114. ஸூரத்துந் நாஸ்(மனிதர்கள்)
மக்கீ, வசனங்கள்: 6

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
114:1
114:1 قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ‏
قُلْ கூறுவீராக اَعُوْذُ பாது காப்புத் தேடுகிறேன் بِرَبِّ இறைவனிடம் النَّاسِۙ‏ மக்களின்
114:1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2
114:2 مَلِكِ النَّاسِۙ‏
مَلِكِ அரசன் النَّاسِۙ‏ மக்களின்
114:2. (அவனே) மனிதர்களின் அரசன்;
114:3
114:3 اِلٰهِ النَّاسِۙ‏
اِلٰهِ வணக்கத்திற்குரியவன் النَّاسِۙ‏ மக்களின்
114:3. (அவனே) மனிதர்களின் நாயன்.
114:4
114:4 مِنْ شَرِّ الْوَسْوَاسِ  ۙ الْخَـنَّاسِ ۙ‏
مِنْ شَرِّ தீங்கைவிட்டும் الْوَسْوَاسِ  ۙ வீண் எண்ணங்களை ஏற்படுத்துபவன் الْخَـنَّاسِ ۙ‏ மறைந்து கொள்பவன்
114:4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
114:5
114:5 الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏
الَّذِىْ يُوَسْوِسُ வீண் எண்ணங்களை ஏற்படுத்துகின்றான் فِىْ صُدُوْرِ உள்ளங்களில் النَّاسِۙ‏ மக்களுடைய
114:5. அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
114:6
114:6 مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
مِنَ الْجِنَّةِ ஜின்களிலிருந்தும் وَالنَّاسِ‏ இன்னும் மனிதர்கள்
114:6. (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.