فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ‌ؕ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ‌ۚ‌ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا ؕ‌ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள். 3:37

<

இறைவனின் மிகப் பெரும் கிருபையால் நாம் இந்த இணைய தளத்தை எங்களால் முடிந்த அளவு எளிதாக ஆக்கி வைத்துள்ளோம். அடுத்த முறை நீங்கள் இந்த இணைய தளத்துக்கு வரும்பொழுது, நீங்கள் கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள தேவையில்லை. உங்களுக்காக நாங்கள் ஞாபகம் வைத்து கொள்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்

1. உங்கள் பெயரை எங்களிடம் பதிவு செய்து கொள்ளுங்கள்.
2. ஒவ்வொரு முறை நீங்கள் குர்ஆனை படித்தவுடன் நீங்கள் படித்த ஸூரா மற்றும் வசன எண்களை பதிவு செய்யுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறீர்கள். ஆகையால், ஒவ்வொரு முறை இணையத்தை பயன் படுத்தும் போது, குறைந்தது ஒரு வசனத்தையாவது படித்து விட்டு அடுத்த இணைய தளத்துக்கு செல்வதை பழக்க படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் இணைய தளத்தை உங்களின் முதல் பக்கமாக ஆக்கி கொள்ளுங்கள்.

Quick Search

தேடுங்கள்