89. ஸூரத்துல் ஃபஜ்ரி(விடியற்காலை)
மக்கீ, வசனங்கள்: 30

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
89:1
89:1 وَالْفَجْرِۙ‏
وَالْفَجْرِۙ‏ விடியற்காலையின் மீது சத்தியமாக
89:1. விடியற் காலையின் மீது சத்தியமாக,
89:2
89:2 وَلَيَالٍ عَشْرٍۙ‏
وَلَيَالٍ நாள்களின் மீது சத்தியமாக عَشْرٍۙ‏ பத்து
89:2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
89:3
89:3 وَّالشَّفْعِ وَالْوَتْرِۙ‏
وَّالشَّفْعِ இரட்டையின் மீது சத்தியமாக وَالْوَتْرِۙ‏ ஒற்றையின் மீது சத்தியமாக
89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
89:4
89:4 وَالَّيْلِ اِذَا يَسْرِ‌ۚ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذَا يَسْرِ‌ۚ‏ அது செல்லும்போது
89:4. செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
89:5
89:5 هَلْ فِىْ ذٰلِكَ قَسَمٌ لِّذِىْ حِجْرٍؕ‏
هَلْ فِىْ ذٰلِكَ இதில் இருக்கிறதா? قَسَمٌ சத்தியம் لِّذِىْ حِجْرٍؕ‏ அறிவுடையவருக்கு
89:5. இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
89:6
89:6 اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۙ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? كَيْفَ எவ்வாறு فَعَلَ (வேதனை)செய்தான் رَبُّكَ உம் இறைவன் بِعَادٍۙ‏ ஆது சமுதாயத்தை
89:6. உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
89:7
89:7 اِرَمَ ذَاتِ الْعِمَادِۙ‏
اِرَمَ இரம் ذَاتِ الْعِمَادِۙ‏ தூண்களுடைய
89:7. (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
89:8
89:8 الَّتِىْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۙ‏
الَّتِىْ எது لَمْ يُخْلَقْ படைக்கவில்லை مِثْلُهَا அதுபோன்று فِى الْبِلَادِۙ‏ நகரங்களில்
89:8. அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
89:9
89:9 وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۙ‏
وَثَمُوْدَ இன்னும் ஸமூது சமுதாயத்தை الَّذِيْنَ எவர்கள் جَابُوا குடைந்தனர் الصَّخْرَ பாறையை بِالْوَادِۙ‏ பள்ளத்தாக்கில்
89:9. பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
89:10
89:10 وَفِرْعَوْنَ ذِى الْاَوْتَادِۙ‏
وَفِرْعَوْنَ இன்னும் ஃபிர்அவ்ன் ذِى الْاَوْتَادِۙ‏ ஆணிகளுடைய
89:10. மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
89:11
89:11 الَّذِيْنَ طَغَوْا فِى الْبِلَادِۙ‏
الَّذِيْنَ எவர்கள் طَغَوْا வரம்பு மீறினார்கள் فِى الْبِلَادِۙ‏ நகரங்களில்
89:11. அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
89:12
89:12 فَاَكْثَرُوْا فِيْهَا الْفَسَادَۙ‏
فَاَكْثَرُوْا இன்னும் அதிகப்படுத்தினர் فِيْهَا அவற்றில் الْفَسَادَۙ‏ விஷமத்தை
89:12. அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
89:13
89:13 فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ۙۚ‏
فَصَبَّ எனவே சுழற்றினான் عَلَيْهِمْ அவர்கள் மீது رَبُّكَ உம் இறைவன் سَوْطَ சாட்டையை عَذَابٍ ۙۚ‏ வேதனையின்
89:13. எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
89:14
89:14 اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِؕ‏
اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் لَبِالْمِرْصَادِؕ‏ எதிர்பார்க்குமிடத்தில்
89:14. நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்.
89:15
89:15 فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰٮهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ  ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَكْرَمَنِؕ‏
فَاَمَّا ஆக الْاِنْسَانُ மனிதன் اِذَا مَا ابْتَلٰٮهُ அவனைச் சோதித்த போது رَبُّهٗ அவனுடைய இறைவன் فَاَكْرَمَهٗ இன்னும் அவனைக் கண்ணியப்படுத்தினான் وَنَعَّمَهٗ  ۙ இன்னும் அவனுக்கு அருட்கொடை புரிந்தான் فَيَقُوْلُ கூறுகிறான் رَبِّىْۤ என் இறைவன் اَكْرَمَنِؕ‏ என்னைக் கண்ணியப்படுத்தினான்
89:15. ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.
89:16
89:16 وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِ‌ۚ‏
وَاَمَّاۤ ஆக اِذَا مَا ابْتَلٰٮهُ அவனைச் சோதித்த போது فَقَدَرَ இன்னும் சுருக்கினான் عَلَيْهِ அவன் மீது رِزْقَهٗ ۙ அவனுடைய வாழ்வாதாரத்தை فَيَقُوْلُ கூறுகிறான் رَبِّىْۤ என் இறைவன் اَهَانَنِ‌ۚ‏ என்னை இழிவுபடுத்திவிட்டான்
89:16. எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.
89:17
89:17 كَلَّا‌ بَلْ لَّا تُكْرِمُوْنَ الْيَتِيْمَۙ‏
كَلَّا‌ بَلْ அவ்வாறல்ல/மாறாக لَّا تُكْرِمُوْنَ நீங்கள் கண்ணியப்படுத்துவதில்லை الْيَتِيْمَۙ‏ அநாதையை
89:17. அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
89:18
89:18 وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۙ‏
وَلَا تَحٰٓضُّوْنَ இன்னும் தூண்டுவதில்லை عَلٰى طَعَامِ உணவுக்கு الْمِسْكِيْنِۙ‏ ஏழையின்
89:18. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
89:19
89:19 وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّـمًّا ۙ‏
وَتَاْكُلُوْنَ இன்னும் புசிக்கிறீர்கள் التُّرَاثَ பிறருடைய சொத்தை اَكْلًا لَّـمًّا ۙ‏ புசித்தல்/சேர்த்து
89:19. இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
89:20
89:20 وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ؕ‏
وَّتُحِبُّوْنَ இன்னும் நேசிக்கிறீர்கள் الْمَالَ செல்வத்தை حُبًّا நேசித்தல் جَمًّا ؕ‏ கடுமையாக
89:20. இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
89:21
89:21 كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا ۙ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِذَا دُكَّتِ தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது الْاَرْضُ பூமி دَكًّا دَكًّا ۙ‏ தூள் தூளாகத் தகர்க்கப்படுதல்
89:21. அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
89:22
89:22 وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۚ‏
وَّجَآءَ இன்னும் வருவான் رَبُّكَ உம் இறைவன் وَالْمَلَكُ இன்னும் மலக்கு صَفًّا صَفًّا ۚ‏ அணி அணியாக
89:22. இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்
89:23
89:23 وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ  ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏
وَجِاىْٓءَ இன்னும் வரப்படும் يَوْمَٮِٕذٍۢ அந்நாளில் بِجَهَنَّمَ  ۙ‌ நரகத்தைக்கொண்டு يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّتَذَكَّرُ நல்லறிவு பெறுவான் الْاِنْسَانُ وَاَنّٰى மனிதன்/இன்னும் எப்படி لَـهُ அவனுக்கு الذِّكْرٰىؕ‏ நல்லறிவு
89:23. அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
89:24
89:24 يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌ۚ‏
يَقُوْلُ கூறுவான் يٰلَيْتَنِىْ قَدَّمْتُ நான் முற்படுத்தி இருக்க வேண்டுமே لِحَـيَاتِى‌ۚ‏ என் வாழ்வுக்காக
89:24. “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.
89:25
89:25 فَيَوْمَٮِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۙ‏
فَيَوْمَٮِٕذٍ ஆகவே அந்நாளில் لَّا يُعَذِّبُ வேதனை செய்ய மாட்டான் عَذَابَهٗۤ அவனுடைய வேதனையை اَحَدٌ ۙ‏ ஒருவனும்
89:25. ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
89:26
89:26 وَّلَا يُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ؕ‏
وَّلَا يُوْثِقُ இன்னும் கட்டமாட்டான் وَثَاقَهٗۤ அவனுடைய கட்டுதலை اَحَدٌ ؕ‏ ஒருவனும்
89:26. மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
89:27
89:27 يٰۤاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَٮِٕنَّةُ  ۖ‏
يٰۤاَيَّتُهَا النَّفْسُ ஆன்மாவே! الْمُطْمَٮِٕنَّةُ  ۖ‏ நிம்மதியடைந்த
89:27. (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
89:28
89:28 ارْجِعِىْۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً‌ ۚ‏
ارْجِعِىْۤ திரும்பு اِلٰى பக்கம் رَبِّكِ உன் இறைவன் رَاضِيَةً திருப்தி பெற்றதாக مَّرْضِيَّةً‌ ۚ‏ திருப்தி கொள்ளப்பட்டதாக
89:28. நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
89:29
89:29 فَادْخُلِىْ فِىْ عِبٰدِىۙ‏
فَادْخُلِىْ இன்னும் சேர்ந்து விடு فِىْ عِبٰدِىۙ‏ என் அடியார்களில்
89:29. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
89:30
89:30 وَادْخُلِىْ جَنَّتِى
وَادْخُلِىْ இன்னும் நுழைந்து விடு جَنَّتِى‏ என் சொர்க்கத்தில்
89:30. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).