2. ஸூரத்துல் பகரா (பசு மாடு)
மதனீ, வசனங்கள்: 286

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
2:1 الٓمّٓۚ‏
2:1. அலிஃப், லாம், மீம்.
2:1. அலிஃப்; லாம்; மீம். (அல்லாஹுதஆலா, வானவர் ஜிப்ரீல் - அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய)
2:1. அலிஃப். லாம். மீம்.
2:1. அலிஃப் லாம் மீம்.
2:2 ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ‏
2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
2:2. இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறை அச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும்.
2:2. இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும்.
2:2. இது வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமுமில்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர் வழி காட்டியாகும்.
2:3 الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ‏
2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
2:3. அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.
2:3. அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள்.
2:3. அவர்கள் எத்தகையோரென்றால்; மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிறைவேற்றுவார்கள்;நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்கள்.
2:4 وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَؕ‏
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
2:4. (அன்றி, நபியே!) அவர்கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உங்களுக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள்.
2:4. மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள்.
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் உமக்கு இறக்கி வைக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்குமுன் (இருந்த நபிமார்களுக்கு) இறக்கி வைக்கப்பட்டவற்றையும் விசுவாசம் கொள்பவர்கள்; (இறுதி நாளாகிய) மறுமையையும் அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.
2:5 اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
2:5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
2:5. இத்தகையவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கின்றார்கள். இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள்.
2:5. இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள்.
2:5. அவர்கள்தாம், தங்கள் இரட்சகனிடமிருந்துள்ள நேர் வழியின் மீது இருப்பவர்கள். மேலும் அவர்களே தாம் வெற்றி பெறக்கூடியவர்கள்.
2:6 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْ هُمْ لَا يُؤْمِنُوْنَ‏
2:6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
2:6. (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் உண்மையில் சமமே. அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
2:6. (இவ்விஷயங்களை) யார் நிராகரித்தார்களோ, அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். எவ்வகையிலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர்.
2:6. (நபியே!) நிச்சயமாக நிராகரிக்கிறார்களே அத்தகையோர_அவர்களுக்கு, நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாதிருப்பதும், அவர்களுக்குச் சமமே. அவர்கள் விசுவாசங் கொள்ள மாட்டார்கள்.
2:7 خَتَمَ اللّٰهُ عَلَىٰ قُلُوْبِهِمْ وَعَلٰى سَمْعِهِمْ‌ؕ وَعَلٰىٓ اَبْصَارِهِمْ غِشَاوَةٌ  وَّلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ‏
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
2:7. (அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டுவிட்டது. தவிர அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு.
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்கள் மீதும், அவர்களின் செவிப்புலன்கள் மீதும் முத்திரை வைத்து விட்டிருக்கிறான். மேலும் அவர்களுடைய பார்வைகள் மீது திரை விழுந்திருக்கிறது. தவிர அவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்களாவர்.
2:7. அவர்களுடைய இதயங்களின் மீதும், அவர்களுடைய செவிப் புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இன்னும், அவர்களுடைய பார்வைகளின் மீது திரையிருக்கிறது;மேலும், அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு.
2:8 وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْيَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَ‌ۘ‏
2:8. இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
2:8. (நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதரில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களல்லர்.
2:8. இன்னும் “அல்லாஹ்வையும் இறுதி(த் தீர்ப்பு) நாளையும் நம்பியிருக்கிறோம்” எனக் கூறுவோர் சிலரும் மனிதர்களில் உளர். ஆயினும், அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
2:8. இன்னும், “அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங்கொண்டிருக்கிறோம்” எனக் கூறுவோர் மனிதர்களில் (சிலர்) இருக்கின்றனர்; அவர்களோ விசுவாசங்கொண்டவர்களல்லர்.
2:9 يُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ۚ وَمَا يَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَؕ‏
2:9. (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
2:9. அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையேயன்றி (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.
2:9. (இப்படிக் கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை! எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை.
2:9. அவர்கள் அல்லாஹ்வையும், விசுவாசங்கொண்டவர்களையும் வஞ்சிக்கின்றனர். (இதனால்) அவர்கள் தங்களைத்தாமே தவிர (வேறெவரையும்) வஞ்சிக்கவில்லை; (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள்.
2:10 فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًا ۚ وَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙۢ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ‏
2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.
2:10. (ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. (அதன் காரணமாக) அவர்களுக்கு அந்நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். (இவ்விதம்) அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்குண்டு.
2:10. அவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ் (இந்)நோயை அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்திவிட்டான். மேலும் அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தால் கொடிய தண்டனையும் அவர்களுக்குண்டு.
2:10. அவர்களுடைய இதயங்களில் (வஞ்சகம், சந்தேகம் ஆகிய) நோயுள்ளது. அகவே, (அந்)நோயை அவர்களுக்கு அல்லாஹ் அதிகப்படுத்திவிட்டான். மேலும், அவர்கள் பொய் சொல்லிக்கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு.
2:11 وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِىْ الْاَرْضِۙ قَالُوْاۤ اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ‏
2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
2:11. அவர்களை நோக்கி பூமியில் விஷமம் செய்(து கொண்டு அலை)யாதீர்கள் என்று கூறினால், அதற்கவர்கள் "நாங்கள் சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் (விஷமிகள் அல்லர்)" எனக் கூறுகிறார்கள்.
2:11. இன்னும் “பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்!” என அவர்களிடம் சொல்லப்பட்டால், “நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே!” என அவர்கள் கூறுகிறார்கள்.
2:11. மேலும், அவர்களிடம், “நீங்கள் பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்” என்று கூறப்பட்டால் அ(தற்க)வர்கள் “நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்வோர் தாம் (குழப்பவாதிகளல்ல,)” எனக்கூறுகிறார்கள்.
2:12 اَلَا ۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰـكِنْ لَّا يَشْعُرُوْنَ‏
2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
2:12. நிச்சயமாக அவர்கள் விஷமிகளே! ஆனால், (தாங்கள்தான் விஷமிகள் என்பதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.
2:12. எச்சரிக்கை! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பவாதிகளாவர். ஆயினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை.
2:12. தெரிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பம் செய்பவர்கள், எனினும் (இதை) அவர்கள் உணர மாட்டர்கள்.
2:13 وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْاۤ اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ‌ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰـكِنْ لَّا يَعْلَمُوْنَ‏
2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
2:13. மேலும், அவர்களை நோக்கி "(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினால், (அதற்கு) அவர்கள் "அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?" என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் மூடர்கள். ஆனால் (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள்.
2:13. இன்னும் “மற்ற மனிதர்கள் ஈமான் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!” என அவர்களிடம் சொல்லப்பட்டால் “மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?” என்றே அவர்கள் பதில் சொல்கிறார்கள் எச்சரிக்கை! நிச்சயமாக இவர்கள்தாம் மூடர்களாவர். ஆயினும் (இதனை) அவர்கள் அறிவதில்லை!
2:13. மேலும், அவர்களிடம், “(குர்ஆனைச் செவியுற்று) மனிதர்கள் விசுவாசங்கொண்டது போன்று நீங்களும் விசுவாசங்கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டால், அ(தற்க)வர்கள் “மூடர்கள் விசுவாசங்கொண்டது போல், நாங்கள் விசுவாசங் கொள்வோமா?” என்று கூறுகிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக இவர்கள் தான் மூடர்கள்; எனினும், (அதைப்பற்றி) அவர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள்.
2:14 وَاِذَا لَقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْاۤ اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَوْا اِلٰى شَيٰطِيْنِهِمْۙ قَالُوْاۤ اِنَّا مَعَكُمْۙ اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ‏
2:14. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.
2:14. தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் "நாங்களும் (உங்களைப் போல்) நம்பிக்கையாளர்கள்தான்" எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்" எனக் கூறுகின்றனர்.
2:14. இன்னும் இறைநம்பிக்கை கொண்டிருப்போரை அவர்கள் சந்தித்தால், ‘நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்எனக் கூறுகின்றனர். மேலும் தங்கள் ஷைத்தான்களுடன் அவர்கள் தனிமையில் இருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்! உண்மையில் நாங்கள் அவர்களைப் பரிகாசம்தான் செய்து கொண்டிருக்கிறோம்” எனச் சொல்கின்றனர்.
2:14. இன்னும், அவர்கள் விசுவாசங்கொண்டோரை சந்தித்தால், “நாங்களும் (உங்களைப் போல்) விசுவாசங்கொண்டிருகிறோம்” எனக்கூறுகிறார்கள்; மேலும், அவர்கள் தங்களின் (இனத்தவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டால், “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்கள் விசுவாசிகளைப்) பரிகாசம் செய்யகூடியவர்கள்தாம்” எனக் கூறுகின்றனர்.
2:15 اَللّٰهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏
2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
2:15. (அவ்வாறன்று!) அல்லாஹ்தான் அவர்களை பரிகசிக்கின்றான். மேலும், அவர்களுடைய அட்டூழியத்தில் (இவ்விதம் தட்டழிந்து) கெட்டலையும்படி விட்டு வைத்துள்ளான்.
2:15. அல்லாஹ் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறான். (அவன்) அவர்களுக்கு அவகாசம் அளித்துக் கொண்டு இருக்கின்றான்; (அவர்களோ) தமது வரம்பு மீறிய நடத்தையில் கண்மூடித்தனமாக உழன்று கொண்டேயிருக்கிறார்கள்.
2:15. அல்லாஹ் அவர்களை பரிகசிக்கிறான். மேலும் அவர்களுடைய வழிகேட்டில் கபோதிகளாக அவர்களை(த்தட்டழியும்படி) விட்டு வைத்திருக்கிறான்.
2:16 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰى فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏
2:16. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
2:16. இவர்கள்தான் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
2:16. இத்தகையோரே நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டைக் கொள்முதல் செய்தோர்! ஆனால் இவர்களின் இவ்வாணிபம் இலாபம் தரக்கூடியதாக இல்லை. இன்னும் (அறவே) நேர்வழி பெற்றவர்களாகவும் இவர்கள் இருக்கவில்லை.
2:16. இத்தகையோர்தான் நேர்வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள்; ஆகவே இவர்களுடைய (இந்த) வியாபாரம், இலாபமளிக்கவில்லை. மேலும், இவர்கள் நேர்வழி பெறுபவர்களாகவும் இலர்.
2:17 مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِى اسْتَوْقَدَ نَارًا ‌ۚ فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِىْ ظُلُمٰتٍ لَّا يُبْصِرُوْنَ‏
2:17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
2:17. இவர்களுடைய உதாரணம் ஓர் உதாரணத்தை ஒத்திருக் கின்றது. (அதாவது: அபாயகரமான காட்டில், காரிருளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழியை அறிவிப்பதற்காக) ஒருவர் தீயை மூட்டி (அதனால்) அவரைச் சூழ ஒளி ஏற்பட்ட சமயத்தில் (அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக) அல்லாஹ் அவர்களுடைய (பார்வை) ஒளியைப் போக்கி பார்க்க முடியாத காரிருளில் விட்டுவிட்டான்.
2:17. இத்தகையோரின் உவமானம் (பின்வரும்) உதாரணத்தைப்போல் இருக்கிறது: ஒருவர் தீயை மூட்டினார்; அது அவரைச் சுற்றிலும் ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியைப் பறித்து விட்டான். மேலும் எதையுமே அவர்கள் காணமுடியாத நிலையில் அவர்களை இருள்களில் விட்டு விட்டான்.
2:17. இவர்களுக்கு உதாரணம்: (இருள் நீக்க) நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றாகும். அந்நெருப்பு அவரைச்சூழ ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியை (அணைத்து)ப் போக்கிவிட்டான்; மேலும் அவர்கள் பார்க்கவும் முடியாத காரிருள்களில் அவர்களை விட்டுவிட்டான்.
2:18 صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ ۙ‏
2:18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
2:18. (அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றார்கள். ஆதலால், இவர்கள் (அபாயகரமான இந்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள்.
2:18. அவர்கள் செவிடர்களாய், ஊமையர்களாய், குருடர்களாய் இருக்கின்றனர். எனவே, இப்பொழுது அவர்கள் மீள மாட்டார்கள்;
2:18. (இவர்கள்) செவிடர்கள் (உண்மையை கேட்கவே மாட்டார்கள்); ஊமையர்கள் (உண்மையைப் பேசவே மாட்டார்கள்); குருடர்கள் (அவர்களுக்கு பலன் தரக் கூடியதைப் பார்க்கவே மாட்டார்கள்); ஆகவே, இவர்கள் (சத்தியத்தின்பால்) மீள மாட்டார்கள்.
2:19 اَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَآءِ فِيْهِ ظُلُمٰتٌ وَّرَعْدٌ وَّبَرْقٌ‌ ۚ يَجْعَلُوْنَ اَصَابِعَهُمْ فِىْۤ اٰذَانِهِمْ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ‌ؕ وَاللّٰهُ مُحِيْطٌ‌ۢ بِالْكٰفِرِيْنَ‏
2:19. அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
2:19. அல்லது (இவர்களுடைய உதாரணம்:) அடர்ந்த இருளும், இடியும், மின்னலும் கொண்ட மேகம் பொழியும் மழையில் அகப்பட்டுக் கொண்ட(வர்களின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. இவ்வாறு அகப்பட்டுக் கொண்ட இ)வர்கள் இடி முழக்கங்களால் மரணத்திற்குப் பயந்து தங்களுடைய விரல்களைத் தங்களுடைய காதுகளில் நுழைத்து (அடைத்து)க் கொள்கின்றனர். அல்லாஹ் நிராகரிக்கும் இவர்களை (எப்பொழுதும்) சூழ்ந்துகொண்டு இருக்கின்றான்.
2:19. அல்லது இவர்களுடைய உவமானம், இவ்வாறு இருக்கிறது: வானத்திலிருந்து கடும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது; அத்துடன் காரிருளும் இடியும் மின்னலும் உள்ளன. (அதில் மாட்டிக் கொண்டவர்கள்) இடி முழக்கங்களைக் கேட்டு மரணத்திற்கு அஞ்சி தம் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொள்கின்றார்கள். மேலும் (சத்தியத்தை) நிராகரிக்கும் இத்தகையோரை அல்லாஹ் எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.
2:19. அல்லது, (இவர்களுக்கு) இன்னும் ஓர் உதாரணம்:) வானத்திலிருந்து பொழியும் மழையைப்போன்றாகும்; அதில் காரிருள்களும், இடியும் மின்னலும் (கலந்து) உள்ளது; (இவ்வகை மழையில் அகப்பட்டுக் கொண்டோர்) இடிமுழக்கங்களால் மரணத்திற்குப் பயந்து தங்களுடைய விரல்களைத் தம் காதுகளில் ஆக்கிகொள்கிறார்கள்; அல்லாஹ்வோ நிராகரிப்பவர்களைச் சூழ்ந்து கொள்கிறவன்.
2:20 يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ اَبْصَارَهُمْ‌ؕ كُلَّمَاۤ اَضَآءَ لَهُمْ مَّشَوْا فِيْهِۙ وَاِذَاۤ اَظْلَمَ عَلَيْهِمْ قَامُوْا‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
2:20. அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அத(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.
2:20. (தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த வெளிச்சத்)தில் நடக்(க விரும்பு)கிறார்கள். (ஆனால், அம்மின்னல் மறைந்து) அவர்களை இருள் சூழ்ந்து கொண்டால் (வழி தெரியாது திகைத்து) நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப் புலனையும் பார்வைகளையும் போக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன்.
2:20. அவர்களுடைய பார்வைகளைப் பறிப்பது போல் (பயங்கரமாக) மின்னல் வெட்டுகிறது. அவர்களுக்கு அது (கொஞ்சம்) ஒளிதரும் போதெல்லாம் அதில் (சிறிது தூரம்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். மேலும், இருள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்போது நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலன்களையும், பார்வைப் புலன்களையும் முழுமையாகப் பறித்திருப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவனாய் இருக்கின்றான்.
2:20. அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறிக்க நெருங்குகின்றது; அது அவர்களுக்கு ஒளி தரும்போதெல்லாம், அதில் நடக்கிறார்கள். மேலும் அது அவர்களுக்கு இருளாகிவிட்டால் நின்றுவிடுகிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களுடைய செவிப் புலனையும், அவர்களுடைய பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றல் உடையவன்.
2:21 يٰۤاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۙ‏
2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்.
2:21. மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால் மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
2:21. மனிதர்களே! உங்களுடைய இரட்சகனை நீங்கள் வணங்குங்கள்; அவன் எத்தகையவனென்றால் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோர்களையும் படைத்தான்; (அதனால்) நீங்கள் பயபக்தியுடையோராகலாம்.
2:22 الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ ‏
2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
2:22. அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதனைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவைகளையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்.
2:22. அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான். எனவே, (இவற்றை எல்லாம்) நீங்கள் அறிந்திருந்தும் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
2:22. அவனே, உங்களுக்கு பூமியை விரிப்பாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, வானத்திலிருந்து (அவனே) மழையைப் பொழிவித்து, அதனைக்கொண்டு கனி வகைகளிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான். (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் (தெளிவாக) அறிந்துகொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள்.
2:23 وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
2:23. நாம் (நமது தூதர் முஹம்மது என்னும்) நமது அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர் களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஒரு அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்
2:23. நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்)!
2:23. மேலும், நாம் நமது அடியார் மீது இறக்கிவைத்த (இவ்வேதத்)தில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தையாவது நீங்கள் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு உதவி செய்பவர்களையெல்லாம் அழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் இதுபோன்று ஓர் அத்தியாயத்தைக் கொண்டுவாருங்கள்.
2:24 فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوْا النَّارَ الَّتِىْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ  ۖۚ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‏
2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
2:24. நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாதுபோனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்துகொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது.
2:24. நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால், நிச்சயமாக உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது; மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்டதும், (சத்தியத்தை) நிராகரிப்பவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டதுமான நரக நெருப்புக்கு அஞ்சுங்கள்!
2:24. நீங்கள் (அவ்வாறு) செய்யவில்லையாயின்_நீங்கள் ஒருபோதும் (அவ்வாறு) செய்யவேமாட்டீர்கள்; ஆகவே மனிதர்களும், கல்லும் தனக்கு எரிபொருளாக்கப்படுகின்ற (நரக) நெருப்பைப் பயந்து கொள்ளுங்கள். (இந்த நெருப்பு) நிரகாரித்துக் கொண்டிருப்போருக்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
2:25 وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ؕ ڪُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ‌ۙ قَالُوْا هٰذَا الَّذِىْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ‌ؕ وَلَهُمْ فِيْهَآ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ‌ۙ وَّهُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
2:25. (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
2:25. (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு (சுவனபதியில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீங்கள் நற்செய்தி கூறுங்கள். அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றிலிருந்து (அவர்களுக்கு) ஒரு கனி புசிக்கக் கொடுக்கப்படும்போதெல்லாம் முன்னர் நமக்குக் கொடுக்கப்பட்டதும் இதுதானே! என (ஆச்சரியப்பட்டு)க் கூறுவார்கள். (ஏனென்றால்) பார்வைக்கு ஒரே விதமாகத் தோன்றக் கூடியவைகளையே கொடுக்கப் பெறுவார்கள். (எனினும் அவை சுவையில் விதவிதமாக இருக்கும்) பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு கிடைப்பார்கள். அன்றி அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்.
2:25. மேலும், (நபியே! இவ்வேதத்தில்) நம்பிக்கை கொண்டு (அதன் அறிவுரைகளுக்கேற்ப) நற்செயல்கள் புரிவோர்க்கு, கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்கள் நிச்சயமாக உண்டு எனும் நற்செய்தியைக் கூறுவீராக! அந்தச் சுவனங்களில் ஏதேனும் ஒரு கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் அக்கனிகள் பூமியிலுள்ள கனிகளைப் போல் தோற்றத்தில் ஒத்திருப்பதால், “இத்தகைய கனிதான் முன்பு (உலகில்) நமக்கு உணவாக வழங்கப்பட்டது” என அவர்கள் கூறுவார்கள். இன்னும் அங்கு அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உண்டு. மேலும், அங்கு அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்.
2:25. (நபியே!) இன்னும் விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோர்_அவர்களுக்கு நிச்சயமாக சுவனங்கள் உண்டு; அவைகளுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் என நன்மாராயங் கூறுவீராக. அவற்றிலிருந்து அவர்களுக்கு ஒரு கனி உணவாகக் கொடுக்கப்படும்போதெல்லாம், “முன்னர் இதைத்தான் நாங்கள் கொடுக்கபட்டோம்” எனக் கூறுவார்கள். அது (பார்வைக்கு) ஒரே விதமாகத் தோன்றக் கூடியாதாகயிருக்க அவர்கள் கொடுக்கப்பட்டார்கள். (ஆனால் அவை ருசியில் மாறுபட்டவையாக இருக்கும்). மேலும், அவற்றில் பரிசுத்தமான மனைவியரும் அவர்களுக்குண்டு. இன்னும் அவர்கள் அவற்றில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.
2:26 اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا ‌بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ‌ؕ فَاَمَّا ‌الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ۚ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ‌ؕ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ ‏
2:26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
2:26. கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான். ஆதலால் எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான்.
2:26. நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக் கூறுவார்கள். (இவ்வாறாக) ஒரே விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் பலரை வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்; மேலும் அதனைக் கொண்டு பலருக்கு நேர்வழியும் காட்டுகின்றான். ஆனால் கீழ்ப்படியாதவர்களைத் தவிர வேறு எவரையும் இதனைக் கொண்டு அவன் வழிகேட்டில் ஆழ்த்துவதில்லை.
2:26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவை, அதைவிட (அற்பத்தில்) மேற்பட்டதை உதாரணமாகக் கூறுவதற்கு வெட்கமடையமாட்டான்; ஆகவே, விசுவாசங்கொண்டிருக்கிறார்களே அத்தகையோர் நிச்சயமாக அது தங்கள் இரட்சகனிடமிருந்து வந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள். எனவே, நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்_ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு, அல்லாஹ் என்னதான் நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். இதைக்கொண்டு அவன் அநேகரை, நேர் வழி பெறச்செய்கிறான்; இன்னும், தீயவர்களைத் தவிர (மற்றெவரையும்) இதைக் கொண்டு அவன் வழிதவறச் செய்யமாட்டான்.
2:27 الَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
2:27. இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
2:27. அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தைச் சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அதைப் பிரித்தும் விடுகின்றனர். பூமியில் விஷமம் செய்துகொண்டும் இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.
2:27. அவர்கள் எத்தகையவர்கள் எனில், அல்லாஹ்வுடன் உறுதியான உடன்பாடு செய்துகொண்ட பின்னர் அதை முறித்து விடுவார்கள். மேலும், எந்த உறவு முறைகள் இணைத்து வைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவற்றைத் துண்டிப்பார்கள். மேலும், பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிவார்கள். (உண்மையில்) இத்தகையோரே இழப்புக்குரியவர்களாவர்.
2:27. அ(த்தீய)வர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் (அதை)முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ அதை துண்டித்தும் விடுகின்றனர்;மேலும் (அதைத்துண்டிப்பதன் மூலம்) பூமியில் குழப்பம் செய்து கொண்டுமிருக்கின்றனர்; இவர்களே தாம் நஷ்டமடைந்தோராவர்.
2:28 كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ‌ۚ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
2:28. (மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான். பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படுவீர்கள்.
2:28. அல்லாஹ்வை நிராகரிக்கும் போக்கினை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? (உண்மை யாதெனில்) நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) அவனே உங்களுக்கு உயிர் கொடுப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
2:28. (மனிதர்களே!) அல்லாஹ்வை எவ்வாறு நீங்கள் நிராகரிக்கிறீர்கள்? நீங்களோ உயிரற்றவர்களாக இருந்தீர்கள்; பின்னர் உங்களை அவன் உயிர்ப்பித்தான்; (அதன்) பின்னும் நீங்கள் (உங்கள் வினையின் பலனை அடைவதற்காக) மீட்கப்படுவீர்கள்.
2:29 هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ؕ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
2:29. அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். மேலும், அவன் வானத்தைப் படைக்கக் கருதி அதனை ஏழாகவும் அமைத்தான். அன்றி (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.
2:29. அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
2:29. அவன் எத்தகையவனென்றால், பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காக அவன் படைத்தான்; பின்னர் அவன் வானத்தை படைக்க கருதியபோது அவைகளை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகின்றவன்.
2:30 وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً ؕ قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَۚ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ‌ؕ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ‏
2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
2:30. (நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்" எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் "(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத்தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். அதற்கவன் "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்" எனக் கூறிவிட்டான்.
2:30. அந்த நேரத்தை நினைவுகூரும். உம் இறைவன், மலக்கு (வானவர்)களை நோக்கி, “நான் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) பூமியில் ஏற்படுத்தப் போகின்றேன்” என்று கூறினான். (அப்போது) அவர்கள், “பூமியில், அதன் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்து, மேலும் இரத்தஞ் சிந்தக் கூடியவரையா அதில் (பிரதிநிதியாக) நீ ஏற்படுத்தப் போகின்றாய்? நாங்கள்தாம் உன்னைப் புகழ்ந்து துதிபாடி, உன் தூய்மையைப் போற்றிக் கொண்டு இருக்கின்றோமே!” என வினவினார்கள். அதற்கு இறைவன் கூறினான்: “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்.”
2:30. (நபியே!) இன்னும், உமதிரட்சகன் மலக்குகளிடம், “நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஆக்கப் போகிறேன்”, எனக்கூறிய சமயத்தில் அ(தற்க)வர்கள்,” (இரட்சகா!) அதில் விஷமம் செய்து இரத்தம் சிந்தக் கூடியவரையா நீ அதில் ஆக்கப்போகிறாய்? நாங்களோ உன்னுடைய புகழைக்கொண்டு உன்னைத் துதிக்கிறோம்; உன்னுடைய பரிசுத்தத் தன்மையைப் போற்றுகிறோம்” என்று கூறினர்; (அதற்கு)” நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் நன்கறிந்திருக்கிறேன்” என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான் (என்பதை நினைவு கூர்வீராக!)
2:31 وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْۢبِـــٴُـوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
2:31. பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவைகளை அந்த மலக்குகளுக்கு முன்பாக்கி "(மலக்குகளே! ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மை யானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான்.
2:31. பின்னர் அல்லாஹ் எல்லாப் பொருள்களின் பெயர்களையும் ஆதத்துக்குக் கற்றுக் கொடுத்தான். பிறகு அவற்றை வானவர்களின் முன் வைத்து “(ஒரு பிரதிநிதியை நியமித்தால் பூமியில் ஒழுங்கமைப்பு சீர்குலையும் எனும்) உங்கள் கருத்து சரியானால், இவற்றின் பெயர்களைச் சற்று சொல்லுங்கள்” எனக் கூறினான்.
2:31. (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு (பொருட்களின்) பெயர்களை_அவை அனைத்தையும் கற்று கொடுத்து, பின்னர் அவற்றை (அந்த) வானவர்களின் மீது எடுத்துக்காட்டினான்; அப்பால்” (வானவர்களே! உங்களது கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், இவற்றின் பெயர்களை நீங்கள் எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கூறினான்.
2:32 قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
2:32. (அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) "நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்" எனக் கூறினார்கள்.
2:32. “குறை ஏதுமில்லாத தூயவன் நீயே! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. உண்மையில் நீ மட்டுமே பேரறிவும் மிக்க ஞானமும் உடையவன்!” என்று அவர்கள் கூறினார்கள்.
2:32. அவர்கள் “நீ மிகத் தூய்மையானவன்; நீ எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை; நிச்சயமாக நீயே நன்கறிந்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்” எனக் கூறினார்கள்.
2:33 قَالَ يٰٓـاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآٮِٕهِمْ‌ۚ فَلَمَّآ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآٮِٕهِمْۙ قَالَ اَلَمْ اَقُل لَّـكُمْ اِنِّىْٓ اَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ‏
2:33. “ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
2:33. (பின்னர் இறைவன்) "ஆதமே! நீங்கள் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்தபொழுது அவன் (மலக்குகளை நோக்கி) "பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவைகளை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே, நீங்கள் (ஆதமை பற்றி) வெளியிட்டதையும், மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்" என்றான்.
2:33. (பின்னர்) இறைவன் கூறினான்: “ஆதமே! இவற்றின் பெயர்களை நீர் அவர்களுக்கு அறிவியும்!” அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்ததும், “வானங்களிலும், பூமியிலும் (உங்களுக்கு) மறைந்திருக்கக்கூடிய (உண்மைகள்) அனைத்தையும் நிச்சயமாக நான் நன்கறிவேன். மேலும் நீங்கள் வெளிப்படுத்தக்கூடியவற்றையும், மறைத்துக் கொண்டிருப்பவற்றையும் நான் நன்கறிவேன் என்று உங்களிடம் நான் கூறவில்லையா?” எனக் கேட்டான்.
2:33. “ஆதமே! நீர் அவற்றின் பெயர்களை அவர்களுக்குத் தெரிவிப்பீராக” எனக் கூறினான்; அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களைத் தெரிவித்தபோது, அவன் “வானங்கள், மற்றும் பூமியில் மறைந்திருப்பதை நிச்சயமாக நான் நன்கறிவேன்” நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்தீர்களே அதையும் நான் நன்கறிவேன்’ என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
2:34 وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰى وَاسْتَكْبَرَ  وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏
2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
2:34. பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) "ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்.
2:34. பின்னர், “நீங்கள் ஆதத்துக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கட்டளையிட்டபோது அவர்கள் எல்லாரும் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர! அவன் கட்டளையை மறுத்தான். மேலும் ஆணவம் கொண்டுவிட்டான்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான்.
2:34. மேலும், நாம் மலக்குகளிடம், “ஆதமுக்கு நீங்கள் (பணிந்து) ஸுஜூது செய்யுங்கள் எனக்கூறிய போது இப்லீஸைத்தவிர அவர்கள் (அனைவரும்) ஸுஜுது செய்தார்கள், அவன் விலகிக் கொண்டான், ஆணவமும் கொண்டான்; இன்னும் நிராகரிப்பவர்களில் அவன் ஆகிவிட்டான் (என்பதை நபியே! நீர் நினைவு கூர்வீராக!)
2:35 وَقُلْنَا يٰٓـاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ‏
2:35. மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
2:35. பின்னர் நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) "ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர் களாவீர்கள்" என்று கூறினோம்.
2:35. பிறகு “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கே நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் இந்த மரத்தின் அருகே நீங்கள் நெருங்காதீர்கள்; நெருங்கினால் அக்கிரமம் செய்தவர்களாவீர்கள்!” என்று கட்டளையிட்டோம்.
2:35. மேலும், நாம் “ஆதமே நீரும், உம்முடைய மனைவியும் இச்சுவனத்தில் குடியிருங்கள்; இன்னும், நீங்கள் இருவரும் நாடியவாறு தாராளமாக இதிலிருந்து நீங்களிருவரும் புசியுங்கள்; (ஆனால்) இம்மரத்தை நீங்களிருவரும் நெருங்கவேண்டாம்; (அவ்வாறாயின்) நீங்களிருவரும் அநியாயக்கார்களில் ஆகிவிடுவீர்கள்” என்று கூறினோம்.
2:36 فَاَزَلَّهُمَا الشَّيْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيْهِ‌ وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏
2:36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.
2:36. எனினும் (இப்லீஸாகிய) ஷைத்தான் அவ்விருவரையும் (தடுக்கப்பட்டிருந்த மரத்தை அணுகித்) தவறிழைக்கும்படிச் செய்து அச்சோலையை விட்டும், அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்து விட்டான். ஆகவே (அவர்களை நோக்கி) "உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (இச்சோலையிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம்" என நாம் கூறினோம்.
2:36. ஷைத்தான் அவ்விருவருக்கும் அம்மரத்தின் மீது ஆசை காட்டி, அவர்களை நம் கட்டளையிலிருந்து பிறழச் செய்து விட்டான். மேலும் அவ்விருவரும் எந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்களோ அந்த நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றி விட்டான். மேலும் நாம் கட்டளையிட்டோம்: “நீங்கள் எல்லாரும் (இங்கிருந்து) இறங்கி விடுங்கள்; நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாவீர்கள். இன்னும், உங்களுக்காகக் குறிப்பிட்ட ஒரு காலம் வரை பூமியில் தங்குமிடமும் இருக்கிறது; வாழ்க்கை வசதிகளும் இருக்கின்றன.”
2:36. ஆகவே, ஷைத்தான், அவ்விருவரையும் அதைவிட்டும் சறுகச் செய்தான்; பின்னர், அவ்விருவரும் எதிலிருந்தார்களோ அதை விட்டும் அவ்விருவரையும் வெளியேற்றிவிட்டான்; மேலும் உங்களில் சிலர் சிலருக்கு பகைவர்களாக இருக்க “நீங்கள் இங்கிருந்து இறங்கிவிடுங்கள்; இன்னும் பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும், ஒரு குறிப்பிட்ட காலம் (மரணம் வரும்) வரை சுகம் அனுபவிப்பதும் உண்டு” என்று நாம் கூறினோம்.
2:37 فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ‌ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
2:37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
2:37. பின்னர் ஆதம் சில வாக்கியங்களைத் தன் இறைவனிட மிருந்து கற்றுக் கொண்டார். (அவ்வாக்கியங்களைக் கொண்டு அவர் பிரார்த்தனை செய்த வண்ணமாகவே இருந்தார்.) அதனால் அவரை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும் அளவற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.
2:37. அப்போது, ஆதம் தம் இறைவனிடமிருந்து கற்ற சில சொற்களைக் கொண்டு அவனிடம் பாவமன்னிப்புக் கோரினார். அதனை அவருடைய இறைவன் ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.
2:37. (பின்னர்) ஆதம், சில வாக்கியங்களைத் தன் இரட்சகனிடமிருந்து பெற்றுக் கொண்டார்; (அவற்றைக்கொண்டு அவனிடம் மன்னிப்புக்கோரினார்.) அதனால் (அல்லாஹ்) அவரின் பாவமீட்சியை அங்கீகரித்தான்; நிச்சயமாக அவன் தவ்பாக்களை அதிகம் ஏற்பவன்; மிகக்கிருபையுடையவன்.
2:38 قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا ‌‌ۚ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
2:38. (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
2:38. (பின்னர்) நாம் கூறினோம்: "நீங்கள் அனைவரும் இதில் இருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என்னுடைய தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:38. நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
2:38. நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்; பின்னர், என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி நிச்சயமாக வரும்போது எவர் என்னுடைய (அந்)நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ, அவர்களுக்கு (மறுமையின் காரியங்களில்) யாதொரு பயமுமில்லை;(மேலும் இவ்வுலகில் எதைவிட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.”
2:39 وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِـاٰيٰتِنَآ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
2:39. அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.
2:39. (அன்றி) எவர்கள் (என்னுடைய நேர்வழியை) நிராகரித்து என்னுடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே! அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்."
2:39. அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்து, எம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்; அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்!”
2:39. இன்னும், நிராகரித்துவிட்டு, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டுமிருகிறார்களே அத்தகையோர்_அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.
2:40 يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَوْفُوْا بِعَهْدِىْٓ اُوْفِ بِعَهْدِكُمْۚ وَاِيَّاىَ فَارْهَبُوْنِ‏
2:40. இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.
2:40. இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அளித்திருந்த என்னுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் எனக்களித்த வாக்கை நிறைவேற்றுங்கள். நானும் உங்களுக்களித்த வாக்கை நிறைவேற்றுவேன். என்னையே (பயந்து) அஞ்சுங்கள்.
2:40. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடைகளை நீங்கள் நினைவுகூருங்கள்; மேலும், எனக்கு நீங்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்! (அவ்விதமாயின்) உங்களுக்குத் தந்த வாக்குறுதியை நானும் நிறைவேற்றுவேன். மேலும், எனக்கு மட்டுமே நீங்கள் அஞ்சுங்கள்!
2:40. இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்திருந்த என்னுடைய அருட்கொடையை நீங்கள் நினைவு கூறுங்கள். என் வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றுங்கள்; (அப்பொழுது) உங்களுடைய வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன்; மேலும் என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.
2:41 وَاٰمِنُوْا بِمَآ اَنْزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُوْنُوْآ اَوَّلَ كَافِرٍۢ بِهٖ‌ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِىْ ثَمَنًا قَلِيْلًا وَّاِيَّاىَ فَاتَّقُوْنِ‏
2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.
2:41. நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்புங்கள். இது உங்களிடமுள்ள ("தவ்றாத்" என்னும் வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இதை நிராகரிப்பவர்களில் நீங்களே முதன்மையானவர்களாகிவிட வேண்டாம். (இவ்வேதத்தைப் பற்றி உங்களிடமுள்ள "தவ்றாத்"தில் கூறியிருக்கும்) என்னுடைய வசனங்களை (மாற்றிச்) சொற்ப விலைக்கு விற்றுவிட வேண்டாம். நீங்கள் (மற்ற எவருக்கும் பயப்படாது) எனக்கே பயப்படுங்கள்.
2:41. மேலும் நான் இறக்கியுள்ள இந்த வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இது (முன்பு) உங்களிடமிருந்த வேதத்தை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. ஆகையால் நீங்களே அனைவருக்கும் முதலில் (இதனை) நிராகரிப்பவர்களாகி விடாதீர்கள். என்னுடைய திருவசனங்களைச் சொற்ப விலைக்கு விற்காதீர்கள். மேலும் எனக்கே அஞ்சுங்கள்!
2:41. மேலும், உங்களிடமுள்ள (தவ்றாத் என்னும் வேதத்)தை உண்மைப்படுத்தும் நிலையில் நான் இறக்கிவைத்த (இவ்வேதத்)தை நீங்கள் விசுவாசியுங்கள்; இன்னும் இதை நிராகரிப்போரில் முதன்மையானோராக நீங்கள் ஆகிவிடவேண்டாம். என்னுடைய வசனங்களைச் சொற்ப விலைக்கு(ப்பகரமாக) விற்றுவிடவும் வேண்டாம்; இன்னும் என்னையே நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.
2:42 وَلَا تَلْبِسُوا الْحَـقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَـقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ‏
2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
2:42. நீங்கள் உண்மையை அறிந்துகொண்டே அதனை மறைத்துப் பொய்யை உண்மையென புரட்டிவிட வேண்டாம்.
2:42. அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பி விடாதீர்கள். அறிந்துகொண்டே சத்தியத்தை நீங்கள் மூடி மறைக்காதீர்கள்.
2:42. நீங்கள் உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை நீங்கள் நன்கறிந்துக் கொண்டே அதை மறைக்கவும் செய்யாதீர்கள்.
2:43 وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِيْنَ‏
2:43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.
2:43. நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள். (தொழுகையில் ஒன்றுசேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து) ருகூஉ செய்யுங்கள்.
2:43. தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; இன்னும் என் முன்னிலையில் தலைசாய்ப்பவர்களுடன் சேர்ந்து நீங்களும் தலை சாயுங்கள்.
2:43. மேலும், நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள்; ஜகாத்தையும் நீங்கள் கொடுங்கள்; (ருக்வு) செய்து குனிபவர்களுடன் நீங்களும் (ருக்வு செய்து) குனியுங்கள்.
2:44 اَتَاْمُرُوْنَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَاَنْتُمْ تَتْلُوْنَ الْكِتٰبَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
2:44. நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
2:44. நீங்கள் (தவ்றாத்) வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
2:44. பிற மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவிவிட்டு, உங்களை நீங்கள் மறந்து விடுகின்றீர்களா? நீங்களோ வேதத்தை ஓதிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் சிறிதளவும் (இதைப் பற்றி) சிந்திப்பதில்லையா?
2:44. நீங்கள் வேதத்தை ஒதிக்கொண்டு உங்களை மறந்து விட்டு, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு நீங்கள் ஏவுகின்றீர்களா? இதனை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?
2:45 وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ‌ؕ وَاِنَّهَا لَكَبِيْرَةٌ اِلَّا عَلَى الْخٰشِعِيْنَۙ‏
2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:45. (எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்.
2:45. பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள். திண்ணமாக, தொழுகை ஒரு பாரமான செயல்தான்; ஆனால் இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற அடியார்களுக்கு அது பாரமான செயலே அல்ல!
2:45. நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இரட்சகனிடத்தில்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அது உள்ளச்சம் கொண்டவர்களுக்கன்றி, ஏனையோருக்கு மிகப் பாரமானதாக இருக்கும்.
2:46 الَّذِيْنَ يَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَاَنَّهُمْ اِلَيْهِ رٰجِعُوْنَ‏
2:46. (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.
2:46. (உள்ளச்சமுடைய) அவர்களோ தங்கள் இறைவனை நிச்சயமாக சந்திப்போமென்றும், அவனிடமே நிச்சயமாக செல்வோமென்றும் உறுதியாக நம்புவார்கள்.
2:46. அவர்கள் எத்தகையோர் எனில் இறுதியில் தங்கள் இறைவனைச் சந்திப்பவர்களாய் இருக்கின்றோம் என்றும், அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.
2:46. (உள்ளச்சம் கொண்ட) அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் இரட்சகனை நிச்சயமாக தாங்கள் சந்திக்கக் கூடியவர்கள், என்றும் தாங்கள் அவன்பாலே திரும்பிச் செல்லக்கூடியவர்களென்றும் உறுதியாக நம்புகின்றனர்.
2:47 يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ‏
2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
2:47. இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும்விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள்.
2:47. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும் உங்களை நான் உலகத்தோர் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவுகூருங்கள்.
2:47. இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும், அகிலத்தாரைவிட உங்களை நிச்சயமாக நான் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவு கூறுங்கள்.
2:48 وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْــٴًـــا وَّلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏
2:48. இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
2:48. நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் யாதொன்றையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்க மாட்டாது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அன்றி, அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
2:48. மேலும் ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்நாளில்) எவரும் மற்றவர்க்கு எதையும் கொடுத்து உதவ முடியாது. எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது. எவரிடமிருந்தும் மீட்புப் பணம் பெறப்பட்டு, எவரும் விடுதலை செய்யப்படவும் மாட்டார்கள். (குற்றவாளிகளான) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது.
2:48. மேலும், நீங்கள் ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள், (அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவுக்கு எவ்விதப் பயனுமளிக்காது; அதனிடமிருந்து பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதனிடமிருந்து யாதொரு ஈட்டையும் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது; அவர்கள் (மற்றவர்களால்) உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
2:49 وَاِذْ نَجَّيْنٰکُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ يُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَآءَكُمْ‌ؕ وَفِىْ ذٰلِكُمْ بَلَاۤءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ‏
2:49. உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்); அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.
2:49. அன்றி உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.
2:49. ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரி(ன் அடிமைத் தளையி)லிருந்து நாம் உங்களுக்கு விடுதலை அளித்த சந்தர்ப்பத்தையும் நினைவு கூருங்கள்! அவர்கள் கொடிய வேதனையில் உங்களை ஆழ்த்தி வைத்திருந்தார்கள். உங்களுடைய ஆண் மக்களைக் கொன்றொழித்துக் கொண்டும், உங்களுடைய பெண் மக்களை உயிருடன் விட்டு வைத்துக் கொண்டும் இருந்தார்கள். இதன் மூலம் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மாபெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.
2:49. இன்னும், ஃபிர் அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நான் உங்களை காப்பற்றிய சமயத்தை_ (நினைவு கூறுங்கள்); அவர்கள், தீய வேதனையை உங்களுக்குச் சுவைக்கச் செய்து கொண்டிருந்தார்கள்; அதாவது அவர்கள் உங்கள் ஆண்மக்களை அறுத்துக் கொன்று விட்டு உங்கள் பெண்(மக்)களை உயிருடன் வாழ விட்டு வந்தார்கள; அதில் உங்களுக்கு உங்கள் இரட்சகனுடைய மகத்தான சோதனையும் இருந்தது.
2:50 وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَيْنٰکُمْ وَاَغْرَقْنَآ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏
2:50. மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).
2:50. மேலும் உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே மூழ்கடித்தோம்.
2:50. மேலும், நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்(து வழி ஏற்படுத்தித்தந்)து, பின்னர் உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை நாம் மூழ்கடித்ததையும் எண்ணிப் பாருங்கள்!
2:50. மேலும், நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்து, பின்னர் நாம் உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே ஃபிர் அவ்னுடைய கூட்டத்தாரை மூழ்கடித்தோம் என்பதையும் (நினைவு கூறுங்கள்)
2:51 وَاِذْ وٰعَدْنَا مُوْسٰٓى اَرْبَعِيْنَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْـتُمْ ظٰلِمُوْنَ‏
2:51. மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
2:51. அன்றி (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் (அவர் திரும்பி வருவதற்குள்ளாகவே) நீங்கள் வரம்பு மீறி ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள்.
2:51. மேலும், இதையும் நினைவுகூருங்கள்: நாம் மூஸாவுக்கு நாற்பது இரவுபகல்களை வாக்களித்திருந்தோம்; ஆனால், அவர் சென்ற பிறகு நீங்கள் காளைக்கன்றை கடவுளாக ஆக்கிக் கொண்டீர்கள்! அப்போது நீங்கள் பெரும் அக்கிரமம் புரிந்தவர்களாக இருந்தீர்கள்.
2:51. இன்னும் மூஸாவிற்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம்; பின்னர் (அவர் திரும்பும் முன்) நீங்கள் அநியாயக்காரர்களாக இருந்துகொண்டு ஒரு காளைக் கன்றை (வணக்கதிற்குரியதாக) நீங்கள் அவருக்குப்பின் எடுத்துக் கொண்டீர்கள் என்பதையும் (நினைவு கூறுங்கள்.) நீங்களோ அநியாயக்காரர்கள்.
2:52 ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
2:52. இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
2:52. நீங்கள் நன்றி செலுத்துவீர்களென்று இதற்குப் பின்னும் நாம் உங்களை மன்னித்தோம்.
2:52. அதன் பின்னரும் நீங்கள் நன்றியுடையோராய் இருக்கக்கூடும் என்பதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
2:52. பின்னர், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அதற்குப் பின்னரும் நாம் உங்களை மன்னித்தோம்.
2:53 وَاِذْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏
2:53. இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
2:53. நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு (தவ்றாத் என்னும்) வேதத்தையும், பிரித்து அறிவிக்கக்கூடிய (சட்ட திட்டத்)தையும் நாம் கொடுத்தோம்.
2:53. (நீங்கள் இவ்வாறு அக்கிரமம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில்) நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும், ‘ஃபுர்கானை’*யும் அருளியதை நினைவுகூருங்கள்.
2:53. மேலும் நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு ஒரு வேதத்தையும், (நன்மை தீமைகளை) பிரித்து அறிவிக்கக் கூடிய சட்டத்தையும் நாம் கொடுத்தோம் என்பதையும் (நினைவு கூறுங்கள்).
2:54 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَکُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْآ اِلٰى بَارِٮِٕكُمْ فَاقْتُلُوْٓا اَنْفُسَكُمْؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ عِنْدَ بَارِٮِٕكُمْؕ فَتَابَ عَلَيْكُمْ‌ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
2:54. மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
2:54. பின்னும் (நினைத்துப் பாருங்கள்:) மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதனால் (பகுத்தறிவுடைய) நீங்கள் (கேவலம் ஒரு மிருகத்தை வணங்கி) உண்மையாகவே உங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டீர்கள். நீங்கள் மனம் வருந்தி உங்களை படைத்தவனிடம் மீண்டு உங்(களிலுள்ள வரம்பு மீறியவர்)களை நீங்களே கொன்று விடுங்கள். இதுதான் உங்களை படைத்தவனிடம் உங்களுக்கு நன்மை தரும்" என்று கூறினார். ஆகவே (அவ்வாறே நீங்களும் செய்ததனால்) உங்களை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான்.
2:54. மேலும், இதையும் நினைவுகூருங்கள்: மூஸா, (இந்த அருட்கொடைகளைப் பெற்றுத் திரும்பி வந்து) தம் சமுதாயத்தார்களை நோக்கி, “என்னுடைய சமுதாயத்தாரே! காளைக்கன்றை நீங்கள் தெய்வமாக்கிக் கொண்டதனால் திண்ணமாக உங்களுக்கு நீங்களே (பெரும்) அநீதி இழைத்துக் கொண்டீர்கள். ஆகவே, நீங்கள் உங்களைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். மேலும் உங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ளுங்கள். இதுவே உங்களைப் படைத்த இறைவனிடம் உங்களுக்கு நன்மை பயக்கும்” என்று கூறினார். (அந்நேரத்தில்) உங்கள் இறைவன், உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றான்.
2:54. மேலும், மூஸா தன் சமூகத்தாரிடம் “என்னுடைய சமூகத்தாரே, நீங்கள் காளைக்கன்றை வணக்கத்திற்குரியதாக எடுத்துக்கொண்டதன் காரணமாக நிச்சயமாக உங்களுக்கு நீங்களே அநீதம் இழைத்துக் கொண்டீர்கள்; ஆகவே உங்களைப் படைத்தவனிடம் நீங்கள் (பாவ மன்னிப்பு பெற) தவ்பாச் செய்யுங்கள்; ஆகவே உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளுங்கள்; இதுதான் உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்” என்று _ (நினைத்துப் பாருங்கள்). ஆகவே, (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் (மன்னித்து) உங்கள் தவ்பாக்களை அங்கீகரித்தான்; நிச்சயமாக அவன்தான் தவ்பாவை மிகுதியாக ஏற்(று மன்னிப்)பவன்; மிகக் கிருபையுடையவன்.
2:55 وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نُّؤْمِنَ لَـكَ حَتّٰى نَرَى اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏
2:55. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
2:55. அன்றி நீங்கள் மூஸாவை நோக்கி "நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும் வரையில் உங்களை நம்பமாட்டோம்" என்று கூறியபொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை (பூகம்பம் போன்ற) பெரும் சப்தம் பீடித்துக் கொண்டது.
2:55. “மூஸாவே! நாங்கள், அல்லாஹ்வை (உம்முடன் உரையாடும் நிலையில் எங்கள் கண்களால்) வெளிப்படையாகக் காணாத வரை உம் கூற்றை நாங்கள் ஒருபோதும் நம்பமாட்டோம்” என்று நீங்கள் கூறியதை நினைவுகூருங்கள். அப்பொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை ஒரு பேரிடி தாக்கிற்று! உடனே நீங்கள் மாண்டு வீழ்ந்துவிட்டீர்கள்.
2:55. நீங்கள் “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாகக் காணும் வரை உம்மை நாம் விசுவாசிக்கவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியதைப் பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே உங்களை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டதையும் (நினைவுகூறுங்கள்)
2:56 ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏
2:56. நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
2:56. நீங்கள் (அந்த பெரும் சப்தத்தால்) இறந்துவிட்டதற்குப் பின்னும் நீங்கள் நன்றி செலுத்துவீர்கள் என்பதற்காக உங்களை நாம் உயிர்ப்பித்தோம்.
2:56. அதன்பிறகும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு நாம் மீண்டும் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
2:56. பின்னர், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக, நீங்கள் இறந்துவிட்டதற்குப் பின்னர் உங்களை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம்.
2:57 وَظَلَّلْنَا عَلَيْکُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى‌ؕ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ‌ؕ وَمَا ظَلَمُوْنَا وَلٰـكِنْ كَانُوْآ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
2:57. இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
2:57. அன்றி நாம் உங்களுக்கு மேகம் நிழலிடும்படிச் செய்து, (உங்களுக்கு உணவாக) "மன்னு ஸல்வா" (என்ற இருவகை உண)வையும் இறக்கி வைத்து (அவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு அளித்துவரும் பரிசுத்தமான இவைகளைப் புசித்து வாருங்கள்" என்று கட்டளையிட்டிருந்தோம். (எனினும் நம்முடைய கட்டளையை மீறிய) அவர்கள் நமக்கொன்றும் தீங்கிழைத்து விடவில்லை; தங்களுக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டனர்.
2:57. மேலும் நாம் உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படிச் செய்தோம். உங்களுக்கு மன்னுஸல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள்(என்றும் உங்களிடம் கூறினோம்). எனினும் (உங்கள் மூதாதையர் வரம்பு மீறினார்கள்; அதன் மூலம்) அவர்கள் எமக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டனர்.
2:57. இன்னும் உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மேலும் உங்களுக்காக “மன்னு, ஸல்வா” எனும் மேலான உணவை வானத்திலிருந்து இறக்கி வைத்தோம். நாம் அருளியுள்ள நல்லவற்றிலிருந்து புசியுங்கள் (என்றோம். அதல்லாத மற்ற உணவைக் கேட்டதனால்) நமக்கு அவர்கள் அநியாயம் செய்து விடவில்லை; எனினும் தமக்குத்தாமே அவர்கள் அநியாயம் செய்துக்கொண்டிருந்தனர்.(1)
2:58 وَاِذْ قُلْنَا ادْخُلُوْا هٰذِهِ الْقَرْيَةَ فَکُلُوْا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُوْلُوْا حِطَّةٌ نَّغْفِرْ لَـكُمْ خَطٰيٰكُمْ‌ؕ وَسَنَزِيْدُ الْمُحْسِنِيْنَ‏
2:58. இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
2:58. அன்றி (உங்கள் மூதாதையர்களை நோக்கி) "நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்ப மானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். அதன் வாயிலில் (நுழையும் பொழுது) தலைகுனிந்து செல்லுங்கள். "ஹித்ததுன்" (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்களுடைய குற்றங்களை நாம் மன்னித்துவிடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்" எனக் கூறியிருந்தோம்.
2:58. மேலும் “(அருகிலிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பனவற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். ஊருக்குள் நுழையும்போது அதன் தலைவாசலில், சிரம் தாழ்த்திய வண்ணமும் “ஹித்தத்துன்” என்று சொல்லியவாறும் நுழையுங்கள்! உங்கள் குற்றங்களை நாம் மன்னிப்போம். மேலும் சிறந்த முறையில் நற்செயல்கள் புரிவோருக்கு விரைவில் அதிக நற்கூலி வழங்குவோம்” என நாம் கூறியதையும் நினைவுகூருங்கள்.
2:58. இன்னும் (நினைவு கூறுங்கள்:) இந்த ஊருக்குள் நுழைந்து அதில் நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள், தலை குனிந்தவர்களாக (அதன் வாயிலில் நுழையுங்கள்,(எங்கள் பாவச்சுமைகள்) நீங்கட்டும் என்ற ‘ஹித்ததுன்’ எனவும் கூறுங்கள். அதன் நிமித்தம் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னித்து விடுவோம், மேலும், நன்மை செய்வோருக்கு அதன் கூலியை அதிகப்படுத்துவோம் என்றும் கூறினோம்.
2:59 فَبَدَّلَ الَّذِيْنَ ظَلَمُوْا قَوْلاً غَيْرَ الَّذِىْ قِيْلَ لَهُمْ فَاَنْزَلْنَا عَلَى الَّذِيْنَ ظَلَمُوْا رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏
2:59. ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.
2:59. ஆனால் வரம்பு மீறிக்கொண்டே வந்த அவர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத வார்த்தையை ("ஹின்ததுன்"= கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்.
2:59. ஆனால் அந்த அக்கிரமக்காரர்கள் தமக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். இறுதியில் அந்த அக்கிரமக்காரர்கள் மீது, விண்ணிலிருந்து வேதனையை நாம் இறக்கினோம். இறைக் கட்டளைக்கு அவர்கள் மாறு செய்ததினால் கிடைத்த தண்டனையாகும் இது.
2:59. ஆனால், (அவர்களில்) அநியாயம் செய்தார்களே அத்தகையோர் _ தமக்கு கூறப்பட்டதல்லாத வேறு வார்த்தையாக அதனை மாற்றிவிட்டனர்; ஆகவே அநியாயம் செய்துவிட்டார்களே அத்தகையோர் மீது (இவ்வாறு அவர்கள்) வரம்பு மீறி பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கி வைத்தோம்.
2:60 وَاِذِ اسْتَسْقَىٰ مُوْسٰى لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ‌ؕ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا‌ؕ قَدْ عَلِمَ کُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ‌ؕ کُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِىْ الْاَرْضِ مُفْسِدِيْنَ‏
2:60. மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
2:60. மூஸா தன் இனத்தாரு(டன் "தீஹ்" என்னும் பகுதிக்குச் சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்)கு தண்ணீர் தேடியபோது (நாம் அவரை நோக்கி) "நீங்கள் உங்களுடைய தடியால் இக்கல்லை அடியுங்கள்" எனக் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) உடனே அதில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித்தோடின. (அவருடைய பன்னிரண்டு பிரிவு) மக்கள் அனைவரும் தாங்கள் அருந்தும் தண்ணீர்த் துறையைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள். (அப்பொழுது நாம் அவர்களை நோக்கி "உங்களுக்கு) அல்லாஹ் கொடுத்த ("மன்னு மற்றும் ஸல்வா" என்னும் உணவு பதார்தத்) திலிருந்து புசியுங்கள். (கல்லிலிருந்து உதித்தோடும் இந்நீரைப்) பருகுங்கள். ஆனால் பூமியில் விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்" (என்று கூறினோம்.)
2:60. இன்னும், மூஸா தம் சமுதாயத்தினருக்காக தண்ணீர் கோரிப் பிரார்த்தித்ததையும் நினைவுகூருங்கள். அப்போது “உம்முடைய கைத்தடியைக் கொண்டு இந்தக் கல்லின் மீது அடிப்பீராக!” என்று நாம் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கி எழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தாரும் (அவ்வூற்றுகளிலிருந்து) தாம் தண்ணீர் அருந்த வேண்டிய பகுதியை அறிந்து கொண்டனர். (அப்பொழுது நாம் அறிவுறுத்தினோம்:) “அல்லாஹ் அருளிய உணவை உண்ணுங்கள்; பருகுங்கள். ஆனால் பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்!”
2:60. மூஸா தம் கூட்டத்தவருக்குத் தண்ணீர் புகட்டத் தேடியபோது நாம் (அவரிடம்,) “நீர் உம்முடைய (கைத்தடியால்) இக்கல்லை அடிப்பீராக!” எனக் கூறினோம். (அவர் அடித்தார்) உடனே அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பீறிட்டோடின; ஒவ்வொரு கூட்டத்தினரும் தாங்கள் அருந்தும் தண்ணீர்த் துறையை திட்டமாக அறிந்துக் கொண்டார்கள். (அப்பொழுது) “அல்லாஹ்வின் உணவிலிருந்து உண்ணுங்கள் இன்னும் பருகுங்கள்; மேலும், பூமியில் குழப்பம் செய்கிறவர்களாக வரம்பு மீறி அலையாதீர்கள்” (என்று நாம் கூறினோம் என்பதையும் நினைவு கூறுங்கள்.)
2:61 وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نَّصْبِرَ عَلٰى طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْۢ بَقْلِهَا وَقِثَّـآٮِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَ بَصَلِهَا‌ؕ قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِىْ هُوَ اَدْنٰى بِالَّذِىْ هُوَ خَيْرٌ‌ؕ اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَـکُمْ مَّا سَاَلْتُمْ‌ؕ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْکَنَةُ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ‌ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ الْحَـقِّ‌ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّڪَانُوْا يَعْتَدُوْنَ‏
2:61. இன்னும், “மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்” என்று நீங்கள் கூற, “நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.
2:61. ஆனால் (அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் முளைக்கக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவைகளை வெளிப்படுத்தித் தரும்படி உங்களுடைய இறைவனை எங்களுக்காக நீங்கள் கேளுங்கள்" என அவரிடம் கேட்டார்கள். அதற்கு (மூஸா) "மேலானதற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக்கொள்(ள விரும்பு)கின்றீர்களா? (அவ்வாறாயின்) நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கிவிடுங்கள். நீங்கள் கேட்பது நிச்சயமாக (அங்குதான்) உங்களுக்குக் கிடைக்கும்" என்று கூறிவிட்டார். ஆகவே, வீழ்ச்சியும் இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் (அவர்கள்) சார்ந்து விட்டார்கள். மெய்யாகவே அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததும், நியாயமின்றி இறைத்தூதர்களைக் கொலை செய்து வந்ததும் இதற்குக் காரணமாகும். இ(வ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள் செய்யும்படி நேர்ந்த)தற்குக் காரணம்: அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை அடிக்கடி) வரம்பு மீறி பாவம் செய்து கொண்டிருந்ததுதான்.
2:61. மேலும், நீங்கள் (மூஸாவை நோக்கி) இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “மூஸாவே! நாங்கள் ஒரே வகையான உணவைக் கொண்டு பொறுமையாய் இருக்க முடியாது; எனவே, பூமி விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை எங்களுக்காக உற்பத்தி செய்து தரும்படி உமது இறைவனை நீர் பிரார்த்திப்பீராக!” அதற்கு மூஸா கூறினார்: “சிறந்த பொருள்களுக்குப் பதிலாக மட்டமான பொருள்களை நீங்கள் விரும்புகிறீர்களா? (அப்படியானால்) நீங்கள் ஏதாவது ஒரு பட்டணத்திற்குச் சென்று (தங்கி) விடுங்கள். நீங்கள் கேட்பவை எல்லாம் உங்களுக்கு அங்கே கிடைக்கும்.” (இறுதியில் அவர்களின் நிலை என்னவாயிற்று என்றால்) இழிவும், தாழ்வும், (வீழ்ச்சியும்) அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் சினத்திற்கும் ஆளாகிவிட்டார்கள். இந்த விளைவு ஏன் ஏற்பட்டதென்றால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டும், நபிமார்களை நியாயமின்றி கொலை செய்து கொண்டும் இருந்தார்கள். இந்த விளைவு ஏற்பட்டதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டும், (ஷரீஅத்தின்) வரம்பை மீறிக்கொண்டும் இருந்ததுதான்!
2:61. இன்னும், “மூஸாவே!” ஒரே விதமான உணவின் மீது நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்கவே மாட்டோம்;ஆகவே, உம்முடைய இரட்சகனிடம் எங்களுக்காக பிரார்த்தித்துக் கேட்பீராக! பிரார்த்தித்தால் பூமி முளைப்பிக்கின்றவற்றில் இருந்து அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் அவன் வெளிப்படுத்தித் தருவான் என்று நீங்கள் கூறினீர்கள் (என்பதையும் நினைவு கூறுங்கள். அவ்வாறு நீங்கள் கூறியதைக் கேட்ட மூஸா) எது மேலானதாக இருக்கிறதோ அதற்குப் பதிலாக எது மிகத் தாழ்ந்ததாக இருக்கின்றதோ அதை நீங்கள் மாற்றிக் கொள்(ள விரும்பு)கின்றிர்களா? அவ்வாறாயின் நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கிவிடுங்கள்; அங்கு நீங்கள் கேட்டது உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும் என்று அவர் கூறினார். இழிவும், வறுமையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டும் விட்டன;. மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்களாக அவர்கள் திரும்பினார்கள;. இது (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் இருந்தார்கள் என்பதன் காரணத்தினால்தான்; இந்நிலைக்கு அவர்கள் ஆளானது அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குப் பணியாது மாறு செய்துக்கொண்டிருந்ததாலும், அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறிக் கொண்டேயிருந்தார்கள் என்ற காரணத்தினால்தான்.
2:62 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَالصّٰبِـِٕـيْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:62. நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:62. (முஹம்மத் அவர்கள் மீது) நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஸாபீகள் ஆகியோரில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
2:62. நிச்சயமாக, விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாக இருந்தார்களே அவர்களும், கிறிஸ்தவர்களும் ஸாபியீன்களும் அவர்களில் _எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து, நற்கருமத்தையும் செய்தார்களோ, அத்தகையவர்கள் அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு. மேலும், அவர்களுக்கு (மறுமையைப்பற்றி எவ்விதப் பயமுமில்லை); இன்னும் உலகில் எதை விட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்.
2:63 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَؕ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّ اذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏
2:63. இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, “தூர்“ மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).
2:63. "தூர்" என்னும் மலையை நாம் உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் "நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்றாத் என்னும் வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள், அதிலுள்ளதை (எப்பொழுதும்) சிந்தனையில் வையுங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவீர்கள்" (என்று கூறினோம்.)
2:63. இந்தச் சந்தர்ப்பத்தையும் நினைவுகூருங்கள்: தூர் மலையை நாம் உங்களுக்கு மேலே உயர்த்தி உங்களிடமிருந்து உறுதியான வாக்குமூலம் வாங்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கியுள்ள (வேதத்)தை உறுதியுடன் (கடைப்)பிடியுங்கள். அதிலுள்ள (அறிவுரைகள், கட்டளைகள் ஆகிய)வற்றை நினைவில் வையுங்கள். (அப்போதுதான்) நீங்கள் இறையச்சமுடையோராய்த் திகழலாம்” எனவும் நாம் கூறினோம்.
2:63. மேலும், நாம் உங்களிடம் உறுதிமொழி வாங்கி உங்களுக்கு மேலாக “தூரை” (சினாய் மலையை) உயர்த்தியவாறு, “நாம் உங்களுக்குக் கொடுத்த தவ்றாத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; எப்பொழுதும் அதிலுள்ளவற்றை நினைவு கூறுங்கள். (அதனால் நீங்கள் பயபக்தியுடையவர்களாவீர்கள்.” என்று நாம் கூறியதை நினைவு கூறுங்கள்.
2:64 ثُمَّ تَوَلَّيْتُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ‌‌ۚ فَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَـكُنْتُمْ مِّنَ الْخٰسِرِيْنَ‏
2:64. அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.
2:64. இதற்குப் பின்னும் நீங்கள் (வாக்கு) மாறிவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது அல்லாஹ்வின் கிருபையும் அன்பும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள்.
2:64. (எனினும்) அதன் பின்னர் நீங்கள் (உங்கள் வாக்குறுதியிலிருந்து) மாறிவிட்டீர்கள். (அப்படி இருந்தும்) அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்களைக் கைவிடவில்லை; அவ்வாறு கைவிட்டிருந்தால், நீங்கள் நிச்சயம் எப்பொழுதோ பேரிழப்பிற்கு ஆளாகியிருப்பீர்கள்.
2:64. பின்னர், நீங்கள் அதற்குப் பின்னும் (வாக்குறுதியை) புறக்கணித்து விட்டீர்கள். ஆகவே, உங்கள் மீது அல்லாஹ்வின் பேரருளும் அவனின் கிருபையும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள்.
2:65 وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِيْنَ اعْتَدَوْا مِنْكُمْ فِىْ السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خَاسِـِٔـيْنَ ‌ۚ‏
2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
2:65. மேலும் சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்கக் கூடாதென்றிருந்த கட்டளையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுக!" எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தேயிருக்கின்றீர்கள்.
2:65. மேலும், உங்களில் எவர்கள் சனிக்கிழமை வரையறையை மீறினார்களோ அவர்களைப் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்தே இருக்கிறீர்கள்; அவர்களை நோக்கி, “நீங்கள் குரங்குகளாகி (அனைவராலும் வெறுக்கப்பட்டு) இழிவடைந்தவர்களாகி விடுங்கள்” என்று நாம் கூறினோம்.
2:65. மேலும், உங்க(ள் முன்னோர்)களிலிருந்து சனி(க்கிழமை)யன்று வரம்பை மீறி விட்டார்களே அத்தகையோரை உறுதியாக நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; (அதன் காரணமாக) நாம் அவர்களுக்கு “நீங்கள் சிறுமையடைந்தவர்களாக, குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
2:66 فَجَعَلْنٰهَا نَكٰلاً لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَ‏
2:66. இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.
2:66. இதனை (அக்காலத்தில்) அவர்களுக்கு எதிரில் இருந்தவர்களுக்கும், அவர்களுக்குப் பின் (பிற்காலத்தில்) வருபவர் களுக்கும் ஒரு எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகவும், இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு உபதேசமாகவும் ஆக்கினோம்.
2:66. (இவ்வாறு) அவர்களின் இறுதி முடிவை அன்று வாழ்ந்த மக்களுக்கும் அதற்குப் பின்னர் வரக்கூடிய வழித்தோன்றல்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் இறையச்சம் உடையோர்க்கு நல்லுரையாகவும் ஆக்கினோம்.
2:66. ஆக வே, இதனை (அக்காலத்தில்) அவர்களின் எதிரிலிருப்பவர்களுக்கும் அவர்களுக்குப்பின் (காலத்தில்) வருபவர்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் பயபக்தியுடையோருக்கு ஒரு உபதேசமாகவும் நாம் ஆக்கினோம்.
2:67 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ‌ ؕ قَالُوْآ اَتَتَّخِذُنَا هُزُوًْا ‌ؕ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰـهِلِيْنَ‏
2:67. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.
2:67. தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார்.
2:67. மேலும், இந்தச் சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: மூஸா, தமது சமூகத்தாரிடம் “ஒரு பசுவை நீங்கள் அறுக்க வேண்டும் என்று அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” எனக் கூறினார். (அப்போது அவர்கள் “மூஸாவே!) நீர் எங்களை கேலி செய்கிறீரா?” என்றார்கள். அதற்கு அவர், “நான் (அவ்வாறு பேசி) அறிவீனர்களில் ஒருவனாகி விடுவதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்றார்.
2:67. இன்னும், (இதையும் நினைவு கூறுங்கள்). “ஒரு பசுமாட்டை நீங்கள் அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு நிச்சயமாகக் கட்டளையிடுகிறான்” என மூஸா தன் சமூகத்தாரிடம் கூறியபோது, எங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறீரா? என்றனர். அதற்கு அவர் “நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனர்களில் ஆகிவிடுவதை விட்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்றார்.
2:68 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَ‌ؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌؕ عَوَانٌۢ بَيْنَ ذٰلِكَ‌ؕ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ‏
2:68. “அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.
2:68. "அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அறிவிக்கும்படி உங்களது இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றுமல்ல. மத்திய பருவத்திலுள்ள ஒரு மாடு என அவன் கூறுகிறான்" எனக் கூறி "உங்களுக்கிடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்" என்றார்.
2:68. அவர்கள் கூறினார்கள்: “அது (பசு) எத்தன்மையுடையது என எங்களுக்கு விவரிக்கும்படி உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” அதற்கு அவர், “நிச்சயமாக அது கிழடாகவோ, கன்றாகவோ இல்லாமல் நடு வயதுள்ளதாய் இருக்க வேண்டும் என இறைவன் கூறுகின்றான்; எனவே, உங்களுக்கு இடப்படுகின்ற கட்டளையைச் செயல்படுத்துங்கள்!” என்றார்.
2:68. அவர்கள் மூஸாவே! “உமதிரட்சகனிடம் எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக.! (அவ்வாறு பிரார்த்தித்தால்) அது எத்தகையது என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்” என்று கூறினார்கள். அவர் “நிச்சயமாக அது கிழடுமல்ல; இளங்கன்றுமல்ல; இதற்கிடையிலுள்ள மத்தியதரமான ஒரு பசு மாடாகும்” என நிச்சயமாக அவன் கூறுகிறான் எனக்கூறினார். ஆகவே உங்களுக்கிடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுங்கள் என்று மூஸாவாகிய அவர் கூறினார்.
2:69 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا لَوْنُهَا ‌ؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُۙ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِيْنَ‏
2:69. “அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.
2:69. அதற்கவர்கள் "அதன் நிறம் என்னவென்று அறிவிக்கும்படி நீங்கள் உங்களுடைய இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "அது பார்ப்பவர் மனதைக் கவரக்கூடிய கலப்பற்ற மஞ்சள் நிறமான மாடு என அவன் கூறுகிறான்" என்றார்.
2:69. மீண்டும் அவர்கள் கூறினார்கள்: (“மூஸாவே!) அதன் நிறம் என்ன என்று எங்களுக்கு விவரிக்குமாறு உமது இறைவனிடம் நீர் வேண்டுவீராக!” அதற்கு அவர், “நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசுவாக இருக்க வேண்டும்; அதன் நிறம் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும் வண்ணம் (அடர்த்தியாக) இருக்க வேண்டும்!” என்றார்.
2:69. அவர்கள் (மூஸாவிடம்) “உமதிரட்சகனிடம் எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக! (அவ்வாறு பிரார்த்தித்தால்” அதன் நிறம் என்ன,” என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான் என்று கூறினார்கள்; அதற்கு நிச்சயமாக அது (கலப்பற்ற மஞ்சள் நிறமான ஒரு பசுவாகும்; அதன் நிறம் கெட்டியானது;பார்ப்பவர்களை பசு கவர்ந்து, அது மகிழ்விக்கும்” என நிச்சயமாக அவன் கூறுகிறான் என மூஸாவாகிய அவர் கூறினார்.
2:70 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَۙ اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَيْنَا ؕ وَاِنَّـآ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ‏
2:70. “உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன; அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
2:70. அதற்கவர்கள் அம்மாடு எங்களைச் சந்தேகத்திற் குள்ளாக்குகின்றது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்தறிவிக்கும்படி உங்களுடைய இறைவனை நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நாடினால் இனி நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்" எனக் கூறினார்கள்.
2:70. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “(மூஸாவே!) அது எத்தன்மை உடையது என (மிக மிகத்)தெளிவாக எங்களுக்கு விவரிக்கும்படி உம் இறைவனை வேண்டுவீராக! ஏனெனில், நிச்சயமாக அந்தப் பசு (எதுவென்பது) பற்றி எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. மேலும், அல்லாஹ் நாடினால் (உரிய பசுவின் பக்கம்) நாங்கள் வழிகாட்டப் பெறுவோம்.”
2:70. அவர்கள் (மூஸாவே உமதிரட்சகனிடம் எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக! (அவ்வாறு நீர் பிரார்த்தித்தால்) அந்தப் பசு எந்த வகையைச் சேர்ந்தது என எங்களுக்கு அவன் தெரியப் படுத்துவான்; நிச்சயாமாக எல்லாப் பசுக்களும் எங்களுக்கு ஓன்று போல் ஆகி அவற்றில் அந்தப் பசு எது என்பது எங்களை சந்தேகத்துக்குள்ளாக்கி விட்டது; மேலும் அல்லாஹ் நாடினால், இனி நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெறக் கூடியவர்கள் என்றும் கூறினார்கள்.
2:71 قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِيْرُ الْاَرْضَ وَلَا تَسْقِى الْحَـرْثَ ‌ۚ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيْهَا ‌ؕ قَالُوا الْـٰٔـنَ جِئْتَ بِالْحَـقِّ‌ؕ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا يَفْعَلُوْنَ‏
2:71. அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.
2:71. (அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள்.
2:71. மூஸா பதிலளித்தார்:“பூமியை உழுவதற்கோ, வேளாண்மைக்கு நீரிறைப்பதற்கோ பயன்படுத்தப்படாத, ஊனமேதுமற்ற, எவ்வித வடுவுமற்ற பசுவாக அது இருக்க வேண்டும் என அவன் கூறுகின்றான்.” பிறகு அவர்கள் (ஆரவாரத்துடன்) கூறினார்கள்: “இப்போதுதான் நீர் சரியான (விளக்கத்)தைத் தந்துள்ளீர்.” பின்னர் அவர்கள் அந்தப் பசுவை அறுத்தார்கள். ஆயினும் அவர்கள் அதனை முழு மனத்தோடு செய்பவர்களாய் இருக்கவில்லை.
2:71. அவர் (மூஸா) “நிச்சயமாக அது ஒரு பசு, பூமியில் உழவடித்து வேலை செய்ததும் அல்ல! பயிருக்குத் தண்ணீர் (இறைத்துப்) பாய்ச்சியதும் அல்ல! குறையற்றது, அதில் வடுவில்லாதது என நிச்சயமாக (அல்லாஹ்வாகிய) அவன் கூறுகிறான்” என்றார். அ(தற்க)வர்கள், “இப்பொழுதுதான் நீர் சரியான (விபரத்)தைக் கொண்டு வந்தீர்” எனக் கூறி, பின்னர் அதை அவர்கள் அறுத்தார்கள். அன்றியும், அவர்கள் (மனமுவந்து) செய்வதற்கு நெருங்கவில்லை.
2:72 وَ اِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِيْهَا ‌ؕ وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَۚ‏
2:72. “நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்).
2:72. நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு (தப்பித்துக் கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் (அம்மாட்டை அறுக்கும்படிக் கட்டளையிட்டு கொலை விஷயத்தில்) நீங்கள் மறைத்து வைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கினான்.
2:72. மேலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூருங்கள்: நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு அதுபற்றி தர்க்கித்து, ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றை அல்லாஹ் வெளிப்படுத்த முடிவு செய்தான்.
2:72. நீங்கள் ஓர் ஆத்மாவைக் கொலை செய்ததையும் பின்னர் அதில் (ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள் (என்பதையும் நினைவுகூறுங்கள்), அல்லாஹ்வோ நீங்கள் மறைத்துக்கொண்டிருந்ததை வெளியாக்குகிறவன்.
2:73 فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ‌ؕ كَذٰلِكَ يُحْىِ اللّٰهُ الْمَوْتٰى ۙ وَيُرِيْکُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
2:73. “(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்” என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.
2:73. ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதனை அறுத்து) "அதில் ஒரு பாகத்தைக்கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்" என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வாறே இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வற்காக அவன் தன்னுடைய (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகின்றான்.
2:73. “(அறுக்கப்பட்ட) அப்பசுவின் ஒரு பாகத்தைக் கொண்டு கொலையுண்டவனை அடியுங்கள்” என அப்பொழுது நாம் கட்டளையிட்டோம். (பாருங்கள்) இவ்வாறே அல்லாஹ் மரித்தவர்களை உயிர்ப்பிக்கின்றான்; மேலும் நீங்கள் நல்லறிவு பெறும் பொருட்டு தன் சான்றுகளையும் உங்களுக்குக் காண்பிக்கின்றான்.
2:73. ஆகவே, “(அறுக்கப்பட்ட பசுவாகிய) அதன் சில (பாகத்)தைக் கொண்டு (கொல்லப்பட்ட) அவனை அடியுங்கள்” என நாம் கூறினோம்; (அவன் உயிர் பெற்ற) அவ்வாறே, மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்; மேலும், நீங்கள் அறிந்துகொள்வதற்காக தன்னுடைய அத்தாட்சிகளை அவன் உங்களுக்குக் காண்பிக்கிறான்.
2:74 ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ فَهِىَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ‌ ؕ وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ‌ؕ وَاِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَآءُ‌ؕ وَاِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
2:74. இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன; அவை கற்பாறையைப்போல் ஆயின; அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின; (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு; இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு; இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.
2:74. இதற்குப் பின்னும் உங்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவைகளைவிடக் கடினமானவைகளாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக உண்டு. (பிளந்தால்) வெடித்து அதிலிருந்து நீர் புறப்படக் கூடியவைகளும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக்கூடியவைகளும் அவற்றில் உண்டு. (ஆனால் யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
2:74. ஆனால் இத்தகைய சான்றுகளை நீங்கள் பார்த்த பின்னருங்கூட உங்கள் இதயங்கள் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் ஆகிவிட்டன. ஏன் அவற்றை விடவும் மிகக் கடினமாகி விட்டன. ஏனெனில் சில கற்களில் இருந்துகூட நீரூற்றுகள் பொங்கி எழுகின்றன; இன்னும் சில கற்கள் பிளந்து அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படுகின்றது. இன்னும் சில அல்லாஹ்வின் அச்சத்தால் நடுங்கி கீழே விழுந்து விடுகின்றன. நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற இழிசெயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை.
2:74. அப்பால் உங்களுடைய இதயங்கள் இதற்குப் பின்னும் (கல் நெஞ்சாகி) கடினமாகி விட்டன; அவை, கற்பாறையைப் போல் அல்லது இறுக்கத்தால் (அதைவிட) மிகக் கடினமாக இருக்கின்றன (ஏனென்றால்) கற்பாறையிலும் அதிலிருந்து தானாக ஆறுகள் வெடித்து பாய்ந்தோடிக் கொண்டிருப்பவைகளும் உண்டு; நிச்சயமாக அதில் விரிசல் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து தண்ணீர் வெளிப்படக்கூடியதும் உண்ட;. நிச்சயமாக அதில் அல்லாஹ்வின் பயத்தால் (உருண்டு) கீழே விழக்கூடியதும் உண்டு; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி பாராமுகமானவனல்லன்.
2:75 اَفَتَطْمَعُوْنَ اَنْ يُّؤْمِنُوْا لَـكُمْ وَقَدْ كَانَ فَرِيْقٌ مِّنْهُمْ يَسْمَعُوْنَ کَلَامَ اللّٰهِ ثُمَّ يُحَرِّفُوْنَهٗ مِنْۢ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ يَعْلَمُوْنَ‏
2:75. (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.
2:75. (நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்களென நீங்கள் எதிர்பார்க் கின்றீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர்.
2:75. (முஸ்லிம்களே!) இவர்கள் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா? உண்மை யாதெனில், அல்லாஹ்வின் அருள்மொழிகளைக் கேட்டு, நன்குணர்ந்த பின்னரும் வேண்டுமென்றே அதனை மாற்றக்கூடிய ஒரு பிரிவினரும் இவர்களில் இருக்கிறார்கள்.
2:75. (விசுவாசங்கொண்டோரே!) உங்க(ள் வார்த்தைக)ளுக்காக இவர்கள் விசுவாசங் கொள்வார்கள் என்பதை நீங்கள் (எதிர்பார்த்து) ஆசை வைக்கின்றீர்களா? மேலும், திட்டமாக அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய வசனங்களை கேட்பவர்களாக இருந்தனர்; பின்னர், அதை விளங்கிய பிறகும் அவர்கள் அறிந்தவர்களாகவே அதை மாற்றிவிடுகின்றனர்.
2:76 وَاِذَا لَـقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْآ اٰمَنَّا  ۖۚ وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ قَالُوْآ اَ تُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَيْكُمْ لِيُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
2:76. மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, “நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, “உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர்.
2:76. மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் ("தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்" எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி "(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றீர்கள்.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறுகின்றனர்.
2:76. (இறைத்தூதர் முஹம்மத் மீது) நம்பிக்கை கொண்டவர்களை இவர்கள் சந்திக்கும்போது “நாங்களும் (அவர் மீது) நம்பிக்கை கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் தங்களுக்குள் தனிமையில் பேசிக் கொள்ளும்போது, “என்ன, நீங்கள் மதியிழந்து விட்டீர்களா? உங்களுக்கு அல்லாஹ் அறிவித்துத் தந்திருப்பதை நீங்கள் அவர்களிடம் சொல்லி விடுகின்றீர்களே! அதை வைத்துக் கொண்டு உங்கள் இறைவனிடத்தில் அவர்கள் உங்களுக்கு எதிராக வாதிடுவதற்காகவா (இவ்வாறு செய்கின்றீர்கள்)?” என்று கூறுகின்றார்கள்.
2:76. மேலும், அவர்கள் விசுவாசங்கொண்டோரைச் சந்தித்தால் நாங்கள் (உங்கள் நபியை) விசுவாசிக்கிறோம்” எனக் கூறுகின்றார்கள். மேலும், அவர்களில் சிலர் சிலருடன் தனித்து விடும்போது உங்கள் இரட்சகனிடத்தில் அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காக, “(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்கு (தெரிவித்து) வெளிப்படுத்திக் காட்டியிருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா”? என்று கூறுகின்றனர். (இதனை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
2:77 اَوَلَا يَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ‏
2:77. அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?
2:77. அவர்கள் மறைத்துக் கொள்வதையும் பகிரங்கப்படுத்து வதையும் அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா?
2:77. அவர்கள் மறைத்துக் கொள்கின்றவற்றையும், அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான் என்பதை அவர்கள் அறியவில்லையா?
2:77. நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் மறைத்துவைப்பதையும், அவர்கள் பகிரங்கமாக்குவதையும் நன்கறிவான் என்பதை அவர்கள் அறியமாட்டார்களா?
2:78 وَ مِنْهُمْ اُمِّيُّوْنَ لَا يَعْلَمُوْنَ الْكِتٰبَ اِلَّاۤ اَمَانِىَّ وَاِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏
2:78. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
2:78. அன்றி, கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை.
2:78. மேலும், அவர்களில் மற்றொரு பிரிவினர், எழுதப் படிக்கத் தெரியாதவர்களாய் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வேதத்தைப் பற்றிய எந்த அறிவும் கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் வெறும் அடிப்படையற்ற நம்பிக்கைகளும் ஆசைகளும்தான்! மேலும் வெறும் ஊகங்களிலேயே அவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
2:78. மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; வீண் நம்பிக்கைகளை (கொள்கையாகக் கொள்வதை)த் தவிர வேதத்தை அவர்கள் அறியமாட்டார்கள்; அன்றியும் அவர்கள் (வீண் கற்பனைகளை) எண்ணுவோர் தவிர வேறில்லை.
2:79 فَوَيْلٌ لِّلَّذِيْنَ يَكْتُبُوْنَ الْكِتٰبَ بِاَيْدِيْهِمْ ثُمَّ يَقُوْلُوْنَ هٰذَا مِنْ عِنْدِ اللّٰهِ لِيَشْتَرُوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًا ؕ فَوَيْلٌ لَّهُمْ مِّمَّا کَتَبَتْ اَيْدِيْهِمْ وَوَيْلٌ لَّهُمْ مِّمَّا يَكْسِبُوْنَ‏
2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!
2:79. எவர்கள் தங்கள் கையைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக் கிரயத்தையடைவதற்காக "இது அல்லாஹ் விடமிருந்து வந்ததுதான்" என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்!
2:79. சொற்ப விலைக்கு விற்று, சிறிது இலாபம் பெறுவதற்காக தம் கைகளாலேயே ஒரு (சட்ட) நூலை எழுதிப் பின்னர், “இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது” என்று (மக்களை நோக்கிக்) கூறுவோர்க்குக் கேடுதான்! எனவே, அவர்களுடைய கைகள் எழுதியதும் அவர்களுக்குக் கேடுதான். மேலும் (அதனைக் கொண்டு) அவர்கள் சம்பாதித்ததும் அவர்களுக்குக் கேடுதான்!
2:79. ஆகவே., தங்கள் கரங்களால் நூலை எழுதி, பின்னர் அதை அற்பக்கிரயத்திற்கு விற்பதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்றும் கூறுகின்றார்களே, அத்தகையோருக்கு கேடுதான்; ஆகவே (அதை) அவர்களுடைய கரங்கள் எழுதியதனால் அவர்களுக்குக் கேடுதான்! மேலும், அவர்கள் (அதன்மூலம்) சம்பாதிப்பதனால் அவர்களுக்குக் கேடுதான்.
2:80 وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعْدُوْدَةً ‌ ؕ قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ يُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗۤ‌ اَمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
2:80. “ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.
2:80. "ஒரு சில நாள்களைத் தவிர நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது" என அவர்கள் கூறுகின்றார்கள். (அதற்கு நபியே! அவர்களை) நீங்கள் கேளுங்கள்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கு மாற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கின்றீர்களா?
2:80. மேலும் “குறிப்பிட்ட சில நாட்களைத் தவிர நெருப்பு எங்களை ஒருபோதும் தீண்டாது” என அவர்கள் கூறுகிறார்கள். (நபியே! அவர்களிடம்) நீர் கேளும்: “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதாவது உறுதிமொழி நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அப்படியானால் அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான்! அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிச் சொல்கின்றீர்களா?” (உங்களை நரக நெருப்பு ஏன் தீண்டாது?)
2:80. மேலும், “எண்ணப்பட்ட சில நாட்களைத் தவிர, (நரக)நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது” என அவர்கள் கூறுகின்றார்கள்; (அதற்கு நபியே! அவர்களிடம்) நீர் கேளும்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் வாக்குறுதியை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அவ்வாறாயின், நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (கற்பனை செய்து) கூறுகின்றீர்களா?
2:81 بَلٰى مَنْ كَسَبَ سَيِّئَةً وَّاَحَاطَتْ بِهٖ خَطِيْۤئَتُهٗ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
2:81. அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.
2:81. அவ்வாறன்று! எவர்கள் பாவத்தையே சம்பாதித்துக் கொண்டிருந்து, அவர்களுடைய பாவம் அவர்களை சூழ்ந்து கொண்டதோ அவர்கள் (யாராய் இருப்பினும்) நரகவாசிகளே! அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
2:81. அப்படியல்ல, எவர்கள் தீமையைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்களோ, மேலும் தம்முடைய பாவங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
2:81. ஆம்! எவர் தீமையைச் சம்பாதித்துக்கொண்டிருந்து, அவருடைய குற்றம் அவரைச் சூழ்ந்துகொண்டதோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.
2:82 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
2:82. எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.
2:82. ஆனால் எவர்கள் (இவ்வேதத்தை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.
2:82. இன்னும் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்கள் சுவனவாசிகள்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள்.
2:82. இன்னும் விசுவாசங்கொண்டு நற்காரியங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் _ அவர்கள் சுவனவாசிகள்; அதில் அவர்கள் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்.
2:83 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْٓ اِسْرَآءِيْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰکِيْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ ؕ ثُمَّ تَوَلَّيْتُمْ اِلَّا قَلِيْلًا مِّنْکُمْ وَاَنْـتُمْ مُّعْرِضُوْنَ‏
2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.
2:83. மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள். அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (அழகிய வார்த்தை சொல்லுங்கள்). தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்து (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள்" என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கின்றீர்கள்.
2:83. இன்னும் நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் இவ்வாறு உறுதியான வாக்குமூலம் வாங்கியதை நினைத்துப் பாருங்கள்; “அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வழிபடாதீர்கள்; (உங்களுடைய) பெற்றோர்கள், உறவினர்கள், அநாதைகள், மிஸ்கீன் (வறியவர்)கள் ஆகியோருடன் நற்பண்போடு நடந்து கொள்ளுங்கள்; மனிதர்களிடம் நல்லனவற்றைப் பேசுங்கள். மேலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். ஜகாத் கொடுத்து வாருங்கள்.” ஆனால் உங்களில் சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் (அந்த வாக்குறுதியைப்) புறக்கணித்து விட்டீர்கள். இப்பொழுதும்கூட (அதனைப்) புறக்கணித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
2:83. மேலும், இஸ்ராயீலின் மக்களிடம் “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு எதனையும்) வணங்காதீர்கள்; பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள்; இன்னும் மனிதர்களுக்கு அழகானதைச் சொல்லுங்கள; தொழுகையையும் நிறைவேற்றுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்” என்று நாம் வாக்குறுதி வாங்கியதையும் (நினைத்துப்பாருங்கள்), பின்னர், உங்களில் சொற்பமானவர்களைத் தவிர நீங்கள் புறக்கணித்தவர்களாக முகம் திருப்பி(மாறி)விட்டீர்கள்.
2:84 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ لَا تَسْفِكُوْنَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُوْنَ اَنْفُسَكُمْ مِّنْ دِيَارِكُمْ ثُمَّ اَقْرَرْتُمْ وَاَنْـتُمْ تَشْهَدُوْنَ‏
2:84. இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.
2:84. அன்றி, நீங்கள் உங்கள் (மனிதர்களுடைய) இரத்தத்தை ஓட்டாதீர்கள் என்றும், உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மனிதர்க)ளை வெளியேற்றாதீர்கள் என்றும், உங்(கள் மூதாதை)களிடம் நாம் உறுதிமொழி வாங்கியதை நீங்களும் (மனம் விரும்பி சம்மதித்து) அதனை உறுதிபடுத்தியிருக்கின்றீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
2:84. மேலும் ஒரு சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: ‘நீங்கள் இரத்தம் சிந்தாதீர்கள்; உங்களுடைய ஊர்களிலிருந்து ஒருவரை ஒருவர் வெளியேற்றாதீர்கள்’ என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். நீங்களும் அதனை ஏற்றுக் கொண்டீர்கள்; இன்னும் நீங்கள் அதற்குச் சாட்சியாக இருந்தீர்கள்.
2:84. இன்னும், “நீங்கள் (உங்களுக்கு மத்தியில்) உங்களுடைய இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்கள் இல்லங்களை விட்டு உங்(களைச் சேர்ந்தவர்)களை வெளியேற்றாதீர்கள்” என்றும் உங்களிடம் நாம் உறுதிமொழி வாங்கியதையும் (நினைவுகூருங்கள்), பின்னர் நீங்களோ சாட்சியம் கூறியவர்களாக இருக்க (அதை) நீங்கள் உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள்.
2:85 ثُمَّ اَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ تَقْتُلُوْنَ اَنْفُسَكُمْ وَتُخْرِجُوْنَ فَرِيْقًا مِّنْكُمْ مِّنْ دِيَارِهِمْ تَظٰهَرُوْنَ عَلَيْهِمْ بِالْاِثْمِ وَالْعُدْوَانِؕ وَاِنْ يَّاْتُوْكُمْ اُسٰرٰى تُفٰدُوْهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْڪُمْ اِخْرَاجُهُمْ‌‌ؕ اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ‌ۚ فَمَا جَزَآءُ مَنْ يَّفْعَلُ ذٰلِكَ مِنْکُمْ اِلَّا خِزْىٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ‌ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ يُرَدُّوْنَ اِلٰٓى اَشَدِّ الْعَذَابِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
2:85. (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
2:85. இவ்வாறு உறுதிப்படுத்திய பின்னரும் நீங்கள் உங்(கள் மனிதர்)களைக் கொலை செய்து விடுகின்றீர்கள். உங்களில் பலரை அவர்கள் இல்லங்களில் இருந்தும் வெளியேற்றி விடுகின்றீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் (அவர்களுடைய எதிரிகளுக்கு) நீங்கள் உதவியும் செய்கின்றீர்கள். (ஆனால், நீங்கள் வெளியேற்றிய) அவர்கள் (எதிரிகளின் கையில் சிக்கிச்) கைதிகளாக உங்களிடம் (உதவி தேடி) வந்து விட்டாலோ அவர்களுக்காக நீங்கள் (பொருளை) ஈடுகொடுத்து (அவர்களை மீட்டு) விடுகின்றீர்கள். ஆனால், அவர்களை அவர்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு செய்யும்) நீங்கள் வேதத்தில் (உள்ள) சில கட்டளைகளை நம்பிக்கை கொண்டு, சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கின்றார்களோ அவர்களுக்கு இவ்வுலகத்தில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடைக்காது. மறுமையிலோ, (அவர்கள்) கடுமையான வேதனையின் பக்கம் விரட்டப்படுவார்கள். உங்களுடைய இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
2:85. (ஆனால் அதற்குப்) பின்னரும் கூட நீங்கள் ஒருவரையொருவர் கொலை செய்கிறீர்கள். உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களுக்கு அநீதியும் அக்கிரமமும் செய்து அவர்களுக்கு எதிராக ஆள் சேர்க்கிறீர்கள். ஆனால் அவர்கள் (போரில்) பிடிபட்டு கைதிகளாய் உங்களிடம் வரும்போது மீட்புப் பணம் கொடுத்து அவர்களை விடுவிக்கிறீர்கள். ஆனால், அவர்களை (அவர்களின் ஊர்களிலிருந்து) வெளியேற்றுவதே உங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்ததே! அப்படியென்றால், நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியை நம்பி, மறு பகுதியை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறெந்தக் கூலியும் இல்லை. மறுமைநாளிலோ மிகக் கடுமையான வேதனையின் பக்கம் அவர்கள் திருப்பப்படுவார்கள். மேலும், நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற (இழி) செயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை
2:85. பின்னர் (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்கள்தான் அவர்கள்_உங்களை(ச் சேர்ந்தவர்களை) நீங்கள் கொலை செய்கிறீர்கள். இன்னும் உங்களில் ஒரு சாராரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். பாவத்தைக் கொண்டும், பகைமையைக் கொண்டும் அவர்களுக்குப் பாதகமாக (எதிரிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். மேலும், (வெளியேற்றப்பட்டவர்கள்) சிறைப்பட்டவர்களாக உங்களிடம் வந்துவிட்டால் நஷ்டஈடு கொடுத்து (அவர்களை) விடுவிக்கின்றீர்கள். (அவ்வாறு) அவர்களை (அவர்களின் வீடுகளிலிருந்து) வெளியேற்றுவதே உங்களின்மீது தடை செய்யப்பட்டிருக்கிறது, ஆகவே, நீங்கள் வேதத்தில் சிலவற்றை விசுவாசித்து (மற்றும்) சிலவற்றை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இதைச் செய்கிறவருக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. இன்னும், மறுமை நாளில் அவர்கள் மிகக் கடுமையான வேதனையின் பால் திருப்பப்படுவார்கள். அன்றியும் நீங்கள் செய்பவற்றைப் பற்றி அல்லாஹ் பராமுகமானவனல்லன்.
2:86 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ‌ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْصَرُوْنَ‏
2:86. மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
2:86. இத்தகையவர்கள்தான் மறுமை (வாழ்க்கை)க்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்கள். ஆதலால் அவர்களுக்கு (கொடுக்கப்படும்) வேதனை ஒரு சிறிதும் இலேசாக்கப்பட மாட்டாது. அவர்கள் யாதொரு உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
2:86. மறுமை வாழ்வை விற்று, இம்மை வாழ்வைக் கொள்வினை செய்து கொண்டவர்கள் இவர்கள்தாம்! ஆகவே, இவர்களுக்குச் சிறிதளவும் தண்டனை குறைக்கப்பட மாட்டாது. மேலும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது.
2:86. அவர்கள் எத்தகையோரென்றால், மறுமை(யின் வாழ்க்கை)க்குப் பகரமாக, இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள், ஆகவே, அவர்களை விட்டு வேதனை இலேசாக்கப்பட மாட்டாது, அவர்கள் (யாராலும்) உதவி செய்யப்படவுமாட்டார்கள்.
2:87 وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْۢ بَعْدِهٖ بِالرُّسُلِ‌ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ‌ۚ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ‏
2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
2:87. தவிர, (யூதர்களே!) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (ஒரு) வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தொடர்ச்சியாகப் பல தூதர்களையும் அனுப்பி வைத்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து அவரை (ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டும் பலப்படுத்தி வைத்தோம். (ஆனால்) உங்கள் மனம் விரும்பாத யாதொன்றையும் (நம்முடைய) எந்தத் தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதிலும் நீங்கள் கர்வம் (கொண்டு விலகிக்) கொள்ளவில்லையா? அன்றியும் (அத்தூதர்களில்) சிலரை நீங்கள் பொய்யாக்கி, சிலரை கொலை செய்தும் விட்டீர்கள்!
2:87. மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருக்குப் பின்னர் தொடர்ந்து தூதர்களை நாம் அனுப்பினோம். இறுதியில் மர்யமுடைய மகன் ஈஸாவுக்கும் தெளிவான சான்றுகளைக் கொடுத்தனுப்பினோம். மேலும் தூய ஆன்மாவைக் கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். யாரேனும் ஒரு தூதர் உங்களுடைய மன இச்சைகளுக்கு இசைவில்லாத ஏதேனும் ஒன்றை உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் நீங்கள் ஆணவம் கொண்டு புறக்கணித்தீர்கள்; சிலரைப் பொய்யரெனக் கூறினீர்கள்; மற்றும் சிலரை நீங்கள் கொலை செய்தீர்கள். இது என்ன போக்கு?
2:87. மேலும், நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தைக் கொடுத்தோம்; அவருக்குப் பின் தூதர்களை தொடர்ச்சியாக நாம் அனுப்பியும் வைத்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவுக்கு தெளிவான அத்தாட்சிகளை வழங்கி, ருஹுல் குதுஸ் (எனும் ஜிப்ரீலைக்) கொண்டு அவரை நாம் பலப்படுத்தியும் வைத்தோம். உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்தத்தூதரும் உங்களிடம் கொண்டுவந்த போதெல்லாம் (அதை ஏற்காது, புறக்கணித்துப்) பெருமையடித்துக் கொள்கிறீர்களா? ஆகவே, (அத்தூதர்களில்) ஒரு சாராரை நீங்கள் பொய்யாக்கினீர்கள்; ஒரு சாராரைக் கொலையும் செய்தீர்கள்.
2:88 وَقَالُوْا قُلُوْبُنَا غُلْفٌ‌ؕ بَل لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَقَلِيْلًا مَّا يُؤْمِنُوْنَ‏
2:88. இன்னும், அவர்கள் (யூதர்கள்) “எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.
2:88. "எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அவ்வாறன்று, அவர்களின் நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான். ஆதலால் அவர்கள் நம்பிக்கை கொள்வது வெகு சொற்பமே!
2:88. “எங்களுடைய இதயங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன” என்று அவர்கள் கூறுகின்றனர். இல்லை, அவர்களுடைய அவநம்பிக்கையின் காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான் (என்பதுதான் உண்மை). ஆகவே, மிகச் சொற்பமாகவே அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.
2:88. இன்னும், “எங்கள் இதயங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன” என்று (யூதர்களான) அவர்கள் கூறுகின்றனர், அவ்வாறன்று, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். ஆகவே, அவர்கள் விசுவாசம் கொள்வது வெகு சொற்பமே.
2:89 وَلَمَّا جَآءَهُمْ كِتٰبٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْۙ وَكَانُوْا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُوْنَ عَلَى الَّذِيْنَ كَفَرُوْا  ۖۚ فَلَمَّا جَآءَهُمْ مَّا عَرَفُوْا کَفَرُوْا بِهٖ‌ فَلَعْنَةُ اللّٰهِ عَلَى الْكٰفِرِيْنَ‏
2:89. அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!
2:89. அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கின்றது. இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப்பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் நன்கறிந்(து, வருமென எதிர்பார்த்)திருந்த இவ்வேதம் அவர்களிடம் வந்த சமயத்தில் இதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆகவே, அந்த நிராகரிப்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக!
2:89. மேலும், அல்லாஹ்விடமிருந்து வேதம் அவர்களிடம் வந்தபோது (அதனுடன் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள்?) அதுவோ, அவர்களிடம் இருந்த வேதத்தை உறுதிப்படுத்துகின்றது. மேலும் (அது வருவதற்கு) முன்பு அவர்களே, நிராகரிப்பாளர்களுக்கு எதிராகத் தங்களுக்கு வெற்றியும் உதவியும் அளிக்கும்படி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அறிந்துகொண்ட ஒன்று அவர்களிடம் வந்தபோது அதனை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். அத்தகைய நிராகரிப்பாளர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!
2:89. மேலும், அவர்களிடமுள்ள (வேதத்தை உண்மைப்படுத்தக்கூடிய (குர் ஆன் எனும்) வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, இதற்குமுன் நிராகரிப்போருக்கு எதிராகத் தங்களுக்கு வெற்றியை (அல்லாஹ்விடம்) அவர்கள் தேடிக்கொண்டுமிருந்தனர், பின்னர் அவர்கள் நன்கறிந்திருந்த இவ்வேதமானது அவர்களிடம் வந்தபோது அதை அவர்கள் நிராகரித்து விட்டனர், ஆகவே, நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.
2:90 بِئْسَمَا اشْتَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ اَنْ يَّڪْفُرُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ بَغْيًا اَنْ يُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ۚ فَبَآءُوْ بِغَضَبٍ عَلٰى غَضَبٍ‌ؕ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ مُّهِيْنٌ‏
2:90. தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.
2:90. (இந்த குர்ஆனை தங்கள்மீது இறக்காமல்) அல்லாஹ் தன்னுடைய அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன்னுடைய கிருபையை இறக்கி வைத்ததைப் பற்றிப் பொறாமைக் கொண்டு, அல்லாஹ் இறக்கி வைத்த இதையே நிராகரிப்பதன் மூலமாய் அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்துவிட்டார்கள். ஆதலால் அந்நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
2:90. எதனைக்கொண்டு அவர்கள் மன ஆறுதல் பெறுகின்றார்களோ அது எத்துணைக் கெட்டது! (அதாவது) அல்லாஹ் இறக்கியருளிய வழிகாட்டலை அவர்கள் நிராகரிப்பது தன் அடியார்களில் தான் நாடுகின்ற ஒருவர் மீது தனது கருணையை (வஹி மற்றும் தூதுத்துவத்தை) அல்லாஹ் இறக்கியருளுவது குறித்துக் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதனை அவர்கள் நிராகரிப்பது எவ்வளவு கெட்டது! ஆகவே (இப்போது) அவர்கள் கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். மேலும் இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இழிவுமிக்க தண்டனை உண்டு.
2:90. (இந்தக் குர் ஆனை தங்கள் மீது இறக்காமல்) அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடியவர் மீது தன்னுடைய பேரருளிலிருந்து இறக்கி வைத்ததற்காகப் பொறாமை கொண்டு அல்லாஹ் இறக்கிய (இ)தையே நிராகரிப்பதன் மூலம் எதற்கு பகரமாக தங்களை விற்று விட்டார்களோ அது (மிகக்) கெட்டது, அதனால் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குமேல் கோபத்திற்குரியவர்களாகத் திரும்பினார்கள், நிராகரிப்போர்களுக்கு இழிவு தரும் வேதனையுமுண்டு.
2:91 وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا نُؤْمِنُ بِمَآ اُنْزِلَ عَلَيْنَا وَيَكْفُرُوْنَ بِمَا وَرَآءَهٗ وَهُوَ الْحَـقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ‌ؕ قُلْ فَلِمَ تَقْتُلُوْنَ اَنْـــۢبِيَآءَ اللّٰهِ مِنْ قَبْلُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
2:91. “அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், “எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. “நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக.
2:91. "அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால் "எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டவை(யான வேதங்)களை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்" எனக் கூறி அவைகளைத் தவிர உள்ள இ(ந்)த(க்குர்ஆ)னை நிராகரித்து விடுகின்றார்கள். ஆனால், இதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை மெய்யாக்கி வைக்கின்ற உண்மையா(ன வேதமா)க இருக்கிறது. (நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக்) கேளுங்கள்: "(உங்கள் வேதத்தை) உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (உங்களில் தோன்றிய) அல்லாஹ்வுடைய நபிமார்களை இதற்கு முன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?"
2:91. “அல்லாஹ் இறக்கியருளியதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “எங்களுக்கு (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு) எது இறக்கி அருளப்பட்டிருக்கிறதோ அதன் மீது மட்டும்தான் நாங்கள் நம்பிக்கை கொள்வோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். அதைத் தவிர மற்றதை அவர்கள் நிராகரிக்கின்றார்கள். உண்மையில், அது சத்தியமானதாகவும் (முன்னரே) அவர்களிடம் இருந்த அறிவுரைகளை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது! அவர்களைக் கேளும்: “உங்களுக்கு அருளப்பட்டவற்றின் மீது நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால், இதற்கு முன் (இஸ்ராயீல் வம்சத்திலிருந்தே தோன்றிய) அல்லாஹ்வின் தூதர்களை நீங்கள் ஏன் கொலை செய்து கொண்டிருந்தீர்கள்?”
2:91. மேலும், “அல்லாஹ் இறக்கிவைத்த இவ்வேதத்தை நீங்கள் விசுவாசங் கொள்ளுங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மீது இறக்கப்பட்ட (தவ்ராத்)தை விசுவாசிப்போம்” எனக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னால் உள்ள (குர் ஆன் வேதத்தை நிராகரித்தும் விடுகின்றார்கள். (ஆனால்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்தக்கூடியதாக இருக்கும் நிலையில் இதுவே சத்தியமானதாகும், (நபியே!! அவர்களிடம்.) “நீங்கள் விசுவாசங்கொண்டோராக இருந்தால் அல்லாஹ்வின் நபிமார்களை இதற்குமுன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?” என்று நீர் கேட்பீராக!
2:92 وَلَقَدْ جَآءَکُمْ مُّوْسٰى بِالْبَيِّنٰتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْـتُمْ ظٰلِمُوْنَ‏
2:92. நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்; (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
2:92. (இஸ்ராயீலின் சந்ததிகளே!) நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்களோ அதற்குப் பின்னும் ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். (இவ்வாறே ஒவ்வொரு விஷயத்திலும்) நீங்கள் (வரம்பு கடந்த) அநியாயக்காரர்களாகவே இருக்கின்றீர்கள்.
2:92. மேலும், மூஸா உங்களிடம் (எத்துணைத்) தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தும், அவர் (உங்களை விட்டுத் திரும்பிச்) சென்ற உடனேயே நீங்கள் காளைக் கன்றை தெய்வமாக்கிக் கொண்டீர்கள். அந்த அளவுக்கு அக்கிரமக்காரர்களாய் நீங்கள் இருந்தீர்கள்.
2:92. மேலும், மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளை நிச்சயமாக கொண்டு வந்தார். அப்பால், அவருக்குப் பின்னர் நீங்கள் காளைக் கன்றை (தெய்வமாக) எடுத்துக்கொண்டீர்கள்; அந்நிலையில் நீங்களோ அநியாயக்காரர்களாக இருக்கிறீர்கள்.
2:93 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَکُمُ الطُّوْرَ ؕ خُذُوْا مَآ اٰتَيْنٰکُمْ بِقُوَّةٍ وَّاسْمَعُوْا ‌ ؕ قَالُوْا سَمِعْنَا وَعَصَيْنَا  وَاُشْرِبُوْا فِىْ قُلُوْبِهِمُ الْعِجْلَ بِکُفْرِهِمْ ‌ؕ قُلْ بِئْسَمَا يَاْمُرُکُمْ بِهٖۤ اِيْمَانُكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
2:93. தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.
2:93. உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்கு மேல் "தூர்" என்ற மலையை உயர்த்தி "உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை உறுதியாகக் கடைப் பிடியுங்கள். (அதற்குச்) செவிசாயுங்கள்" என்று கூறியதற்கு (அவர்கள் "நீங்கள் கூறியதைச்) செவியுற்றோம். (ஆனால் அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் (நம் கட்டளையை) நிராகரித்(து மாறு செய்)ததன் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்று(டைய பிரியம்) ஊட்டப்பட்டுவிட்டது. "(இந்நிலையிலும்) நீங்கள் (தவ்றாத்தை) நம்பிக்கை கொண்டவர்கள் என்(று உங்களைக் கூறுவதென்)றால் இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.
2:93. பிறகு உங்கள் மீது தூர் மலையை நாம் உயர்த்தி, நாம் உங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட உறுதியான ஒப்பந்தத்தை (சற்று) நினைத்துப் பாருங்கள். “உங்களுக்கு நாம் அருளுகின்ற அறிவுரைகளை வலுவாகக் கடைப்பிடியுங்கள். மேலும் (நம்முடைய கட்டளைக்குச்) செவிசாயுங்கள்” என்று நாம் கூறினோம். அதற்கு உங்கள் முன்னோர்கள் “நாங்கள் செவியேற்றோம்; ஆனால் மாறு செய்வோம்” என்று கூறினார்கள். அவர்களின் அசத்தியப்போக்கு எந்த அளவு முற்றியிருந்ததெனில், அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் காளைக் கன்று வழிபாட்டின் மீது அவர்களின் உள்ளங்கள் மோகம் கொண்டிருந்தன. “நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால், இழிவான இச்செயல்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுகின்ற உங்கள் நம்பிக்கை எத்துணை விசித்திரமானது!” என்று நீர் கூறும்.
2:93. உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கி, இன்னும் தூரை (சீனாய் மலையை) உங்களுக்குமேல் உயர்த்தியபொழுது, “உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை பலமாகப்பிடியுங்கள்; இன்னும், (அதை செவிசாய்த்துக் கேளுங்கள்” (என்று கூறியதையும் நினைவு கூருங்கள்) அதற்கவர்கள் “நாங்கள் செவியேற்றோம்) இன்னும், உம் கட்டளைக்கு நாங்கள் மாறு செய்தோம்” என்று கூறினார்கள். மேலும், அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய இதயங்களில் ஒரு காளைக் கன்றின் அன்பினை புகட்டப்பட்டுவிட்டார்கள், நீங்கள் விசுவாசங்கொண்டோராக இருந்தால் எதைச்செய்யுமாறு உங்களுடைய விசுவாசம் தூண்டுகிறதோ அது மிகக் கெட்டது” என்று (நபியே!) கூறுவீராக!
2:94 قُلْ اِنْ كَانَتْ لَـکُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ کُنْتُمْ صٰدِقِيْنَ‏
2:94. (நபியே!) “இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது; வேறு மனிதர்களுக்கு கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் சொல்வீராக.
2:94. "(யூதர்களே!) அல்லாஹ்விடமிருக்கும் மறுமை(யின் சுவர்க்க) வீடு (மற்ற) மனிதர்களுக்கன்றி உங்களுக்கே சொந்தமென்று (கூறும்) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (உங்களுக்குச் சொந்தமான அவ்வீட்டிற்குச் செல்வதற்கு) நீங்கள் மரணத்தை விரும்புங்கள்" என (நபியே!) நீங்கள் கூறுங்கள்.
2:94. அவர்களிடம் நீர் சொல்வீராக: “அல்லாஹ்விடம் இருக்கும் மறுமை வீடு மற்ற மனிதர்களுக்கன்றி உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாய் இருக்குமானால், (உங்களின் இந்த நம்பிக்கையில்) நீங்கள் உண்மையானவர்களாய் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள் (பார்ப்போம்!)”
2:94. அல்லாஹ்விடமிருக்கும் “மறுமை வீடானது (மற்ற) மனிதர்களுக்கன்றி உங்களுக்கே சொந்தமாக (இருந்து அதில் நீங்கள் உண்மையாளர்களாக) இருப்பின் (அவ்வீட்டிற்குச் செல்வதற்காக) மரணத்தை நீங்கள் விரும்புங்கள்” என (நபியே!) நீர் கூறுவீராக!
2:95 وَ لَنْ يَّتَمَنَّوْهُ اَبَدًاۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالظّٰلِمِيْنَ‏
2:95. ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.
2:95. (ஆனால்) அவர்கள் கரங்கள் (செய்து) அனுப்பியிருக்கும் (பாவங்களின்) காரணத்தால் அதை அவர்கள் அறவே விரும்பவே மாட்டார்கள். (இந்த) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான்.
2:95. தம் கைகளினால் சம்பாதித்துள்ள தீவினைகளின் காரணத்தால், அவர்கள் அதனை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் (என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்). மேலும், இந்த அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
2:95. (ஆனால்) அவர்கள் கரங்கள் முற்படுத்திவைத்தவற்றின் காரணத்தால் அதை அவர்கள் ஒருபோதும் விரும்பவே மாட்டார்கள்; மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிகின்றவன்.
2:96 وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰى حَيٰوةٍ  ۛۚ وَ مِنَ الَّذِيْنَ اَشْرَكُوْا‌‌  ۛۚ يَوَدُّ اَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ اَ لْفَ سَنَةٍ ۚ وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ يُّعَمَّرَ‌ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ ‏
2:96. அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.
2:96. அன்றி, (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக இணைவைத்து வணங்கும்) முஷ்ரிக்குகளை விடவும் (நீண்ட நாள்) உயிர்வாழ மிகவும் பேராசை உடையவர்களாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! அவர்களில் ஒவ்வொருவனும் "நான் ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழ வேண்டுமே?" என்று விரும்புவான். (அவ்வாறு நீண்ட நாள்) யிருடன் இருக்க அவனை விட்டு வைத்தாலும் அது வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனைத் தப்பிக்க வைத்துவிட மாட்டாது. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.
2:96. எல்லா மனிதர்களை விடவும் ஏன், இணைவைத்து வணங்குபவர்களை விடவும் இவர்களே வாழ்வின் மீது அதிகப் பேராசை கொண்டவர்களாய் இருப்பதை நீர் காண்பீர். அவர்களில் ஒவ்வொருவனும் (எப்படியாவது) ஓராயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆயினும், அவனுடைய நீண்ட ஆயுள், வேதனையிலிருந்து அவனை விலக்கிவிடாதே! அவர்கள் எத்தகைய செயல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அல்லாஹ் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
2:96. மேலும், மற்றைய மனிதர்களையும் (குறிப்பாக) இணை வைத்துக் கொண்டிருந்தோரையும்விட, (இவ்வுலக) வாழ்வின்மீது அதிக பேராசை கொண்டவர்களாக (நபியே)! அவர்களை நிச்சயமாக நீர் காண்பீர்; அவர்களில் ஒருவன், தான் ஆயிரம் வருடங்கள் வயதளிக்கப்பட வேண்டுமென விரும்புவான். (அவ்வாறு அதிகநாட்கள்) அவன் வயதளிக்கப்பட்டாலும் அது (நரக) வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனை தூரமாக்கி வைத்துவிடாது. இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை பார்க்கின்றவன்.
2:97 قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِّجِبْرِيْلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰى قَلْبِكَ بِاِذْنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَّبُشْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏
2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
2:97. "(உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி" என (நபியே! நீங்கள் யூதர்களை)க் கேளுங்கள். நிச்சயமாக அவர் இதனை அல்லாஹ்வின் கட்டளைப்படியே உங்களது உள்ளத்தில் இறக்கிவைத்தார். இது தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துவதாகவும், நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும், நம்பிக்கை உடையவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கின்றது.
2:97. (நபியே!) நீர் கூறும்: யாரேனும் ஜிப்ரீலுக்குப் பகைவராக இருந்தால் அவர் அறிந்து கொள்ளட்டும் அல்லாஹ்வின் ஆணைப்படியே ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார். இது (எத்தகைய வேதமெனில்) தனக்கு முன்னுள்ள வேதங்களை மெய்ப்படுத்துவதாகவும், இறைநம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும், வெற்றிக்கான நற்செய்தி அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. (ஜிப்ரீல் மீது அவர்கள் பகைமை கொள்வதற்கு இதுவே காரணமெனில், நபியே! நீர் கூறும்:)
2:97. எவர் ஜிப்ரீலுக்கு விரோதியாக உள்ளாரோ அவருக்கு நீர் கூறுவீராக: நிச்சயமாக அவர் தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தின் மீது (குர் ஆனாகிய) இதனை இறக்கிவைத்தார்; (இது) தனக்கு முன்னுள்ள வேதங்கள் அனைத்தையும் உண்மைப்படுத்தக்கூடியதாகவும், நேர்வழிகாட்டுகிறதாகவும், விசுவாசங்கொண்டோர்க்கு நன்மாராயமாகவும் இருக்கின்றது.
2:98 مَنْ كَانَ عَدُوًّا لِّلّٰهِ وَمَلٰٓٮِٕکَتِهٖ وَ رُسُلِهٖ وَجِبْرِيْلَ وَمِيْكٰٮلَ فَاِنَّ اللّٰهَ عَدُوٌّ لِّلْكٰفِرِيْنَ‏
2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
2:98. (உங்களில்) எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயீலுக்கும் எதிரியாகி (அவர்களை நிராகரித்து) விட்டால் (அந்)நிராகரிப்பவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் எதிரியாகவே இருப்பான்.
2:98. “எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் பகைவராக இருந்தால், நிச்சயமாக அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ்வும் பகைவனாகவே இருப்பான்.”
2:98. உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவராக இருக்கிறாரோ (அத்தகைய) நிராகரிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ் பகைவனாக இருக்கிறான்.
2:99 وَلَقَدْ اَنْزَلْنَآ اِلَيْكَ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ‌‌ۚ وَمَا يَكْفُرُ بِهَآ اِلَّا الْفٰسِقُوْنَ‏
2:99. (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.
2:99. (நபியே!) நிச்சயமாக மிகத் தெளிவான வசனங்களையே உங்களுக்கு இறக்கியிருக்கின்றோம். ஆதலால் பாவிகளைத் தவிர (மற்றெவரும்) அவைகளை நிராகரிக்க மாட்டார்கள்.
2:99. இன்னும் (நபியே! சத்தியத்தை) தெளிவாக எடுத்துரைக்கும் வசனங்களை நிச்சயமாக உமக்கு நாம் இறக்கி அருளியிருக்கிறோம். ஃபாஸிக்களை (கீழ்ப்படியாதவர்களை)த் தவிர வேறு எவரும் அவற்றை(ப் பின்பற்றுவதை) நிராகரிக்க மாட்டார்கள்.
2:99. இன்னும், தெளிவான வசனங்களை நிச்சயமாக உம்மீது நாம் இறக்கியிருக்கிறோம்; மேலும், (தீய செயல்களுடைய) பாவிகளைத்தவிர (வேறெவரும்) அவைகளை நிராகரிக்கமாட்டார்கள்.
2:100 اَوَکُلَّمَا عٰهَدُوْا عَهْدًا نَّبَذَهٗ فَرِيْقٌ مِّنْهُمْ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
2:100. மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
2:100. அவர்கள் (தங்கள் நபியிடம்) எவ்வுடன்படிக்கையைச் செய்தபோதிலும் அவர்களில் ஒரு பிரிவினர் அதனை (நிறைவேற்றாது) எடுத்தெறிந்து விடவில்லையா? ஆகவே அவர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
2:100. அவர்கள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்வதும், (பிறகு) அவர்களில் யாராவது ஒரு சாரார் அதனை முறித்து விடுவதும் எப்பொழுதுமே (அவர்களுடைய) வழக்கமாக இருந்து வந்ததில்லையா? தவிரவும் அவர்களில் பெரும்பாலோர் உளமார்ந்த நம்பிக்கை கொள்வதில்லை.
2:100. அவர்கள் உடன்படிக்கையைச் செய்த போதெல்லாம், அவர்களில் ஒருசாரார் அதனை (உடைத்து) எறிந்து விட்டனர் அல்லவா? மாறாக அவர்களில் பெரும்பாலோர் விசுவாசிக்கமாட்டார்கள்.
2:101 وَلَمَّا جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِيْقٌ مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَۙ کِتٰبَ اللّٰهِ وَرَآءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا يَعْلَمُوْنَ‏
2:101. அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.
2:101. அல்லாஹ்விடமிருந்து (நம்முடைய) தூதராகிய (நீங்கள்) அவர்களிடம் வந்து அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப் படுத்தியபோதிலும், (முந்திய) வேதம் வழங்கப்பட்ட அவர்களில் பலர் அல்லாஹ்வுடைய (இந்த) திருமறையையே தாங்கள் அறியாதது போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கிப்போட்டு விடுகின்றனர்.
2:101. மேலும், அல்லாஹ்விடமிருந்து யாரேனும் ஓர் இறைத்தூதர் அவர்களிடமிருந்த வேதத்தை உண்மைப்படுத்தக்கூடியவராக அவர்களிடம் வந்தபோது, வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் தாம் எதுவும் அறியாதவர்கள் போன்று அல்லாஹ்வின் வேதத்தைத் தம் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிட்டார்கள்.
2:101. மேலும் - அவர்களுடன் இருப்ப(தான வேதத்)தை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது – வேதங்கொடுக்கப் பட்டவர்களில் ஒரு கூட்டத்தினர், ஏதும் அறியாதவர்களைப்போன்று அல்லாஹ்வின் வேதத்தை தங்கள் முதுகுகளுக்கப்பால் எறிந்துவிட்டனர்.
2:102 وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ‌‌ۚ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ‌ؕ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْؕ‌ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖ‌ؕ وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ‌ؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‌ؕ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ‌ؕ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏
2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
2:102. மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ "நிராகரிப்பவராக" இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் "பாபிலூன்" (என்னும் ஊரில்) "ஹாரூத்" "மாரூத்" என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) "நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர் களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர் களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதேயில்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!
2:102. (இதற்குப் பதிலாக) ஸுலைமானுடைய ஆட்சியின்போது ஷைத்தான்கள் எடுத்தோதி வந்த (சூனியத்)தை அவர்கள் பின்பற்றலானார்கள். ஆனால் ஸுலைமான் (ஒருபோதும்) நிராகரிக்கவில்லை. ஆயினும் மக்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஷைத்தான்கள்தாம் நிராகரித்தார்கள். மேலும், பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் பின்பற்றினார்கள். (ஆனால்) எவருக்கேனும் சூனியக்கலையைக் கற்றுக் கொடுக்க நேரும்போது அந்த வானவர்கள், “நாங்கள் உங்களுக்கு ஒரு சோதனையாகவே இருக்கிறோம்; ஆகவே, நீங்கள் (இதனைக் கொண்டு) இறை நிராகரிப்பை மேற்கொள்ள வேண்டாம்” என எச்சரித்து விடுவார்கள். ஆனால், இதற்குப் பிறகும், கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிளவை உருவாக்குகின்ற சூனியத்தை அவ்விருவரிடம் இருந்து அவர்கள் கற்று வந்தனர். அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் இந்த சூனியத்தைக் கொண்டு எவருக்கும் (எந்த வகையிலும்) அவர்களால் தீங்கிழைக்க முடியாது. உண்மையில் தங்களுக்குப் பலனளிக்காததும், தீங்கிழைக்கக் கூடியதுமானதையே அவர்கள் கற்றனர். மேலும் (சூனியத்தைக் கற்று) அதனை விலைக்கு வாங்கிக் கொண்டவனுக்கு மறுமையில் யாதொரு பங்கும் கிடையாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தேயிருந்தனர். தங்கள் உயிர்களை விற்று அவர்கள் வாங்கிக் கொண்ட பொருள் எத்துணைக் கெட்டது! இதனை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?
2:102. மேலும் அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்காலத்தில் ஷைத்தான்கள் (பொய்யாக) ஓதியவற்றைப் பின்பற்றினார்கள்; இன்னும் ஸுலைமான், (சூனியம் செய்து அல்லாஹ்வை) நிராகரிக்கவில்லை. எனினும் ஷைத்தான்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சூனியத்தையும் பாபிலோன் நகரினில் ஹாருத், மாருத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்ததாகக் கூறி பலவற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தார்கள். மேலும், அவ்விருவரும் “நாங்கள் சோதனையாக இருக்கிறோம், ஆதலால் இதைக் கற்று நீ காஃபிராகி விட வேண்டாம்” என்று கூறும்வரை, அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை, ஆகவே, கணவனுக்கும், மனைவிக்குமிடையில் எதைக்கொண்டு பிரிப்பார்களோ, அதை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொள்வார்கள்; மேலும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அதைக்கொண்டு அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைக்கக் கூடியவர்களாக இல்லை. அன்றியும், அவர்களுக்கு இடரளிப்பதும், அவர்களுக்கு பயனளிக்காததுமானதை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இன்னும், அ(ச்சூனியத்)தை எவர் விலைக்கு வாங்கிக் கொண்டாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமுமில்லை என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்திருக்கின்றனர். மேலும், அவர்கள் அறிந்து கொள்ளக்கூடியவர்களானால் எதற்குப்பகரமாக தங்களையே அவர்கள் விற்று விட்டார்களோ அது மிகக் கெட்டது.
2:103 وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَيْرٌ ؕ‌ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏
2:103. அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்; இதனை அவர்கள் அறிய வேண்டாமா?
2:103. ஆகவே அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, (அச்சூனியங்களை விட்டு) விலகிக்கொண்டால் (அவர்களுக்கு) அல்லாஹ்விடம் கிடைக்கும் சன்மானம் நிச்சயமாக மிக மேலானதாயிருக்கும். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!
2:103. உண்மையில் அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கைகொண்டு, இறையச்சமுள்ள வாழ்வை மேற்கொண்டிருந்தால் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலி மேலானதாக இருந்திருக்கும். அந்தோ! இதனை அவர்கள் அறிந்திருக்கவில்லையே!
2:103. இன்னும், நிச்சயமாக அவர்கள் விசுவாசங்கொண்டு (அல்லாஹ்வினால் தடுக்கப்பட்டவற்றைத் தவிர்த்து) அஞ்சிக்கொண்டார்களானால் (அவர்களுக்குத்) திட்டமாக அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகச்சிறந்ததாக இருக்கும், (இதுபற்றி) அவர்கள் அறிந்து கொள்வார்களானால் (மிக்க நன்று)!
2:104 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَ قُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ‌ؕ وَلِلْڪٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ‏
2:104. ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராயினா” என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா” என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.
2:104. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) "ராயினா" எனக் கூறாதீர்கள். (அதற்குப் பதிலாக "எங்களைப் பாருங்கள்!" என்ற பொருளைத் தரும்) "உன்ளுர்னா" எனக் கூறுங்கள். (மேலும் நபி கூறுவதை முழுமையாக) செவிமடுங்கள். (இதற்கு மாறாகக் கூறும்) நிராகரிப்பவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
2:104. இறைநம்பிக்கை கொண்டவர்களே! ‘ராஇனா’ என்று சொல்லாதீர்கள். மாறாக ‘உன்ளுர்னா’ என்று சொல்லுங்கள்; மேலும் (கவனத்துடன்) செவியுறுங்கள். இந்த நிராகரிப்பாளர்களுக்கோ துன்புறுத்தும் வேதனை உண்டு.
2:104. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (நபியிடம்), யூதர்கள் மொழியில் தவறான பொருள்களைக் கொண்டதான ‘ராஇனா’ எனக்கூறப்படுவதைக் கூறாதீர்கள். (எங்களை கவனிப்பீராக) என்ற பொருள் கொண்ட ‘உள்ளுர்னா’ என்று கூறுங்கள், இன்னும், (அவர் கூற்றுக்கு) நீங்கள் செவிசாயுங்கள். மேலும், நிராகரிப்போருக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
2:105 مَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَلَا الْمُشْرِكِيْنَ اَنْ يُّنَزَّلَ عَلَيْڪُمْ مِّنْ خَيْرٍ مِّنْ رَّبِّکُمْ‌ؕ وَاللّٰهُ يَخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
2:105. அஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்; அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன்.
2:105. (நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களாயினும், இணைவைத்து வணங்குபவர்களாயினும் (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்கள் (தங்களிடம் உள்ளதைவிட) மேலானதொன்று உங்கள் இறைவனால் உங்கள்மீது அருளப்படுவதை விரும்பவே மாட்டார்கள். ஆனால் அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்குத் தன் கிருபையைச் சொந்தமாக்கி விடுகின்றான். அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
2:105. சத்தியத்தை மேற்கொள்ள மறுப்பவர்கள் அவர்கள் வேதம் அருளப் பெற்றவர்களாய் இருந்தாலும் சரி, இறைவனுக்கு இணை கற்பிப்பவர்களாய் இருந்தாலும் (சரியே) உம் இறைவனிடமிருந்து (ஏதேனும்) ஒரு நன்மை உம்மீது இறக்கியருளப்படுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். ஆனால், தன் கருணையை வழங்க, தான் நாடியவர்களையே அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். மேலும், அல்லாஹ் மகத்தான கருணை பொழிபவனாய் இருக்கின்றான்.
2:105. விசுவாசங்கொண்டோரே! வேதத்தையுடையோரில் நிராகரிப்போரும் இணை வைத்துக்கொண்டிருப்போரும் எந்த நன்மையும் உங்கள் இரட்சகனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்படுவதை விரும்புவதில்லை, அல்லாஹ்வோ, தான் நாடியவருக்குத் தன் கிருபையை சொந்தமாக்கிக் கொள்கிறான், மேலும், அவர்கள் மகத்தான பேரருளுடையவன்.
2:106 مَا نَنْسَخْ مِنْ اٰيَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَيْرٍ مِّنْهَآ اَوْ مِثْلِهَا ‌ؕ اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
2:106. (நபியே!) யாதொரு வசனத்தை நாம் மாற்றினாலும் அல்லது அதை மறக்கடித்தாலும் அதற்கு ஒப்பானதை அல்லது அதைவிடச் சிறந்ததை நாம் கொண்டு வருவோம். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் நிச்சயமாக ஆற்றலுடையவன் என்பதை நீங்கள் அறியவில்லையா?
2:106. எந்த ஒரு வசனத்தையாவது நாம் அகற்றிவிட்டால் அல்லது மறக்கச் செய்துவிட்டால் (அதற்குப் பதிலாக) அதனினும் சிறந்த அல்லது அதே போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதை நீங்கள் அறியவில்லையா?
2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால், அல்லது அதை மறக்கச் செய்துவிட்டால்; அதைவிடச் சிறந்ததை அல்லது அது போன்றவற்றை நாம் கொண்டுவருவோம்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன் என்பதை நீர் அறியவில்லையா?
2:107 اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَمَا لَـکُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏
2:107. நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2:107. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதென்பதையும் நீங்கள் அறியவில்லையா? (நம்பிக்கை யாளர்களே!) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனும் இல்லை; உதவி செய்பவனுமில்லை.
2:107. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் அவனைத் தவிர வேறு எந்தப் பாதுகாவலனும் உதவியாளனும் உங்களுக்கு இல்லை என்பதையும் நீங்கள் அறியவில்லையா?
2:107. நிச்சயமாக அல்லாஹ்- அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது என்பதை நீர் அறியவில்லையா? (விசுவாசங்கொண்டோரே) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும் எவ்வித உதவியாளரும் இல்லை.
2:108 اَمْ تُرِيْدُوْنَ اَنْ تَسْــٴَــلُوْا رَسُوْلَـكُمْ كَمَا سُٮِٕلَ مُوْسٰى مِنْ قَبْلُ‌ؕ وَمَنْ يَّتَبَدَّلِ الْکُفْرَ بِالْاِيْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ‏
2:108. இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை “குஃப்ரினால்” மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்.
2:108. (நம்பிக்கையாளர்களே!) இதற்கு முன்னர் மூஸாவிடம் (அவருடைய மக்கள் வீணான கேள்விகளைக்) கேட்டதைப் போல் நீங்களும் உங்களுக்கு அனுப்பட்ட தூதரிடம் கேட்க விரும்பு கிறீர்களா? எவர் (இத்தகைய கேள்விகளைக் கேட்டு) தன்னுடைய நம்பிக்கையை நிராகரிப்பைக் கொண்டு மாற்றிக் கொள்கிறாரோ அவர் நேரான வழியைவிட்டு மெய்யாகவே தவறிவிட்டார்.
2:108. இதற்கு முன்னால் மூஸாவிடம் வினவப்பட்டது போல (இப்பொழுது) நீங்கள், உங்கள் இறைத்தூதரிடம் வினவ விரும்புகிறீர்களா? உண்மை யாதெனில், எவர் இறைநம்பிக்கையுடைய நடத்தையை விட்டுவிட்டு நிராகரிப்புப் போக்கை மேற்கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக நேரான வழியை விட்டுப் பிறழ்ந்து விட்டார்.
2:108. விசுவாசங்கொண்டோரே! இதற்கு முன்னர் மூஸா(விடம்) கேள்விகள் கேட்கப்பட்டமாதிரி நீங்களும் உங்கள் தூதரிடம் (வீணான கேள்விகளைக்) கேட்க நாடுகிறீர்களா? எவர் (இவ்வாறு கேள்விகளைக் கேட்டுத்) தன்னுடைய ஈமானை நிராகரிப்பை (குப்ரை)க் கொண்டு மாற்றிக் கொள்கிறாரோ அவர் நேரான வழியை திட்டமாகத் தவறவிட்டு விட்டார்.
2:109 وَدَّ کَثِيْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يَرُدُّوْنَكُمْ مِّنْۢ بَعْدِ اِيْمَانِكُمْ كُفَّارًا ۖۚ حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَـقُّ‌ ۚ فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى کُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
2:109. வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.
2:109. வேதத்தையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாளர்களாகிய உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டுமே! என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் இவ்வாறு அவர்கள் விரும்புவதன் காரணமெல்லாம் அவர்களுக்கு (உங்கள் மீது)ள்ள பொறாமைதான். ஆகவே, அல்லாஹ்வுடைய (மற்றொரு) கட்டளை வரும் வரையில் (அவர்களை) நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிகவும் ஆற்றலுடையவன்.
2:109. வேதம் அருளப்பட்டவர்களில் பலர் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு விட்டதற்குப் பின்னர் உங்களை (எவ்விதத்திலாவது) நிராகரிப்பவர்களாய் திருப்பி விட வேண்டும் என விரும்புகின்றார்கள். சத்தியம் தமக்குத் தெளிவாகிவிட்ட பின்னரும் தங்களிடமுள்ள பொறாமையின் காரணமாக (இவ்வாறு செய்ய முனைகின்றார்கள்;) அல்லாஹ் தன் தீர்ப்பைச் செயல்படுத்தும் வரை நீங்கள் அவர்களுடைய செயல்களை மன்னித்து விடுங்கள். மேலும் பொறுத்துக் கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் (என்பதை நம்பி நிம்மதியாய் இருங்கள்).
2:109. வேதத்தையுடையோரில் அநேகர், உண்மை அவர்களுக்கு இன்னதெனத் தெளிவாகத் தெரிந்த பின்னும் அவர்களுக்கு உங்கள் மீதுள்ள பொறாமையின் காரணமாக நீங்கள் ஈமான் கொண்ட பிறகும் உங்களை நிராகரிப்போராக திருப்பிவிட வேண்டுமென்று ஆசை வைக்கிறார்கள், ஆகவே, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவரும் வரை (அவர்களை) நீங்கள் மன்னித்து விடுங்கள்; பொருட்படுத்தாது விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
2:110 وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ  ‌ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ‌ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
2:110. இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
2:110. அன்றி, நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தும், "ஜகாத்" (மார்க்கவரி) கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் (மரணத்திற்கு) முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டி அனுப்பி வைப்பீர்களோ அதனையே அல்லாஹ்விடம் (மறுமையில்) பெற்றுக்கொள்வீர்கள். (ஆதலால் இறப்பதற்கு முன்னரே இயன்றளவு நன்மை செய்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.
2:110. மேலும், தொழுகையை நிலைநாட்டுங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள்; உங்(கள் மறுமை நலன்)களுக்காக நற்செயல் எதையேனும் நீங்கள் சம்பாதித்து முன்னரே அனுப்பி இருந்தால் அதனை அல்லாஹ்விடம் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் உற்று நோக்கியவனாய் இருக்கின்றான்.
2:110. நீங்கள் தொழுகையையும் நிறைவேற்றுங்கள்; ‘ஜகாத்’ தையும் கொடுங்கள், உங்களுக்காக நீங்கள் எந்த நன்மையை முற்படுத்தி வைக்கின்றீர்களோ அதனை அல்லாஹ்விடத்தில் பெற்றுக் கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கிறவன்.
2:111 وَقَالُوْا لَنْ يَّدْخُلَ الْجَـنَّةَ اِلَّا مَنْ كَانَ هُوْدًا اَوْ نَصٰرٰى‌ؕ تِلْكَ اَمَانِيُّهُمْ‌ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَکُمْ اِنْ کُنْتُمْ صٰدِقِيْنَ‏
2:111. “யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
2:111. (நபியே!) கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருப்பவரைத் தவிர (மற்ற எவரும்) சுவர்க்கம் நுழையவே மாட்டார்கள் என அவ(ரவ)ர்கள் கூறுகிறார்கள். இது அவர்களுடைய வீண் நம்பிக்கையே(யன்றி உண்மையல்ல. ஆதலால் அவர்களை நோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் உங்களுடைய (இவ்வார்த்தைக்குரிய) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்."
2:111. “ஒரு யூதராகவோ (கிறிஸ்தவர்கள் வாதிக்கின்றபடி) ஒரு கிறிஸ்தவராகவோ இல்லாத எவரும் சுவனம் புகமாட்டார்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். இவை அவர்களின் நப்பாசைகளே ஆகும். அவர்களிடம் கூறுவீராக: “(உங்கள் வாதத்தில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், அதற்குரிய உங்களுடைய ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.” (உண்மையில் தனிப்பட்ட உரிமை உங்களுக்கும் இல்லை. வேறு எவருக்கும் இல்லை.)
2:111. (நபியே) யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ ஆகியவரைத் தவிர (வேறெவரும்) சுவர்க்கம் பிரவேசிக்கவே மாட்டார்கள் என அவர்கள் கூறுகிறார்கள், இது அவர்களுடைய வீண் எண்ணமேயாகும்; (ஆகவே, உங்கள் கூற்றில்) “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களுடைய ஆதாரத்தை கொண்டு வாருங்கள்” என (நபியே!) நீர் கூறுவீராக.
2:112 بَلٰى مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
2:112. அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:112. (உண்மை) அவ்வாறன்று! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை (முற்றிலும்) அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறாரோ அவருக்கே அவர் செய்யும் நன்மையின் கூலி அவருடைய இறைவனிடம் உண்டு. அன்றி, இத்தகையவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
2:112. ஆம்! எவர் தம்மை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து, செயல் அளவிலும் நன்னடத்தையை மேற்கொள்பவராய் இருக்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அவருடைய இறைவனிடம் அவருக்கு உண்டு. மேலும் அத்தகையவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
2:112. ஆம்! எவர் தன் முகத்தை அவர் நன்மை செய்து கொண்டிருக்கிற நிலையில் அல்லாஹ்வுக்காக ஒப்படைக்கிறாரோ – அவருடைய நற்கூலி அவருடைய இரட்சகனிடம் அவருக்குண்டு, (இத்தகையோர்) அவர்கள் மீது எத்தகைய பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்.
2:113 وَقَالَتِ الْيَهُوْدُ لَـيْسَتِ النَّصٰرٰى عَلٰى شَىْءٍ وَّقَالَتِ النَّصٰرٰى لَـيْسَتِ الْيَهُوْدُ عَلٰى شَىْءٍۙ وَّهُمْ يَتْلُوْنَ الْكِتٰبَؕ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ مِثْلَ قَوْلِهِمْ‌ۚ فَاللّٰهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
2:113. யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.
2:113. தவிர, "கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை" என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறே) "யூதர்கள் எ(ந்த மார்க்கத்) திலுமில்லை" எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால் இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் "பழைய ஏற்பாடாகிய" தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக் கொள்வதுபோலவே (வேதத்தை) அறிந்துகொள்ளாத (இணைவைத்து வணங்குப)வர்கள் ("யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்களல்ல" எனக்) கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்.
2:113. யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் (சத்தியத்தின்) எந்த அடிப்படையிலும் இல்லை.” கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் (சத்தியத்தின்) எந்த அடிப்படையிலும் இல்லை” ஆயினும் இந்த இரு சாராரும் வேதம் ஓதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்கள் சொல்வது போன்றுதான் வேதத்தை அறியாதவர்களும் கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் விஷயங்கள் பற்றி இறுதிநாளில் இவர்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.
2:113. இன்னும் “கிறிஸ்தவர்கள் எந்த மார்க்கத்திலுமில்லை” என்று யூதர்கள் கூறுகின்றனர். “யூதர்கள் எந்த மார்க்கத்திலுமில்லை” என்று கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். அவர்களோ வேதத்தை ஓதுகின்றவர்களாக இருக்க (இவ்வாறு கூறுகின்றார்கள்) இவ்வாறே அவர்கள் கூற்றைப் போன்றதை அறிந்து கொள்ளாதோர் கூறுகின்றனர். ஆகவே, எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ அதில் மறுமைநாளில் அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.
2:114 وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ يُّذْكَرَ فِيْهَا اسْمُهٗ وَسَعٰـى فِىْ خَرَابِهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ يَّدْخُلُوْهَآ اِلَّا خَآٮِٕفِيْنَ ؕ لَهُمْ فِى الدُّنْيَا خِزْىٌ وَّلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ‏
2:114. இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
2:114. அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட பெரிய அநியாயக்காரன் யார்? அச்சத்துடனன்றி அவைகளில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை. (அவ்வாறிருக்க அதற்கு மாறாக நடக்கும்) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு.
2:114. மேலும் மஸ்ஜித்களில் இறையில்லங்களில் அல்லாஹ்வின் பெயர் நினைவுகூரப்படுவதை எவன் தடுக்கின்றானோ, மேலும் அவற்றைப் பாழாக்க முயற்சி செய்கின்றானோ அவனை விடக் கொடிய அக்கிரமக்காரன் யார்? அத்தகையவர்கள் அந்த இறையில்லங்களில் நுழைவதற்கே அருகதையற்றவர்களாவர்; ஒருவேளை அங்கே அவர்கள் செல்ல வேண்டியதாய் இருந்தாலும் அச்சம் கொண்டவர்களாகவே (செல்லும் சூழ்நிலை) இருக்க வேண்டும். அவர்களுக்கு இம்மையிலும் இழிவுண்டு. மறுமையிலும் பெரும் வேதனை உண்டு.
2:114. அன்றியும் அல்லாஹ்வுடைய ‘மஸ்ஜிதுகளில் அவனுடைய (சங்கையான) பெயர் அவற்றில் கூறப்படுவதைத் தடுத்து அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களேயன்றி அவைகளில் நுழைய அவர்களுக்குத் தகுதியில்லை, (அவைகளில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படுவதைத் தடுத்து அவற்றைப் பார்க்க முற்படும்) அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு; மறுமையிலோ அவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு.
2:115 وَلِلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ‌ فَاَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ وَاسِعٌ عَلِيْمٌ‏
2:115. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்.
2:115. கிழக்கு திசையும் மேற்கு திசையும் அல்லாஹ்வுக்கே (உரியன). ஆதலால் நீங்கள் எத்திசையை நோக்கினும் அது அல்லாஹ்வின் திசையே! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன்.
2:115. கிழக்கு, மேற்கு யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே, நீங்கள் எங்கு திரும்பினாலும், அங்கு அல்லாஹ்வின் திசை இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் மிக விசாலமானவன்; மிக அறிந்தவன்.
2:115. மேலும், கிழக்கும் மற்றும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே நீங்கள் (தொழுகைக்காக) எங்கு திரும்பினும், அங்கே அல்லாஹ்வின் (சங்கையான) முகம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக்க அறிந்தவன்.
2:116 وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ‌ سُبْحٰنَهٗ ‌ؕ بَل لَّهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ‏
2:116. இன்னும் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்” என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை; இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
2:116. "அல்லாஹ் (தனக்கு) சந்ததி ஏற்படுத்திக் கொண்டான்" என்றும் கூறுகின்றனர். அவ்வாறன்று; அவனோ மிக்க பரிசுத்தமானவன். அன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே! இவை அனைத்தும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றன(வே அன்றி சந்ததியாகக் கூடிய தகுதியில் எந்த ஒன்றுமே இல்லை).
2:116. “அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் (இக்கூற்றிலிருந்து) தூய்மையானவன். உண்மை யாதெனில், வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அவனுக்கே உரியனவாகும். அனைத்தும் அவனது கட்டளைக்கே கீழ்ப்படிபவைகளாய் இருக்கின்றன.
2:116. இன்னும் “அல்லாஹ் (தனக்குப்) புதல்வனை எடுத்துக் கொண்டான்” (அவனுக்கு மகன் இருக்கிறான்) என்று அவர்கள் கூறுகின்றனர்; அவனோ மிகப் பரிசுத்தமானவன்; (அவர்கள் கூறுகிறவாறு அல்ல’ வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை (அனைத்தும்) அவனுக்கே உரியவை; (இவை) ஒவ்வொன்றும் அவனுக்கே கீழ்படிபவைகள்.
2:117 بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
2:117. (அன்றி) அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை "ஆகுக!" எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது.
2:117. ஆதியில் வானங்களையும், பூமியையும் படைத்து உருவாக்கியவன் அவனே! அவன் எதனையும் படைப்பதற்குத் தீர்மானித்தால், ‘ஆகுக’ என்றுதான் அதற்கு ஆணையிடுவான். அது உடனே ஆகிவிடுகின்றது.
2:117. வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றி அவன் படைக்கிறவன், இன்னும், அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் ‘அவன் அதற்குக் கூறுவதெல்லாம் ‘ஆகுக’ என்பதுதான்; அது ஆகிவிடும்.
2:118 وَقَالَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ لَوْلَا يُكَلِّمُنَا اللّٰهُ اَوْ تَاْتِيْنَآ اٰيَةٌ ‌ ؕ كَذٰلِكَ قَالَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّثْلَ قَوْلِهِمْؕ‌ تَشَابَهَتْ قُلُوْبُهُمْ‌ؕ قَدْ بَيَّنَّا الْاٰيٰتِ لِقَوْمٍ يُّوْقِنُوْنَ‏
2:118. இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை; மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?” என்று; இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.
2:118. மேலும் கல்வி (அறிவு) இல்லாதோர் "அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?" எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கின்றன. (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்.
2:118. “எங்களுடன் நேரடியாகவே அல்லாஹ் ஏன் பேசக்கூடாது? அல்லது எங்களிடம் ஏதேனும் ஒரு சான்று ஏன் வரக்கூடாது?” என்று அறியாதவர்கள் கேட்கிறார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன்பு சென்றவர்களும் கூறிக்கொண்டிருந்தார்கள். (நேர்வழி தவறிய) இந்த மக்கள் அனைவரின் மனப்பாங்கும் எப்பொழுதும் ஒரே மாதிரியாய் இருக்கின்றது. உறுதியாக நம்புவோர்க்கு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்கிக் காட்டி விட்டோம்.
2:118. மேலும் “(நபியே!) உம்முடைய நபித்துவத்தைப்பற்றி அல்லாஹ் எங்களுடன் பேச வேண்டாமா? அல்லது எங்களிடமும் ஓர் அத்தாட்சி வர வேண்டாமா? என அறியாதவர்கள் கூறுகின்றனர். இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவர்களின் கூற்றைப்போன்றே கூறினார்கள். இவர்களுடைய இதயங்கள் (அவர்களின் இதயங்களுக்கு) ஒப்பாகி விட்டன. உறுதி கொள்ளும் சமூகத்தார்க்கு நம்முடைய அத்தாட்சிகளை திட்டமாக நாம் தெளிவாக்கியிருக்கிறோம்.
2:119 اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَـقِّ بَشِيْرًا وَّنَذِيْرًا ۙ‌ وَّلَاتُسْــٴَــلُ عَنْ اَصْحٰبِ الْجَحِيْمِ‏
2:119. (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.
2:119. (நபியே! நன்மை செய்பவர்களுக்கு) இவ்வேதத்தின் மூலம் நீங்கள் நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டுமே) நாம் உங்களை அனுப்பி வைத்திருக்கிறோம். ஆகவே (அவர்கள் உங்களுடைய சொல்லை நிராகரித்து நரகம் சென்றால், அந்)நரகவாசிகளைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது.
2:119. சத்திய(ஞான)த்துடன், நற்செய்தியை அறிவிப்பவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் உம்மை திண்ணமாக நாம் அனுப்பியிருக்கின்றோம். (இதனைவிடத் தெளிவான சான்று வேறு என்ன இருக்க முடியும்?) நரகத்துடனேயே தங்களை இணைத்துக் கொண்டவர்களைப் பற்றி நீர் வினவப்படமாட்டீர்.
2:119. (நபியே!) உம்மை உண்மையான மார்க்கத்தைக் கொண்டு (நல்லவர்களுக்கு) நன்மாராயங்கூறக்கூடியவராக மற்றும் (தீயவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவராக நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம், மேலும், நரகவாசிகள் பற்றி நீர் கேட்கப்படமாட்டீர்.
2:120 وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ‌ؕ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى‌ؕ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِىْ جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍؔ‏
2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
2:120. (நபியே!) நீங்கள் யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரையில் உங்களைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே அவர்களை நோக்கி) "அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்) தான் நேரான வழி. (அதனையே பின்பற்றுவேன்)" எனக் கூறிவிடுங்கள். அன்றி உங்களுக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உங்களை காப்பவனுமில்லை; உங்களுக்கு உதவி செய்பவனுமில்லை.
2:120. (நபியே!) யூதர்களும் கிறிஸ்தவர்களும், அவர்களுடைய வழி முறையை நீர் பின்பற்றாத வரை உம்மைப் பற்றி மன நிறைவடையவே மாட்டார்கள். “அல்லாஹ் காட்டிய வழியே நேர்வழியாகும்” என்று அவர்களிடம் நீர் தெளிவாகச் சொல்லி விடும். மேலும் இந்த ஞானம் உம்மிடம் வந்த பிறகும், அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றுவீராயின் அல்லாஹ்வின் பிடியிலிருந்து காப்பாற்றும் நண்பரோ உதவியாளரோ எவரும் உமக்கு இருக்கமாட்டார்.
2:120. (நபியே) யூதர்களும், கிறிஸ்தவர்களும், நீர் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும்வரை உம்மைப் பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள்; (ஆகவே, அவர்களிடம் அல்லாஹ்வின் நேர்வழியாகிய இஸ்லாம்)தான் நிச்சயமாக நேர்வழி (அதனையே பின்பற்றுவேன்) எனக் கூறிவிடுவீராக! அன்றியும் உமக்கு உண்மையான அறிவு வந்ததன் பின்னும் அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றுவீரானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுகிற எந்தப் பாதுகாவலனும் எவ்வித உதவி செய்பவனும் உமக்கில்லை.
2:121 اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَتْلُوْنَهٗ حَقَّ تِلَاوَتِهٖؕ اُولٰٓٮِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ‌ ؕ وَمَنْ يَّكْفُرْ بِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
2:121. யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்; அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்; யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!
2:121. (நபியே!) எவர்கள் நாம் கொடுத்த ("தவ்றாத்") வேதத்தை முறைப்படி (அறிந்து) ஓதுகிறார்களோ அவர்கள், (குர்ஆனாகிய) இதனையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். (ஆகவே, அவர்களில்) எவரேனும் இதனை நிராகரித்தால் அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களே!
2:121. எவர்களுக்கு நாம் வேதத்தை அருளியிருக்கின்றோமோ, அவர்கள் இவ்வேதத்தை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகின்றார்கள். அவர்கள் இதன் மீது (இந்தக் குர்ஆன் மீது உண்மையான உள்ளத்துடன்) நம்பிக்கை கொள்கின்றார்கள். இன்னும் எவர்கள் இதனைக் குறித்து நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கிறார்களோ அவர்களே உண்மையில் நஷ்டமடைந்தவர்களாவர்.
2:121. நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்ததோமோ அத்தகையோர், அவர்கள் அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள் தான் இதை அல்லாஹ்வின் வேதமென விசுவாசிப்பார்கள்; மேலும், (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ அத்தகையோர் தான் நஷ்டவாளர்கள்.
2:122 يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ‏
2:122. (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
2:122. இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு வழங்கியிருந்த என்னுடைய அருட்கொடையையும், நிச்சயமாக உங்களை உலக மக்கள் அனைவரையும் விட மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள்.
2:122. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும் உங்களை நான் உலக மக்கள் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவுகூருங்கள்.
2:122. இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்திருக்கும் என் அருட்கொடையையும் அகிலத்தாரை விட உங்களை நிச்சயமாக நான் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவுகூறுங்கள்.
2:123 وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْــٴًـــا وَّلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏
2:123. இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது; அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது; இவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
2:123. அன்றி, ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் ஓர் ஆத்மா மற்றொரு ஆத்மாவுக்கு எவ்வித பயனுமளிக்காது. அதனிடமிருந்து யாதொரு பரிகாரமும் ஏற்கப்பட மாட்டாது; எவ்வித பரிந்துரையும் அதற்குப் பயன் தராது. அன்றி, அவர்கள் (யாராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
2:123. மேலும் ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்நாளில்) எவரும் மற்றவர்க்கு எதையும் கொடுத்துதவ முடியாது. எவரிடமிருந்தும் எந்தவிதமான ஃபித்யாவும் (மீட்புப் பணமும்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எந்தப் பரிந்துரையும் எவர்க்கும் பயன் தராது; மேலும் (குற்றவாளிகளாகிய) அவர்களுக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்காது.
2:123. இன்னும் ஒருநாளை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (அந்நாளில்) எந்த ஓர் ஆத்மாவும் எந்த ஓர் ஆத்மாவிற்கும் எவ்விதப் பயனுமளிக்காது. (பாவங்களுக்குப் பரிகாரமாக எந்தவித) நஷ்ட ஈட்டையும் அதனிடமிருந்து அங்கீகரிக்கப்படமாட்டாது, (யாருடைய) பரிந்துரையும் அதற்குப் பலனளிக்காது, அவர்களோ (எவராலும்) உதவி செய்யப்படவுமாட்டார்கள்.
2:124 وَاِذِ ابْتَلٰٓى اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ‌ؕ قَالَ اِنِّىْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ‌ؕ قَالَ وَمِنْ ذُرِّيَّتِىْ ‌ؕ قَالَ لَا يَنَالُ عَهْدِى الظّٰلِمِيْنَ‏
2:124. (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
2:124. தவிர, இப்ராஹீமை அவருடைய இறைவன் (பெரும் சோதனையான) பல கட்டளைகளையிட்டு சோதித்த சமயத்தில் அவர் அவை யாவையும் நிறைவு செய்தார். (ஆதலால் இறைவன்) "நிச்சயமாக நான் உங்களை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டக் கூடிய) தலைவராக ஆக்கினேன்" எனக் கூறினான். அதற்கு (இப்ராஹீம்) "என்னுடைய சந்ததிகளையுமா (தலைவர்களாக ஆக்குவாய்?)" எனக் கேட்டார். (அதற்கு "உங்கள் சந்ததியிலுள்ள) அநியாயக்காரரை என்னுடைய (இந்த) உறுதிமொழி சாராது" எனக் கூறினான்.
2:124. மேலும், இப்ராஹீமை அவருடைய அதிபதி சில விஷயங்கள் மூலம் சோதித்ததை நினைவுகூருங்கள். இன்னும் அவர், அவற்றில் எல்லாம் முழுமையாகத் தேர்ந்துவிட்டார். (அப்பொழுது) அவன் கூறினான்: “நான் நிச்சயமாக உம்மை மனித குலத்திற்குத் தலைவராக்கப் போகின்றேன்.” இப்ராஹீம் வினவினார்: “என்னுடைய வழித்தோன்றல்களையும் (இந்த வாக்குறுதி) சாருமா?” அதற்கு அவன் கூறினான்: “அநீதியாளர்களை என்னுடைய இந்த வாக்குறுதி சாராது!”
2:124. இன்னும், இப்றாஹீம் அவருடைய இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தில் அவற்றை அவர் நிறைவு செய்தார் (என்பதையும் நினைவு கூருங்கள்). “நிச்சயமாக மனிதர்களுக்கு நான் உம்மை தலைவராக ஆக்குகிறேன்” என அல்லாஹ்வாகிய) அவன் கூறினான். அதற்கு (இப்றாஹீம்) “என்னுடைய சந்ததியினரிலிருந்தும் (தலைவர்களை ஆக்குவாயா?”) எனக் கேட்டார், (அதற்கு, அவர்களிலுள்ள) “அநியாயக்காரர்களை என்னுடைய (இவ்)வாக்குறுதி சாராது” எனக் கூறினான்.
2:125 وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى‌ ؕ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏
2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
2:125. (மக்காவில் இப்ராஹீம் கட்டிய "கஅபா" என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கின்றோம். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழும் இடமாக வைத்துக்கொள்ளுங்கள். "(ஹஜ்ஜு செய்ய அங்கு வந்து) அதை வலம் சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும், குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு) பவர்களுக்கும் என்னுடைய அந்த வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்" என்று இப்ராஹீமிடத்திலும் இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம்.
2:125. மேலும் நினைவுகூருங்கள்: நாம் (கஅபத்துல்லாஹ் எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒரு மையமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், “இப்ராஹீம் (வணக்கத்திற்காக நின்ற) இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம். மேலும், “தவாஃப், இஃதிகாஃப், ருகூவு, ஸுஜூது* ஆகியவற்றைச் செய்பவர்களுக்காக எனது இவ்வீட்டை நீங்கள் இருவரும் தூய்மையாக்கி வையுங்கள்” என்று இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளை பிறப்பித்தோம்.
2:125. மேலும், “(கஃபா) என்னும் அவ்வீட்டை மனிதர்களுக்கு (அவர்கள்) ஒன்று கூடுமிடமாகவும் (அவர்களுக்கு) அபயமளிக்கக்கூடியதாகவும் நாம் ஆக்கினோம் என்பதையும் (நினைவுகூர்வீராக! அதில்) இப்றாஹீம் நின்ற இடத்தை (விசுவாசிகளே, தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்” எனக் கட்டளையிட்டோம்) இன்னும், அவ்வீட்டைச் சுற்றி வருபவர்களுக்கும் (அதில்) தங்கியிருப்பவர்களுக்கும், (குனிந்து) ருகூஉ (சிரம் பணிந்து ஸுஜூது செய்பவர்களுக்கும் என் வீட்டை நீங்களிருவரும் சுத்தமாக்கி வைப்பீர்களாக’ என்று இப்றாஹீமிடமும் இஸ்மாயீலிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம்.
2:126 وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰى عَذَابِ النَّارِ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏‏
2:126. (இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்; அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”
2:126. தவிர, இப்ராஹீம் (இறைவனிடம்) "என் இறைவனே! (மக்காவாகிய) இதை பாதுகாப்பளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொள்கிறாரோ அவருக்கு உணவாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா!" எனக் கூறியதற்கு (இறைவன் "என்னை நம்பிக்கை கொள்பவருக்கு நான் உணவளிப்பது போல என்னை) நிராகரிப்ப(வனுக்கும் உணவளித்து அவ)னையும் சிறிது காலம் (அங்குச்) சுகமனுபவிக்க விட்டு வைப்பேன். பின்னர் நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன். அவன் செல்லும் (அந்த) இடம் (மிகக்) கெட்டது" என்று கூறினான்.
2:126. மேலும் இந்தச் சந்தர்ப்பத்தையும் நினைவுகூருவீராக! இப்ராஹீம் பிரார்த்தனை செய்தார்: “என் அதிபதியே! நீ இந்நகரத்தை அமைதி அளிக்கும் நகரமாக்கி வைப்பாயாக! இங்கு வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு, (அனைத்து விதமான) பழங்களையும் (உணவு வகைகளையும்) வழங்குவாயாக!” அதற்கு அவருடைய அதிபதி பதிலளித்தான்; “நம்பிக்கை கொள்ளாதவனுக்கும் இவ்வுலகின் சொற்ப வாழ்வுக்குரிய வசதிகளை நான் வழங்குவேன். ஆயினும், இறுதியில் அவனை நரக வேதனையின் பக்கம் இழுத்துச் செல்வேன். (அவ்வாறு) அவன் சேருமிடம் மிகவும் கெட்டது!”
2:126. இன்னும், இப்ராஹீம் “என் இரட்சகனே (மக்காவாகிய) இதை அபயமளிக்கும் நகரமாக ஆக்கிவைப்பாயாக! இன்னும், இதில் வசிப்பவர்களுக்கு அவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கிறாரோ அவருக்கு பலவகைக் கனிகளிலிருந்து உணவளிப்பாயாக” என்று கூறியதை (நினைவுகூருங்கள்.) அதற்கு அல்லாஹ் “யார் நிராகரித்து விட்டாரோ அவரை சிறிது காலம் சுகம் அனுபவிக்கச் செய்வேன், பின்னர் நரக வேதனையின் பக்கம் செல்லுமாறு அவரை இழுத்துச் செல்வேன், மேலும் அவர் செல்லுமிடம் மிகக் கெட்டது” என்று கூறினான்.
2:127 وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
2:127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)
2:127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது "எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்களுடைய இந்த பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய்.
2:127. மேலும் நினைவுகூருங்கள்: இப்ராஹீமும் இஸ்மாயீலும் அவ் வீட்டின் சுவர்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது இவ்வாறு பிரார்த்தித்தார்கள்: “எங்கள் இறைவனே! எங்களுடைய இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்.
2:127. இன்னும், (நினைவுகூருங்கள்). இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அடித்தளங்களை உயர்த்தியபொழுது “எங்களுடைய இரட்சகனே உனக்காக நாங்கள் செய்த இப்பணியை எங்களிலிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்” என்றார்.
2:128 رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَـكَ وَ مِنْ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
2:128. “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
2:128. எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! ("ஹஜ்ஜு" காலத்தில்) நாங்கள் புரிய வேண்டிய வணக்கங்களையும் அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றாய்.
2:128. எங்கள் இறைவனே! மேலும், எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாய் முஸ்லிம்களாய் ஆக்கி வைப்பாயாக! மேலும் எங்கள் வழித்தோன்றலிலிருந்து முற்றிலும் உனக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பாயாக! நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காண்பிப்பாயாக! மேலும் எங்களுடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் பெரிதும் மன்னிப்பவனும் மிக்க கருணையுடையோனுமாய் இருக்கிறாய்.
2:128. ‘எங்கள் இரட்சகனே “எங்களிருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்படிகிற (முஸ்லீமானவர்)களாகவும் எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்குக் கீழ்படிகிறவர்களாகவும் ஆக்கி வைப்பாயாக! ஹஜ்ஜுக்குரிய எங்களுடைய கிரியை செய்யவேண்டிய இடங்களையும் எங்களுக்குக் காண்பிப்பாயாக (எங்கள் பிழைகளை மன்னித்து) எங்களின் தவ்பாவையும் அங்கிகரித்துகொள்வாயாக! நிச்சயமாக நீயே தவ்பாக்களை மிக்க ஏற்பவன், மிகக் கிருபையுடையவன்!” (என்றும்)
2:129 رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْ‌ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
2:129. “எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”
2:129. எங்கள் இறைவனே! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்து உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, வேதத்தையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும் ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீதான் மிக்க வல்லவன் நுண்ணறிவுடையவன்" (என்றும் பிரார்த்தித்தனர்.)
2:129. எங்கள் இறைவனே! மேலும், இம்மக்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை எழுப்புவாயாக! அவர் உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுபவராகவும், வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவராகவும், மேலும் அவர்களை (அவர்களுடைய வாழ்க்கையைத்) தூய்மைப்படுத்துபவராகவும் திகழ வேண்டும். திண்ணமாக நீயே பேராற்றலுள்ளவனும், பேரறிவாளனுமாய் இருக்கின்றாய்.”
2:129. “எங்கள் இரட்சகனே (எங்கள் சந்ததியிலான) அவர்களிலிருந்தே அவர்களில் ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர்களிலிருந்தே அவர்களுக்கு அவர் உன்னுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து வேதத்தையும் (குர்ஆனின் விளக்கமாகிய சுன்னத் எனும்) ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களைப் பரிசுத்தமாக்கியும் வைப்பார்; நிச்சயமாக நீயே, (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன் (என்றும் பிரார்த்தித்தார்).
2:130 وَمَنْ يَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ‌ؕ وَلَقَدِ اصْطَفَيْنٰهُ فِى الدُّنْيَا ‌ۚ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ‏
2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
2:130. தன்னைத்தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இந்த உலகில் தேர்ந்தெடுத்தோம், மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் இருப்பார்.
2:130. இப்பொழுது இப்ராஹீமின் வழிமுறையை யார் புறக்கணிப்பார்? தன்னைத்தானே எவன் மூடனாக்கிக் கொண்டானோ அவனைத் தவிர! இப்ராஹீமையோ நாம் திண்ணமாக இவ்வுலகில் (எமது பணிக்காகத்) தேர்ந்தெடுத்தோம். இன்னும் நிச்சயமாக மறு உலகிலும் அவர் நல்லடியார்களில் ஒருவராக இருப்பார்.
2:130. மேலும், தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நாம் நிச்சயமாக அவரை இவ்வுலகிலும் தெரிவு செய்தோம்; நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்ளவராவார்.
2:131 اِذْ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسْلِمْ‌ۙ قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِيْنَ‏
2:131. இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.
2:131. இப்ராஹீமை (நோக்கி) அவருடைய இறைவன் "நீ (எனக்கு) வழிப்படு!" எனக் கூறிய சமயத்தில் அவர் (எவ்வித தயக்கமுமின்றி) "அகிலத்தாரின் இறைவனுக்கு (இதோ) நான் வழிப்பட்டேன்" எனக் கூறினார்.
2:131. (அவருடைய நிலை எத்தகையதாயிருந்ததென்றால்) அவருடைய இறைவன், “நீர் ‘முஸ்லிமாகி விடுவீராக’ என அவரிடம் கூறினான். அதற்கு அவர் (உடனே) பதில் கூறினார்: “அகிலமனைத்தின் அதிபதிக்கு நான் (கீழ்ப் படிந்த) முஸ்லிமாகிவிட்டேன்.”
2:131. அவருக்கு அவருடைய இரட்சகன் “நீர் (எனக்குக்) கீழ்படியும்” எனக்கூறியபோது “அவர் அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்” எனக் கூறினார்.
2:132 وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَ يَعْقُوْبُؕ يٰبَنِىَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَـكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَؕ‏‏
2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
2:132. அவ்வாறே இப்ராஹீம் தன்னுடைய சந்ததிகளுக்கும் உபதேசித்தார். யஃகூபும் (தன்னுடைய சந்ததிகளை நோக்கி) "என் சந்ததிகளே! உங்களுக்காக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். ஆதலால் நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக அன்றி இறந்துவிட வேண்டாம்" (என்றே கூறினார்).
2:132. இதே வழிமுறையில் செல்லும்படித் தம் மக்களுக்கும் இப்ராஹீம் அறிவுறுத்தியிருந்தார். மேலும், இதனையே பின்பற்றி வாழும்படி யஃகூபும் தம் மக்களுக்கு அறிவுறுத்திச் சென்றார். அவர் கூறினார்: “என்னுடைய மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இந்த தீனையே (நெறியையே) தேர்ந்தெடுத்துள்ளான். எனவே, நீங்கள் முஸ்லிம்களாக அன்றி இறந்து விடாதீர்கள்!”
2:132. இதையே இப்ராஹீம் தன் மக்களுக்கு உபதேசமும் (வஸிய்யத்தும்) செய்தார். யஃகூபும் (இவ்வாறே உபதேசம் செய்தார்). என் மக்களே! நிச்சயமாக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளான், ஆகவே, நீங்கள் முஸ்லீம்களாக (முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக) அன்றி நிச்சயமாக மரணிக்க வேண்டாம் (என அவர்கள் கூறினர்).
2:133 اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِىْؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآٮِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
2:133. (யூதர்களே!) யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததிகளை நோக்கி "எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு "உங்களுடைய இறைவனும், உங்களுடைய மூதாதைகளான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்" என்றே கூறினார்கள்.
2:133. யஃகூபை மரணம் நெருங்கியபொழுது நீங்கள் அங்கிருந்தீர்களா என்ன? (அவர் மரணிக்கும் தருவாயில்) தம் மக்களிடம் வினவினார்: “மக்களே, எனக்குப் பின்னர் நீங்கள் எதை வணங்குவீர்கள்?” அதற்கு அவர்கள் அனைவரும் பதிலளித்தனர்: “உங்கள் இறைவனும் உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். அத்துடன் நாங்கள் அவனுக்கே (கீழ்ப்படிந்த) முஸ்லிம்களாகத் திகழ்வோம்!”
2:133. அல்லது யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (யூதர்களே! அவரருகில்) நீங்கள் பிரசன்னமாகியிருந்தீர்களா? அவர் தம் மைந்தர்களிடம் “எனக்குப் பின்னர் எதனை நீங்கள் வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு “உம்முடைய வணக்கத்திற்குரியவனும் உம்முடைய மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் வணக்கத்திற்குரியவனுமாகிய ஒரே ஒரு வணக்கத்திற்குரியவனையே நாங்கள் வணங்குவோம், அவனுக்கே முற்றிலும் கீழ்படிந்தவர்களாக (முஸ்லிம்களாக)வும் இருப்போம்” என்று கூறினார்கள்.
2:134 تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ‌ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَـكُمْ مَّا كَسَبْتُمْ‌ۚ وَلَا تُسْأَلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏
2:134. அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
2:134. (மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்.) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று உங்களிடம் கேட்கப்படமாட்டாது.
2:134. அந்தச் சமூகத்தினர் சென்று விட்டனர். அவர்கள் சம்பாதித்தவை அனைத்தும் அவர்களுக்கே; நீங்கள் சம்பாதிப்பவை உங்களுக்கே! மேலும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
2:134. அது (மேற்கூறப்பட்ட நபிமார்களையும் நல்லடியார்களையும் கொண்ட) ஒரு சமூகம். திட்டமாக அது சென்றுவிட்டது., அது சம்பாதித்தது அதற்கே (உரியது); (இன்னும் நீங்கள் சம்பாதித்தவை (அதன் பலன்) உங்களுக்கே; மேலும் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்.
2:135 وَقَالُوْا کُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى تَهْتَدُوْا ‌ؕ قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِيْفًا ‌ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
2:135. “நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
2:135. (நம்பிக்கையாளர்களை நோக்கி) அவர்கள் "நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரான வழியை அடைந்து விடுவீர்கள்" எனக் கூறுகிறார்கள். அதற்கு "அவ்வாறன்று! நேரான வழியைச் சார்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் (உங்களைப்போல்) இணை வைத்து வணங்கியவரல்ல" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.
2:135. (யூதர்கள் கூறுகிறார்கள்:) “நீங்கள் யூதர்களாக இருங்கள்; நேர்வழி பெறுவீர்கள்!” (கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்:) “நீங்கள் கிறிஸ்தவர்களாக இருங்கள்; நேர்வழி பெறுவீர்கள்!” (அவர்களிடம்) சொல்வீராக: “இல்லை, நான் அனைத்திலிருந்தும் முகம் திருப்பி இப்ராஹீமின் வழிமுறையை ஏற்றுக் கொண்டுள்ளேன். மேலும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராய் இருக்கவில்லை.”
2:135. (யூத,கிறிஸ்தவர்களாகிய) அவர்கள் (விசுவாசிகளிடம்) “நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகி விடுங்கள்; நேர்வழி அடைவீர்கள்” எனக் கூறுகிறார்கள், (அதற்கு) “அவ்வாறன்று; இப்றாஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்) நேரான வழியை சார்ந்தவரான அவர் (உங்களைப் போல்) இணைவைப்பவர்களில் இருந்தவரல்லர்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
2:136 قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ‌ۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
2:136. (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் கூறுங்கள்: "அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பட்ட அனைத்தையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அன்றி அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிப்படுவோம்."
2:136. (முஸ்லிம்களே!) நீங்கள் கூறுங்கள்: “அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கி அருளப்பட்டதையும், மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு ஆகியோருக்கும், யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பட்டதையும், மற்றும் மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவர்க்கும், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக இருக்கின்றோம்.”
2:136. “அல்லாஹ்வையும் எங்கள்பால் இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், யஃகூப், இவர்களுடைய சந்ததிகள் ஆகியோரின்பால் இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும் மற்றைய நபிமார்களுக்கு அவர்கள் இரட்சகனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்ததையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்; அவர்களிலிருந்து எவருக்குமிடையில், நாம் (பிரித்து) வேறுபாடு காட்டமாட்டோம்; இன்னும், அவனுக்கே நாங்கள் முற்றிலும், கீழ்படிகின்றவர்கள்” என (விசுவாசங்கொண்டோரே) நீங்களும் கூறுங்கள்.
2:137 فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ‌ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ‌ ۚ فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُؕ‏
2:137. ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.
2:137. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
2:137. நீங்கள் நம்பிக்கை கொண்டதுபோல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெற்றவர்களாவார்கள். ஆனால், அவர்கள் புறக்கணிப்பார்களேயானால் அவர்கள் பகைமையில் பிடிவாதமாய் இருக்கிறார்கள் (என்பது வெளிப்படையானதாகும்). ஆகையால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உமக்கு(த் துணை செய்ய)ப் போதுமானவன் (என்று உறுதி கொண்டு நிம்மதியாய் இருங்கள்). அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
2:137. ஆகவே, (விசுவாசங்கொண்டோரே) நீங்கள் எதை விசுவாசங்கொண்டீர்களோ, அது போன்றதை அவர்களும் விசுவாசங்கொண்டுவிட்டால் திட்டமாக அவர்கள் நேர்வழியை அடைந்து விடுவார்கள். இன்னும், அவர்கள் புறக்கணித்துவிட்டால், நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். அவர்களைப்பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன், மேலும், அவன் (அவர்களின் சூழ்ச்சியான சொற்களைச்) செவியேற்கிறவன்; (அவர்களின் வஞ்சங்களை) மிக்க அறிகிறவன்.
2:138 صِبْغَةَ اللّٰهِ ‌ۚ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً  وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ‏
2:138. “(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக).
2:138. "அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வைவிட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? (யாருமில்லை) நாம் அவனையே வணங்குவோம்" (என்றும் கூறுவீர்களாக!)
2:138. கூறுவீராக: “அல்லாஹ்வின் வர்ணத்தை மேற்கொள்வீர்களாக! அல்லாஹ்வின் வர்ணத்தைக் காட்டிலும், யாருடைய வர்ணம் சிறந்தது? மேலும் நாங்கள் அவனுக்கே பணிந்து வாழ்பவராய் இருக்கின்றோம்.”
2:138. “அல்லாஹ்வின் வர்ணத்தை (அவனின் மார்க்கத்தை நீங்கள் அவசியமாக கடைபிடியுங்கள்)” வர்ணம் கொடுப்பதில் (இதயங்களை புனிதப்படுத்துவதில்) அல்லாஹ்வை விட மிக அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறவர்கள் (என்றும்) (2)
2:139 قُلْ اَ تُحَآجُّوْنَـنَا فِى اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّکُمْۚ وَلَنَآ اَعْمَالُـنَا وَلَـكُمْ اَعْمَالُكُمْۚ وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَۙ‏
2:139. அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்; எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு; உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு; மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்” என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக.
2:139. "நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? எங்களுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அவனே! எங்கள் செயல்கள் (அதன் பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (அதன் பலன்) உங்களுக்கே. நாங்கள் அவனுக்கு இணைவைக்காது, வணக்கங்களை முற்றிலும் அவனுக்கே களப்பற்றதாக ஆக்குவோம்" (என்றும் கூறுவீர்களாக!)
2:139. (நபியே! அவர்களிடம்) கேட்பீராக: “அல்லாஹ்வின் விஷயத்தில் எங்களுடன் நீங்கள் தர்க்கம் புரிகின்றீர்களா? அவனோ எங்களின் அதிபதியும் உங்களின் அதிபதியும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கே; உங்கள் செயல்கள் உங்களுக்கே! மேலும் நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே எங்கள் அடிபணிதலை முற்றிலும் உரித்தானதாக்கி விட்டோம்.
2:139. “நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்களின் இரட்சகனும் உங்களின் இரட்சகனும் ஆவான்; எங்கள் செயல்கள் எங்களுக்கே; உங்கள் செயல்கள் உங்களுக்கே, நாங்கள் (இணைவைக்காது) முற்றிலும் அவனுக்கே கலப்பற்ற (செயல்புரிப)வர்கள்” என்றும் கூறுவீராக!
2:140 اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى‌ؕ قُلْ ءَاَنْـتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ‌ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
2:140. “இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
2:140. "நிச்சயமாக இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இவர்களும், இவர்களுடைய சந்ததிகளும் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்களென கூறுவீர்களா? (இதை) நன்கறிந்திருப்பது நீங்களா? அல்லாஹ்வா? என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். அன்றி, (இதைப்பற்றி) தன்னிடமிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைப்பவனைவிடப் பெரிய அநியாயக்காரன் யார்? உங்களின் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இல்லை" (என்றும் கூறுங்கள்.)
2:140. அல்லது இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு ஆகியோரும் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்கள் அனைவரும் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ இருந்தார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா?” அவர்களிடம் கேளுங்கள்: “நீங்கள் நன்கறிந்தவர்களா? அல்லாஹ் நன்கறிந்தவனா?” அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு சான்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதனை மறைப்பவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் யார்? மேலும் நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை
2:140. அல்லது நிச்சயமாக “இப்றாஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இவர்களுடைய சந்ததிகளும், யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்களென நீங்கள் கூறுகிறீர்களா? (இதை) நன்கறிந்திருப்பது நீங்களா அல்லது அல்லாஹ்வா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. அன்றியும் (இதைப் பற்றி) அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ள) தன்னிடமிருக்கும் சாட்சியத்தை மறைப்பவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நீங்கள் செய்பவைகளைப்பற்றி அல்லாஹ் பாராமுகமானவனல்லன்.
2:141 تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ‌ۚ لَهَا مَا كَسَبَتْ وَلَـكُمْ مَّا كَسَبْتُمْ‌ۚ وَلَا تُسْأَلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏
2:141. அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
2:141. (மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்.) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று உங்களிடம் கேட்கப்படமாட்டாது.
2:141. அந்தச் சமூகத்தினர் சென்றுவிட்டனர். அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! மேலும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
2:141. (மேற்கூறப்பட்ட நபிமார்களைக் கொண்ட) அது ஒரு சமூகம்; திட்டமாக அது சென்றுவிட்டது. அது சம்பாதித்தது அதற்கே; நீங்கள் சம்பாதித்தது உங்களுக்கே, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களென்று நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்.
2:142 سَيَقُوْلُ السُّفَهَآءُ مِنَ النَّاسِ مَا وَلّٰٮهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِىْ كَانُوْا عَلَيْهَا ‌ؕ قُلْ لِّلّٰهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ؕ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
2:142. மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்: “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?” என்று. (நபியே!) நீர் கூறும் “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று.
2:142. (நபியே! "முஸ்லிம்கள் முன்னர்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பிவிட்டது எது?" என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புபவர்களை நேரான வழியில் செலுத்துவான்."
2:142. மக்களில் அறிவீனர்கள், “(இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?) இவர்கள் எந்தக் கிப்லாவை* முன்னோக்கிக் கொண்டிருந்தார்களோ அதிலிருந்து (திடீரென) இவர்களைத் திருப்பியது எது?” என நிச்சயம் கேட்பார்கள். (நபியே! அவர்களிடம்) சொல்வீராக: “கிழக்கு, மேற்கு அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களை அவன் நேரான வழியில் செலுத்துகின்றான்.”
2:142. (நபியே!) முஸ்லிம்களாகிய) அவர்கள் (முன்னர்) எதன் மீது இருந்தனரோ அத்தகைய அவர்களது கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பிவிட்டது எது? என மனிதர்களில் மடையர்கள் கூறுவர். (அதற்கு) நீர் கூறும் “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்விற்கே உரியன!, அவன் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துவான்”
2:143 وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَکُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ وَيَكُوْنَ الرَّسُوْلُ عَلَيْكُمْ شَهِيْدًا ؕ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِىْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِ ‌ؕ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ ؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏
2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
2:143. (நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான வகுப்பினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக் கூடிய) சாட்சிகளாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு (வழி காட்டக் கூடிய) சாட்சியாக இருப்பார். (நபியே!) நீங்கள் (இதுவரை முன்நோக்கித் தொழுதுகொண்டு) இருந்த (பைத்துல் முகத்தஸின்) திசையை (மாற்றாமல் நீங்கள் அதையே நோக்கித் தொழுது வரும்படி இதுவரை) நாம் விட்டு வைத்திருந்ததெல்லாம் (அதை மாற்றிய பின் நம்) தூதரைப் பின்பற்றுபவர் யார்? பின்பற்றாது தன் குதிங்கால் புறமாகவே (புறமுதுகிட்டு) திரும்பி(ச் சென்று) விடுகிறவர் யார்? என்பதை நாம் அறி(வித்து விடு)வதற்காகத்தான். ஆனால் எவர்களை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகின்றானோ அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அ(வ்வாறு கிப்லாவை மாற்றுவ)து நிச்சயமாக மிகப்பளுவாக இருக்கும். தவிர, (நம்பிக்கையாளர்களே! இதற்கு முன்னர் நீங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த) உங்களுடைய நம்பிக்கையையும் அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகக் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன்.
2:143. மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் ‘உம்மத்தன் வஸத்தன்’ சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம் நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாயும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (இதற்கு முன்பு) எந்தத் திசையை நோக்கி நீர் தொழுது வந்தீரோ, அதனை கிப்லாவாக நாம் ஆக்கி வைத்திருந்ததெல்லாம் யார் இறைத்தூதரைப் பின்பற்றுகிறார்கள்; யார் மாறிச் சென்று விடுகிறார்கள் என்பதை நாம் அறிவதற்காகத்தான்! இது (கிப்லா மாற்றம்) மிகக் கடினமாகவே இருந்தது. ஆனால் அல்லாஹ் காட்டிய நேர்வழியைப் பெற்றிருந்தவர்களுக்கு அது சிறிதும் கடினமாக இருக்கவில்லை. அல்லாஹ் உங்களுடைய ஈமானை நம்பிக்கையை ஒருபோதும் வீணாக்கி விடமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடத்தில் அளப்பரிய கருணையும், மிகுந்த பரிவும் உடையவன் (என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்).
2:143. மேலும், (விசுவாசிகளே) அவ்வாறே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக ஆகுவதற்காகவும், (நம் தூதர்) ரஸூல் உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நடு நிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம், மேலும், (தூதரைப் பின்பற்றாமல்) தன் இரு குதிங்கால் புறமாகவே திரும்பிச் சென்று விடுகிறவரிலிருந்து (நம்) தூதரைப் பின்பற்றுகிறவர் யார் என்பதை நாம் பிரித்து அறிவித்துவிடுவதற்காகவேயன்றி, நீர் எ(ந்)த திசையின் மீது இருந்து வந்தீரோ அந்த கிப்லாவை நாம் (மாற்றி) அமைக்கவில்லை, இன்னும், அல்லாஹ் நேர்வழியில் நடத்துகின்றானே அத்தகையவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) அவ்வாறு ‘கிப்லா’வை மாற்றுவது நிச்சயமாக மிக பளுவாக இருக்கிறது, உங்களுடைய விசுவாசத்தை (நீங்கள் இதற்கு முன்பு பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த தொழுகையை) ஒருபோதும் அல்லாஹ் வீணாக்குபவனாக இல்லை, நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடத்தில் மிக இரக்கம் காட்டுபவன், மிகக் கிருபையுடையவன்.
2:144 قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ۚ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ؕ وَاِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ لَيَـعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ‏
2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
2:144. (நபியே!) உங்களுடைய முகம் (பிரார்த்தனை செய்து) அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கிறோம். ஆதலால், நீங்கள் விரும்பும் கிப்லா(வாகிய மக்கா)வின் பக்கமே நாம் உங்களை நிச்சயமாகத் திருப்புகின்றோம். எனவே, நீங்கள் (தொழும்போது மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் எங்கிருந்தபோதிலும் (தொழுகையில்) அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள். வேதம் கொடுக்கப்பட்ட (யூதர்களும், கிறிஸ்த)வர்களும் (நீங்கள் மக்காவின் திசையளவில் திரும்பிய) "இது தங்கள் இறைவனிடமிருந்(து வந்)த உண்மை(யான உத்தரவு)தான்" என நிச்சயமாக அறிவார்கள். (ஏனென்றால், அவ்வாறே அவர்களுடைய வேதத்தில் இருக்கின்றது. எனவே, உண்மையை மறைக்கும்) அவர்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
2:144. (நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தை நோக்குவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதோ நீர் எந்தக் கிப்லாவை விரும்புகின்றீரோ அதன் பக்கமே நாம் உம்மைத் திருப்பிவிடுகின்றோம். மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா ஆலயம்) பக்கமாக உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! இனி நீங்கள் எங்கிருப்பினும் (தொழுகைக்காக) அதன் பக்கமாகவே உங்கள் முகங்களைத் திருப்புவீர்களாக! வேதம் அருளப்பட்டவர்கள் (கிப்லா மாற்றம் பற்றிய) இக்கட்டளை உண்மையானதுதான்; தம் இறைவனிடமிருந்து வந்ததுதான் என்பதைத் திண்ணமாக அறிவார்கள். ஆனால், (இவ்வாறு உண்மையை அறிந்திருந்தும்) இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை!
2:144. (நபியே!) உம்முடைய முகம், (கிப்லாத் திசை மாற்றத்தை எதிர்ப்பார்த்து) வானத்தின்பால் திரும்புவதை நிச்சயமாக நாம் காண்கிறோம். ஆகவே, நீர் எதைப் பொருந்துகிறீரோ அந்த கிப்லாவாகிய கஃபாவின் பக்கமாக உம்மை நிச்சயமாக நாம் திருப்புவோம், எனவே நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமி’ன் பக்கமாக உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! (விசுவாசிகளே) நீங்களும் எங்கிருப்பினும் (தொழுகைக்காக) அதன் பக்கமாக உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக! நிச்சயமாக வேதங் கொடுக்கப்பட்டார்களே அத்தகையோர்-நிச்சயமாக (கஃபாவின் பக்கம் திரும்பித் தொழ வேண்டுமென்ற) இது தங்கள் இரட்சகனிடமிருந்துள்ள உண்மைதான் என அவர்கள் அறிவார்கள், மேலும், அவர்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் பாராமுகமானவனல்லன்.
2:145 وَلَٮِٕنْ اَ تَيْتَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ بِكُلِّ اٰيَةٍ مَّا تَبِعُوْا قِبْلَتَكَ‌ۚ وَمَآ اَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ‌ۚ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍؕ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ اِنَّكَ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ‌ۘ‏
2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
2:145. ஆகவே (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட அவர்களுக்குத் (திருப்தியளிப்பதற்காக) அத்தாட்சிகள் அனைத்தையும் நீங்கள் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உங்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீங்களும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. அன்றி (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உங்களுக்கு வஹீ(யின் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னும் அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்களும் அநியாயக்கரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்கள்).
2:145. வேதம் அருளப்பட்டவர்களிடம் நீர் எந்த ஒரு சான்றினைக் கொண்டு வந்தாலும் உமது கிப்லாவை அவர்கள் பின்பற்றப் போவதில்லை. நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. மேலும் (தமக்கிடையேயும்) அவர்களில் சிலர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுவோராய் இல்லை. எனவே, உமக்கு மெய்யறிவு வந்த பின்னர் அவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றுவீராயின், திண்ணமாக நீர் அக்கிரமக்காரர்களுள் ஒருவரா(ய்க் கருதப்படு)வீர்.
2:145. (ஆகவே நபியே!) வேதங்கொடுக்கப்பட்டோர்க்கு ஒவ்வொரு(விதமான) சான்றையும் நீர் கொண்டு வந்தாலும், அவர்கள் உம்முடைய ‘கிப்லா’வைப் பின்பற்றமாட்டார்கள். நீரும் அவர்களுடைய ‘கிப்லா’வை பின்பற்றுகிறவர் அல்லர். மேலும், உமக்கு (வஹீயின் மூலம்) அறிவு வந்ததன் பின்னும், அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்றுவீரானால், நிச்சயமாக நீர் அப்போது அநியாயக்காரர்களில் உள்ளவராகிவிடுவீர்.
2:146 اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْؕ وَاِنَّ فَرِيْقًا مِّنْهُمْ لَيَكْتُمُوْنَ الْحَـقَّ وَهُمْ يَعْلَمُوْنَؔ‏
2:146. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
2:146. எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த மக்காவின் திசையளவில் நீங்கள் திரும்பித் தொழுவீ ரென்ப)தை அறிவார்கள். ஆனால், அதிலொரு பிரிவினர் நிச்சயமாக நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்.
2:146. எவர்களுக்கு நாம் வேதம் அருளியிருக்கின்றோமோ அவர்கள், தங்களுடைய மைந்தர்களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் (கிப்லாவாக்கப்பட்ட) இந்த இடத்தையும் நன்கு அறிவார்கள். எனினும் அவர்களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கிறார்கள்.
2:146. நாம் எவர்களுக்கு வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அத்தகையோர் தங்கள் மக்களை(ச்சந்தேகமற) அறிவதைப்போல், அந்த மக்காவின் திசையளவில் நீர் திரும்பித் தொழுவீரென்ப)தை அறிவார்கள்; இன்னும் அவர்களிலொரு பிரிவினர், நிச்சயமாக நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்.
2:147 اَلْحَـقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ‏
2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
2:147. (நபியே! கிப்லாவைப் பற்றி) உங்கள் இறைவனிடமிருந்து வந்த இதுதான் உண்மை(யான கட்டளை.) ஆதலால், நீங்கள் சந்தேகிப்பவர்களில் ஒருவராக ஒரு சிறிதும் ஆகிவிட வேண்டாம்.
2:147. (உறுதியாக) இது உம் அதிபதியிடமிருந்து வந்த சத்தியமா(ன கட்டளையா)கும். எனவே, (இது பற்றி) ஐயம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்!
2:147. (நபியே!) ‘கஃபா’வின் பக்கம் திரும்பித் தொழவேண்டும் என்பது பற்றிய) இந்த உண்மை, உம் இரட்சகனிடமிருந்துள்ளதாகும். ஆகவே, நிச்சயமாக சந்தேகிப்பவர்களில் உள்ளவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
2:148 وَلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا ‌ۚ فَاسْتَبِقُوا الْخَيْرٰتِؕؔ اَيْنَ مَا تَكُوْنُوْا يَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
2:148. ஓவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.
2:148. (நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) நன்மையானவைகளை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.
2:148. மேலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் திரும்பக்கூடிய ஒரு திசையிருக்கிறது. எனவே, நீங்கள் நன்மைகள் புரிவதில் முந்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டிக்கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான்.
2:148. (விசுவாசங்கொண்டேரே!) ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவரவர் அதன் பக்கம் திரும்புபவராக உள்ளார். ஆகவே, (அவைகளில்) நன்மையானவற்றிற்கு நீங்கள் முந்திக் கொள்ளுங்கள், நீங்கள் எங்கிருந்தபோதிலும், (இதன்மூலம்) உங்கள் யாவரையும் அல்லாஹ் கொண்டுவருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
2:149 وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَاِنَّهٗ لَـلْحَقُّ مِنْ رَّبِّكَؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
2:149. ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக; நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.
2:149. ஆகவே (நபியே!) நீங்கள் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். நிச்சயமாக இதுதான் உங்கள் இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும். (ஆகவே, இதனைப்பற்றி வீண் தர்க்கம் செய்பவர்களே!) உங்களுடைய செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
2:149. மேலும் நீர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உம்முடைய முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் நோக்கித் திருப்புவீராக. ஏனென்றால், இது உம்முடைய இறைவனிடமிருந்து வந்த (முற்றிலும்) உண்மை(யான கட்டளை)யாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பற்றிக் கவனமற்றவனாக இல்லை.
2:149. ஆகவே, (நபியே!) எங்கிருந்து நீர் புறப்பட்டாலும் (தொழுகையின்போது புனிதப் பள்ளியாகிய) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! இன்னும், நிச்சயமாக இதுதான் உம் இரட்சகனிடமிருந்துள்ள உண்மையாகும். மேலும், நீங்கள் செய்பவற்றைப் பற்றி அல்லாஹ் பராமுகமானவனல்லன்.
2:150 وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَڪُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِىْ وَلِاُتِمَّ نِعْمَتِىْ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۙ‌ۛ‏
2:150. ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருட் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).
2:150. அன்றி, (நபியே!) நீங்கள் எங்குச் சென்றாலும் தொழும் போது) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். (நம்பிக்கையாளர்களே!) அவர்களில் வரம்பு மீறியவர் களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் (வீண்) விவாதம் செய்ய எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காக நீங்களும் எங்கிருந்த போதிலும் "அல் மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புங்கள். அன்றி, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம்) என்னுடைய அருட்கொடையை நான் உங்கள்மீது முழுமையாக்கி வைப்பேன். (அதனால்) நிச்சயமாக நீங்கள் நேரான வழியை அடைவீர்கள்.
2:150. மேலும் நீர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகத் திருப்புவீராக. உங்களுக்கு எதிராக மக்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கக்கூடாது என்பதற்காக நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போது) அதன் பக்கமாகத் திருப்புங்கள். ஆனால் அவர்களைச் சேர்ந்த அக்கிரமக்காரர்கள் தர்க்கித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். எனக்கே அஞ்சுவீர்களாக! (இன்னும் இந்தக் கட்டளையைப் பேணி வாழ்வீர்களாக!) எதற்காகவெனில், நான் என் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் நீங்கள் நேரிய பாதையை அடையக்கூடும் என்பதற்காகவும்தான்!
2:150. (நபியே)! நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின்போது) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக (விசுவாசிகளே! அவர்களில் அநியாயக்காரர்களைத் தவிர, (மற்ற) மனிதர்களுக்கு உங்களிடம் எந்த தர்க்கமும் (உங்களுக்கு) எதிராக இல்லாதிருக்கும் பொருட்டு நீங்களும் எங்கிருந்தபோதிலும் அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; ஆகவே, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். மேலும், எனக்கே நீங்கள் பயப்படுங்கள்; என்னுடைய அருட்கொடையை நான் உங்கள்மீது பூரணமாக்கி வைப்பதற்காகவும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்காகவும் (என்னையே பயப்படுங்கள்).
2:151 كَمَآ اَرْسَلْنَا فِيْکُمْ رَسُوْلًا مِّنْکُمْ يَتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِنَا وَيُزَكِّيْکُمْ وَيُعَلِّمُکُمُ الْكِتٰبَ وَالْحِکْمَةَ وَيُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ؕ‌ۛ‏
2:151. இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
2:151. அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் (அவைகளிலுள்ள) ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பி வைத்தோம்.
2:151. (அது எத்தகைய அருட்கொடை என்றால்) நம் வேத வசனங்களை உங்களுக்கு ஓதி உணர்த்துபவரும் உங்க(ள் வாழ்க்கை நடைமுறைக)ளைத் தூய்மைப்படுத்துபவரும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பவரும், நீங்கள் அறியாதிருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பவருமான ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களிடம் அனுப்பி வைத்தபோது நீங்கள் பெற்ற அருட்கொடையைப் போன்றதாகும் இந்தக் கொடை
2:151. உங்களிலிருந்து உங்களின் மீது நம் வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தப்படுத்தி உங்களுக்கு வேதத்தையும், திருக்குர் ஆனின் விளக்கமான சுன்னத் எனும் ஞானத்தையும் கற்றுக்கொடுத்து மேலும் நீங்களறியாதவற்றை உங்களுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களுக்கிடையில் நாம் அனுப்பியது போன்றே (நம் அருட்கொடையை முழுமையாக்கி வைப்போம்)
2:152 فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ‏
2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
2:152. நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
2:152. எனவே என்னை நீங்கள் நினைவுகூருங்கள்; நானும் உங்களை நினைவுகூருகின்றேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்; (என்னுடைய அருட்கொடைகளை மறுத்து) நன்றி கொல்லாதீர்கள்!
2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவுகூருங்கள்; நானும் உங்களை (அருள் புரிந்து) நினைவு கூருவேன்; நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; இன்னும், எனக்கு மாறு செய்யாதீர்கள்.
2:153 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏
2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
2:153. நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
2:153. இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான்.
2:153. விசுவாசங்கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
2:154 وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏
2:154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
2:154. அன்றி, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரி களால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால் (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.
2:154. மேலும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, அவர்கள் (உண்மையில்) உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், அவர்களின் நிலையை நீங்கள் அறியமாட்டீர்கள்.
2:154. இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை மரணித்தோர் என நீங்கள் கூறவேண்டாம். மாறாக, (அவர்கள் ‘பர்ஜக்’ எனும் மறைவான உலகில் உயிரோடிருக்கிறார்கள். எனினும், (அவர்கள் எவ்வாறு உயிரோடு உள்ளார்கள் என்பதை) நீங்களே உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
2:155 وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
2:155. (நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.
2:155. மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!
2:155. விசுவாசங்கொண்டோரே! பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள், கனிகளின், விளைச்சல்கள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும், நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். மேலும், (நபியே!) இவற்றைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
2:156 الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ  ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ‏
2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
2:156. (சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்" எனக் கூறுவார்கள்.
2:156. அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.
2:156. அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்கு ஏதேனும் ஒரு துன்பம் பீடித்தால் “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம், நிச்சயமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம்” என்று கூறுவார்கள்.
2:157 اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ‏
2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
2:157. இத்தகையவர்கள் மீதுதான் அவர்களுடைய இறைவனிடமிருந்து புகழுரைகளும் கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், இவர்கள்தாம் நேரான வழியையும் அடைந்தவர்கள்.
2:157. அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்!
2:157. அத்தகையோர் – அவர்கள் மீது தான் அவர்களுடைய இரட்சகனிடமிருந்து நல்லாசிகளும், கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், அவர்கள்தாம் நேர்வழியையும் பெற்றவர்கள்.
2:158 اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآٮِٕرِ اللّٰهِۚ فَمَنْ حَجَّ الْبَيْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ اَنْ يَّطَّوَّفَ بِهِمَا ؕ وَمَنْ تَطَوَّعَ خَيْرًا ۙ فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ‏
2:158. நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
2:158. நிச்சயமாக "ஸஃபா" (மலையும்) "மர்வா" (மலையும், வணக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாக இருக்கின்றன. ஆகையால் எவர்கள் ("கஅபா" என்னும்) அவ்வீட்டை "ஹஜ்ஜு" அல்லது "உம்ரா" செய்தார்களோ அவர்கள், அவ்விரண்டையும் சுற்றி வருவது குற்றமல்ல. ஆகவே, எவரேனும் நன்மையை நாடி (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அதற்கு) நன்றி பாராட்டுபவ னாகவும் (எண்ணங்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
2:158. நிச்சயமாக ‘ஸஃபா’ ‘மர்வா’(எனும் இரு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகையால், யார் இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா* செய்கிறாரோ அவர் மீது அந்த இரண்டுக்குமிடையே ‘ஸயீ’• செய்வதில் குற்றமில்லை. மேலும் எவரேனும் தாமாக விரும்பி ஏதேனும் நன்மையைச் செய்தால், அல்லாஹ் அதை மதிப்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
2:158. நிச்சயமாக - ஸஃபா – மற்றும் - மர்வா – (எனும் இரு மலைகள்) அல்லாஹ்வின் (மார்க்க) அடையாளங்களில் உள்ளவையாகும். ஆகவே, எவர் (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ்ஜு அல்லது உம்ரா செய்கிறாரோ, அவர் மீது அவ்விரண்டையும் சுற்றி வருவது (அவ்விரண்டிற்குமிடையில் ஸயீ செய்வது) குற்றமல்ல. இன்னும் எவர் தாமாக உபரியான நன்மையைச் செய்கிறாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன். (அவர்களின் செயல்களை) நன்கறிகிறவன்.
2:159 اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَ يَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ‏
2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
2:159. நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் இறக்கி, அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்தி(க் கூறி)ய பின்னும் எவர்கள் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கின்றான். (மற்றும்) சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர்.
2:159. நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவர்க்காகவும் நம் வேதத்தில் எடுத்துரைத்த பின்னரும் எவர்கள் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கின்றார்கள்.
2:159. தெளிவான அத்தாட்சிகளிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் நாம் இறக்கி வைத்துள்ளதை – அதனை நாம் மனிதர்களுக்காக வேதத்தில் விளக்கிய பின்னர், நிச்சயமாக மறைக்கின்றார்களே அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். (மனித இனம், ஜின் மலக்குகள் ஆகியோரில்) சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர்.
2:160 اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّـنُوْا فَاُولٰٓٮِٕكَ اَ تُوْبُ عَلَيْهِمْۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ‏
2:160. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
2:160. ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (தங்கள் வேதங்களில் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்துவிடுவேன். நானோ மிக்க மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன்.
2:160. ஆனால் யார் (இத்தவறிலிருந்து) திருந்தி தம் செயல்முறையை ஒழுங்குபடுத்திக் கொண்டு, (தாம் மறைத்திருந்தவற்றை) எடுத்துரைக்கிறார்களோ அவர்களை நான் மன்னிப்பேன். நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றேன்.
2:160. (தாங்கள் மறைத்தவற்றிற்காக மன்னிப்புக் கோரி) தவ்பாச் செய்து (தங்களைச்) சீர்த்திருத்திக் கொண்டு (அவற்றை) தெளிவாகவும் எடுத்துரைக்கின்றனரே அத்தகையோரைத் தவிர; அப்பொழுது அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். இன்னும் நான்தான் அதிகமாக தவ்பாவை ஏற்(று மன்னிப்பவன்), மிகக் கிருபையுடையவன்.
2:161 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓٮِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ‏
2:161. யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.
2:161. (அன்றி,) எவர்கள் (தங்கள் வேதத்திலுள்ள உண்மைகளை மறைத்து) நிராகரித்துவிட்டு (அதனை சீர்திருத்தாமல்) நிராகரித்த வண்ணமாகவே இறந்து விடுகின்றார்களோ அவர்கள்மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் நிச்சயமாக உண்டாகின்றன.
2:161. எவர்கள் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டு, அதே நிலையில் இறந்து விடுகின்றார்களோ அத்தகையோர் மீது அல்லாஹ் மற்றும் வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபம் நிச்சயமாக உண்டாகும்.
2:161. நிச்சயமாக நிராகரித்துவிட்டு, நிராகரித்தவர்களாகவே இறந்தும் விடுகின்றார்களே அத்தகையோர்-அவர்கள் மீது அல்லாஹ் மலக்குகள், மனிதர்களை அனைவருடையவும் சாபம் உண்டு.
2:162 خٰلِدِيْنَ فِيْهَا ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏
2:162. அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது; மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.
2:162. (மேலும் அவர்கள்) அ(ச்சாபத்)தில் என்றென்றும் தங்கி விடுவார்கள். (மறுமையில்) அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்கள் (ஓய்வு எடுப்பதற்கு) அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்.
2:162. அவர்கள் அந்தச் சாபத்திலேயே என்றென்றும் மூழ்கிக் கிடப்பார்கள். தண்டனை அவர்களுக்கு இலகுவாக்கப்பட மாட்டாது; அவகாசமும் அவர்களுக்கு அளிக்கப்படமாட்டாது!
2:162. (மேலும் அவர்கள்) அ(ச்சாபத்)தில் என்றென்றும் தங்கி இருப்பவர்கள்; (மறுமையில்) அவர்களை விட்டு வேதனை இலேசாக்கப்படமாட்டாது; அவர்கள் கால அவகாசம் கொடுக்கப்படவுமாட்டார்கள்.
2:163 وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ  ۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ‏
2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
2:163. (மனிதர்களே!) உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரேயொரு இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை.
2:163. உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை;
2:163. (மனிதர்களே!) மேலும், உங்கள் (வணக்கத்திற்குரிய) நாயன் ஓரே ஒரு (வணக்கத்திற்குரிய) நாயன்தான்; அளவற்ற அருளும், நிகரற்ற அன்பும் உடைய அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை.
2:164 اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِىْ تَجْرِىْ فِى الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ مَّآءٍ فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيْهَا مِنْ کُلِّ دَآ بَّةٍ وَّتَصْرِيْفِ الرِّيٰحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَآءِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
2:164. அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி அதைக்கொண்டு (வறண்டு) இறந்த பூமியை அல்லாஹ் உயிர்ப்பி(த்துச் செழிப்பாக்கிவை)ப்பதிலும், கால்நடைகள் அனைத்தையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்றை(ப் பல கோணங்களில் திருப்பி)த் திருப்பி விடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அமர்த்தப்பட்டிருக்கும் மேகத்திலும், (மனிதர்களுக்குள்ள பயன்களை ஆராய்ந்து) சிந்திக்கும் மக்களுக்கு (அவனுடைய அருளையும், அன்பையும் ஆற்றலையும் அறிவிக்கக்கூடிய) பல அத்தாட்சிகள் நிச்சயமாக இருக்கின்றன.
2:164. (இந்த உண்மையை அறிந்துகொள்ள சான்று வேண்டுமாயின்) வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்குப் பயன் தருபவற்றைச் சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், பின்னர் அதைக்கொண்டு பூமியை அது இறந்து போன பின்னர்கூட உயிர்ப்பித்து மேலும் (தனது இந்த ஏற்பாட்டின் மூலம்) அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளைச் சுழலச் செய்வதிலும், வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
2:164. நிச்சயமாக வானங்களையும் பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறிக் கொண்டிருப்பதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி வைத்து அதன்மூலம் பூமியை அது (வறண்டு) இறந்தபின் உயிராக்கி வைப்பதிலும், அதில் ஒவ்வொரு விதமான (ஊர்ந்து திரியும்) பிராணியை பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளைப் பலவாறாகித் திருப்பிவிட்டுக் கொண்டிருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மேகத்திலும் சிந்திக்கும் சமூகத்தவர்க்கு சான்றுகள் இருக்கின்றன.
2:165 وَمِنَ النَّاسِ مَنْ يَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا يُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِؕ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ وَلَوْ يَرَى الَّذِيْنَ ظَلَمُوْٓا اِذْ يَرَوْنَ الْعَذَابَۙ اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِيْعًا ۙ وَّاَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعَذَابِ‏
2:165. அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்; அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது; நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).
2:165. மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதுபோல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றனர். எனினும், இறை நம்பிக்கையாளர்கள் (இவர்களைவிட) அதிகமாக அல்லாஹ்வையே நேசிப்பார்கள். (தவிர) இந்த அநியாயக்காரர்கள் (சிறிது) சிந்திக்க வேண்டாமா? இவர்கள் வேதனையைத் (தங்கள் கண்ணால்) காணும் போது வேதனை செய்வதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவனாக இருப்பதுடன், எல்லா வல்லமையும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே இருக்கின்றன (தாங்கள் பிரியம் வைத்தவைகளுக்கு இல்லை என்றும் அறிந்துகொள்வார்கள்).
2:165. (ஆனால் இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவுபடுத்தும் இத்தகைய தெளிவான சான்றுகள் இருந்தும்) மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் (அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள். மேலும், அல்லாஹ்வை எவ்வாறு நேசிக்க வேண்டுமோ அது போல அவர்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இறைநம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை அனைவரையும்விட அதிகமாக நேசிக்கிறார்கள். ஆற்றல் முழுவதும் அல்லாஹ்வின் பிடியிலேதான் இருக்கிறது; மேலும், அல்லாஹ் கடுமையாக தண்டனை கொடுப்பவன் என்பதை இந்த அக்கிரமக்காரர்கள் வேதனையை (நேரில்) காணும்போது அறியத்தான் போகின்றார்கள்! அந்தோ! அதனை (இன்றே) அவர்கள் உணர்ந்து கொண்டால் எத்துணை நன்றாயிருக்கும்!
2:165. மனிதர்களில் அல்லாஹ்வையன்றி அவனுக்கு இணையாளர்களை (சமமானவர்களாக) ஆக்கிக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்பவர்களும் இருக்கின்றனர்; (ஆனால்) விசுவாசிகளோ, அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக் கடினமானவர்கள்; இன்னும், (இணை வைப்பதன் மூலம்) அநியாயம் செய்து கொண்டிருந்தோர் வேதனையைக் (கண்ணால்) காணுகின்றபோது பார்ப்பார்களானால், நிச்சயமாக சக்தி அனைத்தும் (தாங்கள் பிரியம் வைத்தவர்களுக்கன்றி) அல்லாஹ்விற்கே இருக்கின்றது; இன்னும் வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன் (என்றும் தெரிந்து கொள்வார்கள்).
2:166 اِذْ تَبَرَّاَ الَّذِيْنَ اتُّبِعُوْا مِنَ الَّذِيْنَ اتَّبَعُوْا وَرَاَوُا الْعَذَابَ وَ تَقَطَّعَتْ بِهِمُ الْاَسْبَابُ‏
2:166. (இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.
2:166. (இவர்களுக்குத் தவறான) இவ்வழியைக் காட்டியவர்களும் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்டவுடன் (தங்களைப்) பின்பற்றிய இவர்களை (முற்றிலும் கைவிட்டு) விட்டு விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கு(ம், அவர்களைப் பின்பற்றிய இவர்களுக்குமிடையில்) இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிடும்.
2:166. (தண்டனை வழங்கப்படும்) அந்த நேரத்தில், (இவ்வுலகில்) பின்பற்றப்பட்டு வந்த (வழிகாட்டிகள் மற்றும் தலை)வர்கள் தம்மைப் பின்பற்றி வந்தோரை விட்டு (அவர்களுக்கும் தமக்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை என்று கூறி) விலகி விடுவார்கள். ஆயினும் அவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்! மேலும் அவர்களுக்கிடையே இருந்த எல்லா உறவுகளும் முற்றிலும் அறுந்துவிடும்!
2:166. (இத்தவறான வழியைக் காட்டிய) பின்பற்றப்பட்டவர்கள், பின்பற்றியவர்களிலிருந்து நீங்கிக் கொண்டு, வேதனையையும் இவர்கள் கண்டு, அவர்களுக்கு மத்தியிலிருந்து தொடர்புகளும் அறுபட்டுவிடும் சமயத்தில் (கடும் துன்பத்தை அடைவார்கள்.)
2:167 وَقَالَ الَّذِيْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّاَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوْا مِنَّا ؕ كَذٰلِكَ يُرِيْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرٰتٍ عَلَيْهِمْؕ وَمَا هُمْ بِخٰرِجِيْنَ مِنَ النَّارِ‏
2:167. (அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்.” இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான்; அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.
2:167. தவிர, (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொருமுறை நாம் (உலகத்துக்கு) திரும்ப செல்லக் கூடுமாயின் (எங்களுக்கு வழிகாட்டிய) அவர்கள், (இப்பொழுது முற்றிலும்) எங்களைக் கைவிட்டு விலகிக் கொண்டபடியே நாங்களும் அவர்களை விட்டு நிச்சயமாக விலகிக்கொள்வோம் என்று கூறுவார்கள். (அவர்களுடைய உடல்கள் நரகில் வேதனைப்படும்.) இவ்வாறே (அவர்களுடைய உள்ளங்களும் வேதனையடைவதற்காக) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக் காண்பிப்பான். மேலும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.
2:167. அப்பொழுது அத்தலைவர்களைப் பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: “நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால், இன்று நம்மைவிட்டு அவர்கள் விலகிக் கொண்டது போல நாமும் அவர்களை விட்டு விலகிக் கொள்வோமே!” இவ்வாறு வேதனையாலும், துக்கத்தாலும் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கும் வகையில் அவர்கள் (இவ்வுலகில்) செய்த தீய செயல்களை அல்லாஹ் அவர்களுக்குக் காண்பித்துக் கொடுப்பான். மேலும், நெருப்பிலிருந்து (எவ்வகையிலும்) அவர்கள் வெளியேறிவிட முடியாது.
2:167. மேலும், நிச்சயமாக ஒரு மீட்சி (உலகிற்கு திரும்பிச் செல்லுதல்) நமக்கு இருக்குமானால் நம்மிலிருந்து அவர்கள் நீங்கிக் கொண்டது போன்று நாமும் அவர்களிலிருந்து நீங்கிக் கொள்வோம் - என்று பின்பற்றியவர்கள் கூறுவார்கள். இவ்வாறே அல்லாஹ் - அவர்களின் (தீய) செயல்களை அவர்கள் மீது கைசேதப்பட்டு துக்கமளிப்பவையாக அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான். அவர்கள் நரக நெருப்பிலிருந்து வெளியேறுபவர்களும் அல்லர்.
2:168 يٰٓاَيُّهَا النَّاسُ كُلُوْا مِمَّا فِى الْاَرْضِ حَلٰلًا طَيِّبًا  ۖ وَّلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
2:168. மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்; ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
2:168. மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் (புசிக்க உங்களுக்கு) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். (இதற்கு மாறு செய்யும்படி உங்களைத் தூண்டும்) ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.
2:168. மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் தூய்மையான அனுமதிக்கப்பட்ட பொருள்களைப் புசியுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவன் ஆவான்!
2:168. மனிதர்களே! பூமியிலுள்ளவற்றிலிருந்து (உண்ண) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றை உண்ணுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான்.
2:169 اِنَّمَا يَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
2:169. நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
2:169. தீமைகள் மற்றும் மானக்கேடானவைகளை நீங்கள் செய்வதற்கும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதற்கும் ஷைத்தான் உங்களைத் தூண்டுகிறான்.
2:169. அவன் பாவத்தையும், மானக்கேடான செயல்களையும் செய்யுமாறுதான் உங்களை ஏவுகிறான்; இன்னும் நீங்கள் அறியாத விஷயங்களையெல்லாம் அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்லுமாறு உங்களை அவன் ஏவுகின்றான்.
2:169. நிச்சயமாக, அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீயதையும் மானக்கேடானவற்றையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதையும்தாம்.
2:170 وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ‏
2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
2:170. மேலும், அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் (அவர்கள்) "அவ்வாறன்று. எவற்றின் மீது எங்களுடைய மூதாதைகள் (இருந்து, அவர்கள் எவற்றைச் செய்துகொண்டு) இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்" எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்!)
2:170. “அல்லாஹ் இறக்கியருளிய (வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “இல்லை! எங்கள் தந்தையார், பாட்டனார் எந்த வழியைப் பின்பற்றியதாகக் கண்டோமோ அதனையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று மறுமொழி கூறுகின்றார்கள். அப்படியானால் அவர்களின் தந்தையார், பாட்டனார் எதையும் சிந்தித்து உணராதவர்களாயும் நேர்வழி பெறாதவர்களாயும் இருந்தாலுமா இவர்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள்?
2:170. மேலும், (இவ்வேதமாகிய) அல்லாஹ், இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் “இல்லை! நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை எதன்மீது கண்டோமோ, அதையே நாங்கள் பின்பற்றுவோம்” எனக் கூறுகின்றனர்; அவர்களுடைய மூதாதையர்கள் எதையுமே விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அப்படியே பின்பற்றுவார்கள்?)
2:171 وَمَثَلُ الَّذِيْنَ کَفَرُوْا كَمَثَلِ الَّذِىْ يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ صُمٌّۢ بُكْمٌ عُمْـىٌ فَهُمْ لَا يَعْقِلُوْنَ‏
2:171. அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
2:171. (அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் காஃபிர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள்.
2:171. இறைநெறியைப் பின்பற்ற மறுப்பவர்களின் உவமையானது கால்நடைகளைப் போன்றதாகும். சப்தமிடும் இடையனின் கூப்பாட்டையும், அழைப்பொலியையும் தவிர அவை வேறு எதையும் கேட்பதில்லை. அவர்கள் செவிடர்களாய், ஊமையராய், குருடர்களாய் இருக்கின்றனர்; எனவே எதனையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
2:171. (மூதாதையர்களை கண் மூடித்தனமாகப் பின்பற்றும் நிராகரிப்போருக்கு உதாரணம் வெறும் கூப்பாட்டையும், அழைப்பொலியையும் தவிர வேறெதையும் கேட்காத (பிராணிகளைக்) கூவி அழைப்பவனின் உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (மேலும், அவர்கள்) செவிடர்கள் (உண்மையைக் கேட்கவே மாட்டார்கள்), ஊமையர்கள் (உண்மையைப் பேசவே மாட்டார்கள்), குருடர்கள் (அவர்களுக்கு பயன் தரக்கூடியவற்றைப் பார்க்கவே மாட்டார்கள்.) ஆதலால் அவர்கள் எதையும் அறிந்துணர மாட்டார்கள்.
2:172 يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏
2:172. நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
2:172. நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவைகளில் இருந்தே புசியுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள்.
2:172. இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வுக்கு மட்டுமே பணிந்து வாழ்பவர்களாய் இருப்பின் நாம் உங்களுக்கு அளித்திருக்கும் தூய்மையானவற்றைத் தாராளமாகப் புசியுங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்.
2:172. விசுவாசங்கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்ததில் நல்லவற்றை உண்ணுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு (வணக்கத்திற்குரிய! அவனையே நீங்கள் வணங்குபவர்களாக இருந்தால் - நன்றி செலுத்துங்கள்.
2:173 اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.
2:173. (நம்பிக்கையாளர்களே!) தாமாக செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவைகள் ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆதலால், எவரேனும் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப்பட்டு விட்டால் (அது) அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
2:173. செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், அல்லாஹ்வைத் தவிர மற்றவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். எனினும், எவரேனும் ஒருவர் (இப்பொருள்களில் ஏதாவதொன்றைப் புசிக்க வேண்டிய) கட்டாயத்திற்குள்ளானால், இறைச்சட்டத்தைத் தகர்க்கும் நோக்கமில்லாமலும், வரம்பு மீறாமலும் (தேவைக்கு மிகாமலும்) அதனைப் புசிப்பதில் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
2:173. உங்களின்மீது (அல்லாஹ்வாகிய) அவன் ஹராம் (என்று தடை) ஆக்கியிருப்பதெல்லாம் (தானாகச்) செத்ததையும், இரத்தத்தையும், பன்றியின் மாமிசத்தையும், அல்லாஹ் அல்லாதவருக்காக (அறுப்புப் பிராணிகளில்) எதற்கு பெயர் கூறப்பட்டு விடப்பட்டதோ அதையும்தான். ஆகவே எவரேனும் பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் வரம்பு மீறாமலும் இருந்து (இவற்றைப் புசிக்க) நிர்ப்பந்திக்கப் பட்டுவிட்டால் அவர்மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன். மிகக் கிருபையுடையவன்.
2:174 اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْکِتٰبِ وَ يَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۙ اُولٰٓٮِٕكَ مَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا يُکَلِّمُهُمُ اللّٰهُ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَکِّيْهِمْ ۖۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
2:174. எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
2:174. எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவைகளை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக் கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கின்றார்கள். அன்றி, மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்) பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் பரிசுத்தமாக்கி வைக்கவுமாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு.
2:174. அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இறக்கியருளிய சட்டங்களை எவர்கள் மறைக்கின்றார்களோ மேலும் (இம்மையின்) அற்ப இலாபத்திற்காக அவற்றை விற்கின்றார்களோ அவர்கள், உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் நிரப்பிக் கொள்வதில்லை. இன்னும் இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்! மேலும் அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனையும் உண்டு.
2:174. நிச்சயமாக வேதத்தில் அல்லாஹ் இறக்கியவற்றை மறைத்துவிட்டு, அதற்குப் பகரமாக சொற்பக் கிரயத்தையும் வாங்குகின்றனரே அத்தகையோர் - அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதனையும்) உட்கொள்வதில்லை. – மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் (பாவத்திலிருந்து) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; (அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு.)
2:175 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰى وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ‌ ۚ فَمَآ اَصْبَرَهُمْ عَلَى النَّارِ‏
2:175. அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது?
2:175. இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்களாவர். (நரக) நெருப்பை (இவ்விதம்) அவர்கள் (சுவைத்து) சகிக்கும்படிச் செய்தது எதுவோ?
2:175. இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாக தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள்! நரக வேதனையைச் சகித்துக் கொள்வதற்கு(த் தயாராய் உள்ள) இவர்களின் துணிவு எத்துணை வியப்புக்குரியது!
2:175. இத்தகையோர்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும் மன்னிப்புக்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்களாவர். ஆகவே, (நரக) நெருப்பின்மீது அவர்களை சகிக்கச் செய்தது எதுவோ?
2:176 ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْکِتٰبَ بِالْحَـقِّؕ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَفُوْا فِى الْكِتٰبِ لَفِىْ شِقَاقٍۢ بَعِيْدٍ‏
2:176. இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.
2:176. இதன் காரணம்: நிச்சயமாக அல்லாஹ் (முற்றிலும்) உண்மையாகவே வேதத்தை இறக்கியிரு(க்க, சொற்பத் தொகையைப் பெறுவதற்காக அதன் வசனங்களை மறை)ப்பதுதான். மேலும், வேதத்தைப் புரட்டுகிறவர்கள் நிச்சயமாக (நேர்வழியை விட்டுப்) பிரிந்து வெகுதூரத்தில் இருக்கின்றார்கள்.
2:176. இதற்குக் காரணம், நிச்சயமாக அல்லாஹ் முழுக்க முழுக்க சத்தியத்துடனேயே வேதத்தை இறக்கியிருந்தும், வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தம் பிணக்குகளில் மூழ்கி (சத்தியத்தை விட்டு) வெகு தூரம் சென்று விட்டதுதான்!
2:176. இது (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கி வைத்துள்ளான் என்பதினாலாகும். மேலும், நிச்சயமாக இவ்வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (உண்மையைவிட்டுத்) தூரமான பிளவிலேயே இருக்கிறார்கள்.
2:177 لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).
2:177. மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்பமுள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய) வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்து (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தாம் இறை அச்சமுடையவர்கள்!
2:177. நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள்.
2:177. கிழக்கு, மேற்கு ஆகியவற்றின் பக்கமாக உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மை செய்ததாக ஆகிவிடுவது இல்லை. எனினும் நன்மை உடையவர் (எவரெனில் உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும், மலக்குகளையும், வேதத்தையும், நபிமார்களையும் விசுவாசித்து, மேலும் செல்வத்தை தம் விருப்பத்தின் மீது பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகளிலும் (அவர்களை விடுவிப்பதற்காக) கொடுத்தவரும், மேலும் தொழுகையை நிறைவேற்றி ஜகாத்தையும் கொடுத்து, வாக்களித்தால் தங்களின் வாக்குறுதியை (ச்சரிவர) நிறைவேற்றக் கூடியவர்களும், (வறுமையின்போது) துன்பத்திலும் (நோய் நொடிகள் போன்ற) கஷ்டத்திலும், யுத்த நேரத்திலும் பொறுமையுடனிருந்தவர்களுமாவர். அத்தகையோர் தாம் உண்மை சொன்னார்களே அவர்கள் (ஆவர்). இன்னும் இவர்கள் தாம் பயபக்தியாளர்கள்.
2:178 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِى الْقَتْلٰى  ؕ الْحُرُّ بِالْحُـرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْاُنْثَىٰ بِالْاُنْثٰىؕ فَمَنْ عُفِىَ لَهٗ مِنْ اَخِيْهِ شَىْءٌ فَاتِّبَاعٌۢ بِالْمَعْرُوْفِ وَاَدَآءٌ اِلَيْهِ بِاِحْسَانٍؕ ذٰلِكَ تَخْفِيْفٌ مِّنْ رَّبِّكُمْ وَرَحْمَةٌ  ؕ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِيْمٌۚ‏
2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
2:178. நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (ஆகவே, கொலை செய்யப்பட்டவன்) சுதந்திரமானவனாயின் (அவனை கொலை செய்த) சுதந்திரமானவனையே, (கொலை செய்யப்பட்டவன்) அடிமையாயின் (அவனை கொலை செய்த அந்த) அடிமையையே, (கொலை செய்யப்பட்டவள்) பெண்ணாயின் (கொலை செய்த அந்தப்) பெண்ணையே நீங்கள் கொலை செய்துவிடுங்கள். (ஆயினும், பழிவாங்கும் விஷயத்தில்) ஒரு சிறிதேனும் அ(க் கொலையுண்ட) வனுடைய சகோதரரால் மன்னிக்கப்பட்டுவிட்டால், மிக்க கண்ணியமான முறையைப் பின்பற்றி (அவனைக் கொலை செய்யாது விட்டு) விடவேண்டும். (பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையாளி ஒரு தொகையைத் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தால், அந்த நஷ்டஈட்டைத்) தயக்கமின்றி நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும். இ(வ்வாறு நஷ்டஈட்டை அனுமதித்திருப்ப)து உங்கள் இறைவனுடைய சலுகையும், அருளுமாகும். இ(வ்வாறு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொண்ட)தற்குப் பின் எவரேனும் வரம்பு மீறி (நஷ்டஈடு கொடுத்த கொலையாளியைத் துன்புறுத்தி)னால் அவனுக்கு (மறுமையில்) மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.
2:178. இறைநம்பிக்கை கொண்டவர்களே! கொலை வழக்குகளில் பழிவாங்கல் உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. கொலை செய்தவன் சுதந்திர மனிதன் என்றால் அந்தச் சுதந்திரமான மனிதனிடமும், கொலை செய்தவன் அடிமை என்றால் அந்த அடிமையிடமும், கொலை செய்தவள் ஒரு பெண் என்றால் அந்தப் பெண்ணிடமுமே பழிவாங்கப்பட வேண்டும். கொலை செய்தவனுக்கு அவனுடைய சகோதரனால் (அதாவது கொல்லப்பட்டவரின் உறவினரால்) சலுகை அளிக்கப்பட்டால், பிறகு நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும் உயிரீட்டுத் தொகையை நேர்மையான முறையில் அவன் வழங்கிட வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் எவராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை உண்டு.
2:178. விசுவாசங்கொண்டோரே! கொலையுண்டவர்கள் விஷயத்தில் (பகரமாக) பழி வாங்குவது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. (அதில் கூடுதல் குறைவின்றி) சுதந்திரமானவனுக்குப் பகரமாக சுதந்திரமானவனும், அடிமைக்குப் பகரமாக அடிமையும், பெண்ணுக்குப் பகரமாகப் பெண்ணும் பழி வாங்கப்படுதல் வேண்டும்); அக்(கொலையுண்ட)வனுடைய சகோதர (பாத்தியஸ்த)ரால் (கொலை செய்த) அவனுக்கு ஏதேனும் மன்னிக்கப்பட்டு விட்டால், அப்போது (கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள்) அறியப்பட்ட (வழக்கமான) முறையைப் பின்பற்றுதல் வேண்டும், (கொலை செய்தவரைச் சார்ந்தோர் நஷ்ட ஈட்டை) அவன்பால் பெருந்தன்மையுடன் நிறைவேற்றிவிடவும் வேண்டும், இது உங்கள் இரட்சகனிடமிருந்துள்ள சலுகையும், கிருபையுமாகும், ஆகவே, இதன் பின்னர் யாராவது வரம்பு மீறினால், அப்போது அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
2:179 وَ لَـكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓـاُولِىْ الْاَلْبَابِ لَعَلَّکُمْ تَتَّقُوْنَ‏
2:179. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
2:179. அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள்.
2:179. நல்லறிவுடையோரே! (கொலைக்குப்) பழிவாங்குதல் எனும் இவ்விதிமுறையில் உங்களுக்கு வாழ்வு இருக்கிறது. (இதனை உணர்ந்தால்) இறைச்சட்டங்களை மீறுவதிலிருந்து நீங்கள் விலகியிருக்கக் கூடும்.
2:179. நல்லறிவுடையோரே! (கொலையுண்டவர்கள் விஷயத்தில்) பழி வாங்குவதலில் உங்களுக்கு வாழ்வும் உண்டு. (அதன் மூலம்) நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளலாம்.
2:180 كُتِبَ عَلَيْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَيْرَا  ۖۚ اۨلْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَؕ‏
2:180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.
2:180. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து அவர் பொருளை விட்டுவிட்டு இறப்பவராகவும் இருந்தால், (அவர் தன்னுடைய) தாய் தந்தைக்கும், பந்துக்களுக்கும், நியாயமான முறைப்படி (பொருள் சேர்வதற்காக) மரண சாசனம் (கூற) விதிக்கப்பட்டிருக்கிறது. (இது) இறை அச்சமுடையவர்கள் மீது கடமையாகும்.
2:180. உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது: உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும்போது, அவர் ஏதேனும் செல்வத்தை விட்டுச் செல்வாரானால் தம் பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் முறைப்படி அவர் வஸிய்யத் (மரண சாஸனம்) செய்தல் வேண்டும். இறையச்சமுடையோர் மீது இது கடமையாகும். யாரேனும் அ(ந்த வஸிய்யத்)தைக் கேட்டு,
2:180. (விசுவாசிகளே!) உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும்போது அவர் பொருளை விட்டுச் செல்வாரானால், (அவர் தன்னுடைய) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி (மரண) சாசனம் செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; (இது) பயபக்தியுடையவர்கள் மீது கடமையாகும்.
2:181 فَمَنْۢ بَدَّلَهٗ بَعْدَمَا سَمِعَهٗ فَاِنَّمَآ اِثْمُهٗ عَلَى الَّذِيْنَ يُبَدِّلُوْنَهٗؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌؕ‏
2:181. வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
2:181. (மரண சாசனமாகிய) அதனைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதனை மாற்றிவிட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) செவியுறுபவனாகவும், (அதனை மாற்றும் பாவிகளின் செயலை) அறிந்தவனுமாயிருக்கின்றான்.
2:181. பின்னர் அதனை மாற்றிவிட்டால் அதன் பாவம் அவ்வாறு மாற்றியவர்களைத்தான் சாரும். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், அறிவோனாகவும் இருக்கின்றான்.
2:181. எனவே, யார் அதனைக் கேட்டதற்குப்பின்னர் அதனை மாற்றிவிட்டாரோ, அதன் பாவமெல்லாம் அதனை மாற்றிவிடுகிறார்களே அத்தகையோர் மீதேயாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
2:182 فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَيْنَهُمْ فَلَاۤ اِثْمَ عَلَيْهِؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
2:182. ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.
2:182. ஆனால் மரணசாசனம் கூறியவரி(ன் சாசனத்தி)ல் அநீதம் அல்லது தவறு இருப்பதை எவரேனும் பார்த்து பயந்து, அந்த சாசனப் பொருளை அடையக்கூடிய)வர்களுக்கிடையே சமாதானம் செய்து அதனை மாற்றிவிட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
2:182. ஆயினும், வஸிய்யத் செய்தவர் தெரிந்தோ தெரியாமலோ அநீதி இழைத்துவிட்டார் என்று எவரேனும் அஞ்சி, சம்பந்தப்பட்டவர் மத்தியில் இந்த விவகாரத்தை ஒழுங்குபடுத்திவிட்டால் அது அவர் மீது குற்ற மாகாது. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணைபுரிபவனுமாக இருக்கின்றான்.
2:182. ஆனால் (மரண) சாசனம் செய்தவரிலிருந்து வரம்பு மீறுதலையோ அல்லது பாவத்தையோ யாராவது பயந்து அவர்களுக்கிடையே (விவகாரத்தை) ஒழுங்குபடுத்திவிட்டால், அப்போது அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
2:183 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏
2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்
2:183. நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம்.
2:183. இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.
2:183. விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது; (அதனால்) நீங்கள் (உள்ளசுத்தி பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம்.
2:184 اَيَّامًا مَّعْدُوْدٰتٍؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ‌ؕ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍؕ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ ؕ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
2:184. குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். தவிர, (எக்காரணத் தினாலாவது நோன்பு நோற்கக் கஷ்டப்படுபவர்கள் அதற்குப்) பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதைவிட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்).
2:184. (நோன்பு நோற்பது) குறிப்பிட்ட சில நாட்களிலேயாகும். ஆனால் (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுக் கொள்ள வேண்டும். நோன்பு நோற்க சக்தி பெற்றிருப்பவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால் அவர்கள்) மீது ஃபித்யா (பரிகாரம்) கடமையாகின்றது. அது (ஒரு நோன்புக்குரிய பரிகாரம்) ஓர் ஏழைக்கு உணவளிப்பதாகும். ஆனால் எவரேனும் விரும்பி அதிக நன்மை செய்தால், அது அவருக்கே சிறந்ததாகும். ஆனால் நீங்கள் அறிவுடையோராயிருப்பின் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மை ஈட்டித் தரும்.
2:184. எண்ணப்பட்ட சில நாட்களில் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆனால் (அந்நாட்களில்) உங்களில் எவர் நோயாளிகளாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தாரோ (அவருக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுண்டு; விடுபட்ட நோன்புகளை) மற்ற நாட்களில் எண்ணி(நோற்றுவி)டவும். இன்னும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் மீது ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்; ஆகவே, எவரேனும் உபரியாக நன்மை செய்தால், அது அவருக்கு நன்மையாகும். மேலும் நீங்கள் அறிந்திருப்போராயின் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் (என்பதை தெரிந்து கொள்வீர்கள்.)
2:185 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
2:185. ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது!)
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும். நேர்வழியிலிருந்து(ள்ள) தெளிவுகளாகவும் (சத்திய அசத்தியத்தைப்) பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள இந்தக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை பெறுகிறாரோ அவர், அதில் நோன்பு நோற்றுவிடவும்; எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால், மற்ற நாட்களில் ஏற்கனவே விடுபட்ட நோன்பினை) எண்ணி (நோற்று) விடவும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான்; மேலும், அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை. மேலும் (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்வதற்காகவும், அல்லாஹ்வை உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியதற்காக நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே (இச்சலுகைகளை உங்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்).
2:186 وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌؕ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏
2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
2:186. (நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்." ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள்.
2:186. மேலும் (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், “நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்). எனவே அவர்கள் என்னுடைய அழைப்பை விரைந்து ஏற்றுக் கொள்ளட்டும். என்மீது நம்பிக்கை கொள்ளட்டும். அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும்.”
2:186. மேலும், (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், (அதற்கு நீர் கூறுவீராக:) “நிச்சயமாக நான், (அவர்களுக்கு) மிகச் சமீபமாகவே இருக்கின்றேன்; அழைப்பவரின் அழைப்புக்கு அவர் என்னை அழைத்தால் நான் பதிலளிப்பேன்; ஆகவே, அவர்கள் நேரான வழியை அடைவதற்காக, அவர்கள் (என்னுடைய கட்டளைகளை ஏற்று) எனக்கு பதில் அளிக்கவும்; மேலும், அவர்கள் என்னையே விசுவாசிக்கவும்.
2:187 اُحِلَّ لَـکُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕ هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّکُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَکُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْۚ فَالْـــٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا کَتَبَ اللّٰهُ لَـكُمْ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ‌ؕ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ‌ۚ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْـتُمْ عٰكِفُوْنَ فِى الْمَسٰجِدِؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
2:187. நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
2:187. (நம்பிக்கையாளர்களே!) நோன்பு (நாள்களின்) இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் வீடு கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (நோன்புடைய காலத்தில் இஷாவுக்குப் பின்னர் உங்கள் மனைவிகளுடன் கூடாமலும், யாதொரு பொருளை புசிக்காமலும் இருந்து) நிச்சயமாக நீங்கள் உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து உங்கள்மீது இரக்கமுற்று உங்கள் கஷ்டத்தை நீக்கிவிட்டான். ஆகவே, இனி இருள் நீங்கி விடியற்காலை (ஃபஜ்ர்) ஆகிவிட்டது என்று உங்ளுக்குத் தெளிவாகும் வரையில் (நோன்பின் இரவு காலங்களில் உங்கள்) மனைவிகளுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் (அந்நேரங்களில்) புசியுங்கள், பருகுங்கள். (கிழக்கு வெளுத்த) பின்பு இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்புகளை (நோற்றுப்) முழுமையாக்குங்கள். ஆயினும், நீங்கள் (வணங்குவதற்காக) பள்ளிகளில் தங்கி (இஃதிகாஃபு) இருக்கும்போது (உங்கள்) மனைவிகளுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகளாகும். ஆதலால், அவ்வரம்புகளை (மீற) நீங்கள் நெருங்காதீர்கள். மனிதர்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய வசனங்களை அவர்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கின்றான்.
2:187. நோன்புக்கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களுக்கே வஞ்சனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து கொண்டான். எனினும், உங்கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றான்; மேலும் உங்கள் குற்றங்களைப் பொறுத்தருளினான். இனி (இரவில்) அவர்களுடன் நீங்கள் கூடுங்கள். அல்லாஹ் அனுமதித்துள்ள இன்பங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்னும் விடியற்காலையில் வெள்ளை நூலையும், கறுப்பு நூலையும் பிரித்தறிய முடியும் வரை, நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் (இவற்றையெல்லாம் தவிர்த்து) இரவு (தொடங்கும்) வரை நோன்பை நிறைவு செய்யுங்கள். ஆனால் மஸ்ஜித்களில் நீங்கள் இஃதிகாஃப்* இருக்கும் நிலையில் மனைவியரோடு கூடாதீர்கள். இவை அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட வரம்புகளாகும். எனவே அவற்றை நீங்கள் மீறாதீர்கள். மக்கள் (தவறான வழிகளிலிருந்து) தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னுடைய கட்டளைகளை(யும் விதிகளையும்) அல்லாஹ் இவ்வாறு தெளிவாக்குகின்றான்.
2:187. (விசுவாசங்கொண்டோரே!) நோன்பின் இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (இரவின் முன்னேரத்திலேயே உறங்கிவிட்டால் அதன் காரணமாக உண்ணாமலும் தாம்பத்திய உறவு கொள்ளாமலும் தடுத்துக் கொண்டு) நிச்சயமாக நீங்கள் உங்களையே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிந்து கொண்டான். ஆகவே, உங்கள் தவ்பாவை ஏற்று உங்களை விட்டும் உங்கள் பாவத்தை பொறுத்தருளினான். எனவே, இப்போது (நோன்பின் இரவு காலங்களில் உங்கள் மனைவியராகிய) அவர்களுடன் கூடிக் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரத்தில் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து (அதிகாலை என்ற) வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை உண்ணுங்கள், இன்னும், பருகுங்கள்; பின்னர் இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்பை (நோற்றுப்) பூரணமாக்குங்கள். இன்னும், நீங்கள் பள்ளிகளில் தங்கியவர்களாக (இஃதிகாப்) இருக்கும்போது (உங்கள் மனைவியராகிய) அவர்களுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளாகும். அதை(மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக மனிதர்களுக்கு அல்லாஹ் தன்னுடைய வசனங்களைத் தெளிவு செய்கிறான்.
2:188 وَلَا تَاْكُلُوْٓا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُـکَّامِ لِتَاْکُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏
2:188. அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.
2:188. (அன்றி) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்து கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.
2:188. மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்.
2:188. மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கிடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்துகொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள்.
2:189 يَسْـــٴَــلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ‌ؕ قُلْ هِىَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ؕ وَلَيْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُيُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰـكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰى‌ۚ وَاْتُوا الْبُيُوْتَ مِنْ اَبْوَابِهَا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّکُمْ تُفْلِحُوْنَ‏‏‏
2:189. (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
2:189. (நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேயும்) பிறைகளைப் பற்றி உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவை மனிதர்களுக்கு (ஒவ்வொரு மாதத்தையும்) ஹஜ்ஜுடைய காலங்களை(யும்) அறிவிக்கக் கூடியவை." மேலும் (நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர். ஆதலால் நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம்.
2:189. (நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; கூறுவீராக: “அவை மக்களுக்குக் காலங்காட்டியாகவும், ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன.” மேலும், (அவர்களிடம் கூறும்:) “நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமானதல்ல. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே (உண்மையில்) புண்ணியவான் ஆவான். எனவே வீடுகளுக்குள் அவற்றின் வாயில்கள் வழியாகவே வாருங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் வெற்றி பெறக்கூடும்.”
2:189. (நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) “அவை மனிதர்களுக்கும், ஹஜ்ஜு (வணக்கத்து)க்கும் நேரங்களைக் குறிப்பிடுபவை” என நீர் கூறுவீராக! மேலும், (விசுவாசிகளே இஹ்ராமிலிருக்கும் நிலையில்) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறங்களிலிருந்து வருவதில் (புண்ணியம்) நன்மை இல்லை. எனினும், எவர் (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கின்றாரோ அவரே நன்மையுடையவராவார். நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் (தலை) வாசல்களின் வழியாகவே வாருங்கள்; மேலும், அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்; (இதனால்) நீங்கள் வெற்றியடையலாம்.
2:190 وَقَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‏
2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
2:190. உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் (எல்லை) கடந்துவிட வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.
2:190. மேலும், உங்களோடு போர்புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போர்புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனெனில், வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
2:190. உங்களுடன் போர்புரிபவர்களோடு அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் போரிடுங்கள். நீங்கள் வரம்பும் மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிக்கமாட்டான்.
2:191 وَاقْتُلُوْهُمْ حَيْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَيْثُ اَخْرَجُوْكُمْ‌ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِۚ وَلَا تُقٰتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَـرَامِ حَتّٰى يُقٰتِلُوْكُمْ فِيْهِ‌ۚ فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْؕ كَذٰلِكَ جَزَآءُ الْكٰفِرِيْنَ‏
2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
2:191. ஆகவே (உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக் கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இதுவே!
2:191. (போரின் போது) அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் வெட்டி வீழ்த்துங்கள்! மேலும் எங்கிருந்து உங்களை அவர்கள் வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை நீங்களும் வெளியேற்றுங்கள். (கொலை கொடியதுதான் என்றாலும்) ‘ஃபித்னா’(அராஜகத்தைத்) தோற்றுவிப்பது கொலையைக் காட்டிலும் மிகக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகே அவர்கள் உங்களுடன் போர் தொடுக்காதவரை நீங்களும் அதன் அருகே அவர்களுடன் போர் புரிய வேண்டாம். ஆயினும் (அங்கே) அவர்கள் உங்களோடு போர் செய்தால் நீங்களும் (தயக்கமின்றி) அவர்களோடு போர் புரியுங்கள். இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு இதுவே தண்டனையாகும்.
2:191. மேலும் (உங்களுடன் எதிர்த்துப் போரிட்ட) அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் கொல்லுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றிவிடுங்கள். இன்னும், குழப்பம் (விளைவிப்பது) கொலையைவிட மிகக் கொடியதாகும். இன்னும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் அதில் உங்களுடன் போர் புரியும் வரையில் நீங்கள் அவர்களோடு போர் புரியாதீர்கள். ஆனால் (அங்கு) அவர்கள் உங்களுடன் போரிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். நிராகரிப்போருக்கு உரிய கூலி இவ்வாறுதான் உண்டு.
2:192 فَاِنِ انْـتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
2:192. (இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்து போர் புரியாது) விலகிக்கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
2:192. ஆயினும் அவர்கள் (போரிலிருந்து) விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ், மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான் (என்பதை அறிந்து கொள்ளுங்கள்).
2:192. எனவே, (உங்களுடன் போரிடாது) அவர்கள் விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிக்கின்றவன், மிகக் கிருபையுடையவன்.
2:193 وَقٰتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ لِلّٰهِ‌ؕ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَى الظّٰلِمِيْنَ‏
2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.
2:193. அன்றி, (இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு). அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறக்கூடாது.
2:193. ‘ஃபித்னா’ இல்லாதொழிந்து, தீன் (வாழ்க்கை நெறி) அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் அவர்களோடு தொடர்ந்து போர்புரியுங்கள். ஆனால், அவர்கள் (இத்தகைய ஃபித்னாவிலிருந்து) விலகிக் கொண்டால் அக்கிரமக்காரர்களைத் தவிர வேறு எவரையும் துன்புறுத்துவது அனுமதிக்கப்பட்டதல்ல.
2:193. அன்றியும் குழப்பம் நீங்கி மார்க்கம் அல்லாஹ்விற்கே ஆகும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள். ஆனால் அவர்கள் (குழப்பம் செய்யாது) விலகிக்கொண்டால், அநியாயக்காரர்கள் மீதே தவிர (மற்றவர்களைத் துன்புறுத்தி) பகைமை (கொண்டு போர் தொடுத்தல்) கூடாது.
2:194 اَلشَّهْرُ الْحَـرَامُ بِالشَّهْرِ الْحَـرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌ‌ؕ فَمَنِ اعْتَدٰى عَلَيْكُمْ فَاعْتَدُوْا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدٰى عَلَيْكُمْ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏
2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்; இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்; அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:194. (போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும். ஆகவே, சிறப்புகளுக்கு(ச் சமமான) ஈடு உண்டு. ஆதலால், எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறி (அம்மாதங்களில் போருக்கு) வந்தால், அவர் வரம்பு மீறிய விதமே நீங்களும் அவர் மீது வரம்புமீறி (போருக்கு)ச் செல்லுங்கள். ஆனால், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (அம்மாதங்களில் போரை ஆரம்பம் செய்யாது இருந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
2:194. போர் தடை செய்யப்பட்ட சங்கைக்குரிய மாதத்திற்கு சங்கைக்குரிய மாதமே ஈடாகும். மேலும் சங்கைக்குரிய அனைத்திற்கும் (அவற்றின் கண்ணியம் மீறப்பட்டால்) சமமான அளவில் ஈடு செய்யப்படும். எனவே உங்களிடம் எவரேனும் வரம்பு மீறினால், அவர் எந்த அளவிற்கு உங்களிடம் வரம்பு மீறினாரோ அந்த அளவிற்கே நீங்களும் அவருக்குப் பதிலடி கொடுங்கள். ஆயினும் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள். வரம்புகளை முறிப்பதிலிருந்து விலகி இருப்பவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
2:194. (யுத்தம் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல் கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்கு புனித மாதமே ஈடாகும். புனிதப்படுத்தப்பட்டவை (அவற்றின் புனிதம் சீர் குலைக்கப்பட்டால் அவை)களுக்குப் பழி வாங்குதல் உண்டு. ஆதலால் எவரேனும் மீறி உங்கள் மீது (போர் புரிய) வந்தால் அவர் உங்கள் மீது மீறியது போன்று நீங்களும் அவர்மீது மீறி போர் புரியச் செல்லுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
2:195 وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚ وَاَحْسِنُوْا  ۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏
2:195. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.
2:195. நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள். தவிர, (போர் சமயத்தில் செலவு செய்யாது) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள். அன்றி (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான்.
2:195. அல்லாஹ்வுடைய வழியில் செலவு செய்யுங்கள். மேலும், உங்களுடைய கைகளால் உங்களுக்கு அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள். ‘இஹ்ஸான்’ எனும் வழிமுறையைக் கடைப்பிடியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை* நேசிக்கின்றான்.
2:195. இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். (உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டு) உங்களது கரங்களை அழிவின் பக்கம் கொண்டும் செல்லாதீர்கள். பிறருக்கு நன்மையும் செய்யுங்கள், (பிறருக்கு) நன்மை செய்கிறவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.
2:196 وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானி கொடுத்தல் வேண்டும் பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:196. அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். ஆனால் (மக்கா செல்ல முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டு (ஹஜ்ஜை முழுமையாக்க முடியா)விட்டால் "ஹத்யு" (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை)களில் (உங்களுக்குச்) சாத்தியமானவை பரிகாரமாகும். தவிர, அந்த ஹத்யுக்கள் தாம் செல்ல வேண்டிய (மக்காவிலுள்ள ஹரம் என்னும்) இடத்தை அடையும் வரையில் நீங்கள் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொள்ளாதீர்கள். ஆயினும், (இஹ்ராம் கட்டிய) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது தலையில் (பேன், புண், வலி ஆகியவைகளால்) இடையூறு உள்ளவராகவோ இருந்து (முடியிறக்கிக் கொண்டு) விட்டால், அதற்குப் பரிகாரமாக (அவர் மூன்று) நோன்புகள் நோற்கவும் அல்லது (ஆறு ஏழைகளுக்கு உணவு) தானம் செய்யவும். அல்லது (ஓர் ஆடு) குர்பானி கொடுக்கவும். அன்றி (இஹ்ராம் அணிந்த) நீங்கள் எவ்விதத் தடையுமில்லாது (ஹஜ்ஜு செய்ய) வசதி பெற்றவர்களாக இருந்து (மக்கா சென்ற பின் உங்களில்) எவரேனும் உம்ராவை (மாத்திரம்) செய்துவிட்டு ஹஜ்ஜுக்கு முன்னதாகவே (ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் (அதற்குப்) பரிகாரமாக ஹத்யுக்களில் இயன்றதைக் கொடுக்கவும். ஆனால், (ஹத்யுக்களில் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர், ஹஜ்ஜுடைய காலத்தில் மூன்றும் (தன் இருப்பிடம்) திரும்பியபின் ஏழும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்கவும். (தடுக்கப்பட்ட சுகத்தை அனுபவிக்கும்) இ(வ்வுரிமையான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) குடியிருக்கவில்லையோ அவருக்குத்தான். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
2:196. அல்லாஹ்வின் உவப்பைப் பெற ஹஜ்ஜையும் உம்ராவையும் (நிறைவேற்றிட நீங்கள் நாடினால் அவற்றை) நிறைவேற்றுங்கள். ஆனால் (வழியில் எங்காவது) நீங்கள் முற்றுகையிடப்பட்டால், (அதற்குப் பரிகாரமாக) பலி (குர்பானி) பிராணிகளில் உங்களுக்குச் சாத்தியமானதை (அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பியுங்கள்) பலிப் பிராணி தனக்குரிய இடத்தை அடையும் வரை உங்கள் தலைமுடியை மழிக்காதீர்கள்! ஆனால் உங்களில் யாரேனும் நோயாளியாக அல்லது தன் தலையில் ஏதேனும் பிணி உள்ளவராக இருந்தால், (அதன் காரணமாக தலைமுடியை மழிக்கும் கட்டாயம் ஏற்பட்டிருந்தால்) அதற்குப் பரிகாரமாக அவர் நோன்புகள் நோற்கவோ, தர்மம் செய்யவோ, குர்பானி கொடுக்கவோ வேண்டும். மேலும், உங்களுக்கு அமைதி கிட்டிவிட்டால், (இன்னும் ஹஜ் உடைய காலம் வருமுன், நீங்கள் மக்காவை அடைந்துவிட்டால், அவ்வாறு அடைந்தவர்களில்) எவரேனும் ஹஜ் காலம் வருமுன் உம்ரா செய்ய நாடினால் அவர், பலிப்பிராணிகளில் தனக்கு சாத்தியமானதை குர்பானி கொடுக்க வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாதவர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும் (வீடு) திரும்பி விட்டபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இப்படி முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பிருத்தல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவர் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அருகில் குடியிருக்கவில்லையோ அவர்களுக்கேயாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனது கட்டளைகளுக்கு மாறு செய்யாமல் வாழுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
2:196. மேலும், ஹஜ்ஜையும் - உம்ராவையும் நீங்கள் அல்லாஹ்வுக்காக நிறைவு செய்யுங்கள். ஆனால் - (இஹ்ராமுடைய நிலையில் வழியில்) நீங்கள் தடுக்கப்பட்டு (ஹஜ்ஜையும் - உம்ராவையும் பூரணமாக்க முடியா)விட்டால் - ஹத்யு (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை)களில் சாத்தியமானது (உங்கள் மீது) உண்டு. மேலும், ஹத்யு(க்கள்) நாம் சென்றடைய வேண்டிய தலத்தை (அறுக்குமிடமான மினாவை) அடையும் வரை நீங்கள் உங்கள் தலைகளை (அவற்றின் முடியை)ச் சிரைத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் எவர் நோயாளியாகவோ அல்லது அவரது தலையில் (அவருக்கு) தொந்தரவளிக்ககூடியதோ இருந்தால் (அந்நிலையில் அவர் தலைரோமத்தைக் களைந்துவிடின்) அதற்கு (மூன்று) நோன்புகள் நோற்றல் - அல்லது (ஆறு ஏழைகளுக்கு உணவு) தர்மம் செய்தல், அல்லது ஹத்யு (ஓர் ஆடு) கொடுத்தல் ஆகியவற்றிலிருந்து (ஏதாவது ஒன்று) பரிகாரமாக இருக்கும். (தடுக்கப்பட்ட நிலையின் மூலம் ஏற்பட்ட பயம் நீங்கி) அபயமுடையவர்களாக நீங்கள் ஆகிவிட்டால் எவரேனும் ஹஜ் வரை உம்ராச் செய்யும் சவுகரியத்தை பெற்றவ(ராகி உம்ராவை முடித்துக்கொண்டு ஹஜ்ஜின்பால் செல்வா)ரானால் ஹத்யுவிலிருந்து (நிறைவேற்ற) அவருக்கு எது இயலுமோ அது அவரின் மீ(து கடமையான)தாகும், ஆனால் - (ஹத்யுவின் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர் - ஹஜ்ஜி(ன் காலத்தில் மூன்று நாட்களும் - நீங்கள் (இருப்பிடம்) திரும்பியபின் ஏழு (நாட்களு)ம் நோன்பு நோற்க வேண்டும். அவை பூரணமான பத்து (நாட்கள்) ஆகும். (நோன்பு நோற்பது கடமை என்பதான) அது எவருடைய குடும்பம் மஸ்ஜிதும் ஹராமில் (மக்காவில் குடி) இருக்கவில்லையோ அவருக்குரியதாகும். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் – வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் என்பதையும் உறுதியாக அறிந்துக் கொள்ளுங்கள்.
2:197 اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ‌ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَۙ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ‌ؕؔ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰى وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏
2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
2:197. ஹஜ்ஜு (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜு ஆகிய) மாதங்களில்தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜு (மாதத்தின் பத்தாம் தேதி) வரையில் வீடு கூடுதல், தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்துகொள்ளுதல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான். தவிர, (ஹஜ்ஜுடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக் கொள்ள வேண்டியவை களில் எல்லாம் மிக மேலானது இறை அச்சத்தைத்தான். ஆதலால் அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜுடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்.
2:197. ஹஜ்(ஜுடைய காலம் அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே இம்மாதங்களில் எவரேனும் ஹஜ் கடமையை நிறைவேற்ற நாடினால், ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக் கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது. மேலும், நீங்கள் ஏதேனும் நன்மை செய்தால் அதனை அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கின்றான். மேலும், நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித் துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். எனவே நல்லறிவுடையோரே! எனக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்!
2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் (ஷவ்வால், துல் கஅதா, துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் அதிகாலை வரையுள்ள) அறியப்பட்ட மாதங்களாகும், ஆகவே, அவற்றில் எவரொருவர் (இஹ்ராம் கட்டுவதன் மூலம்) ஹஜ்ஜை (த்தன் மீது) கடமையாக்கிக் கொண்டால், தாம்பத்திய உறவு கொள்வதும், கெட்ட பேச்சுக்கள் பேசுவதும், வீண் தர்க்கம் செய்வதும், ஹஜ்ஜில் கூடாது. இன்னும் நன்மைகளால் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும், அல்லாஹ் அறிவான். ஆகவே, (ஹஜ்ஜுடைய பிரயாணத்திற்கு வேண்டியவற்றை) தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக தயார் செய்யப்பட வேண்டியவற்றில் மிகச் சிறந்தது பயபக்தியே ஆகும். ஆகவே, நல்லறிவுடையோர்களே என்னையே பயந்து (நடந்து) கொள்ளுங்கள்.
2:198 ‌لَيْسَ عَلَيْکُمْ جُنَاحٌ اَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّکُمْؕ فَاِذَآ اَفَضْتُمْ مِّنْ عَرَفٰتٍ فَاذْکُرُوا اللّٰهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَـرَامِ وَاذْکُرُوْهُ کَمَا هَدٰٮکُمْ‌ۚ وَاِنْ کُنْتُمْ مِّنْ قَبْلِهٖ لَمِنَ الضَّآ لِّيْنَ‏
2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
2:198. (ஹஜ்ஜு பயணத்தின்போது) நீங்கள் (தொழில் செய்து) உங்கள் இறைவனுடைய அருளை(க் கொண்டு கிடைக்கும் லாபத்தை)த் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. அன்றி, (ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் "மஷ்அருல் ஹராம்" என்னும் இடத்தில் அல்லாஹ்வைத் திக்ரு செய்யுங்கள். தவிர, நீங்கள் இதற்கு முன் வழி தவறியவர்களாக இருந்தபொழுது உங்களுக்கு அவன் நேரான வழியை அறிவித்ததற்காக பின்னும் அவனைத் "திக்ரு" செய்யுங்கள்.
2:198. (ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளைத் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. இன்னும் அரஃபாத்திலிருந்து நீங்கள் திரும்பி வரும்போது, மஷ்அருல் ஹராமில் (முஸ்தலிஃபாவில்) தங்கி அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மேலும் அவன் எவ்வாறு (தன்னை நினைவுகூர வேண்டுமென்று) உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றானோ அவ்வாறு அவனை நினைவுகூருங்கள். இதற்கு முன்னரோ நீங்கள் வழிதவறியவர்களாய் இருந்தீர்கள்.
2:198. ஹஜ்ஜுப் பிரயாணத்தின்போது நீங்கள் (வியாபாரம் செய்து அதன்மூலம்) உங்கள் இரட்சகனிடமிருந்து பேரருளைத் தேடிக் கொள்வது உங்கள்மீது குற்றமல்ல. பின்னர், நீங்கள் அரபாத் என்னுமிடத்திலிருந்து திரும்புவீர்களாயின் மஷ் அருல் ஹராம் (முஜ்தலிபா) என்னும் இடத்தில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். இன்னும், நிச்சயமாக இதற்கு முன் நீங்கள் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
2:199 ثُمَّ اَفِيْضُوْا مِنْ حَيْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
2:199. பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
2:199. பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற ("முஸ்தலிபா" என்னும்) இடத்திலிருந்து நீங்களும் ("மினா"வுக்குத்) திரும்பிவிடுங்கள். மேலும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
2:199. பின்னர் மற்ற மனிதர்கள் எல்லாரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
2:199. பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற (முஜ்தலிபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் (மினாவுக்குத்) திரும்பிவிடுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிக்கின்றவன், மிகக் கிருபையுடையவன்.
2:200  فَاِذَا قَضَيْتُمْ مَّنَاسِكَکُمْ فَاذْکُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَکُمْ اَوْ اَشَدَّ ذِکْرًا ؕ فَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‏
2:200. ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
2:200. (ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் உங்களுடைய (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டு பெருமையாகக்) கூறி வந்ததைப்போல் அல்லது அதனைவிட அதிகமாக அல்லாஹ்வைத் "திக்ரு" (செய்து உங்களுக்கு வேண்டியவைகளையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) "எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளை எல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக!" என்று கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. ஆனால், இத்தகையவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.
2:200. பின்னர் நீங்கள் உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களானால், நீங்கள் (முன்னர்) உங்கள் மூதாதையரை நினைவுகூர்ந்தது போல ஏன், அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மக்களில் (அல்லாஹ்வைப் பல வழிகளில் நினைவுகூருவோர் உளர்) சிலர் “எங்கள் இறைவனே! உலகத்திலேயே எங்களுக்கு எல்லாவற்றையும் தந்து விடு!” என்று பிரார்த்திக்கின்றனர். அத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பேறும் இல்லை.
2:200. உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நீங்கள் நிறைவேற்றிவிட்டால் (அறியாமை காலத்தில்) உங்கள் மூதாதையர்களை நீங்கள் நினைவு கூர்வது போல், அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள்; ஆகவே, மனிதர்களில் (சிலர்) “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு (எல்லாவற்றையும்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக” என்று கூறுவோரும் இருக்கின்றனர்; ஆனால் இவ்வாறு கோருகின்றவருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை,
2:201 وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏
2:201. இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
2:201. அன்றி "எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!" எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு.
2:201. இன்னும் சிலர் “எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக; மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும் நரக வேதனை யிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!” எனப் பிரார்த்திக்கின்றனர்.
2:201. “எங்கள் இரட்சகனே இம்மையில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! இன்னும் நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக” என்று கூறுவோரும் அவர்களில் இருக்கின்றனர்.
2:202 اُولٰٓٮِٕكَ لَهُمْ نَصِيْبٌ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ‏
2:202. இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
2:202. தாங்கள் செய்த (நற்)செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத்தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் வெகு விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமன்று).
2:202. இத்தகையவர்களுக்கு அவர்கள் எதனைச் சம்பாதித்தார்களோ அதற்கேற்ப (ஈருலகிலும்) நற்பேறு உண்டு. மேலும் கணக்கு வாங்குவதில் அல்லாஹ் மிக விரைவானவன்.
2:202. (இவ்வாறு இம்மை மறுமை ஆகிய இரண்டின் நற்பேறுகளைக் கேட்கின்ற) அத்தகையோர் - அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்தவற்றில் பங்குண்டு. இன்னும் அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் தீவிரமானவன்.
2:203 وَاذْكُرُوا اللّٰهَ فِىْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍ‌ؕ فَمَنْ تَعَجَّلَ فِىْ يَوْمَيْنِ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ ۚ وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَيْه‌ِ ۙ لِمَنِ اتَّقٰى ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّکُمْ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏
2:203. குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
2:203. (நம்பிக்கையாளர்களே! துல்ஹஜ்ஜு மாதத்தில்) குறிப்பிடப்பட்ட (மூன்று) நாள்கள் வரை ("மினா" என்னும் இடத்தில் தாமதித்திருந்து) அல்லாஹ்வை "திக்ரு" செய்யுங்கள். ஆனால், எவரேனும் இரண்டாம் நாளில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரேனும் (மூன்று நாள்களுக்குப்) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. அவர் இறை அச்சமுடையவராக (இருந்து ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) இருந்தால் (மட்டும்) போதுமானது. ஆகவே (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே (நியாயத் தீர்ப்புக்கு எழுப்பிக்) கொண்டு வரப்படுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள்.
2:203. இன்னும், குறிப்பிடப்பட்ட சில நாட்களில் நீங்கள் அல்லாஹ்வை நினைவுகூரல் வேண்டும். பின்னர் எவரேனும் இரண்டே நாட்களில் அவசரமாகத் திரும்பி விட்டால் அவர் மீது குற்றமேதுமில்லை. எவரேனும் சிறிது தாமதித்துப் புறப்பட்டால் அவர் மீதும் குற்றமில்லை. ஆனால் (ஒரு நிபந்தனை:) அவர் இந்த நாளை இறையச்சத்துடன் கழித்திருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்! மேலும் (ஒரு நாள்) நீங்கள் அவனுடைய திருமுன்னர்தான் ஒன்று திரட்டப்பட விருக்கின்றீர்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்!
2:203. (மினாவில் தங்கியிருந்து) எண்ணிவிடப்பட்ட (மூன்று) நாட்களில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். ஆகவே, எவரொருவர் இரண்டு நாட்களில் அவசரப்பட்டு புறப்பட்டு விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரொருவர் மூன்றாம் நாள் வரை பிற்பட்டுப் புறப்பட்டால் அவர் மீதும் குற்றமில்லை. (இது) யார் (அல்லாஹ்வாகிய) அவனை பயந்து நடக்கிறார்களோ அவர்களுக்கு (உரியதாகும்.) இன்னும், (விசுவாசிகளே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். அன்றியும், அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:204 وَمِنَ النَّاسِ مَنْ يُّعْجِبُكَ قَوْلُهٗ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللّٰهَ عَلٰى مَا فِىْ قَلْبِهٖۙ وَهُوَ اَلَدُّ الْخِصَامِ‏
2:204. (நபியே!) மனிதர்களில் ஒரு வ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.
2:204. (நபியே! உங்களிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப் பேசும்பொழுது) தன்னுடைய (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு. அவன் (உங்கள்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். (உண்மையில்) அவன்தான் (உங்களுக்குக்) கொடிய எதிரியாவான்.
2:204. மனிதர்களில் இப்படி ஒருவன் இருக்கின்றான்: அவனுடைய பேச்சு இவ்வுலக வாழ்க்கையில் உமக்கு கவர்ச்சியாகத் தென்படுகிறது. மேலும், அவன் தன் மனத்தில் உள்ளவை தூய்மையானவை என (நிரூபிக்க அடிக்கடி) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகின்றான். ஆனால் உண்மையில் அவனே (சத்தியத்தின்) கொடிய பகைவன் ஆவான்.
2:204. மேலும் - (நபியே! அற்ப) இவ்வுலக வாழ்க்கையில் எவனுடைய கூற்று உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துமோ, அவனும் மனிதர்களில் இருக்கின்றான். அவன் (உம்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் இதயத்திலுள்ளவற்றின் மீது அல்லாஹ்வைச் சாட்சியாக்குவான். (உண்மையில்) அவன்தான் (உண்மையை மறைக்க) கடும் தர்க்கம் செய்பவன் (உம்முடைய கொடிய விரோதியுமானவன்).
2:205 وَاِذَا تَوَلّٰى سَعٰى فِى الْاَرْضِ لِيُفْسِدَ فِيْهَا وَيُهْلِكَ الْحَـرْثَ وَالنَّسْلَ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الْفَسَادَ‏
2:205. அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
2:205. அவன் (உங்களிலிருந்து) விலகினாலோ, பூமியில் விஷமம் செய்து (உங்கள்) விவசாயத்தையும் கால்நடைகளையும் அழித்துவிட முயற்சி செய்கின்றான். விஷமத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
2:205. அவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பூமியில் குழப்பத்தைப் பரப்புவதற்காகவும் வேளாண்மையையும், மனித இனத்தையும் அழிப்பதற்காகவுமே இருக்கும்! ஆனால் (அவன் சாட்சியாக்குகின்ற) அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை.
2:205. அவன் (உங்களிலிருந்து) திரும்பிவிட்டால் பூமியில் குழப்பம் விளைவிக்கவும், விவசாயத்தையும், சந்ததியையும் (அழித்து) நாசமாக்கி விடவும் அதில் முயற்சி செய்கின்றான். இன்னும், அல்லாஹ் குழப்பத்தை விரும்பமாட்டான்.
2:206 وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ‌ فَحَسْبُهٗ جَهَنَّمُ‌ؕ وَلَبِئْسَ الْمِهَادُ‏
2:206. “அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.
2:206. தவிர, "நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)" என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக் கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
2:206. மேலும் “நீ அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்திடு!” என்று அவனிடம் கூறப்பட்டால், அவனது வறட்டு கௌரவம் அவனைப் பாவத்திலாழ்த்தி விடுகின்றது. இத்தகைய மனிதனுக்கு நரகமே போதுமானதாகும். மேலும் அது மிக மோசமான தங்குமிடமாகும்.
2:206. இன்னும் “நீ அல்லாஹ்வுக்குப் பயந்துக் கொள்” என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) கௌரவம் பாவத்தைச் செய்துக்கொண்டே அவனை பிடித்திழுத்துக் கொள்கின்றது. ஆகவே, அவனுக்கு நரகமே போதுமானது. இன்னும், நிச்சயமாக தங்குமிடத்தில் அது மிகக் கெட்டது.
2:207 وَمِنَ النَّاسِ مَنْ يَّشْرِىْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ‌ؕ وَ اللّٰهُ رَءُوْفٌ ۢ بِالْعِبَادِ‏
2:207. இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
2:207. அல்லாஹ்வின் (திருப்) பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் கருணையுடையவன்.
2:207. மனிதர்களில் இப்படியும் ஒருவர் இருக்கின்றார்: அவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடி தன் வாழ்வையே அர்ப்பணித்துவிடுகின்றார். இத்தகைய அடியார்களிடத்தில் அல்லாஹ் மிகுந்த பரிவுடையவனாய் இருக்கின்றான்.
2:207. இன்னும் அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடிப் பெறுவதற்காகத் தன்னை விற்றுவிடக் கூடியவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள். மேலும், அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள் மீது மிகவும் இரக்கம் காட்டுபவன்.
2:208 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
2:208. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
2:208. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.
2:208. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள்! மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவனாவான்;
2:208. விசுவாசங் கொண்டோரே! நீங்கள், இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். அன்றியும் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான்.
2:209 فَاِنْ زَلَـلْتُمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْکُمُ الْبَيِّنٰتُ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَکِيْمٌ‏
2:209. தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:209. (மனிதர்களே! சந்தேகத்திற்கிடமில்லாத) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்தபின்னும் நீங்கள் (இஸ்லாமில் உறுதியாக இல்லாமல்) நழுவி விடுவீர்களானால் (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (உங்களை எவ்விதம் நடத்தவேண்டும் என்பதை நன்கறிந்த) நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
2:209. (முழுக்க முழுக்கத்) தெளிவான அறிவுரைகள் உங்களுக்கு வந்த பின்னரும் நீங்கள் வழி பிறழ்ந்து போவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் வல்லமையுடையோன்; நுண்ணறிவுள்ளோன் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.
2:209. எனவே, தெளிவான ஆதாரங்கள் உங்களிடம் வந்த பின்னும், நீங்கள் சறுக்கிவிடுவீர்களானால், (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
2:210 هَلْ يَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيَهُمُ اللّٰهُ فِىْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰٓٮِٕکَةُ وَقُضِىَ الْاَمْرُ‌ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ‏
2:210. அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டுவரப்படும்.
2:210. (நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களையும் நிராகரிக்கும் அவர்கள்) அல்லாஹ்வும் மலக்குகளும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து) அவர்களின் வேலையை முடிப்பதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ? (அவர்களுடைய) எல்லா விஷயங்களும் (மறுமையில்) அல்லாஹ்விடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படும்.
2:210. (இவ்வளவு அறிவுரைகளும், ஏவுரைகளும் பெற்ற பின்னரும் கூட மக்கள் நேர்வழியில் செல்லவில்லையென்றால்) மேகக் குடைகளினூடே இறைவனும் வானவர்களும் தங்களிடம் வரவேண்டும்; மேலும் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்பதைத்தான் இவர்கள் எதிர்பார்க்கின்றார்களா? இறுதியில் அனைத்து விஷயங்களும் அல்லாஹ்விடமே கொண்டுவரப்பட விருக்கின்றன.
2:210. அல்லாஹ்வும் மலக்குகளும் மேகத்தின் நிழல்களில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து அவர்களின்) காரியம் முடிக்கப்படுவதைத் தவிர (மற்றெதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றார்களா? அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்வின்பால் மீட்டப்படும்.
2:211 سَلْ بَنِىْٓ اِسْرَآءِيْلَ كَمْ اٰتَيْنٰهُمْ مِّنْ اٰيَةٍۢ بَيِّنَةٍ ‌ؕ وَمَنْ يُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
2:211. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்: “நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்” என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
2:211. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளை நீங்கள் கேளுங்கள்: எவ்வளவோ தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். (அவ்வாறிருக்க) எவரேனும் அவைகள் தன்னிடம் வந்ததன் பின் அல்லாஹ்வின் (அத்தாட்சிகளான) அருட்கொடையை மாற்றிவிடுவாரானால் (அவரை) வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன்.
2:211. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு எத்துணைத் தெளிவான சான்றுகளை நாம் வழங்கியிருக்கின்றோம் என்பதை அவர்களிடமே கேளுங்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து நற்பேறு வந்த பின்னர் யார் அதனை (துர்பாக்கியத்திற்கு) பரிமாற்றம் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் எத்துணைக் கடுமையாகத் தண்டிக்கின்றான் என்பதையும் அவர்களிடம் கேளுங்கள்.
2:211. தெளிவான அத்தாட்சியிலிருந்து எத்தனையை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம் என்று (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளை நீர் கேட்பீராக, (அவ்வாறிருக்க அவர்களில்) எவர் அல்லாஹ்வுடைய அருட்கொடையை- அது தம்மிடம் வந்ததன் பின் மாற்றிவிடுகிறாரோ அப்பொழுது அவரை தண்டனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன்.
2:212 زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوا الْحَيٰوةُ الدُّنْيَا وَيَسْخَرُوْنَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا ‌ ۘ وَالَّذِيْنَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ ؕ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
2:212. நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.
2:212. நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கின்றது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால் (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான்.
2:212. யார் இறைநிராகரிப்பை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. இவர்கள் நம்பிக்கை கொண்டவர்களை ஏளனம் செய்கின்றார்கள். ஆனால் இறையச்சத்துடன் வாழ்பவர்கள்தாம் மறுமைநாளில் இவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். இவ்வுலக வசதிகளையோ அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகின்றான்.
2:212. நிராகரித்து விட்டார்களே அத்தகையவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை அலங்காரமாக்கப் பட்டிருக்கின்றது. (அதனால் மமதை கொண்டு) அவர்கள் விசுவாசங் கொண்டிருந்தோரை பரிகசிக்கவும் செய்கிறார்கள். (ஆனால் அல்லாஹ்வை பயந்து நடந்தார்களே, அத்தகையவர்கள் மறுமை நாளில் இவர்களுக்கு மேலாகவும் இருப்பார்கள். மேலும், அல்லாஹ் தான் நாடியவருக்குக் கணக்கின்றியே அளிப்பான்.
2:213 كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً  فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ‌ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ‌ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே இனத்தவ ராகவே இருந்தனர். (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் அம்மனிதர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து வைப்பதற்காக (சத்திய) வேதத்தையும் அருளினான். இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள வேதம்) வந்ததன் பின்னர் அதனைப் பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (அந்த சத்திய வேதத்திற்கு) மாறு (செய்ய முற்)பட்டனர். ஆயினும், அவர்கள் மாறுபட்டு(ப் புறக்கணித்து)விட்ட அந்த சத்தியத்தளவில் செல்லும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (நேர்) வழி காட்டினான். இன்னும் (இவ்வாறே) தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.
2:213. (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கைவழி நடக்கும் சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் தோன்றவே, நேர்வழியில் செல்வோருக்கு) நற்செய்தி அறிவிப்போராகவும், (தீய வழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய வேதங்களையும் அந்நபிமார்களுடன் அல்லாஹ் அருளினான். ஆனால் (இவ்வேற்றுமைகள் தோன்றியது தொடக்கத்தில் மக்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவு படுத்தப்படாததினால் அல்ல; மாறாக) எவர்களுக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொடுமை புரியும் பொருட்டு (சத்தியத்தைக் கைவிட்டு) வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், (நபிமார்களின் மீது) நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.
2:213. (ஆரம்பத்தில்) மனிதர்கள் (யாவரும்) ஒரே கூட்டத்தராகவே இருந்தனர். பிறகு (நன்மை செய்வோருக்கு) நன்மாராயங்கூறக்கூடியவர்களாகவும் தீமை செய்வோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாகவும், அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும், அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதில் அவன் தீர்ப்புச் செய்வதற்காக, அவர்களோடு சத்தியத்தைக் கொண்டுள்ள வேதத்தையும் இறக்கி வைத்தான். மேலும், அவர்களுக்குத் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் தம்மிடையே உள்ள பொறாமையின் காரணமாக அதைக் கொடுக்கப் பட்டவர்கள் தவிர (மற்றெவரும்) அதில் மாறுபடவில்லை. ஆகவே, உண்மையிலிருந்து எதில் அவர்கள் மாறுபட்டிருந்தார்களோ அதன் பக்கம் தன் அனுமதி கொண்டு அல்லாஹ் விசுவாசங்கொண்டோருக்கு நேர் வழி காட்டினான். இன்னும், தான் நாடியவரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.
2:214 اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَ لَمَّا يَاْتِكُمْ مَّثَلُ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْؕ مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِؕ اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ‏
2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
2:214. (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்களுடைய கஷ்டங்களை நீக்கி வைக்க) "அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)" என்று கேட்டதற்கு "அல்லாஹ் வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது" என்று (நாம் ஆறுதல்) கூறும் வரையில் அவர்கள் ஆட்டி வைக்கப்பட்டார்கள்.
2:214. உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? இன்னல்களும் இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. (அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்?” என்று (புலம்பிக்) கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். (அப்பொழுது அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது:) “இதோ! அல்லாஹ்வுடைய உதவி அண்மையில் இருக்கிறது.”
2:214. விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன் சென்று விட்டார்களே, அத்தகையோரின் உதாரணம்: (சோதனை நிறைந்த நிலைகள்) உங்களுக்கு வராத நிலையில் நீங்கள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடலாமென்று எண்ணிக் கொண்டீர்களா? அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன. தூதரும் அவருடன் விசுவாசங்கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வந்து சேரும்) என்று கூறும்வரை அவர்கள் (இன்னல்கள் பலவற்றால்) அலைக்கழிக்கப்பட்டு விட்டார்கள், “தெரிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக மிகச் சமீபத்திலிருக்கிறது” (என்று கூறப்பட்டது).
2:215 يَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
2:215. (நபியே! பொருள்களில்) "எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)" என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) "நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்.
2:215. தாம் என்ன செலவு செய்ய வேண்டும் என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். சொல்வீராக: “நீங்கள் எந்த ஒரு நல்ல பொருளையும் செலவு செய்யுங்கள்; (அதனை உங்கள்) பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் செலவழியுங்கள்! மேலும் நீங்கள் எந்த நன்மை செய்தாலும் அதனைத் திண்ணமாக அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.”
2:215. (நபியே) “எதை யாருக்குச் செலவு செய்வது?” என்று உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: “(நன்மையை நாடி) நீங்கள் பொருளிலிருந்து செலவு செய்வது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உரியதாகும். இன்னும் நன்மையிலிருந்து எதையும் நீங்கள் செய்தால் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்.
2:216 كُتِبَ عَلَيْکُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّـكُمْ‌ۚ وَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْئًا وَّهُوَ خَيْرٌ لَّـکُمْ‌ۚ وَعَسٰۤى اَنْ تُحِبُّوْا شَيْئًا وَّهُوَ شَرٌّ لَّـكُمْؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
2:216. போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
2:216. (நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதனை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
2:216. போர் செய்யுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது; ஆனால் அதுவோ உங்களுக்கு வெறுப்பாயிருக்கிறது. ஒரு பொருள் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். மேலும் ஒரு பொருள் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக் கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் அறிவதில்லை.
2:216. (விசுவாசிகளே! இஸ்லாத்தைக் காக்கும் பொருட்டு போர் செய்வது_ அதுவோ உங்களுக்கு வெறுப்பாக இருக்க உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இன்னும், ஒரு பொருளை அது உங்களுக்கு நன்மையாக இருக்க (அதை) நீங்கள் வெறுக்கலாம். இன்னும், ஒரு பொருளை அது உங்களுக்கு தீமையாக இருக்க (அதை) நீங்கள் விரும்பலாம்; (அவற்றில் உண்மை உண்டா? இல்லையா? என்பதை அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
2:217 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَـرَامِ قِتَالٍ فِيْهِ‌ؕ قُلْ قِتَالٌ فِيْهِ كَبِيْرٌ ‌ؕ وَصَدٌّ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَ کُفْرٌ ۢ بِهٖ وَالْمَسْجِدِ الْحَـرَامِ وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ‌‌ۚ وَالْفِتْنَةُ اَکْبَرُ مِنَ الْقَتْلِ‌ؕ وَلَا يَزَالُوْنَ يُقَاتِلُوْنَكُمْ حَتّٰى يَرُدُّوْكُمْ عَنْ دِيْـنِکُمْ اِنِ اسْتَطَاعُوْا ‌ؕ وَمَنْ يَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَيَمُتْ وَهُوَ کَافِرٌ فَاُولٰٓٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ‌‌ۚ وَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”
2:217. (நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவைகளில் போர் புரிவது பெரும் பாவம்(தான்.) ஆனால், (மனிதர்கள்) அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை நீங்கள் நிராகரிப்பதும், (ஹஜ்ஜுக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ரில் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையைவிட மிகக் கொடியது. மேலும் (நம்பிக்கையாளர்களே! காஃபிர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்களுடைய மார்க்கத்திலிருந்து திருப்பிவிடும் வரையில் உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே, உங்களில் எவரேனும் தன்னுடைய மார்க்கத்தை (நிராகரித்து)விட்டு மாறி (அதை அவ்வாறு) நிராகரித்(ததைப்பற்றி வருத்தப்பட்டு மீளா)தவராகவே இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் எல்லாம் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். தவிர, அவர்கள் நரகவாசிகளாகி, என்றென்றுமே அதில் தங்கி விடுவார்கள்.
2:217. தடை செய்யப்பட்ட மாதத்தில் போர் செய்வது பற்றி உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: “அதில் போர் செய்வது மிகக் கொடியதுதான்! ஆனால் அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மக்களைத் தடுப்பது, இன்னும் அவனுக்கு மாறு செய்வது, மேலும் மஸ்ஜிதுல் ஹராமுக்கு வர விடாமல் (இறையடியாரைத்) தடுப்பது மற்றும் அங்கு வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது ஆகியவை அல்லாஹ்வினிடத்தில் அதைவிடக் கொடியனவாகும்.” மேலும், ஃபித்னா (குழப்பம்) செய்வது கொலையைவிடக் கொடியதாகும். அவர்களுக்குச் சாத்தியமானால் உங்கள் தீனை (நெறியை) விட்டு உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் அவர்கள் போர் செய்து கொண்டே இருப்பார்கள். (ஆனால் நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.) உங்களில் யாரேனும் தமது தீனை விட்டு மாறி, குஃப்ரின் இறைநிராகரிப்பின் நிலையிலேயே மரணித்துவிட்டால், இம்மையிலும் மறுமையிலும் அவனுடைய நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும். மேலும் அத்தகையோர் அனைவரும் நரகவாசிகளேயாவர்! அதில் அவர்கள் என்றென்றும் விழுந்துகிடப்பார்கள்.
2:217. (நபியே! துல்கஅதா, துல் ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய போர் செய்யத் தடை செய்யப்பட்ட) புனிதமான மாதம் பற்றி அதில் யுத்தம் செய்வதைப் பற்றி உம்மிடம் அ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர்.) அதற்கு நீர் கூறுவீராக! “அம்மாதத்தில் போரிடுவது பெரிதான குற்றமாகும். ஆனால் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் (மனிதர்களை நீங்கள்) தடுப்பதும், அவனை நிராகரிப்பதும் மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (ஜனங்களை வரவிடாது) தடுப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும், அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிதான குற்றங்களாகும். மேலும், குழப்பம் செய்வது கொலையைவிட மிகப் பெரிதாகும். மேலும், (காஃபிர்களாகிய) அவர்கள் சக்திபெறுவார்களாயின், உங்களை உங்களுடைய மார்க்கத்தை விட்டும் திருப்பிவிடும்வரை, உங்களுடன் ஓயாது போரிட்டுக் கொண்டேயிருப்பார்கள், ஆகவே, உங்களிலிருந்து எவரேனும் தம் மார்க்கத்தை விட்டு மதம் மாறி நிராகரித்தவராகவே இறந்துவிட்டால், அத்தகையோர் – அவர்களின் (நற்) செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். மேலும், அத்தகையோர் நரகவாசிகளாவர்; அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்கி இருப்பவர்கள்.
2:218 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِۙ اُولٰٓٮِٕكَ يَرْجُوْنَ رَحْمَتَ اللّٰهِؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
2:218. நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்; மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
2:218. எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (காஃபிர்களின் துன்பத்தால் "மக்கா"வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகின்றார்களோ அவர்களும் தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான்.
2:218. மாறாக எவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டார்களோ மேலும் இறைவனுக்காக தம் வீடு வாசல்களைத் துறந்தார்களோ, மேலும் இறைவழியில் ஜிஹாத் செய்தார்களோ அவர்களே அல்லாஹ்வின் நல்லருளை (நியாயமாக) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அல்லாஹ், அவர்களின் பிழைகளைப் பெரிதும் மன்னிப்பவனா கவும், இன்னும் அவர்கள் மீது பேரருள் புரிபவனாகவும் இருக்கின்றான்.
2:218. நிச்சயமாக விசுவாசங்கொண்டோரும், (அல்லாஹ்விற்காக) தம் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத் செய்து) சென்றோரும், அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் (ஜிஹாத்) புரிகின்றோரும், ஆகிய இத்தகையோர் அல்லாஹ்வின் கருணையை ஆதரவு வைக்கிறார்கள். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்.
2:219 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ‌ؕ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَاِثْمُهُمَآ اَکْبَرُ مِنْ نَّفْعِهِمَا ؕ وَيَسْــٴَــلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَؕ  قُلِ الْعَفْوَ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّکُمْ تَتَفَكَّرُوْنَۙ‏
2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.
2:219. (நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர் களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவைகளில் உள்ள பாவம் அவைகளிலுள்ள பயனைவிட மிகப் பெரிது. அன்றி, (நபியே! தர்மத்திற்காக) எவ்வளவு செலவு செய்வதென உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் "(அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளதை(ச் செலவு செய்யுங்கள்)" என கூறுங்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இம்மை, மறுமை(யின் நன்மை) களை கவனத்தில் வைத்துக் கொள்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றான்.
2:219. மது மற்றும் சூதாட்டம் (இவற்றுக்குரிய கட்டளைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு சிறிது பயன்கள் இருப்பினும், அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனைவிட அதிகமாக இருக்கின்றது. (இறைவழியில்) என்ன செலவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உங்களுடைய தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள்” என அவர்களிடம் கூறுவீராக! இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விவரிக்கின்றான்;
2:219. (நபியே!) மதுவையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக! “அவ்விரண்டிலும் பெரும் பாவமும், மனிதர்களுக்கு(ச் சில) பயன்களுமிருக்கின்றன. மேலும், அவ்விரண்டின் பாவம் அவ்விரண்டின் பலனை விட மிகப் பெரியதாகும்; (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்வது?” என்றும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், (அதற்கு) நீர் “தங்கள் தேவைக்கு போக எஞ்சியிருப்பதை” எனக் கூறுவீராக! இவ்வாறே நீங்கள் சிந்தித்துணர்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் தனது (வசனங்களை) தெளிவாக்குகிறான்.
2:220 فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِؕ وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الْيَتٰمٰىؕ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ؕ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
2:220. (மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) “அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;” நீர் கூறுவீராக: “அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்; இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்; அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”
2:220. (நபியே!) அநாதைகளைப் (வளர்ப்பதைப்) பற்றியும் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: அவர்களைச் சீர்திருத்துவது மிகவும் நன்றே! மேலும், நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்களுடைய சகோதரர்களே! (ஆதலால் அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்.) ஆனால், "நன்மை செய்வோம்" என்று (கூறிக் கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) கஷ்டத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவனும், நுண்ணறிவுடைய வனுமாக இருக்கின்றான். (ஆகவே, அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.)
2:220. நீங்கள் இம்மை மறுமை பற்றி கருத்தூன்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காக! அநாதைகளைப் பற்றியும் உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: “அவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செயல் முறையை மேற்கொள்வதே உத்தமமாகும். நீங்களும், அவர்களும் சேர்ந்து வாழ்வதில் (உணவு, உறைவிடம் போன்றவைகளுக்குக் கூட்டாகச் செலவு செய்வதில்) குற்றமேதும் இல்லை. ஏனென்றால், அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவர். தீமை செய்பவர்களையும் நன்மை செய்பவர்களையும் அல்லாஹ் நன்கு அறிந்திருக்கின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்விஷயத்தை) உங்களுக்குக் கடினமாக்கியிருப்பான். ஆனால் அல்லாஹ் பேராற்றலுள்ளவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.”
2:220. (அதனால்) இம்மையில் மற்றும் மறுமையில் ஏற்படும் நன்மைகளை நீங்கள் சிந்திப்பதற்காக அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு தெளிவு செய்கிறான். மேலும் அநாதைகளைப் பற்றி ‘நபியே!’ அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களுக்குரிய சீர்திருத்தத்தைச் செய்தல் மிக்க நலமாகும்; மேலும் நீங்கள் அவர்களுடன் கலந்திருந்தால், அப்போது (அவர்கள்) உங்களுடைய சகோதரர்களாவர்; இன்னும் சீர்திருத்துபவனிலிருந்து குழப்பம் உண்டாக்குபவனை அல்லாஹ் நன்கறிவான்; மேலும், அல்லாஹ் நாடினால் உங்களை சிரமத்திற்குள்ளாக்கி விடுவான், நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
2:221 وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ‌ؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ‌ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ  ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ‌ۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ‏
2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
2:221. (நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணைவைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் அவர்களுக்கு (நம்பிக்கையாளர் களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஒரு ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்னுடைய) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கின்றான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன்னுடைய வசனங்களை (மேலும்) விவரிக்கின்றான்.
2:221. இறைவனுக்கு இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் கொள்ளும் வரை நீங்கள் ஒருபோதும் திருமணம் செய்யாதீர்கள். இணைவைக்கும் ஒரு பெண் உங்களுக்குப் பிடித்தமானவளாய் இருந்தபோதிலும், இறைநம்பிக்கையுள்ள பெண்ணே சிறந்தவள். அவள் அடிமையாக இருந்தாலும் சரியே! மேலும் (உங்கள் பெண்களை) இறைவனுக்கு இணைவைப்போருக்கு அவர்கள் ஈமான் கொள்ளும் வரை ஒருபோதும் மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணைவைக்கும் ஓர் ஆண் உங்களுக்குப் பிடித்தமானவராய் இருந்தபோதிலும் இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமையே, அவரைவிடச் சிறந்தவராவார். இத்தகையோர் நரகத்தை நோக்கியே உங்களை அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ, தன் உத்தரவின் மூலம் சுவனம் மற்றும் மன்னிப்பின் பக்கம் (உங்களை) அழைக்கின்றான். மேலும் தன் கட்டளைகளை மக்களுக்குத் தெளிவாக விளக்கிக் காண்பிக்கின்றான் அவர்கள் அறிவுரையை ஏற்று படிப்பினை பெறக்கூடும் என்பதற்காக!
2:221. மேலும் (விசுவாசிகளே! அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை, அவர்கள் விசுவாசங் கொள்ளும்வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள், (ஏனென்றால்) இணைவைக்கும் ஒரு பெண்ணைவிட அவள் உங்களைக் கவரக்கூடியவளாக இருப்பினும் - விசுவாசியான ஓர் அடிமைப் பெண் மிகச் சிறந்தவளாவாள்; மேலும், இணை வைக்கும் ஆண்கள் விசுவாசங்கொள்ளும் வரை அவர்களுக்கு விசுவாசியான பெண்களை நீங்கள் திருமணம் செய்து கொடுக்காதீர்கள். இணை வைக்கும் ஒரு ஆணை விட – அவன் உங்களை கவரக்கூடியவனாக இருப்பினும் ஒரு விசுவாசியான அடிமை மிகச் சிறந்தவனாவான்; அவர்கள் நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் உத்தரவு கொண்டு சொர்க்கத்தின்பாலும் (தன்னுடைய) மன்னிப்பின் பாலும் (உங்களை) அழைக்கின்றான். மேலும், மனிதர்களுக்கு அவர்கள் நினைவில் கொள்வதற்காக தன்னுடைய வசனங்களை விளக்குகிறான்.
2:222 وَ يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْمَحِيْضِ‌ۙ قُلْ هُوَ اَذًى فَاعْتَزِلُوْا النِّسَآءَ فِى الْمَحِيْضِ‌ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰى يَطْهُرْنَ‌‌ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَيْثُ اَمَرَكُمُ اللّٰهُ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏
2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
2:222. (நபியே!) மாதவிடாயைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றார்கள். நீங்கள் கூறுங்கள்: "அது (அசுத்தமான) ஓர் இடையூறு. எனவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி, அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை அணுகாதீர்கள். சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தை விட்டு) வருத்தப்பட்டு மீளுகிறவர்களையும், பரிசுத்தவான்களையும் விரும்புகிறான்.
2:222. இன்னும் மாதவிடாய் (குறித்த சட்டம்) பற்றியும் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அது ஒரு தூய்மையற்ற நிலை; ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்; மேலும் அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்! பிறகு அவர்கள் தூய்மையடைந்துவிட்டால், அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும் தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான்.
2:222. மேலும், (நபியே!) மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக! அது ஓர் அசௌகரியமாகும். எனவே மாதவிடாய் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்; மேலும் அவர்கள் (உதிரப் போக்கிலிருந்து) சுத்தமாகும்வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் சுத்தமாகி குளித்துவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் வாருங்கள், நிச்சயமாக, பச்சாதாபப்பட்டு மீளுகிறவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்; தூய்மையாக இருப்பவர்களையும் அவன் நேசிக்கிறான்.
2:223 نِسَآؤُكُمْ حَرْثٌ لَّـكُمْ فَاْتُوْا حَرْثَكُمْ اَنّٰى شِئْتُمْ‌  وَقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّکُمْ مُّلٰقُوْهُ ‌ؕ وَ بَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏
2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
2:223. உங்கள் மனைவிகள் உங்கள் விளைநிலங்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்களுடைய பிற்காலத்திற்கு (வேண்டிய சந்ததியை)த் தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள் என்பதையும் உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். (நபியே! நேர்மையுள்ள) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்.
2:223. உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளைநிலங்களுக்குச் செல்லுங்கள்! மேலும் உங்களுடைய வருங்காலத்துக்காக முன்கூட்டியே ஏதாவது செய்துகொள்வதில் அக்கறை காட்டுங்கள்; அல்லாஹ்வின் சினத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்!” மேலும் நிச்சயமாக நீங்கள் (ஒரு நாள்) அவனைச் சந்திக்கவிருக்கிறீர்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்! இன்னும் (நபியே!) உம்முடைய அறிவுரைகளை ஏற்றுக் கொண்டிருப்போருக்கு, (வெற்றியையும், பேறுகளையும் குறித்து) நற்செய்தி கூறுவீராக!
2:223. உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளைநிலங்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள். உங்களுக்காக (நன்மைகளை) முற்படுத்திக் கொள்ளுங்கள்; இன்னும், அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். மேலும், (நபியே!) விசுவாசிகளுக்கு நன்மாராயங்கூறுவீராக.
2:224 وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَيْمَانِکُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَيْنَ النَّاسِ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
2:224. இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்; அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
2:224. நீங்கள் நன்மை செய்வதற்கோ அல்லது இறைவனை அஞ்சிக்கொள்வதற்கோ அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைப்பதற்கோ உங்களுக்குத் தடையாக ஏற்படக்கூடிய விதத்தில் நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வை இலக்காக்காதீர்கள். அல்லாஹ் (சத்தியத்தை) செவியுறுபவனாகவும், (மனதில் உள்ளதை) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
2:224. நன்மை செய்தல், இறையச்சத்துடன் வாழ்தல், மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வின் பெயரைக் கருவியாக்காதீர்கள்! அல்லாஹ் உங்கள் பேச்சுகள் அனைத்தையும் கேட்பவனாகவும் (எல்லாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
2:224. இன்னும், நீங்கள் நன்மை செய்வதற்குப் பயபக்தியுடையவர்களாக நீங்கள் இருப்பதற்கும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் செய்து வைப்பதற்கும், (அல்லாஹ்வைக் கொண்டு நீங்கள் செய்யும்) உங்களுடைய சத்தியங்களுக்காக அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் உங்கள் கூற்றைச் செவியேற்கிறவன், உங்கள் செயலை நன்கறிகிறவன்.
2:225 لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْٓ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ‏
2:225. (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
2:225. (மனதில் நாட்டமின்றி அடிக்கடி நீங்கள் செய்யும்) வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பதில்லை. ஆனால், உங்களுடைய உள்ளங்கள் (உறுதியுடன்) செய்யும் சத்தியங்களுக்காக, (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களை குற்றம் பிடிப்பான். பின்னும், அல்லாஹ் (குற்றங்களை) மிக்க மன்னிப்பவனும் அதிகம் பொறுமை உடையவனுமாக இருக்கின்றான்.
2:225. (உள்நோக்கம் எதுவுமின்றி) தற்செயலாக நீங்கள் செய்யும் அபத்தமான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், நீங்கள் உளப்பூர்வமாகச் செய்த சத்தியங்களுக்காக நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிப்பான்! மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், அதிகம் சகிப்புத்தன்மையுடையோனாகவும் இருக்கின்றான்.
2:225. உங்களுடைய சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்கமாட்டான். எனினும் உங்களுடைய இதயங்கள் நாடிச் செய்து சம்பாதித்துக் கொண்டதைப்பற்றி உங்களை அவன் பிடிப்பான். இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், அதிக சகிப்புத் தன்மையுடையவன்,.
2:226 لِّـلَّذِيْنَ يُؤْلُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍ‌‌ۚ فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
2:226. தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
2:226. தங்கள் மனைவிகளுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் தாமதிக்க அனுமதியுண்டு. ஆகவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து) கொண்டால் (அல்லாஹ் அவர்களை மன்னித்திடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான்.
2:226. தங்கள் மனைவியரை நெருங்குவதில்லையென்று சபதம் செய்து விலகி இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுண்டு. எனவே அதற்குள் (தங்கள் மனைவியரிடம்) அவர்கள் திரும்பிவிட்டால், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாய் இருக்கின்றான்.
2:226. தங்கள் மனைவியரிடம் (உடலுறவுக்காக நெருங்குவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு) நான்கு மாதங்கள் எதிர்பார்த்தல் உண்டு. ஆகவே, இத்தவணைக்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்.
2:227 وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏
2:227. ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
2:227. ஆனால், அவர்கள் (தவணைக்குள் சேராமல்) திருமண முறிவை உறுதிப்படுத்திக் கொண்டால், (அத்தவணைக்குப் பின் "தலாக்" விவாகரத்து ஏற்பட்டுவிடும்.) நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய சத்தியத்தை) செவியுறுபவனாகவும், (அவர்கள் கருதிய "தலாக்"கை) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
2:227. ஆனால் அவர்கள் ‘தலாக்’ சொல்வதென்று தீர்மானித்துவிட்டால் அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்!
2:227. இன்னும், அவர்கள் (அவ்வாறு நெருங்காமல்) திருமணம் பிரிவினையை விவாகரத்தை உறுதிப்படுத்திக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுகிறவன், நன்கறிகிறவன்.
2:228 وَالْمُطَلَّقٰتُ يَتَرَ بَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ‌ؕ وَلَا يَحِلُّ لَهُنَّ اَنْ يَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِىْٓ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِىْ ذٰ لِكَ اِنْ اَرَادُوْٓا اِصْلَاحًا ‌ؕ وَلَهُنَّ مِثْلُ الَّذِىْ عَلَيْهِنَّ بِالْمَعْرُوْفِ‌ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ‌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏
2:228. தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
2:228. "தலாக்" கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று (மாத) விடாய்கள் வரும் வரையில் எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதி கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப் பையில் (சிசுவை) படைத்திருந்தால் அதனை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர ("ரஜயி"யான தலாக்குக் கூறப்பட்ட) பெண்களின் கணவர்கள் பின்னும் (சேர்ந்து வாழக்கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள கணவர்கள் மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர்பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவனும், நுண்ணறிவு உடையவனுமாக இருக்கின்றான்.
2:228. தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை தாமாகவே பொறுத்திருக்க வேண்டும். தங்களுடைய கருவறைகளில் அல்லாஹ் எதையேனும் படைத்திருப்பானேயானால் அதை மறைப்பது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் அவர்கள் நம்பிக்கை கொண்டவராக இருந்தால் ஒருபோதும் அவர்கள் இவ்வாறு செய்யக்கூடாது! அவர்களின் கணவர்கள் (முன்னிருந்த) உறவைச் சரிப்படுத்திக்கொள்ள விரும்பினால், இத்தவணைக்குள் அவர்களை மீண்டும் மனைவியாக்கிக் கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன; பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல! ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒரு படி உயர்வு உண்டு. இன்னும் அல்லாஹ் (அனைவர்மீதும்) பேராற்றலுடையோனும், நுண்ணறிவுடையோனுமாய் இருக்கின்றான்.
2:228. மேலும் ‘தலாக்’ சொல்லப்பட்ட பெண்கள் தங்களுக்கு மூன்று மாதவிடாய்களை எதிர்பார்த்திருப்பர். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும், விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், அவர்களுடைய கர்ப்பப் பைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. மேலும், மீட்கக் கூடிய தலாக் சொல்லிய அவர்களின் கணவர்கள் இணக்கத்தை நாடினால், அதற்குரிய தவணை காலத்தில் அவர்களை மனைவிகளாகத் திருப்பிக் கொள்ள மிகவும் உரிமையுடையவர்கள். மனைவியரான அவர்களின் மீதுள்ள கடமைகள் போன்று அவர்களுக்கு முறைப்படி உரிமைகளும் உண்டு. ஆண்களுக்கு (பெண்களாகிய) அவர்கள் மீது ஓர் படித்தரமுமுண்டு. அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
2:229 اَلطَّلَاقُ مَرَّتٰنِ‌ فَاِمْسَاكٌ ۢ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِيْحٌ ۢ بِاِحْسَانٍ‌ ؕوَلَا يَحِلُّ لَـکُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّآ اٰتَيْتُمُوْهُنَّ شَيْئًا اِلَّاۤ اَنْ يَّخَافَآ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِ‌ؕ فَاِنْ خِفْتُمْ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِۙ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيْمَا افْتَدَتْ بِهٖؕ‌ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ‌ۚ‌ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
2:229. (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
2:229. (ரஜயியாகிய) இந்தத் தலாக்(கை) இருமுறைதான் (கூறலாம்). பின்னும் (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம். அல்லது (அவர்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம். தவிர, நீங்கள் அவர்களுக்கு (வெகுமதியாகவோ, மஹராகவோ) கொடுத்தவைகளிலிருந்து யாதொன்றையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. (அன்றி இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முற்பட்டபோதிலும்) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புக்குள் நிலைத்திருக்க முடியாதென்று இருவருமே பயப்படும் சமயத்தில் (இதற்குப் பஞ்சாயத்தாக இருக்கும்) நீங்களும் அவ்வாறு மெய்யாக பயந்தால் அவள் (கணவனிடமிருந்து) பெற்றுக் கொண்டதிலிருந்து எதையும் (விவாகரத்து நிகழ) பிரதியாகக் கொடுப்பதிலும் (அவன் அதைப் பெற்றுக் கொள்வதிலும்) அவ்விருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். ஆதலால் நீங்கள் இவற்றை மீறாதீர்கள். எவரேனும் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறினால் நிச்சயமாக அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
2:229. தலாக் இரு தடவைகள்தாம்! பின்னர் நேரிய விதத்தில் அவர்களை (மனைவியராகவே) வைத்துக் கொள்ள வேண்டும்; அல்லது அழகிய முறையில் அவர்களை விடுவித்துவிட வேண்டும். அவ்வாறு விடுவித்த பிறகு அவர்களுக்கு நீங்கள் கொடுத்திருந்த பொருள்களிலிருந்து எதனையும் நீங்கள் திருப்பி வாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. மேலும், அல்லாஹ்வின் வரம்புகளுக்குள் நிலைத்திருக்க முடியாது என (கணவன் மனைவியாகிய இருவரும்) அஞ்சினால், மேலும், அவ்வி