொண்டவர்களில் என்னுடன் உள்ளவர்களையும் காப்பாற்றுவாயாக” (என்று பிரார்த்தித்தார்.)
26:119
26:119 فَاَنْجَيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْـفُلْكِ الْمَشْحُوْنِ‌ۚ‏
فَاَنْجَيْنٰهُ ஆகவே, அவரையும் பாதுகாத்தோம் وَمَنْ مَّعَهٗ அவருடன் உள்ளவர்களையும் فِى الْـفُلْكِ கப்பலில் الْمَشْحُوْنِ‌ۚ‏ நிரம்பிய
26:119. ஆகவே, நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் நிறைந்திருந்த கப்பலில் இரட்சித்தோம்.
26:119. ஆகவே, நாம் அவரையும் (நம்பிக்கை கொண்டு) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற உயிர்ப் பிராணிகளால்) நிறைந்திருந்த கப்பலில் ஏற்றி பாதுகாத்துக் கொண்டோம்.
26:119. இறுதியில், நிரம்பிய ஒரு கப்பலில் அவரையும், அவருடனிருந்தவர்களையும் நாம் காப்பாற்றிக்கொண்டோம்.
26:119. ஆகவே, அவரையும் (விசுவாசங்கொண்டவர்களாக) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற ஜீவராசிகளால்) நிறைக்கப்பட்டிருந்த கப்பலில் (ஏற்றி) நாம் காப்பாற்றினோம்.
26:120
26:120 ثُمَّ اَغْرَقْنَا بَعْدُ الْبٰقِيْنَؕ‏
ثُمَّ பிறகு اَغْرَقْنَا நாம் அழித்தோம் بَعْدُ பின்னர் الْبٰقِيْنَؕ‏ மீதம் இருந்தவர்களை
26:120. அதன் பிறகு, எஞ்சியிருந்தவர்களை நாம் மூழ்கடித்தோம்.
26:120. இதன் பின்னர் (கப்பலில் ஏறாது) மீதமிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம்.
26:120. பின்னர், எஞ்சியிருந்த மனிதர்களை மூழ்கடித்துவிட்டோம்.
26:120. பின்னர், எஞ்சியிருந்தவர்களை அப்பால் நாம் மூழ்கடித்துவிட்டோம்.
26:121
26:121 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاَيَةً‌  ؕ ஓர் அத்தாட்சி وَّمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:121. நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் ஈமான் கொள்வதில்லை.
26:121. நிச்சயமாக இதிலொரு படிப்பினையிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.
26:121. திண்ணமாக, இதில் ஒரு சான்று உள்ளது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களல்லர்.
26:121. நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்பவர்களாக இருக்கவுமில்லை.
26:122
26:122 وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏
وَ اِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:122. நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:122. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவன் மகா கருணையுடையவன்.
26:122. மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:122. மேலும், நிச்சயமாக (நபியே) உமதிரட்சகன் (அவனை நிராகரித்தவரை தண்டனை செய்வதில் யாவரையும்) அவன்தான் மிகைத்தவன், மிகக் கிருபையுடையவன்.
26:123
26:123 كَذَّبَتْ عَادُ اۨلْمُرْسَلِيْنَ ‌ۖ ‌ۚ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் عَادُ ஆது சமுதாய மக்கள் اۨلْمُرْسَلِيْنَ ۖ ۚ‏ தூதர்களை
26:123. ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
26:123. ‘‘ ஆது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
26:123. ஆத் சமூகத்தினர் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள்.
26:123. ஆது (கூட்டத்தார் நம்முடைய) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
26:124
26:124 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! لَهُمْ அவர்களுக்கு اَخُوْ சகோதரர் هُمْ அவர்களது هُوْدٌ ஹூது اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் பயந்துகொள்ள மாட்டீர்களா?
26:124. அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூத் : “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது:
26:124. அவர்களுடைய சகோதரர் ‘ஹூது' அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?
26:124. அவர்களுடைய சகோதரர் ஹூத் அவர்களிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
26:124. அவர்களுடைய சகோதரர் ஹூது அவர்களிடம், “நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படமாட்டீர்களா” என்ற கூறியபோது,
26:125
26:125 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ‌ۙ‏
اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ ஒரு தூதர் اَمِيْنٌ‌ۙ‏ நம்பிக்கையான
26:125. “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
26:125. நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாவேன்;
26:125. நான் உங்களுடைய நம்பிக்கைக்குரிய தூதரா வேன்.
26:125. “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதனாவேன்,
26:126
26:126 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ ۚ‏
فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ ۚ‏ எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:126. ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.
26:126. ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
26:126. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
26:126. “ஆகவே நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், இன்னும், எனக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்.”
26:127
26:127 وَمَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ؕ‏
وَمَاۤ اَسْــٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ‌ۚ எவ்வித கூலியையும் اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلٰى رَبِّ இறைவனிடமே الْعٰلَمِيْنَ ؕ‏ அகிலங்களின்
26:127. “மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
26:127. இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே இருக்கிறது.
26:127. நான் இப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனக்குரிய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
26:127. “இதற்காக உங்களிடத்தில் யாதொரு கூலியையும் நான் கேட்கவில்லை, என்னுடைய கூலி (யாவும்) அகிலத்தாரின் இரட்சகனின் மீதே தவிர (வேறு எவரிடமிருந்தும்) இல்லை”.
26:128
26:128 اَتَبْنُوْنَ بِكُلِّ رِيْعٍ اٰيَةً تَعْبَثُوْنَۙ‏
اَتَبْنُوْنَ கட்டிடத்தை கட்டுகிறீர்களா? بِكُلِّ رِيْعٍ ஒவ்வொருஇடத்திலும் اٰيَةً ஒரு கட்டிடத்தை تَعْبَثُوْنَۙ‏ விளையாடுகிறீர்கள்
26:128. “நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?
26:128. உயர்ந்த இடங்களிலெல்லாம் (தூண்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை நீங்கள் வீணாகக் கட்டுகிறீர்களே!
26:128. என்ன இது! உயரமான இடங்களிலெல்லாம் வீணாக நினைவுக் கட்டடங்களை நீங்கள் எழுப்புகின்றீர்கள்
26:128. ஓவ்வொரு உயர்ந்த இடத்திலும் வீண் வேலை செய்கிறவர்களாக அடையாளமிடப்பட்ட கட்டிடங்களைக் கட்டுகிறீர்களா?
26:129
26:129 وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ‏
وَ تَتَّخِذُوْنَ இன்னும் நீங்கள் எற்படுத்துகிறீர்கள் مَصَانِعَ பெரியகோட்டைகளை لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ‏ நீங்கள் நிரந்தரமாக இருப்பதைப் போன்று
26:129. இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?
26:129. நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கிறீர்கள்.
26:129. பெரும் பெரும் மாளிகைகளை நிர்மாணிக்கின்றீர்கள் நீங்கள் என்றென்றும் வாழப் போவதைப்போல!
26:129. இன்னும், “நீங்கள் நிரந்தரமாக இருந்துவிடலாம் என்பதற்காக உயர்ந்த மாளிகைகளை ஆக்கிக் கொள்கிறீர்களா?”
26:130
26:130 وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِيْنَ‌ۚ‏
وَاِذَا بَطَشْتُمْ நீங்கள் யாரையும் தாக்கினால் بَطَشْتُمْ தாக்குகிறீர்கள் جَبَّارِيْنَ‌ۚ‏ அநியாயக்காரர்களாக
26:130. “இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.
26:130. நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிகக் கொடுமையாக நடத்துகிறீர்கள்.
26:130. மேலும், நீங்கள் எவரையேனும் பிடித்தால் கொடூரமாகப் பிடிக்கிறீர்கள்.
26:130. மேலும், “(எவரையேனும் ஏதுங்குற்றத்திற்காக) நீங்கள் பிடித்தால் (கொடூரமாக) மிக்க கொடுமையாளர்களின் பிடியாகப் பிடிக்கிறீர்கள்.”
26:131
26:131 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ ۚ‏
فَاتَّقُوا ஆக, அஞ்சிக் கொள்ளுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ ۚ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:131. “எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:131. அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
26:131. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
26:131. ஆகவே, “நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், எனக்குக் கீழ்ப்படிந்தும் நடங்கள்”
26:132
26:132 وَاتَّقُوْا الَّذِىْۤ اَمَدَّكُمْ بِمَا تَعْلَمُوْنَ‌ۚ‏
وَاتَّقُوْا அஞ்சிக் கொள்ளுங்கள்! الَّذِىْۤ اَمَدَّ உதவியவனை كُمْ உங்களுக்கு بِمَا تَعْلَمُوْنَ‌ۚ‏ நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு
26:132. “மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.
26:132. உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்.
26:132. நீங்கள் அறிந்திருப்பவற்றையெல்லாம் எவன் உங்களுக்கு வழங்கினானோ, அவனுக்கு அஞ்சுங்கள்!
26:132. “நீங்கள் அறிந்திருப்பவற்றைக் கொண்டு உங்களுக்கு(க்கொடுத்து) உதவி புரிந்திருக்கிறானே அத்தகையவனை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்”
26:133
26:133 اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِيْنَ ‌ۚۙ‏
اَمَدَّ உதவினான் كُمْ உங்களுக்கு بِاَنْعَامٍ கால்நடைகளைக் கொண்டு وَّبَنِيْنَ ۚۙ‏ இன்னும் ஆண் பிள்ளைகளை
26:133. “அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.
26:133. சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான்.
26:133. அவன் உங்களுக்குக் கால்நடைகளையும், பிள்ளைகளையும்,
26:133. (ஆடு, மாடு, ஒட்டகங்கள் போன்ற) கால் நடைகளையும், ஆண்மக்களையும் உங்களுக்கு)க் கொடுத்து) அவன் உதவி செய்திருக்கிறான்.
26:134
26:134 وَجَنّٰتٍ وَّعُيُوْنٍ‌ۚ‏
وَجَنّٰتٍ இன்னும் தோட்டங்களை وَّعُيُوْنٍ‌ۚ‏ இன்னும் ஊற்றுகளை
26:134. “இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).
26:134. தோட்டங்களையும் நீர் ஊற்றுக்களையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்).
26:134. தோட்டங்களையும், நீரூற்றுகளையும் அருளினான்.
26:134. “இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுகளையும் கொண்டு (அவன் உதவியளித்துள்ளான்,)
26:135
26:135 اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍؕ‏
اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ தண்டனையை يَوْمٍ நாளின் عَظِيْمٍؕ‏ பெரிய
26:135. “நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” (எனக் கூறினார்).
26:135. (அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
26:135. நான் உங்கள் விஷயத்தில் ஒரு மாபெரும் நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்!”
26:135. (அவனுக்கு நீங்கள் மாறு செய்தால்) “நிச்சயமாக நான் மகத்தானதொரு நாளின் வேதனையை (அது உங்களுக்கு வரும் என்பது பற்றி) பயப்படுகிறேன்” என்று கூறினார்.
26:136
26:136 قَالُوْا سَوَآءٌ عَلَيْنَاۤ اَوَعَظْتَ اَمْ لَمْ تَكُنْ مِّنَ الْوٰعِظِيْنَۙ‏
قَالُوْا அவர்கள் கூறினர் سَوَآءٌ சமம்தான் عَلَيْنَاۤ எங்களுக்கு اَوَعَظْتَ நீர் உபதேசிப்பதும் اَمْ அல்லது لَمْ تَكُنْ இல்லாததும் مِّنَ الْوٰعِظِيْنَۙ‏ உபதேசிப்பவர்களில்
26:136. (இதற்கு) அவர்கள்: “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக் கூறினார்கள்.
26:136. அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே!
26:136. இதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நீர் நல்லுரை கூறினாலும் கூறாவிட்டாலும் எல்லாம் எங்களுக்கு ஒன்றுதான்.
26:136. அ(தற்க)வர்கள் “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும், உபதேசம் செய்பவர்களில் நீர் இல்லாமலிருந்தாலும் சமம் தான் (நாங்கள் எங்கள் வழியிலிருந்து திரும்பப்போவதில்லை) என்று கூறினார்கள்.
26:137
26:137 اِنْ هٰذَاۤ اِلَّا خُلُقُ الْاَوَّلِيْنَۙ‏
اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا தவிர خُلُقُ வழக்கமே الْاَوَّلِيْنَۙ‏ முன்னோரின்
26:137. “இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
26:137. (பயமுறுத்த) இ(வ்வாறு கூறுவ)து முன்னுள்ளோரின் வழக்கமே தவிரவேறில்லை.
26:137. இந்த விஷயங்கள் எல்லாம் தொன்றுதொட்டே கூறப்பட்டு வருபவைதாம்.
26:137. இது முன்னவர்களின் வழக்கமே தவிர (வேறு) இல்லை.
26:138
26:138 وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‌ۚ‏
وَمَا نَحْنُ நாங்கள் இல்லை بِمُعَذَّبِيْنَ‌ۚ‏ தண்டிக்கப்படுபவர்களாக
26:138. “மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”
26:138. (நீங்கள் கூறுவதைப் போல) நாங்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட மாட்டோம்'' (என்று கூறினார்கள்)
26:138. மேலும், நாங்கள் தண்டிக்கப்படக்கூடியவர்களல்லர்!”
26:138. இன்னும், “நாங்கள் (உம் கூற்றுப்படி) வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” (என்றும் கூறினர்).
26:139
26:139 فَكَذَّبُوْهُ فَاَهْلَـكْنٰهُمْ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاَيَةً‌ ؕ وَ مَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
فَكَذَّبُوْهُ ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர் فَاَهْلَـكْنٰهُمْ‌ؕ ஆகவே, அவர்களை நாம் அழித்தோம். اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் இருக்கிறது لَاَيَةً‌ ؕ ஓர் அத்தாட்சி وَ مَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:139. (இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:139. மேலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம். நிச்சயமாக இதில் நல்லதோர் அத்தாட்சியிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
26:139. இறுதியில் அவர்கள் அவரைப் பொய்யர் எனக் கூறிவிட்டார்கள். நாம் அவர்களை அழித்துவிட்டோம்.திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர்.
26:139. எனவே, அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள், ஆகவே, நாம் அவர்களை அழித்துவிட்டோம், நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது, இன்னும், அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்பவர்களாக இருக்கவில்லை.
26:140
26:140 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:140. நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
26:140. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
26:140. மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:140. மேலும், (நபியே!) உமதிரட்சகன் - அவன்தான் (சகலரையும்) மிகைத்தவன், மிக்க கிருபையுடையவன்.
26:141
26:141 كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் ثَمُوْدُ ஸமூது மக்கள் الْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏ தூதர்களை
26:141. ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
26:141. ‘ஸமூது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
26:141. ஸமூத் சமுதாயத்தார் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினர்.
26:141. ஸமூது (கூட்டத்தார் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டத்)தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
26:142
26:142 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் لَهُمْ அவர்களுக்கு اَخُوْهُمْ அவர்களது சகோதரர் صٰلِحٌ ஸாலிஹ் اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா?
26:142. அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது
26:142. அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்தை விட்டு விலகி) அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டாமா?''
26:142. அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
26:142. அவர்களுடைய சகோதரர் (நபியாகிய) ஸாலிஹ் அவர்களிடம், “நீங்கள் (அல்லாஹ்வை) பயந்து கொள்ளமாட்டீர்களா?” எனக்கூறியபோது (அவரை அவர்கள் பொய்யாக்கினார்கள்).
26:143
26:143 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏
اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ ஒரு தூதர் اَمِيْنٌۙ‏ நம்பிக்கையான
26:143. “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
26:143. நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையான ஒரு தூதனாவேன்.
26:143. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன்.
26:143. “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதனாவேன்.
26:144
26:144 فَاتَّقُوْا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ۚ‏
فَاتَّقُوْا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ۚ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:144. “ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:144. ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
26:144. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
26:144. “எனவே, நீங்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள், இன்னும், எனக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்”
26:145
26:145 وَمَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَؕ‏
وَمَاۤ اَسْــٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ‌ۚ எவ்வித கூலியையும் اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلٰى رَبِّ இறைவனிடமே الْعٰلَمِيْنَؕ‏ அகிலங்களின்
26:145. “மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
26:145. இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை.''
26:145. இப்பணிக்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
26:145. “இதற்காக உங்களிடத்தில் யாதொரு கூலியையும் நான் கேட்கவில்லை, என்னுடைய கூலி(யாவும்) அகிலத்தாரின் இரட்சகனின் மீதே தவிர (வேறு எவரிடமிருந்தும்) இல்லை.
26:146
26:146 اَتُتْرَكُوْنَ فِىْ مَا هٰهُنَاۤ اٰمِنِيْنَۙ‏
اَتُتْرَكُوْنَ நீங்கள் விடப்படுவீர்களா? فِىْ مَا هٰهُنَاۤ இங்கு இருப்பவற்றில் اٰمِنِيْنَۙ‏ நிம்மதியானவர்களாக
26:146. “இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?
26:146. இங்கு (உள்ள சுகபோகங்களில் என்றென்றுமே) அச்சமற்று (வாழ) விட்டு வைக்கப்படுவீர்களா?
26:146. நீங்கள் இங்குள்ள அனைத்துப் பொருள்களுக்கு மத்தியில் நிம்மதியாக வாழ்வதற்கு விட்டு வைக்கப்படுவீர்களா என்ன?
26:146. “இங்குள்ள (சுகபோகங்களான)வற்றில் அச்சமற்றவர்களாக (இருக்க) நீங்கள் விட்டு வைக்கப்படுவீர்களா?
26:147
26:147 فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏
فِىْ جَنّٰتٍ தோட்டங்களிலும் وَّعُيُوْنٍۙ‏ ஊற்றுகளிலும்
26:147. “தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்-
26:147. (இங்குள்ள) தோட்டங்களிலும், நீர் ஊற்றுகளிலும்,
26:147. (அதாவது) இந்தத் தோட்டங்களிலும் நீரூற்றுகளிலும்,
26:147. “தோட்டங்களில் இன்னும் நீரூற்றுக்களில் -
26:148
26:148 وَّزُرُوْعٍ وَّنَخْلٍ طَلْعُهَا هَضِيْمٌ‌ۚ‏
وَّزُرُوْعٍ இன்னும் விவசாய விளைச்சல்களிலும் وَّنَخْلٍ பேரிச்ச மரங்களிலும் طَلْعُهَا அதன் குலைகள் هَضِيْمٌ‌ۚ‏ மென்மையாக
26:148. “வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,
26:148. குலை குலையாகத் தொங்கும் பேரீச்சந் தோப்புகளிலும், விவசாயப் பண்ணைகளிலும் (விட்டுவைக்கப்படுவீர்களா?)
26:148. பயிர்நிலங்களிலும் கனிந்த குலைகளையுடைய பேரீச்சந் தோப்புகளிலும்!
26:148. “வேளாண்மைகளிலும் (மிருதுவான ஈரமுள்ள பழங்களைத் தாங்கியதாக) அவற்றின் குலைகள் இருக்கும், பேரீச்ச மரங்களிலும் (ஆகியவற்றிலெல்லாம் நீங்கள் அச்சமற்றிருக்க விட்டுவைக்கப்படுவீர்களா?)
26:149
26:149 وَتَـنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا فٰرِهِيْنَ‌ۚ‏
وَتَـنْحِتُوْنَ இன்னும் குடைந்து கொள்கிறீர்கள் مِنَ الْجِبَالِ மலைகளில் بُيُوْتًا வீடுகளை فٰرِهِيْنَ‌ۚ‏ மதிநுட்ப மிக்கவர்களாக
26:149. “மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்களா?)
26:149. திறமைசாலிகளாக மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். (அதில் என்றென்றுமே தங்கியிருக்க நீங்கள் விட்டு வைக்கப்படுவீர்களா?)
26:149. மேலும், மலைகளைக் குடைந்து குடைந்து பெருமை கொண்டவர்களாய் நீங்கள் குடியிருப்புகள் அமைத்துக் கொள்கின்றீர்கள்.
26:149. இன்னும், மிகத்திறமைசாலிகளாக (ஆணவம் கொண்டவர்களாக) மலைகளில் வீடுகளைக் குடைந்து (அமைத்துக்) கொள்கிறீர்கள்.
26:150
26:150 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ ۚ‏
فَاتَّقُوا ஆக, அஞ்சிக் கொள்ளுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ ۚ‏ இன்னும் எனக்கு கீழ்ப் படியுங்கள்!
26:150. “ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:150. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
26:150. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்!
26:150. “ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், இன்னும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
26:151
26:151 وَلَا تُطِيْعُوْۤا اَمْرَ الْمُسْرِفِيْنَۙ‏
وَلَا تُطِيْعُوْۤا கீழ்ப்படியாதீர்கள் اَمْرَ காரியத்திற்கு الْمُسْرِفِيْنَۙ‏ வரம்பு மீறிகளின்
26:151. “இன்னும், நீங்கள், வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள்.
26:151. வரம்பு மீறுபவர்களின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள்.
26:151. மேலும், வரம்பு மீறி வாழ்பவர்களுக்குக் கீழ்ப்படியாதீர்கள்.
26:151. “மேலும் வரம்பு மீறுவோரின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள்:
26:152
26:152 الَّذِيْنَ يُفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَ لَا يُصْلِحُوْنَ‏
الَّذِيْنَ எவர்கள் يُفْسِدُوْنَ குழப்பம்செய்கின்றனர் فِى الْاَرْضِ பூமியில் وَ لَا يُصْلِحُوْنَ‏ அவர்கள் சீர்திருத்துவதில்லை
26:152. “அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றுங் கூறினார்).
26:152. அவர்கள், பூமியில் விஷமம் செய்வார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்.
26:152. அவர்களோ பூமியில் அராஜகம் விளைவிக்கின்றார்கள். இன்னும், எவ்விதச் சீர்திருத்தமும் செய்வதில்லை.”
26:152. அவர்கள் எத்தகையோரென்றால், பூமியில் குழப்பம் செய்வார்கள், இன்னும் சீர்திருத்தம் செய்யமாட்டார்கள் (என்றெல்லாம் ஸாலிஹ் நபி கூறியதற்கு),
26:153
26:153 قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ‌ۚ‏
قَالُوْۤا அவர்கள் கூறினர் اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் مِنَ الْمُسَحَّرِيْنَ‌ۚ‏ சூனியம் செய்யப்பட்ட ஒருவர்தான்
26:153. அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்” என்று சொன்னார்கள்.
26:153. அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) கூறினர்: ‘‘ உம்மீது எவரோ சூனியம் செய்துவிட்டார்கள். (ஆதலால், உமது புத்தி தடுமாறிவிட்டது.)
26:153. அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நீர் சூனியம் செய்யப்பட்ட மனிதராகவே இருக்கின்றீர்.
26:153. அவர்கள் (ஸாலிஹே!) “நிச்சயமாக நீரோ சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர்” என்று கூறினார்கள்.
26:154
26:154 مَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا ‌ ۖۚ فَاْتِ بِاٰيَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏
مَاۤ اَنْتَ நீர் இல்லை اِلَّا தவிர بَشَرٌ மனிதராகவே مِّثْلُـنَا ۖۚ எங்களைப் போன்ற فَاْتِ ஆகவே கொண்டு வாரீர் بِاٰيَةٍ அத்தாட்சியை اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்களில்
26:154. “நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்றனர்).
26:154. நீர் நம்மைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (நாம் விரும்பியவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவீராக'' (என்று கூறினார்கள்.)
26:154. நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறென்ன? நீர் உண்மையாளராயின் ஏதேனுமொரு சான்றினைக் கொண்டு வாரும்!”
26:154. “நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர, (வேறு) இல்லை, ஆகவே, உண்மையாளர்களில நீர் இருந்தால் (நாங்கள் வேண்டியவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்று கூறினார்கள்)
26:155
26:155 قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَّلَـكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُوْمٍ‌ۚ‏
قَالَ அவர் கூறினார் هٰذِهٖ இது ஒரு نَاقَةٌ பெண் ஒட்டகை لَّهَا இதற்கு شِرْبٌ நீர் அருந்துவதற்குரிய ஒரு பங்கு وَّلَـكُمْ இன்னும் உங்களுக்கும் شِرْبُ நீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளது يَوْمٍ நாளில் مَّعْلُوْمٍ‌ۚ‏ குறிப்பிட்ட
26:155. அவர் சொன்னார்: “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”
26:155. அதற்கவர் ‘‘ (உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கிறது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகிறது.
26:155. அதற்கு ஸாலிஹ் கூறினார்: “இதோ! ஒரு பெண் ஒட்டகம்; (ஒரு நாள்) இது தண்ணீர் அருந்தட்டும். மற்றொரு நாள் நீங்களெல்லோரும் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.
26:155. அ(தற்க)வர் (அத்தாட்சியாக) “இதோ ஒரு பெண் ஒட்டகம் (குறிப்பிட்ட நாளில் கிணற்றிலிருந்து) இதற்கு தண்ணீர் அருந்தும் பங்கும், (அதுபோன்று) உங்களுக்கு குறிப்பிட்ட ஒருநாள் தண்ணீர் அருந்தும் பங்கும் உண்டு” என்று கூறினார்.
26:156
26:156 وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَيَاْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيْمٍ‏
وَلَا تَمَسُّوْهَا அதை தொட்டு விடாதீர்கள்! بِسُوْٓءٍ தீங்கைக் கொண்டு فَيَاْخُذَ பிடித்துக்கொள்ளும் كُمْ உங்களை عَذَابُ தண்டனை يَوْمٍ நாளின் عَظِيْمٍ‏ பெரிய
26:156. “இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.”
26:156. மேலும், நீங்கள் அதற்கு ஒரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறாயின் கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்.
26:156. இதற்கு எவ்விதத் தீங்கும் இழைக்காதீர்கள்; அப்படி தீங்கு இழைத்தீர்களானால் ஒரு மாபெரும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்!”
26:156. அன்றியும், “நீங்கள் எந்தத் தீங்கைக் கொண்டும் அதனைத் தீண்டாதீர்கள் (அவ்வாறு தீண்டினால்) மகத்தான நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்)
26:157
26:157 فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِيْنَۙ‏
فَعَقَرُوْهَا ஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள் فَاَصْبَحُوْا ஆகவே ஆகிவிட்டனர் نٰدِمِيْنَۙ‏ கைசேதப்பட்டவர்களாக
26:157. அவர்கள் அதன் கால் நரம்பைத் துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
26:157. (இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.
26:157. ஆயினும், அவர்கள் அதன் கால் நரம்புகளை வெட்டி விட்டார்கள். பிறகு வருந்தக்கூடியவர்களாகி விட்டார்கள்.
26:157. இவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் அதன் குதிகால் நரம்பினைத்தறித்து அவர்கள் அதை அறுத்துவிட்டார்கள், பின்னர் கைசேதப்பட்டோராய் ஆகிவிட்டனர்.
26:158
26:158 فَاَخَذَهُمُ الْعَذَابُ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
فَاَخَذَ பிடித்தது هُمُ அவர்களை الْعَذَابُ‌ؕ தண்டனை اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاٰيَةً‌  ؕ ஓர் அத்தாட்சி وَمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:158. ஆகவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது - நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும், அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:158. ஆகவே, அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது. நிச்சயமாக (அவர்களுக்கு) இதிலோர் அத்தாட்சி இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவேயில்லை.
26:158. அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது! நிச்சயமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர்.
26:158. எனவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது, நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங் கொள்பவர்களாக இருக்கவுமில்லை.
26:159
26:159 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:159. மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
26:159. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
26:159. மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:159. மேலும், நிச்சயமாக (நபியே!) உமதிரட்சகன், அவன்தான் (யாவரையும்) மிகைத்தவன், மிகக்கிருபையுடையவன்.
26:160
26:160 كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ اۨلْمُرْسَلِيْنَ‌ ۖ ‌ۚ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَوْمُ மக்கள் لُوْطٍ லூத்துடைய اۨلْمُرْسَلِيْنَ ۖ ۚ‏ தூதர்களை
26:160. லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
26:160. லூத்துடைய மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
26:160. லூத்தின் சமூகத்தார் இறைத்தூதர்களைப் பொய்யரெனத் தூற்றினார்கள்.
26:160. (நபி) லூத்துடைய சமூகத்தார் தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
26:161
26:161 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை لَهُمْ அவர்களுக்கு اَخُوْ சகோதரர் هُمْ அவர்களது لُوْطٌ லூத்து اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
26:161. அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது,
26:161. அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டாமா?
26:161. அவர்களிடம் அவர்களின் சகோதரர் லூத் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
26:161. அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களிடம் “நீங்கள் (அல்லாஹ்வை) பயந்து கொள்ளமாட்டீர்களா?” என்று கூறியபோது,
26:162
26:162 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏
اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ ஒரு தூதர் اَمِيْنٌۙ‏ நம்பிக்கையான
26:162. “நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
26:162. நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாக இருக்கிறேன்.
26:162. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதரா வேன்.
26:162. “நிச்சயமாக நான் உஙகளுக்கு நம்பிக்கைக்குரிய தூதனாவேன்.
26:163
26:163 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ۚ‏
فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ۚ‏ இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:163. “ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:163. (ஆகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படியுங்கள்.
26:163. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்!
26:163. “ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், இன்னும், எனக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்.
26:164
26:164 وَمَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ؕ‏
وَمَاۤ اَسْــٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ‌ۚ எவ்வித கூலியையும் اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلٰى رَبِّ இறைவனிடமே الْعٰلَمِيْنَ ؕ‏ அகிலங்களின்
26:164. “மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
26:164. இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை.
26:164. நான் இப்பணிக்காக உங்களிடம் எவ்விதக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
26:164. “இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை, என்னுடைய கூலி (யாவும்) அகிலத்தாரின் இரட்சகனின் மீதல்லாது (வேறு எவரின் மீதும்) இல்லை.
26:165
26:165 اَتَاْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِيْنَۙ‏
اَتَاْتُوْنَ நீங்கள் வருகிறீர்களா? الذُّكْرَانَ ஆண்களிடம் مِنَ الْعٰلَمِيْنَۙ‏ படைப்பினங்களில்
26:165. “உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா?
26:165. நீங்கள் (உங்கள் காம இச்சையைத் தணித்துக் கொள்ள) உலகத்தார்களில் ஆண்களிடமே செல்கிறீர்கள்.
26:165. உலகப் படைப்பினங்களில் ஆண்களிடம் நீங்கள் செல்கின்றீர்களா?
26:165. “(தீய காரியத்திற்காக) அகிலத்தாரில் ஆடவர்களிடம் வருகின்றீர்களா?”
26:166
26:166 وَ تَذَرُوْنَ مَا خَلَقَ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ‌ؕ بَلْ اَنْـتُمْ قَوْمٌ عٰدُوْنَ‏
وَ تَذَرُوْنَ இன்னும் விட்டு விடுகிறீர்கள் مَا எதை خَلَقَ படைத்தான் لَـكُمْ உங்களுக்கு رَبُّكُمْ உங்கள் இறைவன் مِّنْ اَزْوَاجِكُمْ‌ؕ உங்கள் மனைவிகளை بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் قَوْمٌ மக்கள் عٰدُوْنَ‏ வரம்பு மீறிய
26:166. “இன்னும், உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்.”
26:166. உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இயற்கை முறையை) மீறிவிட்ட மக்கள் ஆவீர்கள்'' என்று கூறினார்.
26:166. மேலும், உங்கள் மனைவியரிடம் உங்களுக்காக உங்கள் இறைவன் படைத்திருப்பனவற்றை விட்டுவிடுகின்றீர்களா? உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் மக்களாவீர்கள்!”
26:166. “உங்கள் இரட்சகன் உங்களின் மனைவியரிலிருந்து உங்களுக்கெனப் படைத்ததையும் நீங்கள் விட்டுவிடுகிறீர்கள் இல்லை! நீங்கள் (அல்லாஹ்வின்) வரம்பைக் கடந்த சமூகத்தவர்கள்” (என்றும் கூறினார்).
26:167
26:167 قَالُوْا لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ يٰلُوْطُ لَـتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ நீர் விலகவில்லை என்றால் يٰلُوْطُ லூத்தே! لَـتَكُوْنَنَّ நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர் مِنَ الْمُخْرَجِيْنَ‏ வெளியேற்றப்பட்டவர்களில்
26:167. அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.
26:167. அதற்கவர்கள் ‘‘ லூத்தே! (இவ்வாறு கூறுவதை விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் (நம் ஊரை விட்டுத்) துரத்தப்படுவீர்'' என்று கூறினார்கள்.
26:167. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “லூத்தே! நீர் இவ்வாறு கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளாவிடில், (எங்கள் ஊரிலிருந்து) வெளியேற்றப்படுகிறவர்களில் நீரும் சேர்க்கப்படுவீர்!”
26:167. அ(தற்க)வர்கள், “லூத்தே! (இவ்வாறு உபதேசிப்பதிலிருந்து) நீர் விலகிக்கொள்ளாவிடில், நிச்சயமாக நீர் (ஊரிலிருந்து) வெளியேற்றப்பட்டவர்களில் ஆகிவிடுவீர்” என்று கூறினார்கள்.
26:168
26:168 قَالَ اِنِّىْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِيْنَؕ‏
قَالَ அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் لِعَمَلِكُمْ உங்கள் செயலை مِّنَ الْقَالِيْنَؕ‏ வெறுப்பவர்களில்
26:168. அவர் கூறினார்: “நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன்.
26:168. அதற்கவர் ‘‘ நிச்சயமாக நான் உங்கள் (இத்தீய) செயலை வெறுக்கிறேன்'' என்று கூறி,
26:168. அவர் கூறினார்: “உங்கள் தீய செயல்களைக் கண்டு வெறுப்பவர்களில் நானும் ஒருவன்.
26:168. அ(தற்க)வர் “நிச்சயமாக நான் உங்களுடைய (இத்தீச்செயலை வெறுப்பவர்களில் உள்ளவனாவேன்” என்று கூறினார்.
26:169
26:169 رَبِّ نَجِّنِىْ وَاَهْلِىْ مِمَّا يَعْمَلُوْنَ‏
رَبِّ என் இறைவா! نَجِّنِىْ என்னையும் பாதுகாத்துக்கொள்! وَاَهْلِىْ இன்னும் என் குடும்பத்தாரை(யும்) مِمَّا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்வதிலிருந்து
26:169. “என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (எனப் பிரார்த்தித்தார்.)
26:169. ‘‘ என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக'' (என்று பிரார்த்தித்தார்.)
26:169. என் இறைவனே! என்னையும் என்னுடைய குடும்பத்தாரையும் இவர்களின் தீவினைகளிலிருந்து காப்பாற்றுவாயாக!”
26:169. என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருப்பவற்றிலிருந்து(ம் அதன் தண்டனையிலிருந்தும்) காப்பாற்றுவாயாக” (என்று பிரார்த்தித்தார்).
26:170
26:170 فَنَجَّيْنٰهُ وَ اَهْلَهٗۤ اَجْمَعِيْنَۙ‏
فَنَجَّيْنٰهُ ஆக, அவரை(யும்) பாதுகாத்தோம் وَ اَهْلَهٗۤ இன்னும் அவருடைய குடும்பத்தாரை(யும்) اَجْمَعِيْنَۙ‏ அனைவரையும்
26:170. அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.
26:170. ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
26:170. இறுதியில், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றிக் கொண்டோம்;
26:170. ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றினோம்.
26:171
26:171 اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ‌ۚ‏
اِلَّا தவிர عَجُوْزًا ஒரு மூதாட்டியை فِى الْغٰبِرِيْنَ‌ۚ‏ மிஞ்சியவர்களில்
26:171. (அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட கிழவியைத் தவிர
26:171. எனினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர அவள் (லூத்துடன்) வராது பின் தங்கியவர்களுடன் தங்கி (அழிந்து) விட்டாள்.
26:171. பின்னால் தங்கிவிட்டவர்களோடு இருந்த ஒரு கிழவியைத் தவிர!
26:171. (தண்டிக்கப்படுபவர்களோடு) எஞ்சியிருப்போரில் ஆகிவிட்ட ஒரு கிழவியான அவர் மனைவியைத்தவிர,
26:172
26:172 ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ‌ۚ‏
ثُمَّ பிறகு دَمَّرْنَا நாம் அழித்தோம் الْاٰخَرِيْنَ‌ۚ‏ மற்றவர்களை
26:172. பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
26:172. பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்து விட்டோம்.
26:172. பிறகு, மற்றவர்களை அழித்து விட்டோம்.
26:172. பின்னர், மற்றவர்களை (அடியோடு) நாம் அழித்துவிட்டோம்.
26:173
26:173 وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًا‌ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِيْنَ‏
وَاَمْطَرْنَا இன்னும் பொழிவித்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது مَّطَرًا‌ۚ ஒரு மழையை فَسَآءَ مَطَرُ அது மிக கெட்ட மழையாகும் الْمُنْذَرِيْنَ‏ எச்சரிக்கப்பட்டவர்களுடைய மழைகளில்
26:173. இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.
26:173. அவர்கள் மீது நாம் (கல்) மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட(அ)வர்களின் (மீது பொழிந்த கல்) மழை மகா கெட்டது.
26:173. இன்னும் அவர்கள் மீது பொழிய வைத்தோம், ஒரு மழையை! அது மிக மோசமான மழையாக இருந்தது. அதுவோ எச்சரிக்கப்பட்டவர்கள் மீது இறங்கியது.
26:173. இன்னும், அவர்கள் மீது நாம் (கல்)மாரியை பொழியச் செய்தோம், ஆகவே, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட (அவர்களின்) மீது பொழியச்செய்த கல்மாரி கெட்டதாகிவிட்டது.
26:174
26:174 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً‌  ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاَيَةً‌  ؕ ஓர் அத்தாட்சி وَمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:174. நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:174. நிச்சயமாக இதிலோர் நல்ல அத்தாட்சியிருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலான வர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
26:174. திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
26:174. நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்பவர்களாக இருக்கவுமில்லை.
26:175
26:175 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏
وَاِنَّ رَبَّكَ لَهُوَ நிச்சயமாக உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:175. மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
26:175. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
26:175. மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:175. (நபியே!) இன்னும், நிச்சயமாக உமதிரட்சகன் - அவனே (யாவரையும்) மிகைத்தவன், பெருங்கிருபையுடையவன்.
26:176
26:176 كَذَّبَ اَصْحٰبُ لْئَيْكَةِ الْمُرْسَلِيْنَ ‌ۖ‌ۚ‏
كَذَّبَ பொய்ப்பித்தனர் اَصْحٰبُ لْئَيْكَةِ தோட்டக்காரர்கள் الْمُرْسَلِيْنَ ۖ‌ۚ‏ தூதர்களை
26:176. தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள்.
26:176. (‘மத்யன்' என்னும் ஊரில்) சோலையில் வசித்திருந்தவர்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
26:176. அய்க்காவாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினர்.
26:176. (மரங்கள் அடர்ந்த பகுதியில் மத்யன் என்னும் ஊரில் வாழ்ந்த) தோப்புவாசிகளுக்கு தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
26:177
26:177 اِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் لَهُمْ அவர்களுக்கு شُعَيْبٌ ஷுஐபு اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
26:177. ஷுஐப் அவர்களிடம்: “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது:
26:177. ஷுஐப் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்கு அஞ்சி பாவத்திலிருந்து) விலகிக் கொள்ள வேண்டாமா?
26:177. அவர்களிடம் ஷுஐப் கூறியதை நினைவு கூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
26:177. (நபியாகிய) ஷூஜப் அவர்களிடம்) “நீங்கள் அல்லாஹ்வை) பயப்பட மாட்டீர்களா?” என்று கூறியயோது – (அவரை அவர்கள் பொய்யாக்கினார்கள்)
26:178
26:178 اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏
اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ தூதர் ஆவேன் اَمِيْنٌۙ‏ நம்பிக்கையான
26:178. “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
26:178. நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையுள்ள ஒரு தூதனாக இருக்கிறேன்.
26:178. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன்.
26:178. “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்”
26:179
26:179 فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ۚ‏
فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَطِيْعُوْنِ‌ۚ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:179. “ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:179. ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கீழ்ப்படியுங்கள்.
26:179. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
26:179. “அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், இன்னும், எனக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்.”
26:180
26:180 وَمَاۤ اَسْــٴَــــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ؕ‏
وَمَاۤ اَسْــٴَــــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ‌ۚ எவ்வித கூலியையும் اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلٰى رَبِّ இறைவனிடமே الْعٰلَمِيْنَ ؕ‏ அகிலங்களின்
26:180. “மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
26:180. இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தார்களின் இறைவனிடமே தவிர (வேறெவரிடமும்) இல்லை.”
26:180. நான் இப்பணிக்காக உங்களிடம் யாதொரு கூலியையும் கோரவில்லை. எனது கூலியோ அனைத்துலகங்களின் அதிபதியிடமே உள்ளது.
26:180. “இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை, என்னுடைய கூலி(யாவும்) அகிலத்தாரின் இரட்சகன் மீதே தவிர வேறு எவரின் மீதும் இல்லை.”
26:181
26:181 اَوْفُوا الْـكَيْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِيْنَ‌ۚ‏
اَوْفُوا முழுமைப்படுத்துங்கள் الْـكَيْلَ அளவையை وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் مِنَ الْمُخْسِرِيْنَ‌ۚ‏ நஷ்டம் ஏற்படுத்துபவர்களில்
26:181. “அளவையை நிறைவாக அளவுங்கள்; (அளவையைக்) குறைப்பவர்களாக இராதீர்கள்.
26:181. அளவையை முழுமையாக அளந்து கொடுங்கள். நீங்கள் (மக்களுக்கு) நஷ்டமிழைப்பவர்களாக இருக்க வேண்டாம்.
26:181. நிறைவாக அளந்து கொடுங்கள்; யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தாதீர்கள்!
26:181. “அளவையைப் பூரணமாக்குங்கள், (அளவைக் குறைத்து ஜனங்களுக்கு) நஷ்டமிழைப்போராகவும் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.”
26:182
26:182 وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِ‌ۚ‏
وَزِنُوْا நிறுங்கள்! بِالْقِسْطَاسِ தராசைக் கொண்டு الْمُسْتَقِيْمِ‌ۚ‏ நேரான
26:182. “நேரான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள்.
26:182. சரியான தராசில் நிறுத்துக் கொடுங்கள்.
26:182. மேலும், சரியான தராசு கொண்டு எடை போடுங்கள்.
26:182. மேலும், சரியான தராசு கொண்டு நிறுத்துங்கள்”
26:183
26:183 وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ‌ۚ‏
وَلَا تَبْخَسُوا குறைக்காதீர்கள் النَّاسَ மக்களுக்கு اَشْيَآءَ பொருள்களை هُمْ அவர்களுடைய وَلَا تَعْثَوْا இன்னும் கடும் குழப்பம் செய்யாதீர்கள்! فِى الْاَرْضِ பூமியில் مُفْسِدِيْنَ‌ۚ‏ கலகம்செய்தவர்களாக
26:183. “மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.
26:183. மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய அவர்களுடைய பொருள்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் கடுமையாக விஷமம் (-கலகம்) செய்து கொண்டு அலையாதீர்கள்.
26:183. மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள். பூமியில் அராஜகம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள்.
26:183. “மனிதர்களுக்கு அவர்களின் பொருள்களை நீங்கள் குறைத்தும் விடாதீர்கள், நீங்கள் பூமியில் குழப்பம் செய்கிறவர்களாகவும் அலையாதீர்கள்.”
26:184
26:184 وَاتَّقُوا الَّذِىْ خَلَقَكُمْ وَالْجِـبِلَّةَ الْاَوَّلِيْنَؕ‏
وَاتَّقُوا அஞ்சிக் கொள்ளுங்கள்! الَّذِىْ خَلَقَكُمْ உங்களைப் படைத்தவனை وَالْجِـبِلَّةَ படைப்பினங்களையும் الْاَوَّلِيْنَؕ‏ முன்னோர்களான
26:184. “அன்றியும், உங்களையும், உங்களுக்கு முன்னாலிருந்த படைப்புகளையும் படைத்த அவனுக்கே அஞ்சுங்கள்” (எனக் கூறினார்.)
26:184. உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்'' என்றும் கூறினார்.
26:184. மேலும், எவன் உங்களையும் உங்களுக்கு முந்தைய சமுதாயத்தாரையும் படைத்தானோ அவனுக்கு அஞ்சுங்கள்.”
26:184. மேலும், “உங்களையும், (உங்களுக்கு) முன்னவர்களான படைப்பினரையும் எவன் படைத்தானோ அத்தகையவனை நீங்கள் பயப்படுங்கள்” (என்று கூறினார்.)
26:185
26:185 قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَۙ‏
قَالُوْۤا அவர்கள் கூறினர் اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் مِنَ الْمُسَحَّرِيْنَۙ‏ சூனியம் செய்யப்பட்ட படைப்புகளில் ஒருவர்தான்
26:185. அவர்கள் சொன்னார்கள்: “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.
26:185. அதற்கவர்கள் கூறினர்: ‘‘ நீர் (எவராலோ) பெரும் சூனியம் செய்யப்பட்டு விட்டீர்.
26:185. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீர் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரே ஆவீர்!
26:185. அ(தற்க)வர்கள், “நீரோ சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர்” என்று கூறினார்கள்.
26:186
26:186 وَمَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا وَ اِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِيْنَ‌ۚ‏
وَمَاۤ اَنْتَ நீர் இல்லை اِلَّا தவிர بَشَرٌ மனிதராகவே مِّثْلُـنَا எங்களைப் போன்ற وَ اِنْ نَّظُنُّكَ நிச்சயமாக உம்மை நாங்கள் கருதுகிறோம் لَمِنَ الْكٰذِبِيْنَ‌ۚ‏ பொய்யர்களை சேர்ந்தவராகவே
26:186. “நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை; உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம்.
26:186. நீர் நம்மைப்போன்ற மனிதரே தவிர வேறில்லை. நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே மதிக்கிறோம்.
26:186. மேலும், நீர் எங்களைப் போன்று ஒரு மனிதரேயன்றி வேறல்லர் மேலும், நாங்கள் உம்மை முற்றிலும் பொய்யரென்றே கருதுகின்றோம்.
26:186. மேலும், “நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறு இல்லை, இன்னும், நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் உள்ளவராக எண்ணுகிறோம்.
26:187
26:187 فَاَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَؕ‏
فَاَسْقِطْ விழ வைப்பீராக عَلَيْنَا எங்கள் மீது كِسَفًا சில துண்டுகளை مِّنَ இருந்து السَّمَآءِ வானத்தில் اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَؕ‏ உண்மையாளர்களில்
26:187. “எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால், வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படிச் செய்யும்.”
26:187. நீர் உண்மை சொல்பவராக இருந்தால் வானத்(தைப் பல துண்டாக்கி, அ)திலிருந்து சில துண்டுகளை நம்மீது விழவையுங்கள்'' (என்று கூறினார்கள்.)
26:187. நீர் உண்மையாளராயின் வானத்தின் சில பகுதிகளை எங்கள்மீது விழச்செய்வீராக!”
26:187. “எனவே, நீர் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால் வானத்திலிருந்து பல துண்டுகளை எங்களின் மீது விழச்செய்வீராக” (என்று கூறினார்கள்)
26:188
26:188 قَالَ رَبِّىْۤ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ‏
قَالَ அவர் கூறினார் رَبِّىْۤ என் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்வதை
26:188. “நீங்கள் செய்து கொண்டிருப்பதை என் இறைவன் நன்கறிவான்” என்று அவர் கூறினார்.
26:188. அதற்கவர் ‘‘ நீங்கள் செய்து கொண்டிருக்கும் (மோசமான) காரியத்தை என் இறைவன் நன்கறிவான்; (இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான்)'' என்று கூறினார்.
26:188. அதற்கு ஷுஐப் கூறினார்: “நீங்கள் செய்துகொண்டிருப்பவை பற்றி என் இறைவன் நன்கறிகின்றான்.”
26:188. அ(தற்க)வர், “நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை என் இரட்சகன் மிக்க அறிந்தவன்” என்று கூறினார்.
26:189
26:189 فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ‌ؕ اِنَّهٗ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
فَكَذَّبُوْهُ ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர் فَاَخَذَ ஆகவே, பிடித்தது هُمْ அவர்களை عَذَابُ தண்டனை يَوْمِ நாளின் الظُّلَّةِ‌ؕ மேகம் اِنَّهٗ நிச்சயமாக அது كَانَ இருக்கிறது عَذَابَ தண்டனையாக يَوْمٍ ஒரு நாளின் عَظِيْمٍ‏ பெரிய
26:189. பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது; நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.
26:189. (எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.
26:189. அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினர். இறுதியில் குடை நாளின் வேதனை அவர்களைப் பீடித்துக்கொண்டது. திண்ணமாக, அது பயங்கரமான ஒரு நாளின் வேதனையாய் இருந்தது!
26:189. பின்னரும், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள், ஆகவே, (அடர்ந்திருண்ட மேகங்களின்) நிழலுடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக்கொண்டது, நிச்சயமாக அது மகத்தான (கடினமான) நாளின் வேதனையாக இருந்தது.
26:190
26:190 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً ‌ ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கிறது لَاَيَةً  ؕ ஓர் அத்தாட்சி وَمَا كَانَ இல்லை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
26:190. நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:190. நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
26:190. திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
26:190. நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்வோராக இருக்கவுமில்லை.
26:191
26:191 وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ لَهُوَ உமது இறைவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
26:191. மேலும், நிச்சயமாக உம் இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:191. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
26:191. மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:191. மேலும், நிச்சயமாக (நபியே!) உமதிரட்சகன் - அவன்தான் (யாவரையும்) மிகைத்தவன், மிகக் கிருபையுடையவன்.
26:192
26:192 وَاِنَّهٗ لَـتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَؕ‏
وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக இது لَـتَنْزِيْلُ இறக்கப்பட்ட رَبِّ இறைவனால் الْعٰلَمِيْنَؕ‏ அகிலங்களின்
26:192. மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
26:192. (நபியே!) நிச்சயமாக (குர்ஆன் ஷரீஃப் என்னும்) இது அகிலத்தாரின் இறைவனால்தான் அருளப்பட்டது.
26:192. மேலும், திண்ணமாக, இது அகிலங்களின் அதிபதியினால் இறக்கியருளப்பட்டதாகும்.
26:192. மேலும், (நபியே!) நிச்சயமாக (குர் ஆனாகிய) இது அகிலத்தாரின் இரட்சகனால் இறக்கிவைக்கப்பட்டதாகும்.
26:193
26:193 نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِيْنُۙ‏
نَزَلَ بِهِ இதை இறக்கினார் الرُّوْحُ ரூஹ் الْاَمِيْنُۙ‏ நம்பிக்கைக்குரியவரான
26:193. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
26:193. (இறை கட்டளைப் பிரகாரம்) ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர் என்னும் ஜிப்ரயீல்) இதை உமது உள்ளத்தில் இறக்கிவைத்தார்.
26:193. நம்பிக்கைக்குரிய ரூஹ்* இதனை எடுத்துக் கொண்டு இறங்கியிருக்கின்றது
26:193. (அல்லாஹ்வின் கட்டளைப்படி) ரூஹூல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதனைக் கொண்டு இறங்கினார்.
26:194
26:194 عَلٰى قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِيْنَۙ‏
عَلٰى قَلْبِكَ உமது உள்ளத்தில் لِتَكُوْنَ நீர் ஆகவேண்டும் என்பதற்காக مِنَ الْمُنْذِرِيْنَۙ‏ எச்சரிப்பவர்களில்
26:194. (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) -
26:194. (மனிதர்களுக்கு) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக,
26:194. உமது உள்ளத்தின் மீது! எதற்காகவெனில் (அல்லாஹ்வின் சார்பில் மனிதர்களை) எச்சரிக்கை செய்பவர்களுள் நீரும் ஒருவராய் ஆக வேண்டும் என்பதற்காக!
26:194. ஆச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களில் (ஒருவராக) நீர் ஆவதற்காக உமது இதயத்தின் மீது (கூடுதல் குறைவின்றி இதைக் கொண்டு இறங்கினார்.
26:195
26:195 بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِيْنٍؕ‏
بِلِسَانٍ மொழியில் عَرَبِىٍّ அரபி مُّبِيْنٍؕ‏ தெளிவான
26:195. தெளிவான அரபி மொழியில்.
26:195. தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டுள்ளது).
26:195. தெள்ளத் தெளிந்த அரபி மொழியில்.
26:195. தெளிவான அரபிமொழியைக் கொண்டு இறங்கினார்.
26:196
26:196 وَاِنَّهٗ لَفِىْ زُبُرِ الْاَوَّلِيْنَ‏
وَاِنَّهٗ நிச்சயமாக இது لَفِىْ زُبُرِ வேதங்களில் கூறப்பட்டுள்ளது الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களின்
26:196. நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது.
26:196. நிச்சயமாக இதைப் பற்றிய முன்னறிவிப்பு முன்னுள்ள வேதங்களிலும் இருக்கிறது.
26:196. மேலும், முன்னோர்களின் வேதங்களிலும், திண்ணமாக இது உள்ளது.
26:196. நிச்சயமாக (குர் ஆனாகிய) இது (பற்றிய அறிவிப்பு) மூத்தவர்களின் வேத நூல்களிலும் (கூறப்பட்டு) உள்ளது.
26:197
26:197 اَوَلَمْ يَكُنْ لَّهُمْ اٰيَةً اَنْ يَّعْلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏
اَوَلَمْ يَكُنْ இல்லையா? لَّهُمْ இவர்களுக்கு اٰيَةً ஓர் அத்தாட்சியாக اَنْ يَّعْلَمَهٗ இதை அறிவதே عُلَمٰٓؤُا அறிஞர்கள் بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏ இஸ்ரவேலர்களின்
26:197. பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை(ப் பற்றி நன்கு) அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?
26:197. இஸ்ராயீலின் சந்ததியிலுள்ள கல்விமான்கள் இதை அறிந்திருப்பதே அவர்களுக்குப் போதுமான அத்தாட்சியல்லவா?
26:197. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலுள்ள அறிஞர்கள் இதனை அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது இந்த மக்(காவாசி)களுக்கு ஒரு சான்றாக இல்லையா?
26:197. இஸ்ராயீலின் மக்களிலுள்ள அறிஞர்கள் இதனை அறிந்திருப்பது அவர்களுக்கு(ப் போதுமான) அத்தாட்சியாக இருக்கவில்லையா?
26:198
26:198 وَلَوْ نَزَّلْنٰهُ عَلٰى بَعْضِ الْاَعْجَمِيْنَۙ‏
وَلَوْ نَزَّلْنٰهُ இதை நாம் இறக்கி இருந்தால் عَلٰى بَعْضِ சிலவற்றின் மீது الْاَعْجَمِيْنَۙ‏ வாயற்ற பிராணிகள்
26:198. இன்னும், நாம் இதனை அரபி (மொழி) அல்லாதவர்களில் ஒருவர் மீது இறக்கி வைத்திருப்போமாயின்;
26:198. (இவர்கள் விரும்புவதைப்போல அரபி அல்லாத) அஜமிகளில் ஒருவர்மீது (அவருடைய மொழியில்) இதை இறக்கிவைத்து,
26:198. (ஆயினும், இவர்களின் பிடிவாதமான நடத்தை எவ்வாறுள்ளது என்றால்) நாம் இதனை அரபியரல்லாத எவர் மீதாவது இறக்கி வைத்திருந்தால்,
26:198. நாம் (குர் ஆனாகிய) இதை அரபியல்லாத சிலரின் மீது இறக்கி வைத்திருப்போமாயின்,
26:199
26:199 فَقَرَاَهٗ عَلَيْهِمْ مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِيْنَؕ‏
فَقَرَاَهٗ அவர் அதை ஓதி இருந்தாலும் عَلَيْهِمْ இவர்கள் மீது مَّا كَانُوْا ஆகி இருக்க மாட்டார்கள் بِهٖ அதை مُؤْمِنِيْنَؕ‏ நம்பிக்கை கொண்டவர்களாக
26:199. அவரும் இதை அவர்களுக்கு ஓதிக் காட்டி இருப்பாராயின் அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டோராக இருக்க மாட்டார்கள்.
26:199. அவர் இதை இவர்களுக்கு ஓதிக் காண்பித்தால் இதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
26:199. மேலும், அவர் (தெள்ளிய அரபி வேதமாகிய) இதை அவர்களுக்கு ஓதிக்காட்டினால் அப்போதும் இவர்கள் அதனை நம்பக்கூடியவர்களாய் இருக்கமாட்டார்கள்.
26:199. பின்னர், அவர்(கள்,) இதை அவர்களுக்கு ஓதிக்காட்டினாலும், இதனை அவர்கள் விசுவாசம் கொள்கிறவர்களாக இல்லை.
26:200
26:200 كَذٰلِكَ سَلَكْنٰهُ فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَؕ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் سَلَكْنٰهُ நாம் இதை நுழைத்தோம் فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الْمُجْرِمِيْنَؕ‏ குற்றவாளிகளின்
26:200. இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம்.
26:200. அத்தகைய (கொடிய) நிராகரிப்பையே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் புகுத்தியிருக்கிறோம்.
26:200. இதேபோன்று நாம் இ(ந்நல்லுரை)தனை குற்றம் புரிந்தோரின் இதயங்களில் செலுத்தி விடுகின்றோம்.
26:200. இவ்வாறே இதனை (இக்)குற்றவாளிகளின் இதயங்களில் நாம் புகுத்தி விட்டோம்.
26:201
26:201 لَا يُؤْمِنُوْنَ بِهٖ حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَلِيْمَۙ‏
لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் بِهٖ இதை حَتّٰى வரை يَرَوُا அவர்கள் பார்க்கின்ற الْعَذَابَ தண்டனையை الْاَلِيْمَۙ‏ வலி தரும்
26:201. நோவினை செய்யும் வேதனையைக் காணும் வரை, அவர்கள் அதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
26:201. ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் (தங்கள் கண்ணால்) காணும் வரை இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
26:201. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் கண்ணால் காணாத வரை அவர்கள், இதன் மீது நம்பிக்கை கொள்வதில்லை!
26:201. (ஆகவே! துன்புறுத்தும் வேதனையை) அவர்கள் (கண் கூடாகக்) காணும் வரை இதனைக் கொண்டு அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள்.
26:202
26:202 فَيَاْتِيَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَۙ‏
فَيَاْتِيَهُمْ ஆக, அது அவர்களிடம் வரும் بَغْتَةً திடீரென وَّهُمْ அவர்களோ لَا يَشْعُرُوْنَۙ‏ உணராதவர்களாக இருக்க
26:202. எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும்.
26:202. அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு திடுகூறாகவே (அந்நாள்) அவர்களை வந்தடையும்.
26:202. பிறகு, அவர்கள் உணராதிருக்கும் நிலையில் அது அவர்கள் மீது திடீரென வந்துவிழும்!
26:202. ஆகவே, அ(த் தண்டனையான)து அவர்கள் உணர்ந்து கொள்ளாதிருக்கும் நிலையில் திடீரென அவர்களிடம் வரும்.
26:203
26:203 فَيَـقُوْلُوْا هَلْ نَحْنُ مُنْظَرُوْنَؕ‏
فَيَـقُوْلُوْا அப்போது அவர்கள் கூறுவார்கள் هَلْ نَحْنُ مُنْظَرُوْنَؕ‏ நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா?
26:203. அப்பொழுது அவர்கள்: “எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?” என்று கேட்பார்கள்.
26:203. அச்சமயம் அவர்கள் ‘‘ எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?
26:203. அப்போது அவர்கள் புலம்புவார்கள்: “எங்களுக்குச் சற்று அவகாசம் கிடைக்காதா?”
26:203. அது சமயம் அவர்கள் “நாங்கள் (சிறிது) அவகாசம் கொடுக்கப்படுவோரா?” என்று கேட்பார்கள்.
26:204
26:204 اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ‏
اَفَبِعَذَابِنَا ?/ஆகவே, நமது தண்டனையை يَسْتَعْجِلُوْنَ‏ அவர்கள் அவசரப்படுகிறார்கள்
26:204. நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
26:204. ‘‘ எங்களை வேதனை செய்யவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?'' என்று கூறுவார்கள்.
26:204. இவர்கள் நம்முடைய வேதனை சீக்கிரம் வரவேண்டும் என்றா அவசரப்படுகின்றார்கள்?
26:204. “நம்முடைய வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்”
26:205
26:205 اَفَرَءَيْتَ اِنْ مَّتَّعْنٰهُمْ سِنِيْنَۙ‏
اَفَرَءَيْتَ நீர் கவனித்தீரா! اِنْ مَّتَّعْنٰهُمْ நாம் அவர்களுக்கு சுகமளித்தால் سِنِيْنَۙ‏ பல ஆண்டுகள்
26:205. நீர் பார்த்தீரா? நாம் அவர்களை(ப் பல)ஆண்டுகள் வரை (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருக்கச் செய்தாலும்,
26:205. (நபியே!) நீர் கவனித்தீரா? நாம் இவர்களை (இவர்கள் விரும்புகிறவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்க விட்டு வைத்திருந்தபோதிலும்,
26:205. நீர் கொஞ்சம் சிந்தித்தீரா? பல்லாண்டுகள்வரை சுகமாய் வாழ்ந்திட இவர்களுக்கு நாம் அவகாசம் அளித்துவிட்டிருந்தாலும்,
26:205. (நபியே!) நீர் பார்த்தீரா? நாம் இவர்களை (இவர்கள் இஷ்டப்பட்டவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்கச் செய்திருந்தால் -
26:206
26:206 ثُمَّ جَآءَهُمْ مَّا كَانُوْا يُوْعَدُوْنَۙ‏
ثُمَّ பிறகு جَآءَ வந்தால் هُمْ அவர்களிடம் مَّا எதை كَانُوْا இருந்தனர் يُوْعَدُوْنَۙ‏ எச்சரிக்கப்படுவார்கள்
26:206. பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-
26:206. பின்னர், அவர்கள் பயமுறுத்தப்பட்டுவந்த வேதனை அவர்களை வந்தடைந்தால்,
26:206. பின்னர் எதனைக்கொண்டு இவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்களோ அது இவர்களிடம் வந்துவிடுமானால்
26:206. பின்னர் அவர்கள் வாக்களிக்கப்படுபவர்களாக இருந்தார்களே அ(வ்வேதனையான)து அவர்களுக்கு வந்துவிட்டால் -
26:207
26:207 مَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يُمَتَّعُوْنَؕ‏
مَاۤ اَغْنٰى தடுக்காது عَنْهُمْ அவர்களை விட்டும் مَّا كَانُوْا يُمَتَّعُوْنَؕ‏ அவர்கள் சுகமளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது
26:207. அவர்கள் (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குப் பயன்தராது.
26:207. அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள் ஒன்றுமே அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காதே!
26:207. அப்போதுஇவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அந்த வாழ்க்கைச் சாதனங்கள் இவர்களுக்கு என்ன பயனைத் தரப்போகின்றன?
26:207. அவர்கள் சுகமனுபவிக்கச் செய்யப்பட்டிருந்தவை அவர்களுக்கு யாதொரு பயனும் தராது.
26:208
26:208 وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ‌‌‌‌‌ ۛ ‌ۖ ‏
وَمَاۤ اَهْلَكْنَا நாம் அழிக்கவில்லை مِنْ قَرْيَةٍ எந்த ஊரையும் اِلَّا தவிர لَهَا அதற்கு مُنْذِرُوْنَ‌ ۛ ۖ ‏ எச்சரிப்பாளர்கள்
26:208. இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை.
26:208. (உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரை எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை.
26:208. (பாருங்கள்:) நாம் எந்த ஊரையும் அழித்ததில்லை எச்சரிக்கை செய்பவர்கள் அவர்களிடம் வந்து,
26:208. எந்த ஊ(ரா)ரையும் அதற்கு அச்சமூட்டி எச்சரிப்பவர்கள் இல்லாது நாம் அழித்துவிடவில்லை.
26:209
26:209 ذِكْرٰى‌ۛ وَمَا كُنَّا ظٰلِمِيْنَ‏
ذِكْرٰى‌ۛ அறிவுரையாகும் وَمَا كُنَّا நாம் இல்லை ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
26:209. ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) - நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை.
26:209. (ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்பவர்களாக இருக்கவில்லை.
26:209. நல்லுரை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றாத வரையில்! மேலும், நாம் கொடுமை புரிபவராயும் இருந்ததில்லை.
26:209. அவர்களுக்கு நினைவூட்டவே (எச்சரிக்கையாளர்களை நாம் அனுப்பினோம்) இன்னும் (எவருக்கும்) அநியாயம் செய்பவர்களாகவும் நாம் இருக்கவில்லை.
26:210
26:210 وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيٰطِيْنُ‏
وَمَا تَنَزَّلَتْ இறக்கவில்லை بِهِ இதை الشَّيٰطِيْنُ‏ ஷைத்தான்கள்
26:210. இன்னும், ஷைத்தான்கள் இ(வ் வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை.
26:210. (இவர்கள் கூறுகிறவாறு) இ(வ்வேதத்)தை ஷைத்தான்கள் இறக்கவில்லை.
26:210. இதனை (தெளிவான இந்த வேதத்தை) ஷைத்தான்கள் எடுத்துக் கொண்டு இறங்கவில்லை.
26:210. இன்னும், (குர் ஆனாகிய) இ(வ்வேதத்)தைக் கொண்டு ஷைத்தான்கள் இறங்கவில்லை.
26:211
26:211 وَمَا يَنْۢبَغِىْ لَهُمْ وَمَا يَسْتَطِيْعُوْنَؕ‏
وَمَا يَنْۢبَغِىْ தகுதியானதும்இல்லை لَهُمْ அவர்களுக்கு وَمَا يَسْتَطِيْعُوْنَؕ‏ அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்
26:211. மேலும், அது அவர்களுக்கு தகுதியுமல்ல; (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.
26:211. அது அவர்களுக்குத் தகுதியுமல்ல; (அதற்குரிய) சக்தியும் அவர்களிடம் இல்லை.
26:211. அது அவர்களுக்குரிய பணியுமல்ல; அவ்வாறு செய்வதற்கும் அவர்களால் இயலாது!
26:211. மேலும், (அது அவர்களுக்குத் தகுதியுமன்று.) அவர்கள் (அதற்கு) சக்தி பெறவுமாட்டார்கள்.
26:212
26:212 اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَؕ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் عَنِ السَّمْعِ கேட்பதிலிருந்து لَمَعْزُوْلُوْنَؕ‏ தூரமாக்கப்பட்டவர்கள்
26:212. நிச்சயமாக ஷைத்தான்கள் (இதைக்) கேட்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
26:212. நிச்சயமாக அவர்கள் (இதை) காதால் கேட்பதிலிருந்தும் தடுக்கப் பட்டிருக்கின்றனர்.
26:212. திண்ணமாக, அவர்கள் இதனைச் செவியுறுவதிலிருந்தும்கூட விலக்கித் தூரமாக வைக்கப்பட்டுள்ளார்கள்.
26:212. “நிச்சயமாக அவர்கள் செவியேற்பதிலிருந்தும் தடுக்கப்பட்டவர்களாவர்.
26:213
26:213 فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِيْنَ‌ۚ‏
فَلَا تَدْعُ ஆக, அழைக்காதீர் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَ வேறு فَتَكُوْنَ நீர் ஆகிவிடுவீர் مِنَ الْمُعَذَّبِيْنَ‌ۚ‏ தண்டிக்கப்படுபவர்களில்
26:213. ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்.
26:213. ஆதலால், (நபியே!) நீர் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்காதீர். (அழைத்தால்) அதனால் நீர் வேதனைக்குள்ளாவீர்.
26:213. ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்காதீர்கள். அவ்வாறாயின் தண்டனை பெறுவோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்.
26:213. எனவே, அல்லாஹ்வுடன் வேறோர் நாயனை நீர் அழைக்காதீர், (அவ்வாறு அழைத்தால்) அதனால் நீர் வேதனை செய்யப்படுபவர்களில் (உள்ளவராக) ஆகிவிடுவீர்.
26:214
26:214 وَاَنْذِرْ عَشِيْرَتَكَ الْاَقْرَبِيْنَۙ‏
وَاَنْذِرْ எச்சரிப்பீராக عَشِيْرَتَكَ உமது உறவினர்களை الْاَقْرَبِيْنَۙ‏ மிகநெருங்கிய(வர்கள்)
26:214. இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
26:214. நீர் உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.
26:214. உம்முடைய மிக நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள்;
26:214. இன்னும் நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
26:215
26:215 وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏
وَاخْفِضْ தாழ்த்துவீராக! جَنَاحَكَ உமது புஜத்தை لِمَنِ اتَّبَعَكَ உம்மை பின்பற்றியவர்களுக்கு مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏ நம்பிக்கையாளர்களுக்கு
26:215. மேலும், உம்மைப் பின்பற்றி நடக்கும் முஃமின்களிடத்தில் தோள்தாழ்த்தி(க் கனிவுடன்) நடந்துகொள்வீராக!.
26:215. உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களிடம் புஜம் தாழ்த்தி(ப் பணிவாக நடந்து)க் கொள்வீராக.
26:215. மேலும், நம்பிக்கையாளர்களில் யார் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களிடம் பணிவாய் நடந்து கொள்ளும்!
26:215. இன்னும் விசுவாசிகளில் உம்மைப் பின்பற்றியோருக்கு உம்முடைய (அன்பு காட்டுதல் எனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!
26:216
26:216 فَاِنْ عَصَوْكَ فَقُلْ اِنِّىْ بَرِىْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ‌ۚ‏
فَاِنْ عَصَوْكَ அவர்கள் உமக்கு மாறு செய்தால் فَقُلْ கூறுவீராக اِنِّىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ நீங்கியவன் مِّمَّا تَعْمَلُوْنَ‌ۚ‏ நீங்கள் செய்வதிலிருந்து
26:216. ஆனால், அவர்கள் உமக்கு மாறு செய்வார்களாயின்: “நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன்” என்று கூறிவிடுவீராக!
26:216. ஆனால், அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால் ‘‘ நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றிலிருந்து விலகி விட்டேன்'' என்று கூறி,
26:216. அவர்கள் உமக்குக் கீழ்ப்படியாது மாறு செய்தால், “நீங்கள் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பாளியல்லன்!” என்று அவர்களிடம் கூறிவிடும்!
26:216. ஆகவே, உமக்கு அவர்கள் மாறு செய்தால், “நிச்சயமாக நீங்கள் செய்வதைவிட்டும் நான் நீங்கியவன்” என்று கூறுவீராக!
26:217
26:217 وَتَوَكَّلْ عَلَى الْعَزِيْزِ الرَّحِيْمِۙ‏
وَتَوَكَّلْ நம்பிக்கை வைப்பீராக عَلَى மீது الْعَزِيْزِ மிகைத்தவனான الرَّحِيْمِۙ‏ பெரும் கருணையாளன்
26:217. இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக!
26:217. கருணையாளன், அனைவரையும் மிகைத்தவன் (அல்லாஹ்) மீது நம்பிக்கை வைப்பீராக.
26:217. மேலும், வல்லமை மிக்கவனும், பெரும் கிருபையாளனுமாகிய இறைவனையே முழுமையாகச் சார்ந்திரும்!
26:217. (யாவரையும்) மிகைத்தவனாகிய, மிகக் கிருபையுடையவனின் மீது (சகலத்தையும் ஒப்படைத்து) முழுமையாக நம்பிக்கை வைப்பீராக!
26:218
26:218 الَّذِىْ يَرٰٮكَ حِيْنَ تَقُوْمُۙ‏
الَّذِىْ அவன்தான் يَرٰٮكَ உம்மை பார்க்கிறான் حِيْنَ போது تَقُوْمُۙ‏ நீர் நிற்கின்ற
26:218. அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.
26:218. நீர் நின்று வணங்கும்போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்.
26:218. அவன் எத்தகையவன் எனில், நீர் எழும்போது உம்மைப் பார்க்கிறான்.
26:218. அவன் எத்தகையவனென்றால், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும் சமயத்தில் அவன் உம்மைப் பார்க்கிறான்.
26:219
26:219 وَتَقَلُّبَكَ فِى السّٰجِدِيْنَ‏
وَتَقَلُّبَكَ புரலுவதையும் فِى السّٰجِدِيْنَ‏ இன்னும் , சிரம் பணிபவர்களுடன்
26:219. இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)
26:219. சிரம் பணிந்து வணங்கக்கூடியவர்களுடன் சேர்ந்து நீர் அசைவதையும் அவன் பார்க்கிறான்.
26:219. மேலும், சிரம்பணிந்து வணங்குவோர்களிடையே உம் அசைவையும் பார்க்கின்றான்.
26:219. சிரம் பணிவோரில் (ரூகூவு, ஸுஜுது செய்வது கொண்டு நீர் இருக்கின்றபோது) உம்முடைய இயங்குதலையும் (அவன் பார்க்கிறான்)
26:220
26:220 اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் السَّمِيْعُ நன்கு செவி ஏற்பவன் الْعَلِيْمُ‏ நன்கு அறிந்தவன்
26:220. நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; மிக அறிபவன்.
26:220. நிச்சயமாக அவன்தான் அனைத்தையும் நன்கு செவியுறுபவன், நன்கு அறிபவன்.
26:220. திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
26:220. நிச்சயமாக அவன் -அவனே செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
26:221
26:221 هَلْ اُنَبِّئُكُمْ عَلٰى مَنْ تَنَزَّلُ الشَّيٰـطِيْنُؕ‏
هَلْ اُنَبِّئُكُمْ உங்களுக்கு நான் அறிவிக்கவா? عَلٰى மீது مَنْ யார் تَنَزَّلُ இறங்குகிறார்கள் الشَّيٰـطِيْنُؕ‏ ஷைத்தான்கள்
26:221. எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?
26:221. (நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா?
26:221. (மக்களே!) ஷைத்தான்கள் யார்மீது இறங்குகிறார்கள் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்கவா?
26:221. (விசுவாசிகளே!) ஷைத்தான்கள் எவர்மீது இறங்குகின்றனர் என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
26:222
26:222 تَنَزَّلُ عَلٰى كُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ‏
تَنَزَّلُ இறங்குகின்றனர் عَلٰى كُلِّ எல்லோர் மீதும் اَفَّاكٍ பெரும் பொய்யர்கள் اَثِيْمٍۙ‏ பெரும் பாவிகள்
26:222. பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள்.
26:222. பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
26:222. பெரும் பொய்யனாகிய, பாவம் புரியக்கூடிய ஒவ்வொருவன் மீதும் அவர்கள் இறங்குகின்றார்கள்.
26:222. (செயலால்) பாவியான, (செயலால்) அதிகமாகப் பொய்கூறும் ஒவ்வொருவரின் மீதும் அவர்கள் இறங்குகின்றனர்.
26:223
26:223 يُّلْقُوْنَ السَّمْعَ وَاَكْثَرُهُمْ كٰذِبُوْنَؕ‏
يُّلْقُوْنَ கூறுகின்றனர் السَّمْعَ கேட்டதை وَاَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானவர்கள் كٰذِبُوْنَؕ‏ பொய்யர்கள்
26:223. தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே.
26:223. தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே!
26:223. அவர்கள் கேள்விப்பட்டதை யெல்லாம் காதுகளில் ஊதி விடுகின்றார்கள். மேலும், அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே!
26:223. தாங்கள் கேள்விப்பட்டதை (அப்பொய்யர்களின் காதுகளில்) போடுகிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் (பெரும்) பொய்யர்களே!
26:224
26:224 وَالشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ الْغَاوٗنَؕ‏
وَالشُّعَرَآءُ கவிஞர்கள் يَتَّبِعُهُمُ அவர்களை பின்பற்றுவார்கள் الْغَاوٗنَؕ‏ வழிகேடர்கள்தான்
26:224. இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
26:224. கவிஞர்களை வழிகெட்டவர்கள்தான் பின்பற்றுகின்றனர்.
26:224. மேலும், கவிஞர்களையோ வழிகெட்டுப் போனவர்கள்தான் அவர்களைப் பின்பற்றுகின்றார்கள்.
26:224. இன்னும் கவிஞர்கள் - அவர்களை வழிகெட்டவர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
26:225
26:225 اَلَمْ تَرَ اَنَّهُمْ فِىْ كُلِّ وَادٍ يَّهِيْمُوْنَۙ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் فِىْ كُلِّ وَادٍ ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் يَّهِيْمُوْنَۙ‏ அலைகின்றனர்
26:225. நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
26:225. நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
26:225. அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதையும்,
26:225. நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (தட்டழிந்து) திரிகிறார்கள் என்பதை நீர் காணவில்லையா?
26:226
26:226 وَاَنَّهُمْ يَقُوْلُوْنَ مَا لَا يَفْعَلُوْنَۙ‏
وَاَنَّهُمْ இன்னும் , நிச்சயமாக அவர்கள் يَقُوْلُوْنَ கூறுகின்றனர் مَا لَا يَفْعَلُوْنَۙ‏ தாங்கள் செய்யாததை
26:226. இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.
26:226. நிச்சயமாக அவர்கள், தாங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள்.
26:226. தாங்கள் செய்யாதவற்றைக் கூறுவதையும் நீர் பார்க்கவில்லையா?
26:226. இன்னும் நிச்சயமாக அவர்கள் தாங்கள் செய்யாதவைகளைச் செய்ததாகக் கூறுகிறார்கள்.
26:227
26:227 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِيْرًا وَّانْتَصَرُوْا مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا‌ ؕ وَسَيَـعْلَمُ الَّذِيْنَ ظَلَمُوْۤا اَىَّ مُنْقَلَبٍ يَّـنْقَلِبُوْنَ‏
اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا الصّٰلِحٰتِ நன்மைகளை செய்தனர் وَذَكَرُوا நினைவு கூர்ந்தனர் اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا அதிகம் وَّانْتَصَرُوْا இன்னும் பழிவாங்கினார்கள் مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا‌ ؕ தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் وَسَيَـعْلَمُ விரைவில் அறிவார்கள் الَّذِيْنَ ظَلَمُوْۤا اَىَّ அநியாயம் செய்தவர்கள்/எந்த مُنْقَلَبٍ திரும்பும் இடத்திற்கு يَّـنْقَلِبُوْنَ‏ திரும்புவார்கள்
26:227. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.
26:227. (ஆயினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் மூலம்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தான். பிறரை துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
26:227. ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்தார்களோ, மேலும், அல்லாஹ்வை அதிகம் நினைத்தார்களோ, மேலும், தங்களுக்குக் கொடுமை இழைக்கப்பட்டபோது அதற்காக மட்டும் பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர! மேலும், கொடுமை புரிகின்றவர்கள், அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்துகொள்வார்கள்.
26:227. (ஆயினும் அவர்களில்) விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து, அல்லாஹ்வையும் அதிகமாக நினைவுகூர்ந்து, தாங்கள் அநியாயம் செய்யப்பட்ட பின் பழி தீர்த்துக்கொண்டார்களே அத்தகையோரைத் தவிர. மேலும், அநியாயம் செய்தோர், தாங்கள் எந்த மீளும் தலத்திற்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை (அதிசீக்கிரத்தில்) அறிந்து கொள்வார்கள்.