51. ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
மக்கீ, வசனங்கள்: 60

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
51:1
51:1 وَالذّٰرِيٰتِ ذَرْوًا ۙ‏
وَالذّٰرِيٰتِ ذَرْوًا ۙ‏ வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!
51:1. (புழுதியைக் எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
51:2
51:2 فَالْحٰمِلٰتِ وِقْرًا ۙ‏
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۙ‏ சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
51:2. (மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
51:3
51:3 فَالْجٰرِيٰتِ يُسْرًا ۙ‏
فَالْجٰرِيٰتِ يُسْرًا ۙ‏ மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
51:3. பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,
51:4
51:4 فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۙ‏
فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۙ‏ கட்டளைகளை பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!
51:4. (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
51:5
51:5 اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۙ‏
اِنَّمَا تُوْعَدُوْنَ நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் لَصَادِقٌ ۙ‏ உண்மைதான்
51:5. நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.
51:6
51:6 وَّاِنَّ الدِّيْنَ لوَاقِعٌ ؕ‏
وَّاِنَّ நிச்சயமாக الدِّيْنَ கூலி கொடுக்கப்படுவது لوَاقِعٌ ؕ‏ நிகழ்ந்தே தீரும்
51:6. அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
51:7
51:7 وَالسَّمَآءِ ذَاتِ الْحُـبُكِ ۙ‏
وَالسَّمَآءِ வானத்தின் மீது சத்தியமாக! ذَاتِ الْحُـبُكِ ۙ‏ அழகிய படைப்புடைய
51:7. அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
51:8
51:8 اِنَّـكُمْ لَفِىْ قَوْلٍ مُّخْتَلِفٍ ۙ‏
اِنَّـكُمْ நிச்சயமாக நீங்கள் لَفِىْ قَوْلٍ பேச்சில் இருக்கின்றனர் مُّخْتَلِفٍ ۙ‏ மாறுபட்ட
51:8. நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
51:9
51:9 يُّـؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَ ؕ‏
يُّـؤْفَكُ திருப்பப்படுகிறார் عَنْهُ இதை விட்டும் مَنْ எவர் اُفِكَ ؕ‏ திருப்பப்பட்டார்
51:9. அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
51:10
51:10 قُتِلَ الْخَـرّٰصُوْنَۙ‏
قُتِلَ அழிந்து போகட்டும் الْخَـرّٰصُوْنَۙ‏ பொய்யை கற்பனை செய்பவர்கள்
51:10. பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
51:11
51:11 الَّذِيْنَ هُمْ فِىْ غَمْرَةٍ سَاهُوْنَۙ‏
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் فِىْ غَمْرَةٍ மயக்கத்தில் سَاهُوْنَۙ‏ மறதியாளர்களாக
51:11. அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
51:12
51:12 يَسْــٴَـــلُوْنَ اَيَّانَ يَوْمُ الدِّيْنِؕ‏
يَسْــٴَـــلُوْنَ அல்லது கேட்கின்றனர் اَيَّانَ எப்போது يَوْمُ நாள் الدِّيْنِؕ‏ கூலி கொடுக்கப்படும்
51:12. (நன்மை, தீமைக்குக்) “கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
51:13
51:13 يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُوْنَ‏
يَوْمَ நாளில்... هُمْ அவர்கள் عَلَى النَّارِ நெருப்பின் மீது يُفْتَنُوْنَ‏ வேதனை செய்யப்படுகின்றனர்
51:13. நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
51:14
51:14 ذُوْقُوْا فِتْنَتَكُمْؕ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ‏
ذُوْقُوْا சுவையுங்கள்! فِتْنَتَكُمْؕ உங்கள் வேதனையை هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ‏ இது நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தது
51:14. “உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்;” எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
51:15
51:15 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏
اِنَّ الْمُتَّقِيْنَ நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் وَّعُيُوْنٍۙ‏ இன்னும் நீரூற்றுகளில்
51:15. நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
51:16
51:16 اٰخِذِيْنَ مَاۤ اٰتٰٮهُمْ رَبُّهُمْ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِيْنَؕ‏
اٰخِذِيْنَ பெற்றுக்கொள்வார்கள் مَاۤ اٰتٰٮهُمْ அவர்களுக்கு கொடுத்ததை رَبُّهُمْ‌ؕ அவர்களின்இறைவன் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் قَبْلَ ذٰلِكَ இதற்கு முன்னர் مُحْسِنِيْنَؕ‏ நல்லவர்களாக
51:16. அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
51:17
51:17 كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ‏
كَانُوْا இருந்தார்கள் قَلِيْلًا மிகக் குறைவாக مِّنَ الَّيْلِ இரவில் مَا يَهْجَعُوْنَ‏ தூங்குபவர்களாக
51:17. அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
51:18
51:18 وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ‏
وَبِالْاَسْحَارِ அதிகாலையில் هُمْ يَسْتَغْفِرُوْنَ‏ அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்
51:18. அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
51:19
51:19 وَفِىْۤ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآٮِٕلِ وَالْمَحْرُوْمِ‏
وَفِىْۤ اَمْوَالِهِمْ இன்னும் அவர்களது செல்வங்களில் حَقٌّ உரிமை لِّلسَّآٮِٕلِ யாசிப்பவருக்கு(ம்) وَالْمَحْرُوْمِ‏ இல்லாதவருக்கும்
51:19. அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
51:20
51:20 وَفِى الْاَرْضِ اٰيٰتٌ لِّلْمُوْقِنِيْنَۙ‏
وَفِى الْاَرْضِ இன்னும் பூமியில் اٰيٰتٌ பல அத்தாட்சிகள் لِّلْمُوْقِنِيْنَۙ‏ உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு
51:20. உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
51:21
51:21 وَفِىْۤ اَنْفُسِكُمْ‌ؕ اَفَلَا تُبْصِرُوْنَ‏
وَفِىْۤ اَنْفُسِكُمْ‌ؕ இன்னும் உங்களிலும் اَفَلَا تُبْصِرُوْنَ‏ நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?
51:21. உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
51:22
51:22 وَفِى السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ‏
وَفِى السَّمَآءِ இன்னும் வானத்தில் رِزْقُكُمْ உங்கள் உணவும் وَمَا تُوْعَدُوْنَ‏ நீங்கள் வாக்களிக்கப்படுவதும்
51:22. அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
51:23
51:23 فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَـقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ
فَوَرَبِّ அதிபதியின் மீது சத்தியமாக السَّمَآءِ وَالْاَرْضِ வானம், பூமியுடைய اِنَّهٗ நிச்சயமாக இது لَحَـقٌّ உண்மைதான் مِّثْلَ போன்றே مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ‏ நிச்சயமாக நீங்கள் பேசுவது
51:23. ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.  
51:24
51:24 هَلْ اَتٰٮكَ حَدِيْثُ ضَيْفِ اِبْرٰهِيْمَ الْمُكْرَمِيْنَ‌ۘ‏
هَلْ اَتٰٮكَ உமக்கு வந்ததா? حَدِيْثُ செய்தி ضَيْفِ اِبْرٰهِيْمَ الْمُكْرَمِيْنَ‌ۘ‏ விருந்தினர்களின்/ இப்ராஹீமுடைய/கண்ணியமான(வர்கள்)
51:24. இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
51:25
51:25 اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًا‌ؕ قَالَ سَلٰمٌ ۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ‌‏
اِذْ دَخَلُوْا அல்லது நுழைந்தபோது عَلَيْهِ அவரிடம் فَقَالُوْا அவர்கள் கூறினர் سَلٰمًا‌ؕ ஸலாம் قَالَ கூறினார் سَلٰمٌ ۚ “ஸலாம்” قَوْمٌ மக்கள் مُّنْكَرُوْنَ‌‏ அறியாத
51:25. அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).
51:26
51:26 فَرَاغَ اِلٰٓى اَهْلِهٖ فَجَآءَ بِعِجْلٍ سَمِيْنٍۙ‏
فَرَاغَ திரும்பிச் சென்றார் اِلٰٓى اَهْلِهٖ தனது குடும்பத்தாரிடம் فَجَآءَ வந்தார் بِعِجْلٍ سَمِيْنٍۙ‏ கொழுத்த காளைக் கன்றைக் கொண்டு
51:26. எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.
51:27
51:27 فَقَرَّبَهٗۤ اِلَيْهِمْ قَالَ اَلَا تَاْكُلُوْنَ‏
فَقَرَّبَهٗۤ அதை நெருக்கமாக்கினார் اِلَيْهِمْ அவர்கள் பக்கம் قَالَ கூறினார் اَلَا تَاْكُلُوْنَ‏ நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?
51:27. அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார்.
51:28
51:28 فَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً ‌ؕ قَالُوْا لَا تَخَفْ‌ ؕ وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِيْمٍ‏
فَاَوْجَسَ ஆகவே, உணர்ந்தார் مِنْهُمْ அவர்களினால் خِيْفَةً ؕ பயத்தை قَالُوْا கூறினார்கள் لَا تَخَفْ‌ ؕ பயப்படாதீர்! وَبَشَّرُوْهُ இன்னும் அவருக்கு நற்செய்தி கூறினார்கள் بِغُلٰمٍ ஓர் ஆண் குழந்தையைக்கொண்டு عَلِيْمٍ‏ கல்வியாளரான
51:28. (அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
51:29
51:29 فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِىْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِيْمٌ‏
فَاَقْبَلَتِ முன்னோக்கி வந்தால் امْرَاَتُهٗ அவருடைய மனைவி فِىْ صَرَّةٍ சப்தத்தோடு فَصَكَّتْ இன்னும் அறைந்தார் وَجْهَهَا தனது முகத்தை وَقَالَتْ இன்னும் கூறினாள் عَجُوْزٌ கிழவி ஆயிற்றே عَقِيْمٌ‏ மலடியான(வள்)
51:29. பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.
51:30
51:30 قَالُوْا كَذٰلِكِ ۙ قَالَ رَبُّكِ‌ؕ اِنَّهٗ هُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ‏
قَالُوْا கூறினார்கள் كَذٰلِكِ ۙ அவ்வாறுதான் قَالَ கூறினான் رَبُّكِ‌ؕ உமது இறைவன் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْحَكِيْمُ மகா ஞானவான் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
51:30. (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று:) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.  
51:31
51:31 قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏
قَالَ அவர் கூறினார் فَمَا خَطْبُكُمْ உங்கள் காரியம்தான் என்ன? اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏ தூதர்களே!
51:31. (பின்னர் இப்ராஹீம்:) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார்.
51:32
51:32 قَالُـوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ‏
قَالُـوْۤا கூறினார்கள் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اُرْسِلْنَاۤ அனுப்பப்பட்டுள்ளோம் اِلٰى قَوْمٍ மக்கள் பக்கம் مُّجْرِمِيْنَۙ‏ குற்றவாளிகளான
51:32. “குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
51:33
51:33 لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ طِيْنٍۙ‏
لِنُرْسِلَ நாங்கள் எறிவதற்காக عَلَيْهِمْ அவர்கள் மீது حِجَارَةً கல்லை مِّنْ طِيْنٍۙ‏ களிமண்ணினால்ஆன
51:33. “அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
51:34
51:34 مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِيْنَ‏
مُّسَوَّمَةً அடையாளமிடப்பட்ட عِنْدَ رَبِّكَ உமது இறைவனிடம் لِلْمُسْرِفِيْنَ‏ பாவிகளுக்காக
51:34. “வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.”
51:35
51:35 فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِيْهَا مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏
فَاَخْرَجْنَا ஆக, நாம் வெளியேற்றி விட்டோம் مَنْ كَانَ இருந்தவர்களை فِيْهَا அதில் مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏ நம்பிக்கையாளர்களாக
51:35. ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.
51:36
51:36 فَمَا وَجَدْنَا فِيْهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِيْنَ‌ۚ‏
فَمَا وَجَدْنَا ஆனால் நாம் காணவில்லை فِيْهَا அதில் غَيْرَ بَيْتٍ ஒரு வீட்டைத் தவிர مِّنَ الْمُسْلِمِيْنَ‌ۚ‏ முஸ்லிம்களுடைய
51:36. எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.
51:37
51:37 وَتَرَكْنَا فِيْهَاۤ اٰيَةً لِّـلَّذِيْنَ يَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِيْمَؕ‏
وَتَرَكْنَا நாம் விட்டுள்ளோம் فِيْهَاۤ அதில் اٰيَةً ஓர் அத்தாட்சியை لِّـلَّذِيْنَ يَخَافُوْنَ பயப்படுகின்றவர்களுக்கு الْعَذَابَ தண்டனையை الْاَلِيْمَؕ‏ வலி தரக்கூடிய(து)
51:37. நோவினை தரும் வேதனையை அஞ்சுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சியை விட்டு வைத்தோம்.
51:38
51:38 وَفِىْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰى فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏
وَفِىْ مُوْسٰۤی இன்னும் மூஸாவிலும் اِذْ اَرْسَلْنٰهُ நாம் அவரை அனுப்பிய போது اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் بِسُلْطٰنٍ ஆதாரத்தைக் கொண்டு مُّبِيْنٍ‏ தெளிவான(து)
51:38. மேலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது; நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது:
51:39
51:39 فَتَوَلّٰى بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ‏
فَتَوَلّٰى விலகினான் بِرُكْنِهٖ தனது பலத்தினால் وَقَالَ இன்னும் கூறினான் سٰحِرٌ ஒருசூனியக்காரர்(தான்) اَوْ அல்லது مَجْنُوْنٌ‏ ஒரு பைத்தியக்காரர்(தான்)
51:39. அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து: “இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
51:40
51:40 فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ وَهُوَ مُلِيْمٌؕ‏
فَاَخَذْنٰهُ அவனையும் நாம் பிடித்தோம் وَجُنُوْدَهٗ அவனுடைய இராணுவங்களையும் فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ அவர்களை எறிந்தோம்/கடலில் وَهُوَ அவனோ مُلِيْمٌؕ‏ பழிப்புக்குள்ளானவன்
51:40. ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
51:41
51:41 وَفِىْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيْحَ الْعَقِيْمَ‌ۚ‏
وَفِىْ عَادٍ இன்னும் ஆதிலும் اِذْ اَرْسَلْنَا நாம் அனுப்பியபோது عَلَيْهِمُ அவர்கள் மீது الرِّيْحَ الْعَقِيْمَ‌ۚ‏ மலட்டுக் காற்றை
51:41. இன்னும், “ஆது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக்காற்றை அனுப்பிய போது;
51:42
51:42 مَا تَذَرُ مِنْ شَىْءٍ اَتَتْ عَلَيْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيْمِؕ‏
مَا تَذَرُ அது விடாது مِنْ شَىْءٍ எதையும் اَتَتْ செல்கிறதோ عَلَيْهِ அதன் மீது اِلَّا جَعَلَتْهُ அதை ஆக்காமல் كَالرَّمِيْمِؕ‏ பழைய மக்கிப்போன பொருளைப் போன்று
51:42. அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
51:43
51:43 وَفِىْ ثَمُوْدَ اِذْ قِيْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰى حِيْنٍ‏
وَفِىْ ثَمُوْدَ இன்னும் சமூதிலும் اِذْ قِيْلَ சொல்லப்பட்ட போது لَهُمْ அவர்களுக்கு تَمَتَّعُوْا சுகமாக இருங்கள் என்று حَتّٰى வரை حِيْنٍ‏ சிறிது காலம்
51:43. மேலும் “ஸமூது” (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); “ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது:
51:44
51:44 فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَ هُمْ يَنْظُرُوْنَ‏
فَعَتَوْا பெருமை அடித்தனர் عَنْ اَمْرِ கட்டளையைஏற்காமல் رَبِّهِمْ தங்கள் இறைவனின் فَاَخَذَتْهُمُ அவர்களைப்பிடித்தது الصّٰعِقَةُ இடிமுழக்கம் وَ هُمْ அவர்களோ يَنْظُرُوْنَ‏ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்
51:44. அவர்கள் தங்கள் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
51:45
51:45 فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِيَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِيْنَۙ‏
فَمَا اسْتَطَاعُوْا இயலாமல் ஆகிவிட்டார்கள் مِنْ قِيَامٍ நிற்பதற்கு وَّمَا كَانُوْا இருக்கவில்லை مُنْتَصِرِيْنَۙ‏ பழிதீர்ப்பவர்களாகவும்
51:45. ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை; (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
51:46
51:46 وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ
وَقَوْمَ இன்னும் மக்களையும் نُوْحٍ நூஹ§டைய مِّنْ قَبْلُ‌ؕ இதற்கு முன்னர் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் قَوْمًا மக்களாக فٰسِقِيْنَ‏ பாவிகளான
51:46. அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
51:47
51:47 وَ السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ‏
وَ السَّمَآءَ வானத்தை بَنَيْنٰهَا அதை நாம் உயர்த்தினோம் بِاَيْٮدٍ பலத்தால் وَّاِنَّا நிச்சயமாக நாம் لَمُوْسِعُوْنَ‏ மிகவும் வசதி படைத்தவர்கள் ஆவோம்
51:47. மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
51:48
51:48 وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ‏
وَالْاَرْضَ பூமியை فَرَشْنٰهَا அதை நாம் விரித்தோம் فَنِعْمَ நாம் மிகச் சிறந்தவர்கள் الْمٰهِدُوْنَ‏ விரிப்பவர்களில்
51:48. இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
51:49
51:49 وَمِنْ كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏
وَمِنْ كُلِّ شَىْءٍ ஒவ்வொன்றிலும் خَلَقْنَا படைத்தோம் زَوْجَيْنِ இரண்டு ஜோடிகளை لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
51:50
51:50 فَفِرُّوْۤا اِلَى اللّٰهِ‌ؕ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ‌ۚ‏
فَفِرُّوْۤا ஆகவே விரண்டு ஓடுங்கள் اِلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் பக்கம் اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு مِّنْهُ அவனிடமிருந்து نَذِيْرٌ எச்சரிப்பாளர் مُّبِيْنٌ‌ۚ‏ தெளிவான(வர்)
51:50. ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).
51:51
51:51 وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ‌ؕ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ‌ۚ‏
وَلَا تَجْعَلُوْا ஏற்படுத்தாதீர்கள் مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا اٰخَرَ‌ؕ வேறு ஒரு கடவுளை اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு مِّنْهُ அவனிடமிருந்து نَذِيْرٌ எச்சரிப்பாளர் مُّبِيْنٌ‌ۚ‏ தெளிவான(வர்)
51:51. மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).
51:52
51:52 كَذٰلِكَ مَاۤ اَتَى الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ‌ۚ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் مَاۤ اَتَى வந்ததில்லை الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு مِّنْ رَّسُوْلٍ ஒரு தூதரும் اِلَّا قَالُوْا இவர்கள் கூறாமல் سَاحِرٌ ஒருசூனியக்காரர் اَوْ مَجْنُوْنٌ‌ۚ‏ அல்லது ஒரு பைத்தியக்காரர்
51:52. இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
51:53
51:53 اَتَوَاصَوْا بِهٖ‌ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ‌ۚ‏
اَتَوَاصَوْا இவர்கள் தங்களுக்குள் உபதேசித்துக் கொண்டார்களா? بِهٖ‌ۚ இதை بَلْ மாறாக هُمْ இவர்கள் قَوْمٌ மக்கள் طَاغُوْنَ‌ۚ‏ வரம்பு மீறிய(வர்கள்)
51:53. இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
51:54
51:54 فَتَوَلَّ عَنْهُمْ فَمَاۤ اَنْتَ بِمَلُوْمٍ‏
فَتَوَلَّ ஆகவே விலகுவீராக عَنْهُمْ அவர்களை விட்டு فَمَاۤ اَنْتَ நீர் இல்லை بِمَلُوْمٍ‏ பழிக்கப்பட்டவராக
51:54. ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
51:55
51:55 وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ‏
وَّذَكِّرْ நீர் நல்லுபதேசம் செய்வீராக! فَاِنَّ நிச்சயமாக الذِّكْرٰى நல்லுபதேசம் تَنْفَعُ பலனளிக்கும் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
51:55. மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
51:56
51:56 وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏
وَمَا خَلَقْتُ நான் படைக்கவில்லை الْجِنَّ ஜின்களையும் وَالْاِنْسَ மனிதர்களையும் اِلَّا தவிர لِيَعْبُدُوْنِ‏ அவர்கள் என்னை வணங்குவதற்கே
51:56. இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
51:57
51:57 مَاۤ اُرِيْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِيْدُ اَنْ يُّطْعِمُوْنِ‏
مَاۤ اُرِيْدُ நான் நாடவில்லை مِنْهُمْ அவர்களிடம் مِّنْ رِّزْقٍ எவ்வித உணவையும் وَّمَاۤ اُرِيْدُ நான் நாடவில்லை اَنْ يُّطْعِمُوْنِ‏ அவர்கள் எனக்கு உணவளிப்பதையும்
51:57. அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
51:58
51:58 اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ هُوَ அல்லாஹ்தான் الرَّزَّاقُ (எல்லோருக்கும்) உணவளிப்பவன் ذُو الْقُوَّةِ பலமுள்ளவன் الْمَتِيْنُ‏ மிக உறுதியுடையவன்
51:58. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
51:59
51:59 فَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُوْنِ‏
فَاِنَّ நிச்சயமாக لِلَّذِيْنَ ظَلَمُوْا அநியாயம் செய்தவர்களுக்கு ذَنُوْبًا பெரிய பங்குண்டு مِّثْلَ போல ذَنُوْبِ பெரிய பங்கு اَصْحٰبِهِمْ அவர்களின் கூட்டாளிகளுடைய فَلَا يَسْتَعْجِلُوْنِ‏ ஆகவே, அவர்கள் அவசரமாகத் தேடவேண்டாம்
51:59. எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு; ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
51:60
51:60 فَوَيْلٌ لِّـلَّذِيْنَ كَفَرُوْا مِنْ يَّوْمِهِمُ الَّذِىْ يُوْعَدُوْنَ
فَوَيْلٌ ஆகவே, நாசம் உண்டாகட்டும் لِّـلَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு مِنْ يَّوْمِهِمُ அவர்களின் நாளில் الَّذِىْ يُوْعَدُوْنَ‏ எது/அவர்கள் வாக்களிக்கப்பட்டார்கள்
51:60. ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.