لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ‌ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ‌ ؕ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ‌ ؕ ذٰ لِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ‌ ؕ وَاحْفَظُوْۤا اَيْمَانَكُمْ‌ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான். 5:89

<

இறைவனின் மிகப் பெரும் கிருபையால் நாம் இந்த இணைய தளத்தை எங்களால் முடிந்த அளவு எளிதாக ஆக்கி வைத்துள்ளோம். அடுத்த முறை நீங்கள் இந்த இணைய தளத்துக்கு வரும்பொழுது, நீங்கள் கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள தேவையில்லை. உங்களுக்காக நாங்கள் ஞாபகம் வைத்து கொள்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்

1. உங்கள் பெயரை எங்களிடம் பதிவு செய்து கொள்ளுங்கள்.
2. ஒவ்வொரு முறை நீங்கள் குர்ஆனை படித்தவுடன் நீங்கள் படித்த ஸூரா மற்றும் வசன எண்களை பதிவு செய்யுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறீர்கள். ஆகையால், ஒவ்வொரு முறை இணையத்தை பயன் படுத்தும் போது, குறைந்தது ஒரு வசனத்தையாவது படித்து விட்டு அடுத்த இணைய தளத்துக்கு செல்வதை பழக்க படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் இணைய தளத்தை உங்களின் முதல் பக்கமாக ஆக்கி கொள்ளுங்கள்.

Quick Search



தேடுங்கள்